Showing posts with label இட்லிவடைபொங்கல். Show all posts
Showing posts with label இட்லிவடைபொங்கல். Show all posts

இட்லி வடை பொங்கல்! #13 சனிக்கிழமை ஸ்பெஷல்

காஷ்மீர் அவந்திபோரா பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தானிய ISIயால் ஊக்குவிக்கப்படும் JeM அமைப்பு ஒரு கோரத்தாக்குதலை நடத்தி 44 CRPF வீரர்கள் பலியான சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வை உண்டாக்கியிருக்கிறது.ஆனால்  இங்கே  தந்தி டிவிக்கு வேறு கவலை! பாகிஸ்தானுடன் போர்வருமா? வராதா?

ப்ரம்ம செலானி சொல்வதில் முழுநியாயம் இருக்கிறது. அவந்திபோரா தாக்குதலுக்குப் பின்னாலும் முழு அளவிலான தூதரக உறவுகள் நீடிக்கத்தான் வேண்டுமா?
1:22 PM - 16 Feb 2019


பிரிவினைக்கு முந்தைய காலத்திலும் சரி, பிந்தைய 72 ஆண்டுகளிலும் சரி, பாகிஸ்தான் ரத்தவெறி பிடித்தலையும் ஒரு மனநிலையோடுதான் இருந்து வருகிறது. இதுபோல வெறுப்பில் எரியும் மனங்களுடன் சாந்தி சமாதானம் எதுவுமே சாத்தியமில்லைதான்! ஆனால் போர்?

ப்ரம்ம செலானி ஹிந்துஸ்தான் டைம்சில் நேற்றைக்கு எழுதிய இந்தப் பகிர்வு, வேறு சில முக்கியமான விஷயங்களையும் சொல்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலம் வரை நம்முடைய கவனம், வெளியுறவுக்கொள்கை என்பதெல்லாம் மேற்கே பாகிஸ்தான் ஒன்றை மட்டும் மையப்படுத்தியே இருந்ததும், இப்போது அது கொஞ்சம் மாறி, இந்திய வெளியுறவுக் கொள்கை  விரிவடைந்து வருகிற ஒரு நல்லவிஷயம் நடந்து கொண்டிருப்பதும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டிய செய்திகள்.

As Indian national elections approach, China has stepped up its influence operations in India. China has been emboldened by its remarkable success in Nepal, which has tilted toward Beijing, despite an open border underscoring its symbiotic relationship with India. On the first anniversary of Nepal’s communist government this weekend, it is important to remember that China played no mean role in the communists’ democratic ascension to power there.
India, with its fragmented polity and fractious political divides, has become an important target of China’s efforts to buy access and influence and sway politics. These efforts have been aided by New Delhi’s feckless approach to Beijing, especially since the Wuhan summit 

Moreover, by more than doubling its trade surplus with India to over $66 billion a year on the National Democratic Alliance government’s watch, Beijing has acquired deeper pockets for influence operations, which aim to help instil greater Indian caution and reluctance to openly challenge China. At a time when India is engrossed in electoral politics, including increasingly petty and bitter feuding, Beijing’s conduct is underlining its master plan for this country: It wants a weak and unwieldy Indian government to emerge from the elections.

இப்படி ப்ரம்ம செலானியின் கருத்தைப் புறந்தள்ளிவிட முடியாதென்றே நினைக்கிறேன். அவர் சொல்லியிருப்பதை முழுதுமாக இணைப்பில் படித்து என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்களேன்.

                    
முகேஷ் அம்பானியின் சேனல் இது. சென்ற நாடாளு மன்றத் தேர்தல்களை ஒட்டிக் கைமாறிய ஊடகம். இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்குமே ஒரு தனி அரசியல் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டால் செய்திகள் விவாதங்கள் போகும் விதத்தையும் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது.

வேணாம் சாமிகளா! வெண்ணெய்வெட்டி சிப்பாய்கள், முகநூல் போராளிகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! 
     
 இந்தக் கோமாளிகளை என்ன செய்யப்போகிறோம்? 
      

இட்லி வடை பொங்கல்! #9 இன்று சனிக்கிழமை!

சிலநாட்களுக்கு முன்னால்தான் காங்கிரஸ் கட்சியின் 134 வது துவக்கதினம் என்று ராவுல்பாபா கேக் வெட்டிக் கொண்டாடினார் என்று செய்திகள் வந்தன. ஆனால் இந்தியாவின் Grand Old Party வயதுக்கேற்ற அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றிருக்கிறதா என்றால் #பப்பு என்று அழைக்கப்படுவதற்கேற்ற மாதிரித்தான் காங்கிரஸ் கட்சித்தலைவர் மற்றும் அடிவருடிகளின் செயல்பாடு இருக்கிறது. 

காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெர்ஷன் 1, அடுத்து 2 என இரண்டிலும் ஊழல் புகார்கள் வெடித்துக் கிளம்பியமாதிரி நரேந்திர மோடியின் ஆட்சியில் எதுவும் கிளம்பவில்லை. அதனாலென்ன? ஊழல் ஊழல் என்று பெருங் குரலெடுத்துக் கூவினால் போதுமே என்று ராவுல் பாபா ரஃபேல் விமானபேர ஊழல் என்று திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருக்கிறார். இதிலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர் கொள்ளலாம் ஜெயிக்கலாம் என்று கண்ணடித்துக் கனவு காண்கிறாரோ என்னவோ?


திமுகவின் தம்பித்துரை பேசிக்கொண்டிருக்கிறார். பின்னால் ராகுல்  காந்தி என்ன செய்கிறார்? கொஞ்சம் பாருங்கள்! பப்பு கண்ணடிக்கிற அற்புதக் காட்சியை இந்த வீடியோவில் 6நி 20 செகண்டிலிருந்து பார்க்க. 



இப்படியாகப்பட்ட  இவரைத்தான் பிரதமராக்காமல் விட மாட்டேனென்று வீரவாள் எல்லாம் கொடுத்து இசுடாலின் சிலநாட்களுக்கு முன்னால் சூளுரைத்தார் என்பதாவது நினைவிருக்கிறதா?

   
நாடாளுமன்றத்தில் ரஃபேல் பற்றிய விவாதத்தைக் காங்கிரஸ்கட்சி நடத்திய விதமிருக்கிறதே! வேடிக்கை செய்வதே வாடிக்கை என்று கடைசியில்  கோமாளிக் கூத்தாகிக் கொண்டே வருவதில் நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் காகித அம்புகளை வீசி மகிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்காலத்தில் ராணுவத்துக்கு ஆயுதங்கள் தான் வாங்க முடியவில்லை, விமானங்கள் வாங்க முடியவில்லை அதனால் இப்போது காகிதத்தில் பிளேன்கள் செய்துவீசிப் பார்ப்போமே என்கிற எண்ணமா? தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் நேற்றும் காங்கிரஸ் ரகளை. மோடி தான் சபைக்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்கிற காங்கிரசின் கோரிக்கையை, அரசின் சார்பிலும், தன் துறை சார்ந்த விஷயம் என்பதாலும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு பேச முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்து சபாநாயகர் நிராகரித்து விட்டார்.  

    
The five-hour debate on Rafale jet purchase saw heated moments in Lok Sabha on Friday with UPA chief Sonia Gandhi leaving the House midway amid personal attacks by BJP members and Defence Minister Nirmala Sitharaman getting emotional while mentioning Congress’ repeated jibes at her and Prime Minister Narendra Modi. இப்படி பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் எழுப்பிய அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு இரண்டுமணி நேரம் விரிவான பதிலடி கொடுத்ததில் ஒரு சிறுபகுதி மேலே காணொளியாக.

ங்களுடைய திட்டங்கள் எல்லாம் பூமராங் மாதிரித் திரும்பத் திரும்ப, தன் குடும்பத்தினர் மீதே திரும்புவது குறித்து எதுவும் செய்ய முடியாமல், பாதியிலேயே சோனியா சபையை விட்டு வெளியேறிய பரிதாபம் செய்திகளில் ஒரு ஓரத்தில் வந்திருக்கிறது. 
*******
ஜனவரி 5- திமுக மகளிரணிச் செயலாளரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழிக்குப் பிறந்தநாள்.


வழக்கமாகத் தனது பிறந்தநாள் அன்று அப்பா கருணாநிதி, அம்மா ராஜாத்தி அம்மாளிடம் இருந்து ஆசி, அண்ணன் ஸ்டாலினிடம் இருந்து வாழ்த்து, தொண்டர்கள் அணிவகுப்பு, நலம் விரும்பிகளின் சந்திப்பு என சந்தோஷத்தில் திளைப்பார் கனிமொழி. குறிப்பாக சி.ஐ.டி. காலனி வீட்டில் தந்தை முன்னிலையில் கேக் வேட்டிக் கொண்டாடுவார் கனிமொழி. ஆனால் இந்த முறை எதுவும் இல்லை.

ஏனாம்? #ரட்சகனுக்காக என்று கவிதை எழுதினாரே!! அது யாரென்று தெரியும் வரை ஸ்டாலின் தலைமைக்கு எதிராக எதையும் செய்து அவரின் அதிருப்தியை சம்பாதித்துக்கொள்ள கனிமொழி விரும்பவில்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறுவதாக இங்கே 

******* 
எது எதையோ  பேசிக்கொண்டிருக்கிறோம்! பேசவேண்டிய முக்கியமான விஷயத்தைப் பேசாமல் இருந்துவிடுவோமா? சொல்லின் செல்வன் என்று கம்பனால் சிறப்பிக்கப்பட்ட அனுமனை மறந்துவிடுவோமா என்ன?   

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

இட்லி வடை பொங்கல்! #8

ஸ்டாலின் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த ராசி ரொம்ப நல்ல ராசி தான் போல ! ஹிந்து தமிழ் நாளிதழ் இப்படிப் படம்போட்டுக் கலாய்க்கிறது!

அங்கே அப்படியென்றால் #துக்ளக் இந்த வார அட்டைப் பட நையாண்டிஇப்படி!



செய்தாலும் செய்வார்கள் என்கிறீர்களா? #கழகங்கள் எந்தக் காலத்தில் எதையும் நேர்வழியில் நேரடியாகச் செய்திருக்கிறார்கள்? இப்படி வேண்டிக் கொள்ளவும் ப்ராக்சிகள் இல்லாமலிருக்குமா?

ராகுல் காந்தி தன்னைக் காஷ்மீரி கௌல் பிராம்மணன் என்று சொல்லிக் கொள்கிறாராம்! யாராவது எப்படி என்று கேட்டிருப்பார்களோ? அப்பா வழிப் பாட்டன் ஃபெரோஸ் கான்= பெரோஸ் காந்தியாக பின்னாட்களில் அறியப்பட்டவரை, பாட்டி இந்திரா முஸ்லிமாக மதம் மாறித் திருமணம் செய்து கொண்ட கதை தெரியும் இல்லையா? அப்புறமும் எப்படி கௌல்?
சரி, அதுதான் போய்த்தொலைகிறது, அம்மாவழியில் பார்த்தாலுமே கூட இத்தாலியக் கிறித்தவர்தானே?!

அப்பன்வழி, அம்மா வழி இரண்டிலுமே வேறுவேறு மதங்கள் தான்! ஆனாலும் ராகுல் காந்தி தன்னை எந்த அடிப்படையில் தன்னைக் காஷ்மீரி கௌல் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறாராம்? உங்களுக்காவது ஏதாவது புரிகிறதா? கான் gandhe ஆகி டூப்ளிகேட் காந்தியாகவும் ஆன கதை மாதிரிக் கூட இல்லாமல் இது என்ன புதுக்கதை?

நேற்று காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேக் வெட்டி கொண்டாடினர். படம்: பிடிஐ என்று செய்தி வெளியாகி இருக்கிறதே! யார் கண்ணிலாவது பட்டதோ? 

1885 இல் ஒரு பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரி ஆரம்பித்த காங்கிரஸ் அல்ல இன்றிருப்பது! இந்தியர்கள் தலைமை ஏற்றபிறகும் கூட பிரிட்டிஷ் அரசிடம்  சலுகைகளை மட்டும் கோரிய அமைப்பாக இருந்த அந்தக் காங்கிரசும் இல்லை. 

Many Muslim community leaders, like the prominent educationalist Syed Ahmed Khan, viewed the Congress negatively, owing to its membership being dominated by Hindus. Orthodox Hindu community and religious leaders were also averse, seeing the Congress as supportive of Western cultural invasion.
The ordinary people of India were not informed of or concerned about its existence on the whole, for the Congress never attempted to address the issues of poverty, lack of health care, social oppression, and the prejudiced negligence of the people's concerns by British authorities. The perception of bodies like the Congress was that of an elitist, then educated and wealthy people's institution. இதுதான் காங்கிரசின் ஆரம்பகால நிலைமை! பால கங்காதர திலகர் வந்த பிறகுதான் காங்கிரசுக்கு தேசிய உணர்வே வந்தது. திலகரும் பிபின் சந்திரபாலும், ஸ்ரீஅரவிந்தரும் வ உ சியும் ஊட்டி  வளர்த்த தேசிய உணர்வுடன் இருந்த காங்கிரசல்ல இன்றிருப்பது!

1915 இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி  என்கிற ஒரிஜினல் காந்தி வந்த பிறகு காங்கிரஸ்  என்பது தியாகம் செய்யத் தயாராக இருந்த தொண்டர்களோடு, மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு இயக்கமாகவும் இருந்ததே, அந்தக் காங்கிரசல்ல இன்றிருப்பது!

நேரு கைகளில் ஆட்சி வந்ததுமே நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. தனக்குப் பிடிக்காத ஒருவர், புருஷோத்தம்தாஸ் டாண்டன் 1950 இல் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நாடகம் நடத்தியதும் 1959 இல் தன் மகளையே காங்கிரஸ் தலைவராக்கி, மக்கள் சிபாரிசின் பேரில் உலகில் முதல் முறையாக கேரளாவில் ஜனங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த கம்யூனிஸ்ட் கட்சி அரசை 356 வது பிரிவின் கீழ் கலைத்ததும் ஆன அந்தக் காங்கிரசும் அல்ல இன்றிருப்பது. இந்திரா தன்னுடைய சுயநலத்துக்காகக் காங்கிரசை இரண்டாக உடைத்ததும் எண்பதுகளின் தொடக்கத்தில் ஆட்சியில் இருந்தபோது தன்னுடைய பிரிவுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் என்று பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிற மாதிரி செய்து கொண்டது பழைய கணக்கு, வரலாறு! அதுகூட அல்ல இன்றிருப்பது!   

இந்திரா, ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து சோனியா தன்னுடைய வாரிசுகளுக்காகத் தயார் செய்து வைத்திருக்கிற சுயநலக்கும்பலால் மட்டுமே ஆன ஒரு உருவகம் இப்போது காங்கிரஸ் கட்சி என்ற பெயரில்!  அவ்வளவுதான்!    

Jaya produces proof on Gandhi’s intent to dissolve Congress

PTI  Updated on April 02, 2013
Tamil Nadu Chief Minister J. Jayalalithaa






Tamil Nadu Chief Minister Jayalalithaa today presented documentary evidence to Congress members in the state Assembly to validate her minister’s argument that Mahatma Gandhi wanted to dissolve the century-old political party after Independence.

    
         

சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #7

நடிகர் கமல்ஹாசன் கடந்த 19 ஆம் தேதி ரிபப்ளிக் டிவி விவாதத்தில் சொதப்பியதை சமூக வலைத் தளங்களில் மிக்க கடுமையாக விமரிசித்துக் கொண்டிருப்பதை இன்றைக்கு #மிளகுப்பொங்கல் அயிட்டமாக முதலில் எடுத்துக் கொள்ளலாமா? அந்த தொலைகாட்சி விவாத வீடியோவைப்  பார்த்துவிட்டு கமல் ஹாசன் முன்னெடுக்கிற அரசியல் எப்படிப் பட்டது? அரசியலில் கமல்ஹாசன் தேறுவாரா? தசாவதார நடிகர் அடுத்த அ(வ)ரிதாரம் பூசியிருப்பது மட்டுமே தான் அவருடைய அரசியலா? 2019 நாடாளு மன்றத் தேர்தல்கள் எப்படியிருக்கும் என்று சொல்கிறார்கள்? என்று நேற்றைக்குப் பதிவில் எழுப்பிய கேள்விக்கு பதில்கள் வரவில்லை என்றாலும் சமூகவலைத்தளங்கள் மிகத்தெளிவான கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள்! ஒருசாம்பிளுக்கு இங்கே

இந்த வீடியோவில் அவ்வளவு சாரமில்லை. ஆனாலும் யூட்யூபில் இந்த வீடியோவுக்கு வந்திருக்கிற கமென்டுகள் என்ன சொல்கின்றன என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம்! ஒரு சோறு பதமாக!  

Mohanasundaram M.R
என்னடா காரசார விவாதம். நம்ம ஆண்டவருக்கு நல்லா சுண்ணாம்பு தடவி அனுப்பிட்டானுக. நம்மவரு அந்த அம்மாகிட்ட சல்லி சல்லியா நொறுங்கிட்டாரு 😂 😂 😂 மொத்தத்தில உலக நாயகன் உளறல் நாயகன் ஆனதுதான் மிச்சம்.
Show less
ஆனால் கமல் ஹாசன் அசருவதாயில்லை! தேர்தலில் குதித்தே தீருவேன் என்று இன்றைக்கு மீடியாவில் பேட்டி கொடுத்திருக்கிறார்!

    
Kamal Haasan also said that he would not collaborate with any party that "tries to change Tamil Nadu's DNA".  என்று சொல்லியிருப்பதில் வழக்கம்போலவே குழப்பிவிட்டுப் போயிருக்கிறார் என்பதற்குமேல் விஷயமில்லை.  அதென்ன தமிழ்நாட்டின் #DNA ?
*******

ரங்கராஜ் பாண்டே தந்திடிவியை விட்டு வெளியே வந்தபிறகும் கூட இன்னமும் பரபரப்புச்செய்தியாகவே இருக்கிறாரோ? இந்த வீடியோவைப் பாருங்கள்!

  
என்றைக்கும் ஒரு ஊடகக்காரனாகவே இருப்பேன் என்கிறார்! பொதுவெளியில் கருத்து சொல்வதிலும் கொஞ்சம் சுயகட்டுப்பாடு இருக்கவேண்டும் என்றும்
சொல்கிறார்!  

******* 

ஹிந்து தமிழ் நாளிதழுக்கு ராவுல் பாபா மீதென்ன கோபமோ? இப்படி ஒரு கருத்துப்படம்!


அவர் ஒண்ணும் பப்பு இல்லை. வயசுக்கு வந்துட்டார்னு ஃபரூக் அப்துல்லா சர்டிபிகேட் கொடுத்தது செல்லுபடி ஆகலையோ?

  *******
இவ்வளவு தூரம் வந்துவிட்டு கருத்து எதுவும் சொல்லாமல் போனால் எப்படி?

சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #5

 முந்தின பதிவில் சொல்லியிருந்த மாதிரி டில்லி சட்டசபைத் தேர்தல்களில்  கொசுவை விரட்ட பீரங்கியைத் தூக்கின கதையாக பிஜேபி ஒரு கசப்பான தேர்தல் முடிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்றே கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. பிஜேபிபாடம்  கற்றுக்கொள்ளப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அந்த இடைப்பட்ட நேரத்தில் 

சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! 


#stalinfor2016 என்று கோஷமெழுப்பி ஸ்டாலின் தரப்பு ஓய்ந்துபோய்க் கிடந்தாலும் அழகிரி தரப்பு விடுவதாயில்லை. சென்ற ஜனவரி 30 அழகிரி பிறந்த நாளுக்கு மதுரை அடிப்பொடிகள் வைத்த கட்அவுட், போஸ்டர்களில் அடித்தே சொல்லிவிட்டார்கள். எப்படி என்கிறீர்களா?


  

மதுரைக்கூத்து இப்படியென்றால் அறிவாலயக்கூத்து அதைவிடக் கொஞ்சம் மேலே தி இந்து நாளிதழ் வாசகர் கருத்து, இப்படிப் படமாக!  #ஆராசா #கனிமொழி #தயாநிதிமாறன் இவர்களை வைத்து சம்பாதித்து வைத்த நல்ல பெயரை #ஓபிஎஸ்கெடுத்து விட்டாராம்! நக்கல் கொஞ்சம் தூக்கல்தான்!  ஆனால் உண்மை ஏகத்துக்கும் சுடுகிறதே!

#KDbrothers ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன் செல்லாது, ரத்து செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெஞ்ச் முதலில் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், `2ஜி அலைக்கற்றை தொடர்பாக எழும் அனைத்து வழக்குகளும் நேரடியாக உச்ச நீதிமன்ற விசாரணைக்கே வர வேண்டும். வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கக் கூடாது’ என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இதையடுத்து, மாறன் சகோதரர் களின் மனுவை ஏற்க முடியாது என்ற தங்களது முந்தைய உத்தரவை நீதிபதிகள் திரும்பப் பெற்றனர். அம்மனு, தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவித்தனர். ஆக, உலை தயாராகிவிட்டது பொங்கல் வைக்கும் நேரம் மட்டுமே தள்ளிப்போயிருக்கிறது. நன்றாகப் பொங்கட்டுமே!

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் | படம்: கே.பிச்சுமணி  
சட்டம் என் கையில்! போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு: சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் என்கிறது இந்தச்செய்தி 

மாலன் புதியதலைமுறை ஆசிரியராக வந்தபிறகு  அவர் எழுதுவதைப் படிப்பதில் இடைவெளி விழுந்தது. தற்செயலாக அவர் முகநூலில் சென்னை சட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பாக எழுதியிருந்தது கண்ணில் பட்டது.. சில அடிப்படையான சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். நீங்களும் வாசிக்கலாமே    

சில அடிப்படையான கேள்விகள்

1.சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின் பின்னணி என்ன?

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களில் இருபிரிவினர் ஆயுதங்களோடு கல்லூரியில் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அதையடுத்து அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது. 2009ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி கமிஷன் தனது அறிக்கையை அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் அளித்தது. அந்த அறிக்கை ஜூலை 21ஆம் தேதி சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. (திரு.ரவிகுமார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் இது குறித்து மேலும் தகவல் தரலாம்) அந்த அறிக்கை,வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க சென்னையில் 3 மருத்துவ கல்லூரி இருப்பது போல சட்டக் கல்லூரியை பிரித்து தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூந்தமல்லி ஆகிய இடங்களில் சட்டக்கல்லூரியை உருவாக்க வேண்டும் என்ப் பரிந்துரைத்தது

இதையடுத்து 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி மாநில அரசின் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “Government has accepted the recommendation made in the report of Justice P Shanmugam Commission of Inquiry to shift TN Dr Ambedkar Government Law College, Chennai to a location within the city and open three new Law Colleges in and around the city of Chennai. The estimated outlay for this relocation and construction would be Rs 75 crore (Rs 25 crore per college),” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. 2013ல் வெளியான அறிக்கைக்குத்தான் இரண்டாண்டுகள் கழித்து இப்போது மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

தமிழ்நாட்டு நிலவரத்தில் ஆறிப்போன பொங்கலே இப்படி இருக்கிறதே என்று அலுத்துக் கொள்கிறீர்களா? அதுவும் சரிதான்!

******
பட்டி மன்றங்கள் என்றாலே வெறும் வெட்டி மன்றங்கள், வெட்டி விவாதங்கள் என்றாகிப் போன காலம் இது.பட்டிமன்றங்களுக்குக் கொஞ்சம் மவுசு இருந்த நாட்களில் அடிக்கடி பழகிப்போன தலைப்பு:

கற்பில் சிறந்தவள்   
கண்ணகியா ? மாதவியா ?


இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு இன்னுமொரு பட்டிமன்றத்தை ஆரம்பித்து விட வேண்டாம்! காலம் நிறைய விஷயங்களில் புதுப்புது மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு மேல்  பெரிதாக அலட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இதில் கருத்துச் சொன்னவர்களில் எவருமே பொய் சொல்லவில்லை, வெறும் ஊடக வெளிச்சத்துக்காக மாற்றிச் சொல்லவில்லை, மனதில் பட்டதை, தங்களுக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள் என்றே எனக்குப் படுகிறது.    

தற்செயலாக எழுத்தாளர் ஜெயமோகன் தனது தளத்தில் இதுபற்றிப் பேசியிருந்தது கண்ணில் பட்டது. அவர் முடிவாகச் சொல்வதிது:

நம் மரபே நமக்குக் கற்பு என்பதற்கு இரு வரையறையை அளிக்கிறது. ’கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என்பது ஒன்று. ‘கற்பென்பது ஒருவனைப்பற்றி ஓர் அகத்திருத்தல்’ என்பது இரண்டாவது. நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது முதல் வரையறையைத்தான். ஓரகத்தில் இருக்கவேண்டுமா ஒருவனைப்பற்றிக் கொள்ளவேண்டுமா என்பதெல்லாம் பெண்கள் அவர்களே முடிவுசெய்யட்டும்.


என் பார்வையில் ‘நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி’ கொண்டு தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரமான பெண்ணே கற்புள்ளவள். கற்பு என்பது அந்த நெறியைக் கற்றுக்கொள்வதுமட்டும்தான் 

ஜெயமோகன் சொல்வது நியாயமாகத்தான் படுகிறது.

..

சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #4

நண்பர் ஒருவர் கூகிள் ப்ளஸ்ஸில் எழுதிய மாதிரி, ஜெயந்தி நடராஜன் காங்கிரசை  விட்டு வெளியேறுகிறேன் என்று பேட்டி கொடுத்து அதுவும்  பரபரப்புச்செய்தியான பிறகுதான் காங்கிரஸ்கட்சி இன்னமும் இருக்கிறது என்ற நினைப்பே இங்கே நிறையப்பேருக்கு வந்ததாம்! 

 



சொல்லி வைத்த மாதிரி எல்லாப்பழியும் ராவுல்பாபா மீதே சுமத்தப் படுவதுதான் ஒரு தனிநபர் மீதே கட்டமைக்கப்படும் வாரிசு அரசியலின் ஆகப்பெரிய பரிதாபமாக இருக்கிறது.


சோனியா அல்லது வாரிசுகள் தவறே செய்யாதவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. அவர்கள் தலையிலேயே  எல்லாப் பழிகளையும் சுமத்திவிட்டு ஆ.ராசா, தயாநிதிமாறன், அல்லது இப்போது இந்தப் பழிசுமத்தும் பட்டியலில்  புதிதாகச்சேர்ந்திருக்கும் ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தப்பித்துக்கொண்டுவிட முடியாது என்று தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.


2014 ஜனவரி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி எழுப்பிய   #ஜெயந்திடாக்ஸ் குற்றச்சாட்டுகள்  உண்மைதான் என்று காங்கிரஸ்கட்சி இப்போது சொல்கிறது. குற்றம் செய்தது உண்மையானால் தூக்கில் போடுங்கள் என்று #தூக்குமேடை வசனம் பேசுகிறார் முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலத்தின் பேத்தி. இந்த மாதிரி ஊழல் பேர்வழிகளை சீனாவில்செய்தது மாதிரி  #தூக்கில்போடப்போவதுயார்  என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. நிலக்கரி சுரங்க அனுமதிகளில் நடந்த ஊழல் எப்படி 2G ஸ்பெக்ட்ரம் திமுகவை விடாது கருப்பு என்று துரத்திக் கொண்டிருக்கிறதோ அதே மாதிரிக் காங்கிரஸ் கட்சியையும் விடாமல் துரத்த ஆரம்ப முகூர்த்தம் மன்மோகன் சிங்கை சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்ததில் ஏற்கெனெவே நடந்தேறியாகிவிட்டது. சிபிஐ விசாரணை வளையத்துக்குள் சிக்குவோம் என்ற பயமே ஜெயந்தி நடராஜன் இப்படிப்பேசுவதாக காங்கிரஸ் கட்சி சொல்கிறது. இதற்குமேலும் எழுத ஆரம்பித்தால்  இட்லி அம்மிணி சைசுக்குப் பெரிதாகிவிடும் என்பதால்ஒரு சின்ன ப்ரேக்.

****** 

நல்ல நாளிலேயே நாயகம்! இவரது நாக்கும் நக்கலும் அத்தனை கூர்மை! அதனாலேயே  காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதித்துக் கொண்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.  கட்சியில் மிகப்பெரிய இடத்துக்கு வரமுடியாமல் போனாலும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கிடைத்த இடங்களில் கத்திபோடுவதை வாடிக்கையாக  வைத்துக் கொண்டிருக்கிறார். பொங்கல் அதுவும் ஈரோட்டுப்  பொங்கல் என்றால் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கும் என்பதை சமீப காலங்களில்  ஈவிகேஎஸ் இளங்கோவன்.நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

1960களில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் முதல்வராக இருந்த பக்தவத்சலத்தின் பேத்தி ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த உடனேயே உங்கள் தாத்தா அரிசி பதுக்கிய கதை தெரியாதா என்று பதிலடி கொடுத்ததில் ஆகட்டும், அப்பனும் மகனுமாக  இன்னுமிரண்டு பேர் கூடவே வெளியேறினால் காங்கிரஸ்கட்சி இன்னும் கொஞ்சம் தூய்மை அடையுமென்று ப.சிதம்பரத்தையும் வாரிசு கார்த்தி சிதம்பரத்தையும் தொட்டு  வாரின விதம் ஆகட்டும், ஈரோடு என்றால் பகுத்தறிவு வெங்காயம் என்று தானே  அறிந்திருப்பீர்கள், அதையும் மிஞ்சுகிற விதமாக! ஆனால் பிரச்சினை காலைச்சுற்றின பாம்பாகக் கடிக்காமல் விடாதென்று சோனியா நினைத்தாரோ என்னவோ, இளங்கோவன் அப்படிப்  பேசியதில் அதிருப்தியைத் தெரிவித்தாராம்! இதைவிட சூப்பர்  பொங்கல்  வேறெவரும் வைத்துவிடமுடியுமா என்ன? !! 
******




















என்ன இது? முன்னாள் நீதிபதியாக இருந்தவர், எந்த ஒரு விஷயமானாலும் விவரத்தோடு பேசுகிறவர் மார்க்கண்டேய கட்ஜுவா இப்படிப் பேசியது என்று கேட்கிறீர்களா? கட்ஜு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாசியா இல்மியின் அழகை வர்ணித்து எழுதியுள்ளார். அதில், கிரண் பேடியை விட ஷாசியா இல்மி அழகு என்றும், அவரை முதல்வராக நிறுத்தியிருந்தால் பா.ஜ.க வுக்கு அழகால் வெற்றி உறுதி என்றும் ட்வீட் செய்துள்ளார். #வடபோச்சே அப்படியா, நான் பாக்கலியே என்று மறுகுகிறவர்களுக்காக 



எல்லாம் வயதான தோஷம்தான்! கல்கியின் பார்த்திபன் கனவு கதையில் வரும் வரி, அத்தியாயத்தலைப்பு இது!  



==


சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #3 மாதொரு பாகன்! சிவப்புச்சேலை! எம்ஜியார்!

 குளிருக்கு இதமாக #மிளகுப்பொங்கல் முதலாவதாக 

பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் புத்தகம் குறித்தான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.தி ஹிந்து நாளிதழ்  முதற்கொண்டு   இணையத்தில் சவுண்டு விடுகிற இணையப்போராளிகள் வரை இன்னும் இந்தவிஷயத்தைப் பெரிய சர்ச்சையாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அனல் தெறிக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ரிசல்ட் என்னவோ பூஜ்யம் என்பது தெரிதிருந்தாலுமே கூட, இந்தப் புத்தகத்தை வைத்துக்கொஞ்சம் அரசியல், பிஜேபிக்கு எதிராகவும், ஜெயலலிதா முதல்வராகத் தொடர்ந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்றும் ஆர்டிஓ விசாரணை வெறும் கட்டைப்பஞ்சாயத்தாக  நடந்து பெருமாள் முருகனை சும்மாமிரட்டி எழுதுவதிலிருந்தே விரட்டிஅடித்திருப்பதாகவும்  தொடர்ந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

தி ஹிந்து நாளிதழ் கூட கருத்து சுதந்திரத்துக்காக நேற்றைய இலக்கிய  விழாவில் தனி அமர்வே நடத்தியிருப்பது இந்த விவகாரத்தின் உச்சபட்சக் காமெடி 
நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் பதினான்காம் நாள் திருவிழாவின் போது அந்தப் பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சாதிப் பெண்களில் குழந்தை இல்லாதவர்கள் விழாவுக்கு வந்து அங்கே தென்படும் ஆண்களில் தனக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுத்து அவரோடு உடல் உறவு கொண்டு கருத்தரிப்பார்கள்; அதுவே அங்கே பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பழக்கம் என்று எழுதியிருக்கிறார்.  கதையின் கருவே அதுதான்.  கதை முழுக்கவே அதுதான்.  காளி, பொன்னா இருவரும்  ஜோடி.  திருச்செங்கோடு பக்கத்தில் உள்ள கிராமம்.  பொன்னாவுக்குக் குழந்தை இல்லை.  ஊர் அவளைக் கேலி பேசுகிறது.  நாவலின் 190 பக்கத்தில் 180 பக்கம் அந்தக் கேலி தான் தமிழ் சினிமா பாணியில் விவரிக்கப்படுகிறது.  சுகன்யாவை நினைத்துக் கொள்க.  கடைசி பத்து பக்கத்தில் பொன்னாவை அவளுடைய தாயும், மாமியாரும் பதினான்காம் நாள் திருவிழாவில் யாரோ ஒருத்தனுக்குக் கூட்டிக் கொடுக்கிறார்கள்.  நான் சொல்லவில்லை சாமி.  பெ. முருகனின் கதாநாயகன் காளிதான் அப்படிச் சொல்லி விட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான்.  சுபம்.  
இப்படி ஒரு கயவாளித்தனமான கற்பனையை பெ. முருகன் பிற சாதிகளை வைத்து எழுத முடியு0ா000ி0000த்துப் பெண்களை வைத்து  இப்படி எழுத முடியுமா?  அப்படியிருக்க ஒரு சாதி பற்றி மட்டும் இவர் எப்படி எழுதலாம்?  கவுண்டர் சாதியில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது என்பதற்கு என்னய்யா ஆதாரம் என்று கேட்டால் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கதை அளக்கிறார் முருகன்
 என்று இங்கே எழுத்தாளர் சாரு நிவேதா  சொல்லியிருப்பதும் ஜெயமோகன் அதை ஆமோதித்து மாதொருபாகன் ஒரு வகையான ‘அமெச்சூர்’ எழுத்து. எவ்வகையிலும் இலக்கியத்தகுதி கொண்டது அல்ல. அது எழுதப்பட்டதிலும் தமிழின் முக்கியமான பெரும்படைப்புகள் இருக்க அது சுடச்சுட மொழியாக்கம் செய்யப்பட்டதிலும் உலகம் முழுக்க கொண்டு ோகப்பட்டு தமிழிலக்கியமும் வாழ்க்கையும் இதுதான் என்று காட்டப்பட்டதிலும் உள்ள தந்திரங்கள் எரிச்சலூட்டுவதுதான். என்று இங்கே சொல்லியிருப்பதும் சரியான பார்வைதான்! ஆனால் தனக்கு சௌகரியப் படாத தருணங்களில் பதிவையே நீக்கி விடுவது ஜெயமோகன் வழக்கம் என்பதைப்புரிந்து கொண்ட வாசகர் ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டிருக்கிறார். 

ஒரு சாதாரண மனுஷியாக ஒரு பெண் தன்பெயரைச் சொல்லாமல்முகநூலில் சொல்லியிருக்கும் இந்தக் கருத்து, கருத்து சுதந்திரம் அது இது எதுவென்று ஏதும் புரியாமல் பொங்கிக்கொண்டிருப்பவர்கள் செவிளில் அறைகிற மாதிரி அந்தப்பக்கத்து மக்களுடைய ஆதங்கம் வேதனை கோபம் கொந்தளிப்புக்கான நியாயத்தைச் சொல்கிறது.


பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டிருப்பவர்களுடைய உண்மையான நோக்கம் எழுத்தாளனை, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பது அல்ல என்பது தெளிவாகிக் கொண்டிருக்கிறது. பெருமாள் முருகனைப் பாதுகாப்பது என்று முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருப்பது கூட உண்மையில் அவரையோ, அவரது எழுத்தையோ பாதுபாப்பதாக இல்லை என்பதுதான் இப்போதைய காரசாரமான மிளகுப்பொங்கல் 
********
சிவப்புச்சேலை!மிரளும் காங்கிரஸ் என்று இந்தப்பக்கங்களில் நான்காண்டுகளுக்கு முன்னால்  எழுதியிருந்தேன்! நினைவிருக்கிறதா? 


படிப்பின்வாசனையே  நேரு குடும்பத்தில் மோதிலால் நேருவுக்குப் பின் எவருக்கும் அதிகமாக இருந்ததில்லை.குறிப்பாக இந்திராவின் வாரிசுகளுக்கும் படிப்பு வாசனைக்கும் கொஞ்சம் கூட ராசியே இருந்ததில்லை. ஆட்சியில்  இருந்தபோது ராஜாகாது கழுதைக்காது ரகசியமாகப் பாதுகாக்கப் பட்டதும்  ஆட்சியை இழந்தபோது அந்தரங்கங்கள் புத்தகங்களாக வெளிவந்து போட்டுத்தாக்குவதுமாக அப்படி ஒரு ராசி. ஜேவியர் மோரோ என்ற  எழுத்தாளர் எழுதிய புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் பார்த்துக் கொள்ளப் பட்ட  கதை லிங்கில் இருக்கிறது. இப்போது அதற்கென்ன என்கிறீர்களா? தடையைத்தகர்த்து இப்போது இந்தப்புத்தகம் இந்தியாவிலும் வெளியிடப்படுகிறது.அவுட்லுக் வார இதழில் வந்த புத்தக ஆசிரியரின் பேட்டி இங்கே!  பதிப்பகத்தின் சார்பில் ட்விட்டர் அறிவிப்பு இங்கே!!


.
புத்தகம் வந்து என்னத்தையோ புரட்டிப்போடப்போகிறது என்று எதிர்பார்க்க வேண்டாம், அந்தோனியோ மைனோ  மாதிரியே புத்தகமும் சாதாரணம் தான்! அது வெளிப்பட்டுவிடக் கூடாதே தியாகசிகரம் பில்டப்  கலைந்து விடக் கூடாதேஎன்று அந்த நாட்களில் மிரண்டார்கள், அவ்வளவுதான்! இப்போது மிரட்டுவதற்கு வேறு விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றனவாம்!

********
ஜனவரி 17! மக்கள்திலகம் எம்ஜியார் பிறந்த தினம். வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் கடவுளாகவே கொண்டாடப்படுகிற அளவுக்கு இவரிடம் அப்படி என்னதான் இருந்தது? நடிகர் சிவகுமார் கொஞ்சம் சொல்கிறார். பழசுதான், ஆனாலும் இன்றைக்கும் இந்த மூன்றெழுத்து கருணாநிதியை திமுகவை மிரட்டிக் கொண்டிருக்கிறது கொஞ்சம் கேட்போமா?


மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒருமாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று போற்றிப்புகழ வேண்டும்

****** 





=====