இங்கே தேர்தல் களத்தில் வலிமையான கூட்டணி எது என்று தேடிக்கொண்டிருக்கிற அதேநேரம் கூட்டணிகள் வலிமையின் அடையாளமா? அல்லது பலவீனமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுவதுதான்!
இது நேற்றைய அலசல். நாளைய தினம் செல்லுபடி ஆகுமா என்பது யாருக்கும் தெரியாது! வானிலை அறிக்கை மாதிரி சட்டென்று மாறக்கூடியதுதான்!
ட்வீட்டர், முகநூல் அலப்பறைகளுக்கெல்லாம் அந்த நேரத்தைய ஆகா ஓகோ லைக், பின்னூட்டங்களோடு முடிந்து விடுகிற, கோப்பைக்குள் சுனாமி வருகிற கதைதான்! வலைப்பதிவுகள் வேறு ரகம்! யார்வந்து பார்த்தார்கள் என்ன நினைத்தார்கள் என்பது பெரிய மனதுவைத்து அவர்களே சொன்னால் தான் உண்டு!
கொதிக்கும் சூரியன், கூர்மையிழந்த பம்பரம், துண்டிக்கப்பட்ட கை என்று திமுக கூட்டணியை நன்றாகக் கலாய்க்கிறார்! வறட்சியான அரசியலில் அவ்வப்போது இந்தமாதிரி நகைச்சுவை உணர்வு அவசியம்தான்!
உள்ளூர் அரசியலோடு உத்தர பிரதேச அரசியல் காமெடியையும் கொஞ்சம் பார்க்கலாமா? காங்கிரசை ஒதுக்கிவைத்துவிட்டு சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டன. மூன்று இடங்களில் அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளத்துக்கு ஒதுக்கி இருக்கிறார்களாம்! தமிழ்நாடு தவிர அநேகமாக எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் தனிமைப் படுத்தப் பட்டிருக்கிறது!
முந்தைய மூன்று பதிவுகளில் காங்கிரஸ் பற்றிப் பேசும் போது எமெர்ஜென்சியைத் தொட்டும் எழுதியதில், சில மாற்றுக்கருத்துக்கள் பின்னூட்டத்தில் ஒரு பயனுள்ள உரையாடலைத் தொடக்கி வைத்திருக்கின்றன. (சு)வாசிக்கப்போறேங்க தளத்திலும் இந்த உரையாடல் நடந்து கொண்டிருப்பதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். இந்த உரையாடலில் வேறு யாராவது பங்கு கொள்ள முன்வருகிறார்களா என்று காத்திருக்கிறேன். கொஞ்சம் நீளமாக இருக்குமே என்று தயக்கமே வேண்டாம்! Guest Post ஆக வெளியிடவும் தயாராக இருக்கிறேன்!
இது மலைவிழுங்கி மம்தா பானெர்ஜி சாரதா குழும மோசடியைச் செய்தபிறகும், என்னமா பில்டப் கொடுக்கிறார் என்று வியந்து ஹிந்துநாளிதழில் பிப்ரவரி 6 ஆம் தேதி சுரேந்திரா வரைந்திருப்பது. இந்திரா காங்கிரஸ் இவரைமாதிரி இன்னும் எத்தனை மழைவிழுங்கிகளை உருவாக்கி வைத்திருக்கிறது என்கிற ஒரு அம்சமே இந்திரா legacy என்னவென்பதை இன்றைய இளம்தலைமுறை புரிந்துகொள்ளப் போதுமானது என்றுதான் நான் நினைக்கிறேன்.நேரு பாரம்பரியம் இந்திரா ராஜீவ் சோனியா ராகுல் என்று குறுக்கிக் கொண்டே வந்து இன்றைக்கு பிரியங்கா என்றாகியிருப்பதில், ஒருமரத்தின் தன்மை இன்னது என்பது அதுகொடுக்கும் கனிகளால் அறியப்படும் என்கிற வசனமே மெய்ப்பிப்பதாக இருக்கிறது.
இந்த தொலைக்காட்சி விவாதம், அரசியல்களம் எப்படி இன்றைக்கு தேர்தல்களத்தில் இன்னும் ஒரு தெளிவான நிலைக்கு வரவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி என்றில்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் கிட்டத்தட்ட இதேமாதிரித் தான் என்கிற மாதிரி சொல்கிற ஒரு செய்தி,
அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.10 ஆயிரம்; மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ஸ்மார்ட்போன்: அரசே 3 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்யும்! ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என்கிறது ஹிந்து செய்தி
நாடு முழுவதும் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் இந்தத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கும் மாநில அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இதுபோல மாநிலத்தில் உள்ள 94 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஸ்மார்ட் போன்களுக்கு 3 ஆண்டுகள் வரை அரசே ரீ சார்ஜ் செய்யும். மேலும், மாநில விவசாய மண்டலி ஏற்பாடு செய்யப்படும்.
இப்போது நம் முன்னால் இருக்கிற முக்கியமான கேள்வி இதுதான்! இலவசங்கள் என்கிற மாயையில் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கப்போகிறோமா?
சிலநாட்களுக்கு முன்னால்தான் காங்கிரஸ் கட்சியின் 134 வது துவக்கதினம் என்று ராவுல்பாபா கேக் வெட்டிக் கொண்டாடினார் என்று செய்திகள் வந்தன. ஆனால் இந்தியாவின் Grand Old Partyவயதுக்கேற்ற அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றிருக்கிறதா என்றால் #பப்பு என்று அழைக்கப்படுவதற்கேற்ற மாதிரித்தான் காங்கிரஸ் கட்சித்தலைவர் மற்றும் அடிவருடிகளின் செயல்பாடு இருக்கிறது.
காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெர்ஷன் 1, அடுத்து 2 என இரண்டிலும் ஊழல் புகார்கள் வெடித்துக் கிளம்பியமாதிரி நரேந்திர மோடியின் ஆட்சியில் எதுவும் கிளம்பவில்லை. அதனாலென்ன? ஊழல் ஊழல் என்று பெருங் குரலெடுத்துக் கூவினால் போதுமே என்று ராவுல் பாபா ரஃபேல் விமானபேர ஊழல் என்று திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருக்கிறார். இதிலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர் கொள்ளலாம் ஜெயிக்கலாம் என்று கண்ணடித்துக் கனவு காண்கிறாரோ என்னவோ?
அதிமுகவின் தம்பித்துரை பேசிக்கொண்டிருக்கிறார். பின்னால் ராகுல் காந்தி என்ன செய்கிறார்? கொஞ்சம் பாருங்கள்! பப்பு கண்ணடிக்கிற அற்புதக் காட்சியை இந்த வீடியோவில் 6நி 20 செகண்டிலிருந்து பார்க்க.
இப்படியாகப்பட்ட இவரைத்தான் பிரதமராக்காமல் விட மாட்டேனென்று வீரவாள் எல்லாம் கொடுத்து இசுடாலின் சிலநாட்களுக்கு முன்னால் சூளுரைத்தார் என்பதாவது நினைவிருக்கிறதா?
நாடாளுமன்றத்தில் ரஃபேல் பற்றிய விவாதத்தைக் காங்கிரஸ்கட்சி நடத்திய விதமிருக்கிறதே! வேடிக்கை செய்வதே வாடிக்கை என்று கடைசியில் கோமாளிக் கூத்தாகிக் கொண்டே வருவதில் நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் காகித அம்புகளை வீசி மகிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்காலத்தில் ராணுவத்துக்கு ஆயுதங்கள் தான் வாங்க முடியவில்லை, விமானங்கள் வாங்க முடியவில்லை அதனால் இப்போது காகிதத்தில் பிளேன்கள் செய்துவீசிப் பார்ப்போமே என்கிற எண்ணமா? தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் நேற்றும் காங்கிரஸ் ரகளை. மோடி தான் சபைக்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்கிற காங்கிரசின் கோரிக்கையை, அரசின் சார்பிலும், தன் துறை சார்ந்த விஷயம் என்பதாலும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு பேச முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்து சபாநாயகர் நிராகரித்து விட்டார்.
The five-hour debate on Rafale jet purchase saw heated moments in Lok Sabha on Friday with UPA chief Sonia Gandhi leaving the House midway amid personal attacks by BJP members and Defence Minister Nirmala Sitharaman getting emotional while mentioning Congress’repeated jibes at her and Prime Minister Narendra Modi.இப்படி பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் எழுப்பிய அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு இரண்டுமணி நேரம் விரிவான பதிலடி கொடுத்ததில் ஒரு சிறுபகுதி மேலே காணொளியாக.
தங்களுடைய திட்டங்கள் எல்லாம் பூமராங் மாதிரித் திரும்பத் திரும்ப, தன் குடும்பத்தினர் மீதே திரும்புவது குறித்து எதுவும் செய்ய முடியாமல், பாதியிலேயே சோனியா சபையை விட்டு வெளியேறிய பரிதாபம் செய்திகளில் ஒரு ஓரத்தில் வந்திருக்கிறது.
*******
ஜனவரி 5- திமுக மகளிரணிச் செயலாளரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழிக்குப் பிறந்தநாள்.
வழக்கமாகத் தனது பிறந்தநாள் அன்று அப்பா கருணாநிதி, அம்மா ராஜாத்தி அம்மாளிடம் இருந்து ஆசி, அண்ணன் ஸ்டாலினிடம் இருந்து வாழ்த்து, தொண்டர்கள் அணிவகுப்பு, நலம் விரும்பிகளின் சந்திப்பு என சந்தோஷத்தில் திளைப்பார் கனிமொழி. குறிப்பாக சி.ஐ.டி. காலனி வீட்டில் தந்தை முன்னிலையில் கேக் வேட்டிக் கொண்டாடுவார் கனிமொழி. ஆனால் இந்த முறை எதுவும் இல்லை.
ஏனாம்? #ரட்சகனுக்காக என்று கவிதை எழுதினாரே!! அது யாரென்று தெரியும் வரை ஸ்டாலின் தலைமைக்கு எதிராக எதையும் செய்து அவரின் அதிருப்தியை சம்பாதித்துக்கொள்ள கனிமொழி விரும்பவில்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறுவதாக இங்கே
*******
எது எதையோ பேசிக்கொண்டிருக்கிறோம்! பேசவேண்டிய முக்கியமான விஷயத்தைப் பேசாமல் இருந்துவிடுவோமா? சொல்லின் செல்வன் என்று கம்பனால் சிறப்பிக்கப்பட்ட அனுமனை மறந்துவிடுவோமா என்ன?
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.