யார் இந்த சிறிசேனா..?
யார் இந்த சிறிசேனா.. என்று ஆரம்பித்து..... |
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர்தான் சிறிசேனா. அதற்கு முன் கடந்த 1970-ம் ஆண்டு ஜேவிபி அமைப்பினர் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்தான் சிறிசேனா என்பதை மறந்து விடக்கூடாது."
எனவே இலங்கையில் பெரும்பான்மை அரசியலுக்கு கிடைத்த தோல்வி என்று நினைத்தால் தவறாக இருக்கும். அதற்குப் பதில் சில விஷயங்களில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி எனலாம். சீன அதிபர் ஜி ஜிங்பிங், ராஜபக்சவுக்கு அதிக ஆதரவு அளித்தார். சீனா பல ஒப்பந்தங்களை ராஜபக்ச அரசுடன் செய்து கொண்டது. தான் ஆட்சிக்கு வந்தால் அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறிசேனா வாக்குறுதி அளித்தார். அப்படி அவர் செய்தால், சீனாவுக்குப் பெரும் பின்னடைவுதான்"". "
செய்தியாளர் தன் கட்டுரையி!ல் எழுதியிருக்கிற மாதிரி சீனாவுக்கு எதிராகப் புது அதிபர் சொன்னபடியே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று நினைத்து விடவும் முடியாது. இந்தியாவுக்குச் சாதகமானவராக நண்பராக இருப்பார் என்று நம்பிவிடவும் முடியாது. இங்கே காங்கிரசில் இருந்து எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு , சரியான சந்தர்ப்பத்தில் வெளியேறி ஆட்சியையும் பிடித்த விபி சிங் மாதிரியான ஆசாமிகளைப் பார்த்திருக்கிறோம் இல்லையா? கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டி இருக்கும்! பார்ப்போமே!மிளகுப் பொங்கல்
******
குஷ்பூவுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்படி என்னதான் நெருங்கின உறவு தொடர்பு இருக்குமோ தெரியவில்லை, 2005 இற்குப் பிறகு மறுபடி வம்பு வழக்கு என்று கோர்ட் வாசற்படி ஏறவேண்டும் போல இருக்கிறது. தன்னுடைய முஸ்லிம் அடையாளத்தை இது வரை பொதுவெளியில் அறிவித்துக் கொள்ளாதவர், காங்கிரஸ் ஜோதியில் ஐக்கியமானபிறகு வெளிப்படையாகத் தான் ஒரு முஸ்லிம் என்று அறிவித்தார். இப்போது ருத்ராட்ச மாலையில் தாலி மாதிரி ஒன்றை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படம் வெளியானதில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில், ருத்ராட்ச மாலையில் மாங்கல்யத்தை கோர்த்து கழுத்தில் போட்டிருந்த நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் கா. பாலா வெள்ளிக் கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு மீது வரும் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நடுவர் சண்முகபவன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருககிறார் என்று செய்திகள் சொல்கின்றன.
ருத்ராட்சப்பூனை! இதில் ஆணென்ன பெண்ணென்ன? எதற்காக இதுமாதிரி வழக்கு என்பது புரியவில்லை என்றாலும் குஷ்பூவை வைத்துக் காமெடி செய்கிறார்கள்! நன்றாகவே என்பது மட்டும் புரிகிறது! குஷ்பூ இட்லி
******
0
தற்போதைய லிபியா இத்தாலியர்களுடைய காலனி நாடாக இருந்த தருணங்களில் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடிய உண்மையான ஜிஹாதியாக இருந்த ஓமர் முக்தார் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அவர் பெயரிலேயே ஒரு திரைப்படம் வந்தது. அந்தோணி க்வின் ஓமர் முக்தாராக நடித்த அந்தத் திரைப்படம் பார்த்த நாட்களில் உணர்ச்சி வசப்பட்டுக் கண்கலங்கியதுண்டு. அதே மாதிரி The Battle of Algiers திரைப்படமும் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மக்களின் வரலாறாகப் பார்த்துக் கலங்கியிருக்கிறேன்
With explosions and gunfire, security forces Friday ended three days of terror around Paris, killing the two al-Qaida-linked brothers who staged a murderous rampage at a satirical newspaper and an accomplice who seized hostages at a kosher supermarket to try to help the brothers escape.The worst terrorist violence France has seen in decades killed at least 20 people, including the three gunmen. A fourth suspect — the common law wife of the market attacker — was still at large and believed to be armed முழுச்செய்தியும் இங்கே
ஆனால் சமீபகாலங்களில் ஜிஹாத் என்ற பெயரில் நடக்கும் பயங்கர வாதச்செயல்கள், படுகொலைகள் மதத்தின் பெயரால் வெகுசிலரால் மட்டுமே செய்யப்படுபவை. ஆனால் அவைகளைத் தவறென்றோ கண்டிக்கவோ அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே முன்வருவதில்லை என்கிற போது, ஒரு ஒட்டு மொத்த சமூகமும் குற்றவாளியாகப் பார்க்கப்படுகிற அவலநிலையைத் தவிர்க்க முடியாமல் சுமக்க நேரிடுகிற பரிதாபத்தை என்னவென்று சொல்வது? ஆனாலும் கூட இந்தியச்சூழ்நிலையில் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களிடம் உண்மையில் என்ன மாதிரி மனவோட்டம் இருக்கிறதென்பது தெரியாமலேயே தான் பேசிக் கொண்டிருக்கிறோம்! அவர்களுக்கும் அதைத் தெளிவாகச் சொல்கிற நேரம் இந்தியப்பிரிவினை நிகழ்ந்து அறுபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின்னாலும் வரவில்லை போல!
இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு திறந்த மடல்
என்று இசைக்கலைஞர் டி எம் கிருஷ்ணா தி இந்து தமிழ்நாளிதழில் எழுதியதற்கு அங்கே வந்த பின்னூட்டங்களில் சொல்லப்பட்டதென்ன என்பதையும் சேர்த்துப் பார்த்து விடுங்கள்!
மதங்கள் பழமையிலேயே ஊறிக்கிடந்தால் ஊசிப்போய்விடுகிற பருப்பு வடை மாதிரி ஆகிவிடும் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்?
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!