ஒரு புதன்கிழமை! ஆனால் அந்தப் புதன்கிழமை அல்ல!

ஒரு புதன்கிழமை! 
The scene of the stabbing attack in Tel Aviv, January 21, 2015.
இஸ்ரேல் டெல்அவிவ் நகரத்தில்  இன்று ஒரு 23 வயது பாலஸ்தீனிய இளைஞன் நடத்திய கொலைவெறித்தாக்குதலில் 12 பேர் குத்தப்பட்டனர். ஹமாஸ் இயக்கம் இந்த இளைஞனுடைய கிறுக்குத்தனத்தை வீரச் செயலாகப் பாராட்டியிருக்கிறது மேலும் செய்திகள் இங்கே 

இது இங்கே வீடியோ செய்திகளாக  
 

Peaceful Co existence அமைதியாக ஒருவரை ஒருவர் அங்கீகரித்து வாழும் பக்குவம் வருகிற வரை பாலஸ்தீனியர்களுக்கும் சரி வெறுப்பில் எரியும் வஹாபியர்களுக்கும் சரி விடிவுகாலம் இல்லை என்பது ஏனோ இங்கே பலருக்குப் புரிய மாட்டேன் என்கிறது.
******

கொலைவெறி பிடித்தலையும் மனிதர்களையே பேசிக்கொண்டிருந்தால் எப்படி?

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில்அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்கள் அன்புடன் ‘பிரியாணி பாபா’ என்றழைக்கின்றனர். இவரது குருவான காதர் பாபா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறதுஇவரது சிஷ்யரான பிரியாணி பாபா, குருவின் நினைவாக தினந்தோறும் அவரது தர்காவின் அருகே ஏழை பக்தர்களுக்கு பாசுமதி அரிசி, கோழி, ஆடு இறைச்சிகளால், நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இவரது பக்தர்கள் வழங்கும் நன்கொடையிலிருந்து ஏழைகளுக்கு பிரியாணி வழங்கப் படுகிறது என்று உயிர்க்கருணையுடன் சேவை செய்து வரும் ஒரு மகத்தான மனிதரைப் பற்றிய செய்தி இங்கே 

****** 

ஒரு புதன்கிழமை என்று தேடினால் இப்போதும் கூட 2008 இல் வெளியான A Wednesday திரைப்படம் தான் முன்னுக்கு வந்து நிற்கிறது. உன்னைப்போல்  ஒருவன் என்று தமிழில் கமல்ஹாசன் ரீமேக் செய்த போது ஏகத்துக்கும் சர்ச்சைகள் ரகளைகள் இணையத்தில் நடந்த பழைய கதை இப்போதும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது போல!


இப்படி ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை சிங்கைப்பதிவர் பிரபு இணையத்தில் பகிர்ந்து
கொண்டிருப்பதை இன்று புதன்கிழமை கண்ணில் பட்டது. கமல்ஹாசன் மீதான பழையபாசம் இன்னும் விட்டுப்போகவில்லை தொட்டுத் தொடருகிறது என்பதைப் புலப்படுத்துவதாக.

அது போக நடப்பு நிலவரத்தில் என்னமோ  பெருமாள் முருகன் என்கிற ஒற்றைப்புள்ளியில் தான் தமிழ்நாடே கூடிக் கொந்தளிக்கிற மாதிரி ஊடகங்களில் வருகிற செய்திகள், குறிப்பாக இன்று வந்திருக்கும் இந்தச்செய்தி Tamil Nadu Rallies in Support of Novelist
புதன்கிழமை காமெடியாக!

போதுமா? :-))))

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!