நம்மூரில் ஊடகங்கள் பொய் சொல்வதையே முழுநேரப் பிழைப்பாக வைத்திருப்பது அடிக்கடி அம்பலப்பட்டுக் கொண்டே வந்தாலும் அதற்குமேல் ஒன்றுமே நடப்பது இல்லையே! ஏன்? என்று எப்போதாவது யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா? நேற்று முன்தினம் எழுதிய இந்தப்பதிவில் முதல் வீடியோ உங்களுக்கு யோசிக்கக் கொஞ்சம் உதவியாக இருக்கும்! கட்டுப்பாடற்ற, எல்லையற்ற சுதந்திரம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று இந்தப்பக்கங்களிலேயே பலமுறை AG Gardiner எழுதிய The Rule of the Road கட்டுரையை மேற்கோள் காட்டி மாதொரு பாகன் புத்தக சர்ச்சையின் போதும், அதற்கு முன்னாலும் எழுதியிருக்கிறேன்.
1 நிமிட வீடியோ
மும்பை உயர்நீதி நீதிமன்றம் சமீபத்தில் கோரேகான் என்ற இடத்தில் வெடித்த கலவரம் குறித்தவழக்கில் குறிப்பிட்டுச் சொன்னது தோல்ஸ்தோய் எழுதிய போரும் அமைதியும் நாவல் பற்றி அல்ல! உள்ளூர் ஆசாமி ஒருத்தர் எழுதிய War and Peace in Junglemahal என்ற தடைசெய்யப்பட்ட புத்தகத்தைப் பற்றித்தான் என்று தெளிவாகச் சொன்ன பிறகும் கூட எந்த ஊடகமாவது பொய்ச் செய்தி பரப்பியதற்கு தவறுக்கு வருந்துகிறோம் என்று திருத்தம் வெளியிட்டார்களா? பார்த்த நினைவாவது இருக்கிறதா?
இந்த 32 நிமிட வீடியோ விவாதம் காஷ்மீரில் இருந்து கோரேகான் வரை பொய்ச்செய்திகளில் இந்தியா கேவலப் படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை முன்வைத்து! ஊடகம் தனக்கேற்ற சாயத்தைத் தானே தேர்ந்தெடுக்கும் என்பதை நினைவு வைத்துக் கொண்டு விவாதத்தைப் பாருங்கள்!
மீண்டும் ரங்கராஜ் பாண்டே! வீடியோவில் தன்னுடைய சிங்கப்பூர் அனுபவத்தைச் சொல்கிற பகுதியை மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு, உங்களுடைய கருத்தை மனம் திறந்து பகிர முடியுமா? சுதந்திரம் உட்பட எதுவுமே இலவசமோ கட்டுப்பாடுகள் அற்றதோ இல்லை!
திருமாவளவனும் கூட, நான் உண்மையைச் சொன்னாலும் ஊடகங்கள் வெளியிடுவதில்லையே என்று குறைப் பட்டுக் கொளகிறார்! இங்கே கிடைத்தது கிடைத்தபடி வெளியிட்டாயிற்று. திருமாவளவன் உண்மைதான் சொன்னாரா, கொஞ்சம் கூட்டிக்குறைத்துச் சொன்னாரா என்று நீங்கள்தான் இந்தச் செய்தியின், சொல்பவரின், நம்பகத் தன்மை பற்றி முடிவு செய்துகொள்ளவேண்டும்! செய்தியின் வேரைப்பிடித்து, உண்மையைப் புரிந்து கொள்ள வேறெப்படி முயற்சி செய்வதாம்? வீடியோ 13 நிமிடம்.
முன்பெல்லாம் காங்கிரசுக்குள் நடக்கிற வேட்டி கிழிப்பு முதலான விஷயங்களை ஊடகங்கள் பெருந்தன்மையாக வெளியிடாமல் இருந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறதோ? முன்னமிருந்த மறைமுகமான Carrot & Stick இப்போது இல்லை என்பதாலா? அல்லது நிஜமாகவே திருந்தி வருகிறார்களா? உங்களுடைய ஊகம், பார்வை என்ன?
இந்தச் செய்தி குறித்து நான் ஒன்றும் சொல்வதாயில்லை! நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல! XXXX படிதாண்டாப் பத்தினியுமல்ல என்று கம்பரசம் எழுதிய சி என் அண்ணாதுரை என்பவரை, அவரை அடியொற்றி அரசியல் செய்பவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்! இவர் நேருவை இந்தவிஷயத்தில் மட்டும் பின்பற்றியிருக்கிறார் என்ற மாதிரி சொல்கிறார்கள். திருப்பூர் ஜோதிஜி இதற்கென்ன சொல்வாரோ? இதற்குமேல் எழுதினால் எங்கள் Blog ஸ்ரீராம் வந்து ஒட்டுமொத்தப் பதிவையுமே மஞ்சப்பத்திரிகை ரகத்தில் சேர்த்துவிடுவார்!😀😂🙏🙏
மீண்டும் சந்திப்போம்.
ப.சி பற்றி இந்திராணி முகர்ஜி (என் உடலை உபயோகித்துக்கொண்டார்) சொல்வது, ப.சி அவர்களின் பிம்பத்துக்குக் கிடைத்த வேட்டு. இந்த மாதிரி பல விஷயங்களில் ப.சி. வசமாக மாட்டிக்கொண்டிருப்பார்னு நினைக்கிறேன். அதுனாலதான் காங்கிரஸ் பாஸ் களுக்கு எதிரா அவர் எக்காலத்திலும் திரும்ப முடியாது.
ReplyDeleteசீனாதானா தனக்கு மிஞ்சி யாருமே இல்லை என்று நினைக்கிற ரகம்! அவருக்கு காங்கிரசில் பாசா? :-)))
Deleteஉக்ரைன் பெண்களில் இருந்து கேரள பெண்கள் என்று மனிதர் வெரைட்டியாக அலைந்தது புதிய செய்தியா என்ன?
திருமா வீடியோ சில முக்கியமான இடங்களில் எடிட் செய்யப்பட்டிருக்கிறது!
ReplyDeleteஸ்ரீராம்! பதிவுகளுக்கான செய்திகளைப் பலசமயங்களில் கேட்டுக் கொண்டேதான் தொகுக்கிறேன். on the spot அல்லது online எழுத்தாக இருப்பதில் எடிட் செய்யப்பட்டதா இல்லையா என்றெல்லாம் அத்தனை நுணுக்கமாக கவனிப்பதில்லை. இந்த சால்ஜாப்பை ஏற்கெனெவே முகநூலில் எழுத்துவடிவில் பார்த்துவிட்டது கூடக் காரணமாக இருக்கலாம்! ஆனால் திருமா திரும்பத் திரும்ப பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தமாதிரி சொல்லிக் கொள்வதற்கு convincing ஆக இன்னமும் பதில் சொல்லவில்லை என்பதில் தான் அதைக்குறித்த கேள்வியே எழுகிறது. என்ன சொல்லியிருக்கிறேன் என்பதை இன்னொருமுறை வாசித்துப்பாருங்கள்!
Deleteசெய்தி ஏற்கெனவே படித்திருப்பதால் திருமா விடியோவுக்கான பின்னணி தெரியும்.. சில முக்கிய இடங்களில் எடிட் செய்யப்பட்டு பெயர்கள், சில விஷயங்கள் மறைகின்றன என்றுதான் சொன்னேன்.
Delete