சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #3 மாதொரு பாகன்! சிவப்புச்சேலை! எம்ஜியார்!

 குளிருக்கு இதமாக #மிளகுப்பொங்கல் முதலாவதாக 

பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் புத்தகம் குறித்தான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.தி ஹிந்து நாளிதழ்  முதற்கொண்டு   இணையத்தில் சவுண்டு விடுகிற இணையப்போராளிகள் வரை இன்னும் இந்தவிஷயத்தைப் பெரிய சர்ச்சையாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அனல் தெறிக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ரிசல்ட் என்னவோ பூஜ்யம் என்பது தெரிதிருந்தாலுமே கூட, இந்தப் புத்தகத்தை வைத்துக்கொஞ்சம் அரசியல், பிஜேபிக்கு எதிராகவும், ஜெயலலிதா முதல்வராகத் தொடர்ந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்றும் ஆர்டிஓ விசாரணை வெறும் கட்டைப்பஞ்சாயத்தாக  நடந்து பெருமாள் முருகனை சும்மாமிரட்டி எழுதுவதிலிருந்தே விரட்டிஅடித்திருப்பதாகவும்  தொடர்ந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

தி ஹிந்து நாளிதழ் கூட கருத்து சுதந்திரத்துக்காக நேற்றைய இலக்கிய  விழாவில் தனி அமர்வே நடத்தியிருப்பது இந்த விவகாரத்தின் உச்சபட்சக் காமெடி 
நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் பதினான்காம் நாள் திருவிழாவின் போது அந்தப் பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சாதிப் பெண்களில் குழந்தை இல்லாதவர்கள் விழாவுக்கு வந்து அங்கே தென்படும் ஆண்களில் தனக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுத்து அவரோடு உடல் உறவு கொண்டு கருத்தரிப்பார்கள்; அதுவே அங்கே பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பழக்கம் என்று எழுதியிருக்கிறார்.  கதையின் கருவே அதுதான்.  கதை முழுக்கவே அதுதான்.  காளி, பொன்னா இருவரும்  ஜோடி.  திருச்செங்கோடு பக்கத்தில் உள்ள கிராமம்.  பொன்னாவுக்குக் குழந்தை இல்லை.  ஊர் அவளைக் கேலி பேசுகிறது.  நாவலின் 190 பக்கத்தில் 180 பக்கம் அந்தக் கேலி தான் தமிழ் சினிமா பாணியில் விவரிக்கப்படுகிறது.  சுகன்யாவை நினைத்துக் கொள்க.  கடைசி பத்து பக்கத்தில் பொன்னாவை அவளுடைய தாயும், மாமியாரும் பதினான்காம் நாள் திருவிழாவில் யாரோ ஒருத்தனுக்குக் கூட்டிக் கொடுக்கிறார்கள்.  நான் சொல்லவில்லை சாமி.  பெ. முருகனின் கதாநாயகன் காளிதான் அப்படிச் சொல்லி விட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான்.  சுபம்.  
இப்படி ஒரு கயவாளித்தனமான கற்பனையை பெ. முருகன் பிற சாதிகளை வைத்து எழுத முடியு0ா000ி0000த்துப் பெண்களை வைத்து  இப்படி எழுத முடியுமா?  அப்படியிருக்க ஒரு சாதி பற்றி மட்டும் இவர் எப்படி எழுதலாம்?  கவுண்டர் சாதியில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது என்பதற்கு என்னய்யா ஆதாரம் என்று கேட்டால் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கதை அளக்கிறார் முருகன்
 என்று இங்கே எழுத்தாளர் சாரு நிவேதா  சொல்லியிருப்பதும் ஜெயமோகன் அதை ஆமோதித்து மாதொருபாகன் ஒரு வகையான ‘அமெச்சூர்’ எழுத்து. எவ்வகையிலும் இலக்கியத்தகுதி கொண்டது அல்ல. அது எழுதப்பட்டதிலும் தமிழின் முக்கியமான பெரும்படைப்புகள் இருக்க அது சுடச்சுட மொழியாக்கம் செய்யப்பட்டதிலும் உலகம் முழுக்க கொண்டு ோகப்பட்டு தமிழிலக்கியமும் வாழ்க்கையும் இதுதான் என்று காட்டப்பட்டதிலும் உள்ள தந்திரங்கள் எரிச்சலூட்டுவதுதான். என்று இங்கே சொல்லியிருப்பதும் சரியான பார்வைதான்! ஆனால் தனக்கு சௌகரியப் படாத தருணங்களில் பதிவையே நீக்கி விடுவது ஜெயமோகன் வழக்கம் என்பதைப்புரிந்து கொண்ட வாசகர் ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டிருக்கிறார். 

ஒரு சாதாரண மனுஷியாக ஒரு பெண் தன்பெயரைச் சொல்லாமல்முகநூலில் சொல்லியிருக்கும் இந்தக் கருத்து, கருத்து சுதந்திரம் அது இது எதுவென்று ஏதும் புரியாமல் பொங்கிக்கொண்டிருப்பவர்கள் செவிளில் அறைகிற மாதிரி அந்தப்பக்கத்து மக்களுடைய ஆதங்கம் வேதனை கோபம் கொந்தளிப்புக்கான நியாயத்தைச் சொல்கிறது.


பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டிருப்பவர்களுடைய உண்மையான நோக்கம் எழுத்தாளனை, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பது அல்ல என்பது தெளிவாகிக் கொண்டிருக்கிறது. பெருமாள் முருகனைப் பாதுகாப்பது என்று முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருப்பது கூட உண்மையில் அவரையோ, அவரது எழுத்தையோ பாதுபாப்பதாக இல்லை என்பதுதான் இப்போதைய காரசாரமான மிளகுப்பொங்கல் 
********
சிவப்புச்சேலை!மிரளும் காங்கிரஸ் என்று இந்தப்பக்கங்களில் நான்காண்டுகளுக்கு முன்னால்  எழுதியிருந்தேன்! நினைவிருக்கிறதா? 


படிப்பின்வாசனையே  நேரு குடும்பத்தில் மோதிலால் நேருவுக்குப் பின் எவருக்கும் அதிகமாக இருந்ததில்லை.குறிப்பாக இந்திராவின் வாரிசுகளுக்கும் படிப்பு வாசனைக்கும் கொஞ்சம் கூட ராசியே இருந்ததில்லை. ஆட்சியில்  இருந்தபோது ராஜாகாது கழுதைக்காது ரகசியமாகப் பாதுகாக்கப் பட்டதும்  ஆட்சியை இழந்தபோது அந்தரங்கங்கள் புத்தகங்களாக வெளிவந்து போட்டுத்தாக்குவதுமாக அப்படி ஒரு ராசி. ஜேவியர் மோரோ என்ற  எழுத்தாளர் எழுதிய புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் பார்த்துக் கொள்ளப் பட்ட  கதை லிங்கில் இருக்கிறது. இப்போது அதற்கென்ன என்கிறீர்களா? தடையைத்தகர்த்து இப்போது இந்தப்புத்தகம் இந்தியாவிலும் வெளியிடப்படுகிறது.அவுட்லுக் வார இதழில் வந்த புத்தக ஆசிரியரின் பேட்டி இங்கே!  பதிப்பகத்தின் சார்பில் ட்விட்டர் அறிவிப்பு இங்கே!!


.
புத்தகம் வந்து என்னத்தையோ புரட்டிப்போடப்போகிறது என்று எதிர்பார்க்க வேண்டாம், அந்தோனியோ மைனோ  மாதிரியே புத்தகமும் சாதாரணம் தான்! அது வெளிப்பட்டுவிடக் கூடாதே தியாகசிகரம் பில்டப்  கலைந்து விடக் கூடாதேஎன்று அந்த நாட்களில் மிரண்டார்கள், அவ்வளவுதான்! இப்போது மிரட்டுவதற்கு வேறு விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றனவாம்!

********
ஜனவரி 17! மக்கள்திலகம் எம்ஜியார் பிறந்த தினம். வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் கடவுளாகவே கொண்டாடப்படுகிற அளவுக்கு இவரிடம் அப்படி என்னதான் இருந்தது? நடிகர் சிவகுமார் கொஞ்சம் சொல்கிறார். பழசுதான், ஆனாலும் இன்றைக்கும் இந்த மூன்றெழுத்து கருணாநிதியை திமுகவை மிரட்டிக் கொண்டிருக்கிறது கொஞ்சம் கேட்போமா?


மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒருமாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று போற்றிப்புகழ வேண்டும்

****** 

=====

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!