அந்த ஏழு நிமிடங்களும் பெருமாள் முருகனும் : கருத்துசுதந்திரம் எதுவரை?

ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம்  என்ற கேள்வியை முந்தைய பதிவொன்றில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஏன், எதற்காக என்பதை விட, எப்படிப் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், என்ன புரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்ற முத்தாய்ப்போடு அந்தப் பதிவு முடிந்திருந்தது இல்லையா? 

இந்தப் பக்கங்களில், பேசப்படும் புத்தகங்கள், கதைகள் வெறும் வாசிப்பு என்ற பொழுது போக்கு அம்சமாக வைத்து மட்டும் பேச முற்பட்டதில்லை. இலக்கியம், திறனாய்வு, விமரிசனம் என்ற ரீதியில் கூட இந்தப் பக்கங்களில் எழுதியதில்லை. வாசித்த ஒவ்வொரு படைப்பும் என்னுள் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை எந்தெந்த திசைகளில் விரிவுபடுத்திக் கொண்டு போனது என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.

ஆர் டாகுமென்ட் புத்தகத்தோடு, இன்னும் சில நூல்களுக்கும் ஆர்டர் கொடுத்திருந்ததில், இர்விங் வாலஸ் எழுதிய The Seven Minutes புதினமும் ஒன்று! 

காமம், போர்னோ என்றாலே முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, அதே நேரம் திருட்டுத் தனமாகப் படிக்கும் இயல்பு இங்கே நிறையப் பேருக்கு இருக்கிறது. அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்று காமம், காமக் கதைகள் என்று கூகிளிட்டுப் பார்த்தாலே அந்த இயல்பு புரிந்துவிடும். புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் கூட அம்மா மகன் உறவுக் கதைகள் என்று குறியீட்டுச் சொல்லை வைத்துப் பதிவுகளைத் தேடுகிற "தேடல்களை" நிறையவே பார்த்திருக்கிறேன். 

ஏழு நிமிடங்கள் என்ற இந்தப் புதினம் கூட, அப்படி போர்னோ என்றழைக்கப்படும் ஒரு கதைப் புத்தகம், அதை விற்பனை செய்த ஒரு கடைக்காரர், அதைப் பதிப்பித்த வெளியீட்டாளர், அவருடைய நண்பரான வழக்கறிஞர், அரசியலில் குதிக்க விரும்பும் ஒரு அரசு வழக்கறிஞர், என்று வரிசையாகப் பாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டே ஒரு கைது, ஒரு கற்பழிப்பு, ஒரு மரணம், அதைத் தொடரும் வழக்கில், இந்த ஆபாசப் புத்தகம் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்படும் விந்தையை, ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக எழுதப் பட்டது தான் இர்விங் வாலஸ் எழுதிய ஏழு நிமிடங்கள்!  

1971 இல் இதைத் திரைப்படமாக்கிய இயக்குனர், கதையின் மைய நீரோட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததாலோ என்னவோ, வெறும் சொதப்பலாகிப் போனது தனிக் கதை!

கதை என்று பார்க்கப் போனால், வழக்கமான இர்விங் வாலஸ் பாணியிலான ஒன்று தான்! ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, பாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே, கதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமா தான்! 
இப்போது படிக்கும் போது கூட இந்த கோர்ட் ரூம் டிராமா நன்றாகத் தான் இருக்கிறது!

கதை சொல்கிற போதே, ஆசிரியர் சில கேள்விகளை கதா பாத்திரங்களின் வழியாக எழுப்புகிறார், வாசகர்களை யோசிக்க வைக்கிறார் என்ற வகையில் வித்தியாசப்பட்டு நிற்பதாக சில படைப்புக்கள் இருக்குமல்லவா! அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புதினத்தைத் தொடர்ந்து, இந்த நூலில் எடுத்துக் கொண்ட விஷயம், கருத்து சுதந்திரம்,  இலக்கியங்கள், அதில் ஆபாசம் என்று சமூகத்தால் ஒரு கால கட்டத்தில் நிராகரிக்கப் பட்டு, அப்புறம் ஏற்றுக் கொள்ளப் பட்டவை, எது ஆபாசம், அதை எப்படி, எவர் நிர்ணயிப்பது போன்ற சில கேள்விகள் இந்தப் புத்தகத்தின் மையக் கருவாக இருக்கிறது.

மைகேல் பாரெட், ஒரு திறமையான வழக்கறிஞர். வசதி படைத்த தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தருணம். அந்தத் தொழிலதிபரின் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவும் செய்து, வழக்கறிஞர் ப்ராக்டிசை நிறுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கும் தருணத்தில் புத்தகப் பதிப்புத் துறையில் இருக்கும் பழைய நண்பரிடம் இருந்து அவருடைய உதவியைக் கேட்டுத் தொலை பேசியில் அழைப்பு வருகிறது.

நண்பர் வெளியிட்ட  ஏழு நிமிடங்கள் என்ற புத்தகத்தை விற்பனை செய்த கடைக்காரரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெண்கள் உரிமை பற்றிக் குரல் எழுப்பும் அமைப்பு ஒன்றின் தலைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் புத்தகம் ஆபாசமானது, விற்றது குற்றம் என்ற ரீதியில் கைது நடந்திருக்கிறது.

நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், அந்த வழக்கை மைகேல் பாரெட் எடுத்துக் கொள்கிறார். டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் (நம்மூர் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவி மாதிரி) பேசி,  குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஒரு சமரசம் பேசி, புத்தகக் கடைக்காரரை வெளியில் கொண்டு வந்து விடுவது என்ற யோசனையை முடிவெடுக்கிறார். எல்மோ டங்கன் என்ற டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியும் பாரெட்டின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதி அளிக்கிறார். ஆனால், அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் ஒரு சாதாரணமான கைது விவகாரத்தை வேறு வேறு திசையில் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகின்றன.

இன்னொரு தொழிலதிபர், எல்மோ டங்கனை, அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்கிறார். எல்மோ டங்கனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி, வெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட நிலையில், மரணமடைகிறாள். அவளைக் கற்பழித்த இளைஞன் காரில், ஏழு நிமிடங்கள் என்ற கதைப் புத்தகம் கிடைக்கிறது. அந்த இளைஞனை அப்படிக் கொடூரமான செயலுக்குத் தூண்டியதே, ஆபாசமான அந்தப் புத்தகம் தான் என்று வழக்கு திசை திரும்புகிறது.

டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் பேசி, புத்தகம் விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு, மிக லேசான அபராதத்தோடு விடுதலை செய்து விடலாம் என்ற நிலை மாறி, புத்தகம், புத்தகத்தை விற்பனை செய்தவர்  இருவருமே கற்பழிப்பு, கொலைக் குற்றத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பாரெட்டின் காதலி, அவளுடைய தகப்பனார் இருவரும், பாரெட் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, அவர்களுடைய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வழக்கறிஞராகக் கடமையா காதலா என்ற கேள்வியோடு, உத்தரவாதமான வருமானம்,செல்வாக்குடன் கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை சுதந்திரமாக தொழில் செய்ய முடிவெடுப்பதா என்ற கேள்வியும் எழுகிறது. பாரெட்டின் நண்பர்,ஏழு நிமிடங்கள் என்ற அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தைப் பதிப்பித்தவர், தன்னுடைய இக்கட்டான நிலையை எடுத்து சொல்லி, பாரெட்டைத் தவிர வேறு எவருமே, அந்த வழக்கை எடுத்து நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்காக இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.

ஆபாசம், சர்ச்சைக்குரியது, ஒரு இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப் படத் தூண்டுகோலாக இருந்த அளவுக்கு குற்றம் உள்ளது என்று சொல்லப் படும் "ஏழு நிமிடங்கள்" என்ற அந்தப் புத்தகத்தை மைகேல் பாரெட் படித்துப் பார்க்கிறார். ஒரு இளம் பெண், தான் உடலுறவு கொண்ட  தருணங்களில் உச்சத்தை அடையும் அந்த ஏழு நிமிடங்களைப் பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்கிற விதத்தில் எழுதப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில், மற்றவர்கள் குதிப்பது போல ஆபாசமானதோ, குற்றத்தைத் தூண்டுவதாகவோ எதுவுமில்லை என்று அபிப்பிராயப் படும் பாரெட், தன்னுடைய காதலி, காத்திருக்கும் செல்வாக்கான உத்தியோகம் இரண்டையும் துறந்து, அந்தப் புத்தகத்துக்காக, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, வழக்கை எடுத்து நடத்துவது என்று முடிவு செய்கிறார்.

எல்மோ டங்கனை  அரசியலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் தொழிலதிபரின் செல்வாக்கினால், அரசுத் தரப்புக்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. வாடிகனில் இருந்து திருச்சபையின் ஆதரவையும் தெரிவித்து ஒரு பாதிரியார், சாட்சியமளிக்கவும் முன்வருகிறார்.

இப்படி நீதி மன்ற விசாரணை, தன்னுடைய தரப்புக்கு ஆதரவாக சாட்சியங்களை மைகேல் பாரெட் தேடியலைவது என்று மாறிமாறிக் கதை நகர்கிறது. இதற்குமேல் கதையைப் பற்றி எழுதுவது, மொத்தக் கதையையும் இங்கேயே சொல்லி விடுவது போலாகி விடும் என்பதால் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்வோம்.

கதையின் முடிவில் தெரிய வரும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு மிக சுவாரசியமாகஇருக்கிறது. 

1969 இல் வெளியான இந்தப் புதினத்தை இன்றைக்குப் படிக்கும் போது கொஞ்சம் மெதுவாக நகர்கிற மாதிரி இருக்கிறது என்பதைத் தவிர, இர்விங் வாலசின் கதை சொல்லும் பாணியில் இருக்கும் வழக்கமான சுவாரசியம் இதிலும் இருக்கிறது! கதை சொல்லும் போதே, சில அடிப்படைக் கேள்விகளைப் படிப்பவர்கள் மனதில் விதைத்துக் கொண்டே போகும் இர்விங் வாலசின் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்தை, இப்போது மறுவாசிப்பு செய்த பிறகு எனக்குள் எழுந்த சிந்தனை, இந்தக் கதையைப் பற்றியது மட்டுமே அல்ல! ஆபாச எழுத்து, கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து, கலகத்தை விதைக்கும் எழுத்து என்றெல்லாம் குற்றம் சொல்கிறோமே, அதை எல்லாம்  எதை வைத்து வரையறை செய்வது? கருத்து சுதந்திரம் 
என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரை? அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்ன? ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லது அரசியல் சாசனத்தில் எழுதி வைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமாகி விடுமா, அல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?

ஆர் டாகுமென்ட் புதினத்தைப் படித்து முடித்த 
கையோடு  இதைப் படித்ததால் மட்டுமே இந்தப் புத்தகம் எனக்குள் இப்படிப்பட்ட யோசனைகளைக் கிளப்பியதா அல்லது தன்னளவிலேயே இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பியதா?

The Seven Minutes! 
இந்தப் புத்தகம், பெங்களூரு வாசன்  பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக, இந்தியப்பதிப்பிலேயே தற்சமயம் கிடைக்கிறது..என்று இந்தப் பக்கங்களில்  எழுதி ஐந்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால் சில புத்தகங்களும், கலைப்படைப்புக்களும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இன்னமும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.

பெருமாள் முருகன் எழுதி 2010 இல் வெளியாகி இப்போது பெருத்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் மாதொருபாகன் நூலைக்குறித்து நடந்த ஆர்டிஓ விசாரணையைத் தொட்டு மணற்கேணி வலைப்பதிவரும் வழக்கறிஞருமாகிய திரு பிரபு ராஜதுரை முகநூலில் ஒரு கருத்தை, ஒரு வழக்கின் தீர்ப்பைத்தொட்டு சுருக்கமாக இப்படி எழுதியிருக்கிறார் 

அவர் சுட்டிக் காட்டியிருக்கும் தீர்ப்பு விவரம் இங்கே  தீர்ப்பின் 50வது பாராவை முக்கியமானதாக மேற்கோள் காட்டப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.அந்தப் பகுதி மட்டும் உடனடி வாசிப்புக்காக இங்கே 
50. Krishna Iyer, J., speaking for the Court in Raj Kapoor v. State , dealing with a pro bono publico prosecution against the producer, actors and others connected with a film called "Satyam, Shivam, Sundaram" on the ground of prurience, moral depravity and shocking erosion of public decency held that the censor certificate is a relevant material, important in its impact, though not infallible in its verdict and observed as under:

...Art, morals and law's manacles on aesthetics are a sensitive subject where jurisprudence meets other social sciences and never goes alone to bark and bite because State-made strait-jacket is an inhibitive prescription for a free country unless enlightened society actively participates in the administration of justice to aesthetics.

...The world's greatest paintings, sculptures, songs and dances, India's lustrous heritage, the Konarks and Khajurahos, lofty epics, luscious in patches, may be asphyxiated by law, if prudes and prigs and State moralists prescribe paradigms and prescribe heterodoxies.

நம் சமூக பெண்களை அவமானப்படுத்தி விட்டான் எனும் கொச்சையான அவப்பெயர் அவர் மீது சுமப்பத்தபடும் போது கிராமியச் சூழலில் அது தரும் நெருக்கடி கடுமையானது. தொடர்ச்சியான போராட்டங்கள், கடை அடைப்பு அச்சுறுத்தல் எனும் நிலை வரும் போது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறது. அங்கு அவர் அச்சுறுத்தப்படுகிறார். மன்னிப்பு கேட்கிறார். பிறகு மன்னிப்பு கேட்ட கூச்சமும் சங்கடமும் அவமானமும் வரை இந்த அறிக்கையை எழுத வைக்கிறது"" என்று பெருமாள் முருகன் தரப்பை இந்த வலைப்பக்கம் எடுத்துச் சொல்கிறது.

கொங்கு வெள்ளாளர்கள் என்று மட்டுமில்லை, பொதுவாகவே விவசாயபின்புலம் கொண்ட சமுதாயம் எதுவானாலும் சாதிப்பிடிமானம் அதிகம் இருக்கும் நாடு இது. ஒரு கல்லூரிப் பேராசிரியராக, அந்தப்பகுதியிலேயே பிறந்து வளர்ந்ததாக, அந்த சமூகத்தை அறிந்ததாகச்  சொல்லிக் கொள்கிற ஒருவர் இந்த அடிப்படையான விவரம் கூடத் தெரியாத அப்பாவியாக இப்போது சித்தரிக்கப்படுவது உண்மையிலேயே நம்பத்தகுந்ததுதானா? மாயவரத்தான் கி.ரமேஷ் குமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சொல்லியிருப்பது இது  
எனக்கென்னவோ இந்தப் பிரச்னை பரபரப்புக்காக வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்டது போல தான் தெரிகிறது.

மதுரையில் சகாயம் மாவட்ட ஆட்சியராக இருந்த சமயத்தில், திடீரென பெருமாள் முருகன் சகாயம் குறித்து தனது வலைப்பதிவில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட உள்ளதாகவும், அது குறித்து அவருடைய முன்னுரை தேவை என்றும் கேட்டிருந்தார்.

ஆனால் அந்தக் கட்டுரைகளில் முக்கால்வாசிக்கு மேல் எல்லாமே செவி வழிச் செய்திகள் தான். அவற்றில் கூட நிறைய சம்பவங்கள் கப்ஸா.

அதைப் படித்து விட்டு, இந்த மாதிரி இல்லாத சம்பவங்களை வெளியிடச் செய்தால் சரியல்லவே என்று சகாயம் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் “எழுத்தாளனுக்கு தன் காதில் கேட்ட, கண்ணில் பட்ட அனைத்தையும் எழுத முழு உரிமை உண்டு” என்று சொல்லி விட்டு, சகாயம் அவர்களின் அனுமதி இதற்கு தேவையில்லை என்று சொல்மிக முக்கியமான லி புத்தகம் வெளியிட சில பதிப்பகங்களையும் அணுகினார் பெருமாள் முருகன்மகிக முக்கியமான கேள்வியாக .
என்ன காரணத்தினாலோ அப்போது புத்தகம் வெளியிடப்படவில்லை.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக நிகழ்ந்த சம்பவங்கள் என்பதிலேயே இப்படிப்பட்ட கதை என்றால் 50, 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று ‘கதை’ எழுதிய நாவலில் சொல்லவா வேண்டும்?

எழுத்தாளர் என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதி விடலாமா?

எழுதுவதற்கு பெருமாள் முருகன், ஏச்சும் பேச்சும் வாங்குவதற்கு பெருமாள் முருகன், போராடுவதற்கு கருத்துரிமைவாதிகள். கல்லா கட்ட கண்ணனும் காலச்சுவடும். தேசமே தீப்பிடித்து எரிந்தாலும் சாம்பலை விற்று சம்பாத்தியம் நடத்து என்கிற கவிதை வரி கண்ணனுக்கும் காலச்சுவடுக்கும் மிகச்சரியாய் மறுபடியும் பொருந்தி நிற்கிறது. காலச்சுவடை சுருக்கி காசு என்றும், அது காலச்சுவடு அல்ல காலச்செவிடு என்றும் இலக்கிய வட்டாரத்தில் புழங்கும் பகடிகள் உண்மைதான் என்பதும் மறுபடி நிரூபணமாகியுள்ளது. என்று பொங்குகிறார் ஆதவன் தீட்சண்யா 

இப்போதும் கூட  மிக முக்கியமான கேள்வியாக நிற்பது கருத்து சுதந்திரம், எழுத்தாளன், கலைஞன் என்ற போர்வையில் என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாமா?


In "On the Rule Of the Road" by A. G. Gardiner, says liberty is not a personal affair only, but a social contract.

we cannot simply think “I have liberty, and therefore I may do whatever I want.”  We have to realize that there are times when our actions can take away liberty from other people. 
Because our actions can take away liberty from other people, we have to have a social contract.  We have to agree to give up some of our liberty in order to keep most of that liberty.  Earlier in the essay, Gardiner writes about what would happen if we did not give up our liberty when told to do so by a traffic cop (or, in modern times, a stop light).  If everyone tried to keep their liberty to drive whenever and wherever they wanted, no one would have any liberty to drive at all.  The intersections would be jammed as everyone tried to drive at once.  It would be chaos.
Therefore, we cannot simply think that liberty means that we can do whatever we want.  Instead, we have to make a social contract with other people.  When we do that, we all give up some of our liberties so that everyone can live together in harmony.
கொஞ்சம் இருதரப்பையும் யோசித்துப் பார்த்து விட்டுக் கருத்துச் சொல்லுங்களேன்!


4 comments:

 1. பாரிஸில் நடந்த பத்திரிக்கை தாக்குதல் குறித்து போப்பாண்டவர் ஒரு கருத்தை வெளீட்டிருக்கிறார்.' கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றவர் மனதை காயப் படுத்தக் கூடாது. நண்பரே ஆனாலும் தாயைப் பற்றி தவறாகப் பேசினால் குத்துதான் பரிசாக கிடைக்கும்"

  ReplyDelete
 2. இரண்டு வருடம் இருக்கும் என நினைக்கிறேன். விடுதலைச்சிறுத்தைகள் பற்றி எழுதப்பட்ட ஆங்கில நூலில் கொங்கின் அண்ணன்மார் சாமிகளை தலித் சகோதரர்களை எழுத எழுதிய மீனா கந்தசாமி மீது வழக்கு போடப்பட்டது. அப்போதும் இதே போல் கருத்து சுதந்திரம் என பொங்கினார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இவர் அண்ணன்சாமிமார் பற்றி எழுதியது, வழக்கு வந்தது ஒருபக்கம் இருக்கட்டும். இவருடைய எழுத்து, நிஜ அடையாளம் என்ன என்பதைத் தமிழச்சி தன வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறாரே!

   //வார்த்தைக்கு வார்த்தை ஐ யெம் தலித் என்பதை முன்னிருத்தி வலிமை மிக்க அரசியல் வார்த்தையை லாவகமாக கையாளும் இவரை பலர் தலித் என்றே நினைத்திருந்தனர். சிலருக்கு உண்மை நிலவரங்கள் தெரிந்திருந்தும் அவரின் பின்புல அரசியல் தெரிந்து எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்கி இருந்தனர். 2 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் தளத்தில் தன்னை தலித் என்று கேவலப்படுத்தி பேசுவதாக குற்றம்சாட்டி பதிவு செய்திருந்தார்.

   நமது தோழரும் களப்போராளியும் அம்பேத்கர்வாதியுமான தோழர் ஒருவர், "நீங்கள் தலித் இல்லாத போது எதற்காக சும்மா தலித், தலித் என்று பொய் சொல்கிறீர்கள்?" என்று அவரது தளத்தில் கேள்வி எழுப்பினார். உடனே மீனா கந்தசாமி பதிவை மொத்தமாக நீக்கிவிட்டு சாட்டில் பேச வந்தார்.தனது அம்மா தலித் இல்லை. அப்பா தலித் என்று விளக்கம் கொடுத்தார். அதற்கு அத்தோழர் உங்கள் பூர்வீகம் முழுவதும் எனக்குத் தெரியும். உங்கள் அப்பாவும் தலித் இல்லை என்று விவாதம் செய்திருக்கிறார். கடைசியாக இனி தலித் என்று சொன்னால் வழக்கு தொடருவேன் என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறார். நீங்கள் தலித் மக்களுக்காக உண்மையில் போராட நினைத்தால் எங்களோடு களத்தில் நில்லுங்கள். விளம்பரத்திற்காக தலித் வார்த்தையை உபயோகிக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.//

   http://tamizachi.com/articles_detail.php?id=257

   Delete

 3. பகிர்வுக்கு மிக்க நன்றி....

  மலர்

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!