அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆரம்பித்து வைத்த சுய லாபங்களுக்காக பாராட்டு விழா எடுத்து கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியது, அதை மாணவர்கள் எதிர்த்த போது உதயகுமார் மரணம் அப்புறம் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் மாணவனை அடித்துக் கொன்று தெப்பக்குளத்தில் மிதக்கவிட்டது என்று வரிசையாக திமுகவின் சுயரூபம், அந்தக் காலத்திலேயே கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்த கதையாகவும் ஆகிப் போனது. பதின்ம வயதின் முடிவில் மாணவனாகவும் திமுக எதிர்ப்பாளனாகவும், ஸ்தாபன காங்கிரஸ் கட்சியிலும் இருந்தேன்.இந்திரா கொண்டு வந்த எமெர்ஜென்சி காலத்து அனுபவங்கள் தொடர்புகள் ஒரு இடதுசாரியாக மாறவும் பிறகு அதிலிருந்து மீளவும் வைத்தன இதைக் கொஞ்சம் இங்கேயே பார்த்திருக்கிறோம்.
2
கண்ணில் பட்ட செய்தி
2012 இல் மொழிப்போரைக் கொச்சைப்படுத்துவதாக ஆர்கேலக்ஷ்மண் வரைந்த கார்ட்டூன் ஒன்று NCERT பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டதை எதிர்த்து திமுக நடத்திய அக்கப்போர். கொஞ்சம் பழைய வரலாறு
******
முறைகேடான தொலைபேசி இணைப்பு புகார்: ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் - தயாநிதி மாறன் அறிவிப்பு அக்கப்போர் என்றவுடனேயே கண்ணில்பட்ட செய்தி
இப்படி எல்லோருக்கும் கேஜ்ரிவால் மாதிரியே விவாதம் செய்கிற ஆசை வந்துவிட்டால் இந்த நாடு தாங்குமா?
******
இரவல் தந்தவன் கேட்கின்றான்-அதை இல்லையென்றால் விடுவானா?
கண்ணதாசனின் இந்த வரிகள் கேட்க இதமாகத்தான் இருக்கின்றன. ஆனால், நிஜ வாழ்க்கையில் புத்தகங்களைக் கேட்கிறார்களே என்று இரவல் கொடுத்து விட்டு, அப்புறமாக அதைக் கேட்டுப் பாருங்கள்! உண்மை நிலவரம் புரியும்!
விஜய் டிவியில் கோட் கோபி நீயா நானா நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனும் விவாதத்தில்! அவர் எழுதிய புலிநகக்கொன்றை புத்தகத்தை வாங்கிப் படிப்பதற்கு முன்னாலேயே நண்பர் இரவல் கேட்கக் கூட இல்லை, எடுத்துக் கொண்டுபோய்விட்டார். திருப்பிக் கேட்டபோது புத்தகம் திரும்பி வரவில்லை. விரோதம்தான் வந்தது. அந்தப் புத்தகம் என்னுடைய வாசிக்க நினைத்த புத்தகங்களில் இன்னமும் வாசிக்கப்படாமலேயே இருக்கிறது.என்பது நினைவுக்கு வரவே சோகத்தில் டிவியை அணைத்து விட்டு இங்கே வந்தாயிற்று!
குடியரசு தினம் கொண்டாடுகிறோம்! குடிமைப்பண்பு, பொறுப்பு இவைகளை அறிந்திருக்கிறோமா? வளர்த்துக் கொண்டிருக்கிறோமா?
குடியரசுதின வாழ்த்துகள்!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!