மீண்டும் மீண்டும் ரங்கராஜ் பாண்டே என்றே சொல்லிக் கொண்டிருப்பானேன்? கொஞ்சம் விஷயத்தோடு, சுவாரசியம் குறையாமல் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துகிறார் என்பதற்கு மேல் வேறென்ன காரணத்தை சொல்லிவிட முடியும் சொல்லுங்கள்! ஆனாலும் சாணக்யா தளத்தில் எந்தவொரு நிகழ்வையும் முழுதாய்ப்பார்க்க முடிவதில்லை என்பது மிகப் பெரிய குறை.
இங்கே முதலில் பாண்டே பேசுவதை மட்டும் எடிட் செய்து 18 நிமிட வீடியோவாகப் பகிர்ந்தார்கள். இப்போது அதை 48 நிமிடத்தொகுப்பாக! இதுவாவது அடிமுடியோடு இருக்கிறதா என்றால் அடியும் இல்லை முடியும் இல்லை! முழுத் தொகுப்பையும் வெளியிடுவதில் அப்படி என்ன சிக்கல் என்பது எனக்குப் புரியவே இல்லை!
இங்கே முதலில் பாண்டே பேசுவதை மட்டும் எடிட் செய்து 18 நிமிட வீடியோவாகப் பகிர்ந்தார்கள். இப்போது அதை 48 நிமிடத்தொகுப்பாக! இதுவாவது அடிமுடியோடு இருக்கிறதா என்றால் அடியும் இல்லை முடியும் இல்லை! முழுத் தொகுப்பையும் வெளியிடுவதில் அப்படி என்ன சிக்கல் என்பது எனக்குப் புரியவே இல்லை!
"மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்.
முன்னாள் ஆர்.பி.ஐ. ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஏற்று ரிசர்வ் வங்கி ஒப்புதல்.]]]
நினைச்சதை சாதிச்சாட்டானுங்க சங்கிப் பயலுக..
இதைத் தர மாட்டேன்னு சொன்னதுக்குத்தான் முந்தைய கவர்னரை ராத்திரியோட ராத்திரியா கிளம்பச் சொல்லி போன்ல வறுத்தெடுத்தானுங்க..
அவரும் போகும்போது இதைக் கொடுத்தால் என்னவெல்லாம் நடக்கும்ன்னு தெளிவா சொல்லிட்டுத்தான் போனாப்புல..
பொத்திக்கிட்டு போய்த் தொலை என்று சொல்லி தனக்குத் தோதான ஆளை வைச்சு இப்போ வாங்க வேண்டிய விதத்தில் வாங்கிட்டாங்க மோடி என்னும் கேடியின் ஆட்கள்..
இனி என்ன..? இந்தப் பணத்தை வைத்து பிச்சையெடுக்கும் அதானிகளும், அம்பானிகளும் பொழைக்கட்டுமேன்னு ஏதாவது செஞ்சு கொடுப்பாங்க..
நமக்கு வழக்கம்போல வழிச்சுத்தான் கொடுக்கப் போறானுங்க.. நாமளும் மானம், ரோஷம் பார்க்காமல் நக்கிக்கிக்கிட்டுப் போவோம்..!
என்ன காரணத்தோலோ சினிமா பற்றி மட்டுமே எழுதுகிற பதிவராக அறியப்படும் உண்மைத்தமிழன் என்று பதிவர் வட்டத்தில் மிகவுமே அறியப்படும் சரவணனுடைய முகநூல் பகிர்வு இது. .அரசியல் பதிவுகள் எழுதுவதில் மிகக்கூர்மையான் பார்வை இருந்தாலும் அவ்வப்போது தமிழகத்தின் தனிப்பெரும் வியாதியான கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு இவருக்கும் தொற்றிக் கொண்டிருப்பதில். ராகுல் காண்டிக்குப் பொருளாதாரம், வங்கித்துறை இவைகளைப் பற்றிய அறிவுமட்டத்துக்கு அதிகம் நெருங்குகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. அரசியல் விமரிசனங்கள் எழுதும்போது இருக்கிற கூர்மையான பார்வை, வங்கித்துறை, பொருளாதாரம் பற்றிப் பேசுவதிலும் இருக்க முடியாதுதான்! ஆனாலும் சதா சினிமா பற்றிய பிழைப்புக்கான பேச்சிலிருந்து விடுபட, இதுமாதிரிப் பொங்குவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
When you strip the RBI of its reserves you're leaving the Reserve Bank vulnerable to a series of disasters.
The contingency fund is for emergency situations, not to cover up for the govt's economic failures.
#AbkiBaarMandiSarkaar
"தங்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார பேரழியை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் முழித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து அவர்கள் பணத்தை திருடி உள்ளனர். இது பிரச்னைக்கு தீர்வாகாது. இது, மருந்தகத்தில் இருந்து, 'பேன்ட் எய்ட்' திருடி, துப்பாக்கி குண்டு பாய்ந்த காயத்துக்கு பயன்படுத்துவது போலாகும்" இப்படி ராகுல் காண்டி போட்டிருந்த 2 ட்வீட்டுகள் இப்போது காணவில்லை. ஆனால் ஒரு அரசியல் கட்சியாக, அதுவும் அறுபது வருஷம் நாட்டை ஆட்சிசெய்த கட்சியாகவும் இருக்கிற ஒரு கட்சி தன் மனம்போனபோக்கில் விமரிசனம் செய்வதை என்னவென்று எடுத்துக் கொள்வது? நேற்றைக்கு ஆனந்த் ஷர்மா காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 34 நிமிடங்கள் பேசியதைக் கேட்டபிறகு, காங்கிரசைப் பற்றிய எனது கருத்து இன்னமும் உறுதியானது.
ரிசர்வ் வங்கியின் பணத்தை அரசு திருடியுள்ளதாக, ராகுல் கூறியுள்ளார். இவ்வாறு பொய் சொல்வது, அக்கட்சியின் வழக்கமாகிவிட்டது. இது போன்ற பொய்யான கருத்தை தெரிவிப்பதற்கு முன், இந்த விவகாரத்தின் உண்மை நிலை குறித்து, தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் நிதி அமைச்சர்களிடம் அவர் கருத்து கேட்டிருக்கலாம். ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது வேதனை அளிக்கிறது. ரிசர்வ் வங்கி நியமித்த, அதன் முன்னாள் கவர்னரான, பிமல் ஜலான் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின்படியே, இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
பொருளாதார விவகாரத்தில் சிறந்தவர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பது, அருவருக்க தக்கது. ரிசர்வ் வங்கி அளிக்கும் பணத்தை, எந்தெந்தப் பணிகளுக்காக பயன்படுத்துவது என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார் நிதியமைச்சர். எனக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியான பதிலடி கொடுத்தருப்பதாகத் தான் தோன்றுகிறது.
The Wire தளம் போல சிலபல ஊடகங்களின் காசுக்கு கூவுகிற தன்மையை நாசூக்காக இந்தப்பக்கங்களில் நான் பலமுறை சொன்னதுண்டு. நண்பர் ராஜசங்கர் முகநூலில் இந்த ஊடக வேசித்தனத்தைப் போட்டுடைத்திருக்கிற ஒரு பகிர்வு
படித்ததில் பிடித்தது! பகுதிக்காக இங்கே
அமித்ஷாவின் மகன் ஜெ அமித்ஷா மீது நடத்தப்பட்டது தாக்குதல் மஞ்சள் பத்திரிக்கை தனமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெ அமீத்ஷா போட்ட மானநட்ட வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்திலே விபச்சார ஊடகமான தி வயர் செய்திருந்த மனு நீதிபதி அருண் மிஷ்ரா, எம் ஆர் ஷா, பி ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி அருண் மிஷ்ரா இதைசொன்னார்.
இதையடுத்து கபில் சிபல் இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக சொல்லியுள்ளார்.
கூடவே இப்போதெல்லாம் பத்திரிக்கைகள் ஒரு தனி நபருக்கு பதில் சொல்லுமாறு கேள்விகளை அனுப்புவது உடனே அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைப்பது என்பது பரவலாகிவிட்டது.
பத்திரிக்கை சுதந்திரம் இருக்கவேண்டியது தான் ஆனால் இது மஞ்சள் பத்திரிக்கை தனமானது என அருண் மிஸ்ரா சொல்லியிருக்கிறார்.
இந்த வழக்கு ஜெ அமீத்ஷா மீது அந்த விபச்சார ஊடகங்கள் எந்த செய்தியும் வெளியிடக்கூடாது என குஜ்ராத் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே அந்த விபச்சாரம் செய்யும் ஊடகமான தி வயர் தொடுத்தது. குஜ்ராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையிலே விபச்சாரம் செய்த காசிருப்பதால் அமர்வுக்கு 30 லட்சம் கொடுத்து கபில் சிபிலை வாதாட அமர்த்தியிருந்தது.
இனி அந்த ஜெ அமீத்ஷா பற்றி எந்த செய்தியும் வெளியிட முடியாது. குஜ்ராத் விசாரணை நீதிமன்றத்திலே வழக்கு நடக்கும்.
அக்டோபர் 2017 இல் அந்த கேடுகெட்ட விபச்சார ஊடகம் ஒரு தவறான செய்தியை வெளியிட்டிருந்தது.
அமீத்ஷாவின் மகன் என்பதினாலேயே ஜெ அமீத்ஷா மீது அபாண்டமான குற்றசாட்டுக்களை கூறீயிருந்தது.
அதற்கு எதிராக ஜெ தொடுத்த வழக்கிலே அவரைப்பற்றி ஏதும் வெளியிடக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. பின்னர் விலக்கப்பட்டது. குஜ்ராத் உயர்நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்த பின்னர் அது மீண்டு விதிக்கப்பட்டது.
அதற்கு எதிராக அந்த விபச்சார ஊடகம் மீண்டு மேல் முறையீடு செய்தது. அதிலே முதலிலே முன்னாள் தலைமை நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கின் நடைமுறையை தடைசெய்துவிட்டு விசாரணையை ஆரம்பித்தது. இரண்டு வருடங்களாக ஓடியது இப்போது தான் திரும்பவும் விசாரணைக்கு வந்துள்ளது.
முதலிலே மிஸ்ரா அமர்வு இரண்டு தரப்பையும் சமாதானமாக போக சொன்னது. ஜெ அமீத்ஷாவின் வழக்கறிஞரோ அந்த விபச்சார ஊடகம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக சொனனர். அதற்கு அந்த அமர்விலே இருந்த சந்திரசூட் என்ன சொன்னார் என்றால் ஜெ அமீத்ஷா எழுதி தருவதை அந்த விபச்சார ஊடகம் வெளியிட்டால் போதும் என சொன்னார்.
ஜெ அமீத்ஷா தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு மிஸ்ரா ஓய்வு பெற்றார். அதன் பின்பு வெகுநாட்களாக இது விசாரணைக்கு வரவில்லை. இப்போது வந்துள்ளது.
இந்த இடத்திலே நீதிமன்றம் மிகப்பெரும் தவறை செய்துள்ளது.
கேள்விகள் அனுப்பி விசாரணை செய்ய இந்த மானங்கெட்ட விபச்சார ஊடகங்கள் என்ன நீதிமன்றமா?
இதுகளே லாபம் சம்பாதிக்க பத்திரிக்கை நடத்தும் தனியார் கார்ப்பரேட் கிரிமினல்கள். இதுகளுக்கு அடுத்தவரை கேள்வி கேட்க அதுக்கு பதில் சொல்லாவிடில் தவறாக வெளியிடுவேன் என சொல்ல என்ன உரிமை உள்ளது?
இதே போல் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கேட்கலாமா?
இப்படி செய்துவிட்டு பக்கோடா சிதம்பரம் வழக்கிலே பத்திரிக்கைகள் கேள்வி கேட்கின்றன ஆதாரம் வெளியிடுகின்றன என எப்படி இந்த சீரோ லாஸ் ஊழல் கப்பில் சிப்பில் சொல்கிறது?
அதைக்கூட நீதிமன்றம் கேட்காதா?
அதைவிட எப்படி இப்படி மாறியது? ஆட்சி மாறினால் தான் காட்சிகளும் கோலங்களும் மாறுமா?
நல்லவேளை மோடி ஜெயிச்சார் இல்லையென்றால் இதுகள் இப்படியே ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும்கள்.
பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரிலே இதுகள் விபச்சாரம் செய்வது, மிரட்டி பணம் பறிப்பது போன்றவை கிரிமினல் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.
இல்லையேல் எல்லோரும் இதே போல் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என செய்யலாம் என ஆகிவிடும்.
நம்நாட்டிலே எப்போதுமே பிரச்சினை பெரிதானால் தான் அதுக்கு தீர்வு ஏற்படும் என இருப்பதால் இப்படி ஏதேனும் பிரச்சினை பெரிதாகி அதனால் தீர்வு ஏற்பட்டால் தான் உண்டு போல்.
கடைசியாக அப்படி என்ன ஜெ அமீத்ஷா மீது குற்றசாட்டு என்றால் மிக அதிகமாக லாபம் சம்பாதித்தார் என. ஆனால் இதுகளுக்கு மொத்த வியாபாரத்திற்கும் லாபத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. நான் மாவு, சர்க்கரை எல்லாம் 100 ரூவாய்க்கு வாங்கி ஆளை வைத்து அவர்களுக்கு கூலி தயாரிப்பு செலவாக 90 ரூபாய் கொடுத்து போக்குவரத்து செலவு 5 என ஆகி ஒரு கிலோ பிஸ்கட் 200 ருபாய்க்கு விற்றால் லாபம் 5 ரூபாய் தான் ஆனால் மொத்தவியபாரம் 200. இந்த 200 ரூபாயையும் நான் சம்பாதித்தேன் என சொன்னால் எப்படி? அதைத்தான் அந்த மானங்கெட்ட ஊடகங்கள் செய்தன. முதலீட்டிற்கும், மொத்த வியாபாரத்திற்கும் லாபத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசின.
எனவே தான் உச்சநீதிமன்றம் வரை போயும் ஏதும் செய்யமுடியவில்லை.
அதிசியத்திற்கு மேலாக அதிசியமாக உச்சநீதிமன்றத்திலே நடக்கிறது. இதே போல் மற்ற வழக்குகளையும் முடித்தால் தேவலை.
எழுத்துப்பிழைகளை original flow வுக்குத் தடையாக இருக்கக் கூடாதென்பதற்காக திருத்தம் செய்யாமல் அப்படியே!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!