பெயரில் வீரம் இருந்தால் போதுமா? வீரபாண்டி மறுபடியும் உள்ளே! ரிலே ரேஸ்!!




இதைப்படித்துப் பார்த்துவிட்டு, இன்று ஜூனியர் விகடனில் வெளியாகி இருக்கும் சேலத்து சிங்கத்தின் ஆதரவாளர்கள் போட்ட ஆட்டத்தைப் பற்றிய ரன்னிங் கமெண்டரியைப்  படியுங்கள்! முதலில் இப்போதைய செய்தி!

தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்தை சேல‌ம் காவ‌ல் துறை‌யின‌ர் ‌இ‌ன்று ‌திடீரென கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

நிஅபக‌ரி‌ப்பதொட‌ர்பாக ‌தி.ு.க. மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ரவீரபாண்டி ஆறுமுகம் ‌‌மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர2 வழக்குகள் பதிவு செய்ததை‌த் தொட‌ர்‌ந்து செ‌ன்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமுன்‌பிணமனுக்கள் தாக்கல் செய்தா‌‌ர்.

இ‌ந்த மு‌ன்‌பிணை மனுவை ‌விசா‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இர‌ண்டு நா‌ட்க‌ள் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்‌திட‌ம் ‌காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் 27ஆ‌ம் தே‌தி மு‌‌ன்‌பிணை பெ‌ற்று‌க் கொ‌ண்டு ‌தின‌மு‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் கையெழு‌த்து போட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து 3 நா‌ள் காவ‌ல்துறை‌ ‌விசாரணை‌க்கு ‌பி‌ன்ன‌ர் சேல‌ம் ம‌த்‌திய கு‌ற்ற‌ப்‌பி‌ரிவு காவ‌ல் ‌நிலைய‌த்தில் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் ‌தினமு‌ம் கையெழு‌த்து போ‌ட்டு வ‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மு‌ன்‌பிணை ‌நிப‌ந்தனைபடி கையெழு‌த்து போட வ‌ந்த ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்தை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.உதவியாளரநடேசனினமரணத்திலமர்மமஇருப்பதாக கூற‌ப்ப‌ட்ட புகா‌ரி‌ல் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌க்கலா‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

 இனி ஜூனியர் விகடன் செய்தி!

வீரபாண்டி ஆறுமுகம் உள்ளே..'ஜெயலலிதா'வுக்கு நடந்த அவமானம் வெளியே..


சேலம் ரிலே! (ரிலே ரேஸ் நல்லாத்தான் நடக்குதுங்கோ!!)







'நில அபகரிப்பு வழக்குகளில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் சரண்டர் ஆக வேண்டும்!’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடைசூழ போலீஸில் சரணடைந்தார் அவர். நீதிமன்ற உத்தரவுப்படி அவரை மூன்று நாட்களில் காவலில்வைத்து விசாரித்தது போலீஸ்! 


வீரபாண்டி ஆறுமுகம் போலீஸ் கஸ்டடியில் இருந்த மூன்று நாட்களில், சேலத்தில் நடந்த அத்தனை விஷயங்களும் முகம் சுளிக்கவைப்​பதாகவே இருந்தன. முதுகெலும்பு மறந்துபோய், காக்கிச் சட்டைகள் சிலர் கை கட்டி நின்று வேடிக்​கை பார்த்ததுதான் அதைவிடக் கொடுமை!


வீரபாண்டி ஆறுமுகத்தை விசாரித்த உதவி கமிஷனர் பிச்சை, சேலத்திலேயே இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஆறுமுகம் பந்தாவாக உட்கார்ந்திருக்க.. அவருக்கு முன்னால் தயங்கிக்கொண்டு நின்றா​ராம் பிச்சை. 'எதுக்கு நிக்குறீங்க... உட்காருங்க!’ என வீரபாண்டியார் சொன்ன பிறகுதான் உட்கார்ந்தாராம் பிச்சை. வெள்ளரிப் பிஞ்சு, பப்பாளி ஜூஸ், ஆட்டுக்கால் சூப் என விதவி​தமான உணவுகளை சேலத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து வரவழைத்து உபசரித்தார்களாம். இரவு தூங்குவதற்கு கட்டில், வீட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பெட்ஷீட் எனக் காவல் நிலையத்தை ஒரு ஹோட்டல் ரேஞ்சுக்கு மாற்றிக் கொடுத்ததாம் போலீஸ்.


விசாரணையில் என்ன நடந்தது? போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ''பிரீமியர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியது, அங்கம்மாள் காலனி விவகாரம் ஆகிய இரண்டும்தான் ஆறுமுகம் மீதுள்ள குற்றச்சாட்டுகள். மொத்தமாக 120 கேள்விகளை போலீஸ் தயார் செஞ்சு இருந்தாங்க. ஒவ்வொரு கேள்வியாக உதவி கமிஷனர் பிச்சை கேட்டார். அதுக்கு இவர் நிதானமாக பதில் சொன்னார். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'ம்... ம்... இல்லை!’ இப்படித்தான் பதில் வந்தது. 

சில கேள்விகளுக்கு கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். 'என் பேரைச் சொல்லி எவனோ ஏதோ பண்ணிட்டுப் போவான். அதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியுமா?’ என்றாராம். எல்லாவற்றையும் வீடியோவிலும் பதிவு செஞ்சாங்க.

சில நேரங்களில், 'கேமராவை ஆஃப் பண்ணுய்யா...’னு சொல்லிட்டு, ரொம்பவும் ரிலாக்ஸ்டாகப் பேசினார். 'எனக்கே தெரியாம எவ்வளவோ விஷயங்கள் நடந்துடுச்சு. இப்போ நான் பலிகடா ஆகிட்டேன்...’னு வருத்தப் பட்டார்!'' என்கிறார்கள்.
வீரபாண்டி ஆறுமுகம் காவல் நிலையத்துக்குள் இருக்க... வெளியில் தி.மு.க-வினர் செய்த காரியங்கள் எல்லை மீறிப் போய்க்கொண்டு இருந்தன. சேலம் பழைய பேருந்து நிலையம் ஏரியாவில் மூன்று நாட்களுமே கடைகள் அனைத்துமே மூடப்பட்டே இருந்தன. திறந்த கடைகளையும் மிரட்டி மூட​வைத்தார்கள்.


விசாரணையின் கடைசி நாளான 27-ம் தேதி, காவல் நிலையத்துக்கு எதிரே தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருக்கு ஜெயலலிதாபோல சேலை அணிவித்து, மாலை சூட்டி நிற்கவைத்தனர். பிறகு, தி.மு.க-வைச் சேர்ந்த ஒவ்வொருவராகப் போய் அவரைக் கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமாக அசிங்கப் படுத்தினார்கள். உச்சகட்டமாக அந்த நபரை ரோட்டிலேயே கிடத்தினார்கள். அதன் பிறகு நடந்தவற்றை, அச்சில் ஏற்ற முடியாது. பாதுகாப்புக்காக நின்று இருந்த நூற்றுக்கணக்கான போலீஸ் முன்னிலையிலேயே இவை எல்லாம் நடந்தும், யாரும் தடுக்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை. 

சேலம் காவல் துறையினருக்கு அவ்வளவு வீரபாண்டியார் பாசமோ? அராஜகம்!


கோரிமேடு செல்வம் தலைமையில் வந்த இன்னொரு கும்பலோ, அந்த வழியில் வந்த ஆட்டோக்களை நிறுத்தி, ''ஏன்டா... சேலத்து சிங்கமே உள்ளே இருக்குது. உனக்கு ஆட்டோ கேட்குதா?'' என ஆட்டோ டிரைவர்கள் முகத்தில் குத்துவிட, சில டிரைவர்களுக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. அதையும் போலீஸ் கண்டு கொள்ளவில்லை. 

கண் முன் சம்பவங்கள் நடந்துகொண்டு இருந்தும், 'அடி வாங்கியவன் வந்து புகார் கொடுக்கட்டும். நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று நக்கலாகச் சொன்னார் ஒரு போலீஸ் அதிகாரி. 

மறு உத்தரவு வரும் வரை, தினமும் சேலம் மத்தியக் குற்றப் பிரிவுக் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்’ என உத்தரவிட்டு இருக்கிறது  நீதிமன்றம். இதற்கிடையில், 28-ம் தேதி காலை பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு வந்த அழகிரி அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். இருவரும் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசினர். 

'இத்தனை வருஷம் கட்சிக்காக உழைச்சேன். என்னை போலீஸ் விசாரித்த போது, யாரும் வாயே திறக்கலை. வந்தும் பார்க்கலை. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு!’ எனக் கலங்கினாராம் ஆறுமுகம். 'கவலைப்படாதீங்க. அவங்களைப்பத்தி உங்களுக்குத் தெரியாதது இல்லை... உங்ககூட எப்போதும் நான் இருக்கேன். எது வந்தாலும் பார்த்துக்கலாம்!’ என்று தைரியம் சொல்லி விட்டு வந்தாராம் அழகிரி!

- கே.ராஜாதிருவேங்கடம், வீ.கே.ரமேஷ்--நன்றி : ஜூனியர் விகடன்

சொந்தக் கதையே எங்கே எப்போது என்னவாகுமோ என்று கோழிக் குஞ்சுக்குப் படபடவென்று இதயம் அடித்துக் கொண்டிருக்கிற கதையாக  இருக்கும் போது இவர்  போய் தைரியம் சொல்லிவிட்டு வந்தாராம்! தமாஷாக இல்லை?! 

ஆட்டம் போட்ட உளுத்தம்பருப்புக்களைக் காவல்துறை, வீடியோவில் படம் எடுத்து அள்ளிக் கொண்டு வந்துவிட்டார்கள் என்பது கொசுறு செய்தி!


சமச்சீர் கல்வி விவகாரத்தில் பள்ளிகளை  மூடச் சொல்லி, மாணவர்களைத் தூண்டி விட்டுத் திமுகவினர் நேற்று நடத்திய போராட்டம் பிசுபிசுத்தது. மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மேயர், துணைமேயர் உள்ளிட்டு  நேற்று வரை ஒட்டிக் கொண்டு ஆதாயம் பார்த்தவர்கள் பலரையும் காணோம்!






 
பதிவின் உள்ளடக்கம் பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!

முடிவுக்கு வராத (தி) மு.க. கலாட்டா!


ஆனந்த விகடன் செய்திக் கட்டுரை கொஞ்சம் நாசூக்காக நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் நடந்ததைச் சொல்கிறது!

விகடனுக்கு நன்றியுடன்!
 



ருணாநிதிக்கு அடுத்த இடம் அண்ணன் அழகிரிக்கா... தம்பி ஸ்டாலினுக்கா என்ற கலாட்டாவுக்கு இன்று வயது 15!

கோவையில் கடந்த வாரம் நடந்த பொதுக் குழுவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்தான் தி.மு.க. தொண்டன். ஆனால், மீண்டும் கால் புள்ளி, அரைப் புள்ளிவைத்து வந்த கருணாநிதி, மீண்டும் முக்கால் புள்ளிதான் வைத்தார்!

 'ஸ்டாலினை முதல்வர் ஆக்குங்கள். கலைஞர் கட்சித் தலைவராக இருந்து வழி நடத்தட்டும்’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வந்தார்கள். 'ஸ்டாலினுக்கு மிக முக்கியமான பொறுப்பு காத்திருக்கிறது’ என்று நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார் கருணாநிதி. பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஸ்டாலின்.

னால், பேராசிரியர் அன்பழகனைக் காயப்படுத்திய காரணத்தால், ஆற்காடு வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருளாளர் பதவிதான் ஸ்டாலின் வசமானது. தம்பிக்கு சாக்லேட் கொடுக்கும்போது எல்லாம் அண்ணனுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டும் அல்லவா? தென் மண்டலச் செயலாளர் ஆனார் அழகிரி. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டதும், ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி தரப்பட்டது. அடுத்து, ஸ்டாலினும் அழகிரியும் அடைய இரண்டே இரண்டு நாற்காலிகள்தான் இருக்கின்றன. அது, கருணாநிதி உட்கார்ந்திருக்கும் தலைவர் பதவி. அன்பழகன் அமர்ந்திருக்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு. இந்த இரண்டைக் குறிவைத்த மியூஸிக்கல் சேர் விளையாட்டில், ஸ்டாலினும் அழகிரியும் மட்டும் சுற்றி வர... மற்ற நிர்வாகிகள் வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான் தி.மு.க-வின் செயற் குழு, பொதுக் குழுவாக மாறிப்போனது!

கோவையிலும் அதேதான்.  வழக்கம்போல, நாற்காலியை கருணாநிதியும் அன்பழகனுமே மடக்கி எடுத்துச் சென்றுவிட்டார்கள்!

செயல் தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர் என்ற பெயரில் ஏதாவது ஒரு பதவியை ஸ்டாலினுக்குத் தந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்னால் நடந்த இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும் 'தளபதிதான் தலைவராக வேண்டும்’ என்று பேசினார்கள். 'இது எல்லாம் பொதுக் குழுவில் பேச வேண்டிய விஷயம்’ என்று ஸ்டாலின் அப்போது சமாதானம் சொன்னார். அதை கருணாநிதியிடம் போட்டுக் கொடுத்த நல்ல மனிதர் ஒருவர், 'தன்னைத் தலைவராக்கச் சொல்லி பொதுக் குழுவில் பேச ஸ்டாலின் தூண்டிவிட்டார்’ என்று சொல்ல... கருணாநிதிக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. 'நீ ஒருத்தன்தான் எனக்கு மனக் கஷ்டம் கொடுக்காதவன் என்று நினைத்தேன். ஆனால், நீயே இப்படிப் பேசலாமா?’ என்று கருணாநிதி கேட்க... ஸ்டாலின் அதற்குச் சமாதானம் சொல்ல... தந்தை, மகன் இடையே 10 நாட்கள் சரியான பேச்சு வார்த்தைகூட இல்லை.

'ஸ்டாலினை இப்போதே தலைவராக அறிவித்தால்தான், பின்னால் குழப்பம் இல்லாமல் இருக்கும்’ என்று சிலர் தூண்டினார்கள். அதனால் செயல் தலைவர் அந்தஸ்துகூட அவருக்குத் தரப்படலாம் என்று இளைஞர் அணி ஆட்கள் சொல்ல ஆரம்பித்தனர். இது மதுரையில் இருந்த அழகிரிக்கு மன வருத்தம் கொடுத்தது. 'பொதுக் குழுவுக்கு நானும் வர மாட்டேன். நீங்களும் போக வேண்டாம்’ என்று அழகிரி உத்தரவு போட்டு இருக்கிறார் என்ற செய்தியைக் கிளப்பியதே மதுரை நிர்வாகிகள்தான். 

ஸ்டாலினுக்கு மீண்டும் உயர்வு என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்னொரு நபர், ராஜாத்தி அம்மாள். மகள் கனிமொழிக்குப் பிடிக்காத ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனால், கனிமொழியின் எதிர்காலத்தையே இது கேள்விக் குறியாக்கும் என்று நினைத்தார். இந்த கலாட்டாவில் அழகிரியும் ராஜாத்தியும் ஒன்றாக, ஸ்டாலினுக்கான நாற்காலி தட்டிப் பறிக்கப்பட்டது.

'நீங்க பொதுக் குழுவுக்கு வராமல் போனால், ஸ்டாலினுக்கு அதுவே வசதியாகப் போய்விடும்!’ என்று சென்னையில் இருந்து அழகிரிக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதன் பிறகே உஷாரான மனிதர், கோவை வந்து இறங்கினார். கனிமொழி கைதானது முதல் டெல்லியிலேயே தங்கிவிட்ட ராஜாத்தி அம்மாளும் கோவை வந்து கருணாநிதியின் நாற்காலிக்குப் பின்னால் இடம் பிடித்தார். ஸ்டாலின் நினைப்பு மொத்தமாகப் பணால் ஆனது.
''நான் உனக்கு அப்பாவாக மட்டுமா இருக்கிறேன்? நான் உன்னுடைய கட்சியின் தலைவராக இருக்கிறேன். நீ கட்சியில் உறுப்பினராக இருக்கிறாய். அதனால்தான் மாநகராட்சி மன்றத்திலே உன்னை மேயராக்கி, உனக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, மேயருக்கு உரிய உடையைப் பூட்டி அழகு பார்த்தேன். இது எனக்குப் புரிகிறது. ஸ்டாலினுக்குப் புரிகிறது. சில நண்பர்களுக்குத்தான் புரியவில்லை!'' என்று கருணாநிதி சமாதானம் சொல்லும்போது, பொதுக் குழுவில் இருந்த ஸ்டாலின் முகம் கடுப்பால் சிவந்தது. பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாத்தியே... கவலை மறந்து சிரித்துவிட்டார். ஆனால், இதைப் பார்க்க அழகிரி கோவையில் இல்லை. மதியத்துக்கு மேல் மதுரைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.

''ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவியை விட்டுத்தர கலைஞர் தயாராக இல்லை. இதை அவரால் வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. 'உனக்குக் கொடுத்தால் அழகிரியும் கேட்பான்’ என்று காரணம் சொல்வது; 'உன்னைத் தலைவராக ஆக்கி னால், ராஜாத்திக்குப் பிடிக்காது’ என்று சொல்வது; இப்படிப் பல காரணங்களை அவரே சொல்லித் தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார். கலைஞர், தனக்குப் பிறகு இன்னார்தான் தலைவர் என்பதை உடனே அறிவித்தாக வேண்டும். இதில்தாமதம் செய்யச் செய்ய... கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடும். இப்போதே கட்சியில் யாரும் யார் பேச்சையும் கேட்பது இல்லை. இது இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால், உள்ளாட்சித் தேர்தலின்போதே பல ஊர்களில் பிரளயம் வெடிக்கும்!'' என்று சொல்லும் முன்னாள் அமைச்சர் ஒருவர்...''ஸ்டாலின் முழுமையான தகுதியை அடைந்துவிட்டார் என்று சொல்லவில்லை. ஆனால், கலைஞருக்கு அடுத்து தலைவர்ஆகும் தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையும் புறக்கணித்தால், தலைமை அற்ற கட்சியாக கழகம் மாறிவிடும்!'' என்றார்.

னால், இதனை அழகிரி ஆட்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.   'ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தால், நீங்கள் கட்சியைவிட்டு விலகுங்கள்!’ என்று அழகிரிக்கு ஆலோசனைகள் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. இந்த சைக்கிள் கேப்பில் கனிமொழிக்கு தலைமைக்கான தகுதி இல்லையா என்று ராஜாத்தி தூண்டுதலுடன் இன்னொரு அணி களத்தில் குதித்து உள்ளது.

''விரைவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியில் வருவார். கலைஞரின் எழுத்து, பேச்சுத் திறமைகொண்ட வாரிசு இவர் மட்டுமே என்பதை நிரூபிப்பார். சிறையில் இருந்தபோது கிடைத்த அனுதாபங்களை மூல தனமாகக்கொண்டு அவரைத் தலைவர் ஆக்கலாம்'' என்கிறார்கள் ராஜாத்தி ஆதரவாளர்கள்.

நெல்லை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சாளர் வாகை முத்தழகன் இதற்கான ஆரம்பத்தைச் செய்துவிட்டார். சில மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை இதை நோக்கித் திருப்பும் காரியத்தையும் ராஜாத்தி செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.

உள்கட்சிக் கலவரங்களுக்கும் தலைமைக்கான போட்டிக்கும் மத்தியில் ரத்தம் சிந்திய சம்பவங்கள் தி.மு.க-வில் ஏராளமாக நடந்து உள்ளன.


இந்த கடந்த காலத் தவறுகளில் இருந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூவரும் எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது அவர்களது தவறு அல்ல. அதை சொல்லித் தராத கருணாநிதியின் தவறுதான்!

அப்டேட்ஸ்: தகுதியில்லாத சோளக்காட்டு பொம்மைகள் தங்களை மனுநீதிச் சோழனின் பரம்பரையாக நினைத்துக் கொண்டு ஆட்டம் போட்டதற்கு அட்டாக் மேல் அட்டாக்!  அழகிரியின் "அட்டாக்"  பாண்டி இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்! "அட்டாக் பாண்டியை வெறும் லொடுக்குப் பாண்டியாக்கி விட்டார்களே" என்று கோழிக் குஞ்சுக்குப் படபடக்கிற மாதிரி அஞ்சும் நெஞ்சோடு அ'னா! போலீஸ் கேள்விகளை எப்படி எதிர் கொள்வது என்று, வீரபாண்டி ஆறுமுகத்திடம் நேற்றைக்கு ட்ரைனிங் எடுக்கிற மாதிரி ஆகி விட்டதே!

சிலநாட்களுக்கு முன்னால் ஜெயதேவ தாஸ் என்ற நண்பர் இந்தப் பக்கங்களுக்கு எழுதிய பின்னூட்டங்களில் தலைவர்கள் பிறக்கிறார்கள், உருவாவதில்லை என்ற ரீதியில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் என்று இந்தப் பக்கங்களில் எழுதிய பதிவுகளில், நடப்பு அரசியலையும் சேர்த்தே கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தோம் நினைவிருக்கிறதா?

திமுகவின் பொதுக் குழு விவகாரத்தை மறுபடி ஒருதரம் படித்துப் பார்த்துவிட்டு, தலைவர்கள் பிறக்கிறார்களா, உருவாக்கப் படுகிறார்களா, உள்நாட்டுக் குழப்பங்களில் உருக்குலைந்து போய் விடுகிறார்களா என்பதைக் கண்டு கொள்ள முடிகிறதா பாருங்களேன்!

தனிப்பட்ட முறையில் திமுகவுக்குள் நடக்கும் அதிகாரப்போட்டி, வெட்டு குத்து எதிலும் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. இனத் தலைவர், தானைத்தலைவர் என்று தங்களைத்  தாங்களே பிரகடனப் படுத்திக் கொண்டவர்கள் கதை இப்போது கந்தலாகிக் கொண்டிருப்பதில், என்ன பாடம் கற்றுக் கொள்ள முடிகிறது என்பதைத்  தாண்டி, இவர்கள் அக்கப்போரில் எந்த அக்கறையுமில்லை.

இந்திய சூழ்நிலைகளில் தலைவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் தகுதியில்லாதவர்களும், பொருத்தமில்லாதவர்களும் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமைப் பண்பு என்பது வெற்று வசனமாக மட்டுமே இருக்கிறது. அதனால்தான் என்னவோ, கூத்துக்கு வசனம் எழுதுகிறவன் எல்லாம் இங்கே தலைவனாகி விட முடிகிறது!முதுகெலும்பு இல்லாத கோழைகள், தங்கள் கவர்ச்சியினால் தலைவர்களாகி விட முடிகிறது!

உதாரணத்துக்கு ஜனங்களுடைய நல்லெண்ணம் நம்பிக்கை, முழுமையான ஆதரவு, நேருவுக்கு இருந்தது மாதிரி வேறெந்த அரசியல் தலைவருக்கும் சுதந்திர இந்தியாவில் கிடைத்த
து ல்லை!ஆனால் என்ன நடந்தது?. உண்மையை மூடி மறைத்துக் காங்கிரஸ் கட்சி நேரு இமேஜைக் காப்பாற்ற முனைந்தாலும், தலைமைக்குரிய பண்பு எதுவும் இல்லாத நேரு, அத்தனையையும் வீணாக்கினார் என்று தான் வரலாறு சொல்கிறது.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!







  பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால்,அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!

ஆ.ராசா! சபாஷ் மாப்பிளே! அப்பிடிப் போடுங்க அருவாள!!


நேற்று முன்தினம்,திங்களன்று வழக்கறிஞராகப் பணியாற்றும் நண்பருடன் அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், அழகிரியின் ஆல் இன் ஆல் பொட்டு சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல்துறை பரிந்துரை செய்ததை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்த தகவல் வந்து சேர்ந்தது. 
சென்ற வெள்ளிக் கிழமை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட போது பொட்டு சுரேஷ் கண்ணீர் விட்டதைப் பார்த்ததாக அங்கிருந்த நண்பர்கள் சொன்னார்கள். பாளையங்கோட்டை சிறையில் இருந்தவர்களைப் பார்க்க வந்த "நண்பர்" என்ன நடந்தாலும் தன் பெயரை மட்டும் சொல்லிவிட வேண்டாம் என்று 'கேட்டுக் கொண்ட விதத்தைக் கொஞ்சம் நக்கலாகவே' நண்பர்கள் தகவல் சொன்னார்கள். 
தட்டிக் கேட்க ஆளில்லாத தருணங்களில் 'தம்பிகள்' சண்டப் பிரசண்டர்களாகி விடுவதும், ஊருக்கே அண்ணன் ஆகி அஞ்சா நெஞ்சர் அடைமொழி வந்து சேர்ந்து கொள்வதும் திராவிட இயக்கங்களில் கிளைத்த மாயை! கொஞ்சம் தட்ட ஆரம்பித்த வுடனேயே, அஞ்சாநெஞ்சு பஞ்சாகிப் போய்விடுகிற பரிதாபத்தையும் மதுரைமக்கள் ஒரு நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தருணம் இது.

சேலத்தில் தனிக்காட்டு ராஜாவாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம், சாமர்த்தியமாக நீதிமன்றத்தில் காயை நகர்த்தி, அதே திங்கட்கிழமை காவல்துறையினரிடம் சரண் அடைந்தார். தன்னுடைய வலிமையைக் காட்டுகிற விதத்தில் ஆள் அம்பு சேனைகளுடன் ஊர்வலமாக வந்து, ஒருகட்டத்தில் கொஞ்சம் அடக்கமாகவே சரணடைந்து, போலீசார் கேள்விகளுக்குத் தெரியாது என்ற ஒருவரி பதிலையே சொல்லிக் கொண்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

விசாரணை அதிகாரி பிச்சை, ஆறுமுகத்தின் முன்னாள் உட்காரக் கூடத் தயங்கியதாகவும், ஆறுமுகமே உட்காருய்யா என்று சொன்னபிறகுதான் உட்கார்ந்தார் என்கிறது இந்தச் செய்தி.

ஆறுமுகத்தின் அடாவடிகளுக்குத் துணையாக இருந்த இன்ஸ்பெக்டர் லட்சுமணனை நேற்றைக்குக் கைது செய்து விட்டதாகவும், அதே செய்தி மேலும் சொல்கிறது. இன்று மாலையுடன் போலீஸ் காவல் விசாரணை முடிந்து, வீரபாண்டி ஆறுமுகம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.


அப்டேட்: இன்று மாலை சேலம் நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜர் படுத்தப்பட்டபோது, தினசரி காலை எட்டுமணிக்கு காவல் நிலையத்தில் வந்து கையெழுத்துப்போட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், ஆறுமுகத்தின் பவரை அடிதடி வன்முறை கலாட்டாக்களில் ஆதரவாளர்கள் நிரூபித்துக் காட்டியதைத் தொலைகாட்சி செய்திகளில் பார்க்க முடிந்தது.

திருச்சியில் கே என் நேருவின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டு ருக்கின்றன. ஏற்கெனெவே ஒரு திமுக புள்ளி குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வந்தாயிற்று. விழுப்புரத்தில் தெய்வ சிகாமணி என்ற பொன்முடிக்கும் ஆப்பு பெரிதாகவே தயாராகிக் கொண்டிருக்கிறது என்று திமுக நண்பர்களே சொல்கிறார்கள்
இப்படி அஞ்சாநெஞ்சர்கள் என்று தங்களைக் காட்டிக் கொண்டவர்கள் எல்லாம் வெறும் வெத்துவேட்டுக்கள்தான் என்பது அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த அதே திங்கட்கிழமை, ஆ.ராசா, 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களைப் பதிவு செய்கிற கட்டம் ஆரம்பித்து, தன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார். ஒருவிதத்தில் பார்த்தால், ராசா தரப்பு  வாதத்தில் புதிதாக எதுவுமே இல்லை, அவர் இப்படித்தன்னுடைய தரப்பு வாதத்தை எடுத்து வைப்பார் என்கிற சேதி ஏற்கெனெவே சிலமாதங்களாகக் கசிய விடப் பட்டுக் கொண்டிருந்தது தான்!
உண்மையைச் சொல்லப்போனால், செய்திகளின் அடிப்படையில், இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களில் கலங்காமல் தெளிவாக இருப்பவர் ஆ.ராசா ஒருத்தர் மட்டும் தான்!

"
எனக்கு முந்தியிருந்தவர்கள் என்ன செய்தார்களோ அதையே தான் நான் செய்தேன். நான் செய்தது தவறென்றால், எனக்குமுன் இந்தத் துறையின் அமைச்சர்களாக இருந்தவர்கள் அத்தனை பேருமே என்கூட சிறையில் இருக்க வேண்டும்.பிரதமருக்கும், அன்றைய நிதியமைச்சருக்கும் ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் வழங்கப்பட்டதன் பின்னணி முழுக்க முழுக்கத் தெரியும். வேண்டுமானால், அவர்கள் வந்து மறுக்கட்டும்." 

இப்படி திங்கட்கிழமையன்று தன்தரப்பு வாதமாக, மன்மோகன்சிங்கையும் சால்வை அழகர் பானா சீனாவையும் தன் தரப்பு வாதத்தில் சந்திக்கு இழுத்த செய்தியை, பிற்பகல் வீடு திரும்பியதும் தொலைகாட்சி செய்திகளில் பார்த்தபோது,ராசாவின் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

சபாஷ் மாப்பிளே! அப்பிடிப் போடுங்க அருவாள!!

நீதிமன்றத்தில் ராசாவின் வாதத்தைக் கேட்ட ஒரு குடும்பமாவது குறைந்தபட்சம் இப்படிக் குதூகலித்திருக்கக் கூடும்!.

இன்னொரு குடும்பமோ, இது ஏதடா புது வம்பு, இதனால் இந்தக் குடும்பத்துப் பிள்ளைகளும்திஹாருக்கோ,பாளையங்கோட்டைக்கோ போவது வெகு சீக்கிரமே நடந்து விடுமோ என்ற கலக்கத்தில் ராசா தரப்பு வாதங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று கழன்று கொண்ட கொடுமையும் நடந்தேறியிருக்கிறது.  

மேலோட்டமாக, ஆ.ராசாவின் துணிகரமான அசட்டுத்தனத்தால் கனிமொழி ஜாமீனில் வெளியே வருவது சாத்தியமே இல்லாமல் போய்விடும் அல்லது தள்ளிப் போய்விடும் என்பதாகச் சொல்லப் படுகிறது. ராசாவை அனேகமாக எல்லாத்தரப்புமே கைவிட்டு விட்ட நிலையில், ராசா எடுத்திருக்கும் தற்காப்பு வாதம் இது கொஞ்சம் ஓவர் என்றே ஒரு தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.

மன்மோகன் சிங்கே இதை நம்பமாட்டார் என்று தெரிந்துமே, மன்மோகன் சிங் அப்பழுக்கில்லாத உத்தமர் என்று மனீஷ் திவாரி சொல்லியிருக்கிறார்! நேற்றுவரை ஹானரபில் மெம்பெர் என்று சொல்லிக் கொண்டிருந்தவரை (ஆ.ராசா) இன்றைக்கு அவர் அமைச்சரவையில் உறுப்பினர் அல்ல! ஒரு குற்றம் சாட்டப் பட்டவர் மட்டுமே அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று மனீஷ்  திவாரி திருவாய் மலர்ந்திருக்கிறார்!

ராசா, வழக்கு விசாரணையின் ஆரம்ப நிலையிலேயே பிரதமர் மன் மோகன் சிங், அன்றைய நிதியமைச்சர் ப சிதம்பரம் இருவரையும் சந்திக்கு இழுத்திருக்கிறார்.  
ஏற்கெனெவே பானாசீனாவுக்கு இருக்கிற துயரம் போதாதென்று, இதுவேறு ஏழரையாகப் பிடித்து ஆட்டப்போகிறது!

ராசாவின் வாதத்தில் கிறங்கிப்போய் திங்களன்றே பதிவெழுத உத்தேசத்திருந்ததில் ஒரே ஒரு தயக்கம்! அரசியல்வாதிகளுக்கு ஒரு வழக்கம், எந்த விஷயமானாலும் இரட்டை நாக்குடனேயே பேசுவார்கள், பிரச்சினையென்று வந்தால் பேசினதையே மறுப்பார்கள் என்பதனால் கொஞ்சம் பொறுக்கலாமே என்றிருந்தேன்.  

அதற்குத் தகுந்தபடியே, நேற்று காலை முழுவதும் தொலைக் காட்சிகளில் ராசா, பிரதமரையோ, சிதம்பரத்தையோ குற்றம் சொல்லுவதற்காக எதையும் சொல்லவில்லை என்று பல்டி டித்து விட்டதாகத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. மாலையில், மறுபடி பிரதமரை சம்பந்தப்படுத்திப் பேசியிருப்பதாக செய்திகள்!
ராசா, பிரதமர், சிதம்பரத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தணிக்கைத் துறையை ஒரு கடி கடித்திருக்கிறார். அட்டர்னி ஜெனெரல் வாஹன் வதியையும் ப.சிதம்பரத்தையும்  சாட்சிகளாக விசாரிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தயாரித்த விதமே செலக்டிவாக  இருப்பதாகப் போட்டுத் தாக்கியிருக்கிறார். இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தங்கள் பங்கைக் கைமாற்றி ஆதாயம் பார்த்தன என்ற குற்றச்சாட்டை ஏன் அதே மாதிரி ஆதாயம் பார்த்த டாட்டா மீது சுமத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

உண்மைதானே!
சிபிஐ ஸ்பெக்ட்ரம் வழக்கைக் கொண்டுபோகும் விதத்தில், ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. ராசா, விட்டுக் கடாசியிருக்கிறார்! லஞ்சம் வாங்கியவன் என்று சிலரைப் பிடிக்கிறார்கள், பலரை விட்டு விடுகிறார்கள். பிடித்ததிலும் மிகச் சில பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்கிறார்கள். ஆனால், ஊழலில் ஆதாயம் அடைந்த கார்பரேட்டுக்களை விட்டு விடுகிறார்கள்!  

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கறை படிந்த டாட்டா, அம்பானிகளை விலக்கி வைத்து விட்டு நடத்துகிற விசாரணை உண்மையிலேயே கேலிக் கூத்தாகத்தான் இருக்கும்.
A Raja, former Telecom Minister and prime accused in 2G spectrum case, on Monday alleged in a Delhi court that CBI sparedTata Teleservices which made Rs 14,000 crore in the scam and dared the agency to touch the company's top boss.

"Let the prosecution touch the man who has made Rs 14,000 crore in this. They cannot touch him. This is my challenge (to CBI). Picking and choosing (the accused) is not permissible in law," Raja's counsel and senior advocate Sushil Kumar contended before Special CBI Judge O P Saini.

The DMK MP said nine telecom companies were issued 2G licences but CBI alleges that he conspired only with two companies -Swan Telecom and Unitech Wireless of Sanjay Chandra - leaving out Tata Teleservices and others.

Unitech Wireless sold 67 per cent equity for Rs 6,120 crore whereas Tata Teleservices got Rs 13,973 crore by selling only 27 per cent equity, he said, adding even then Tata Teleservices was not accused by CBI of committing any offence.

"Who is a better businessman - Sanjay Chandra of Unitech or Ratan Tata of TataTele Services?? And then they say we kept them (Tata) out of Delhi circle," Raja said.

He accused CBI of adopting "pick and choose" policy for making Swan Telecom and Unitech Wireless as conspirators in the entire episode.
"Nine companies have got the licences - Unitech Wireless, S-Tel, Systema Shyam Telelinks, Swan Telecom,Datacom Services,Loop Telecom, Tata Teleservices,Spice Communication and Idea Cellular. We are dealing with only two companies (Swan Telecom and Unitech Wireless) now.

"Case of the prosecution is that each one of these companies has sold their licence and on this, the presumptive loss is at about Rs 22,000 crore. Out of these nine companies, only two are before this court as accused. Why other seven comapnies are not there," Kumar submitted.

Two more companies - Videocon Telecommunication and Allianz Infratech - were also alloted 2G licences.

He alleged Tata Teleservices made money in allocation of spectrum and made around Rs 14,000 crore.

"Everyone (telecom companies) has got foreign equity induction. Tata Teleservices has got Rs 14,000 crore in this. Swan Telecom has got around Rs 3,600 crore,S-Tel got Rs 861 crore whileSystema Shyam Telelinks got Rs 211 crores.

"Induction of equity by permissible route is not black money. CBI calls it illegal money as I did not auction the licences," he said.

"CBI, however, is maintaining that when DB Realty gave its shares (in Swan Telecom) to bring in money, it amounted to sale and so is the case with Unitech (Wireless). But when Tata Teleservices give its shares to bring in FDI, it, according to CBI, does not amount to sale," Raja argued.

"The sin of Swan Telecom and Unitech Wireless is that they have good contacts abroad and they managed to get money from there and thus they are here in jail. How can you (CBI) build a case if they will let off Tata Teleservices or say S-Tel and others?" he said.

இந்த ஒரு வாதத்துக்காகவே ராசாவுக்கு, அவருடைய அரசியல், ஊழல் இவைகளில் கருத்து வேறுபட்டு நின்றாலும்  ஒரு ராயல் சல்யூட்!

******
தொலைத் தொடர்புத் துறை​யில் இரண்டாம் தலை​முறை,மூன்றாம் தலை​முறை எனப்படும் தொழில்​நுட்பத்தைத்தான் 2ஜி, 3ஜி என்​கிறார்கள். வரும் அக்டோபர் மாதம் 4ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.

 இதை வைத்தே, டெல்லியில் தமிழக அரசியல்​வாதிகளைக் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கெனவே ராசா ஜி, கனிமொழி ஜி, தயாநிதி ஜி என்று மூன்று 'ஜி’-க்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிப் பதவியை இழந்துவிட, விரைவில் நான்காவது 'ஜிசிக்குகிறார் என்கிறார்கள். 

அவர், ப.சிதம்பரம் ஜி!

4ஜி எனப்படும் நான்காம் தலை​முறைத் தொழில்நுட்பத்தில் நான்கு விதமான வசதிகள் இருக்கும். என்ன பொருத்த​மோ... ப.சிதம்பரம் மீதும் நான்கு விதமான குற்றச்சாட்டுகள். சிதம்பரம் மீது முதன் முதலில் சந்தேகம் எழுப்பியவர் சுப்ரமணியன் சுவாமி. இதைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி பி.ஜே.பி. மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரகாஷ் ஜவடேகர், மாயாசிங் மற்றும் மக்களவை உறுப்பினர் சிவகுமார் உடேசி, பி.ஜே.பி-யின் செயலாளரும் வழக்கறிஞருமான பூபேந்திர யாதவ் ஆகியோர் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வந்து, சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங்கிடம் சிதம்பரம் மீதான புகார் மனுவைக் கொடுத்தனர்.

பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தோம். முதலில் ப.சிதம்பரம் மீதான நான்கு குற்றச்சாட்டுகளைப் பட்டியல் இட்டார்.

குற்றச்சாட்டு - 1:  2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக, கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்கள் அவையில் பதில் கொடுத்தபோது, '2003-ம் ஆண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படவேண்டும் என்கிற கொள்கை முடிவை அரசு எடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சகமும் சேர்ந்து முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது.  

ஆவணங்களின் அடிப்படையில், ஆரம்பத்தில் நிதி அமைச்சர் தொலைத் தொடர்பு அமைச்சரோடு ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படுவதில் வேறுபட்டு இருந்ததாக 15.1.2008 அன்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் கலந்து பேசியதில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது என்று 4.7.2008 நடந்த கூட்டத்தில் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுஎன்று பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதில் இருந்து ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில், தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து பேசி முடிவு எடுத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. 'ராசாவுக்குத் தெரிந்த மாதிரியே சிதம்பரத்துக்கும் எல்லா விவரங்களும் தெரியும்!என்று பிரதமரே சொல்கிறார். இரண்டு துறை அமைச்சர்களும் ஒன்றாக உட்கார்ந்துதான் இறுதி முடிவு எடுத்து உள்ளனர். தொலைத் தொ​டர்பு அமைச்​சர் ஆ.ராசா குற்றவாளி என்றால், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் குற்றவாளிதானே?

குற்றச்சாட்டு - 2 :  டிபி ரியாலிட்டி, யுனி​டெக் போன்றவை டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இல்லை. ஆனால், இவர்கள் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றனர். அதோடு, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்களுக்கு விற்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் பங்குகளை வாங்குவதற்கும் நிதி அமைச்சகத்தின் அனுமதி தேவை. இதற்கு இந்த நிறுவனங்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனர். இதைப் பரிசீலனை செய்து அனுமதி கொடுத்தது, நிதி அமைச்சகம். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில் ஒரு ஊழல். இந்த ஊழல் முடிந்து மற்றொரு ஊழலும் தொடர்ந்து உள்ளது. இதுவும் நிதி அமைச்சகத்துக்கு வந்தது. ஸ்வான் மற்றும் யுனிடெக் பங்குகளை பெற்ற வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்கள் எஃப்.ஐ.பி.பி-யிடம் அனுமதி பெற்றுள்ளன. இந்த எஃப்.ஐ.பி.பி., நிதி அமைச்சகத்தின் கீழே இருப்பதுதானே? நிதி அமைச்சகம் எப்படி இப்படி அனுமதி கொடுத்தது?  

ஸ்வான் டெலிகாம் 1,650 கோடிகளுக்குத்தான்தான் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கியது. ஆனால், இந்த நிறுவனம் 50 சதவிகிதப் பங்குகளை மட்டும் விற்றதன் மூலமே 10,000 கோடியை சம்பாதித்து உள்ளது. நிதி அமைச்சகம் அனுமதி இல்லாமல் பங்குகள் திருப்பி விடுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தானே  இதற்கு முழுப் பொறுப்பு?

குற்றச்சாட்டு - 3:  ஆ.ராசா எழுதிய குறிப்புகளை நாங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்றோம். பத்திரிகைகளில் இந்த ஊழல் குறித்துச் செய்தியாக வந்த நேரத்தில், நிதி அமைச்சருடன் தான் சந்தித்துப் பேசியதை ஆ.ராசா குறிப்பிடுகிறார்.

'பங்குகள் மாறியுள்ளன, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வியாபார விருத்திக்கும் தான்என்று ராசா குறிப்பிடுவதோடு, 'பங்குகள் விற்பனையானதை, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், கம்பெனி சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்த பங்குகளின் பரிவர்த்தனைகள் நடந்து உள்ளனஎன்று சிதம்பரத்திடம் கூறியதாக ஆ.ராசா குறிப்பு எழுதி இருக்கிறார். அப்படி ஆ.ராசா கூறி இருந்தால், சிதம்பரம் அதை ஏற்றுக்கொண்டாரா?

குற்றச்சாட்டு-  4 :  தொலைபேசி ஒட்டுக்கேட்பில், நீரா ராடியாவும் ராசாவும் பேசிய விவகாரங்கள் வெளியாகின. இதில் ப.சிதம்பரம் பெயரும் வருகிறது. இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டாமா?'' என்றார் ஆவேசமாக.
இன்னொரு புயல் கண்ணுக்குத் தெரிகிறது!

- சரோஜ் கண்பத் நன்றி: இன்றைய ஜூனியர் விகடன் 


ராசா மாதிரி அதிரடி எல்லாம் பண்ணாமல் "எல்லாம் மறந்து போச்சேன்னு" ஒரு விசித்திரமான டிபென்ஸ் எடுத்துட்டாரே சுரேஷ் கல்மாடி! 

காங்கிரஸ்காரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா!!

அடுத்து, ஜாமீன் கொடுக்காததால் புத்தி சுவாதீனம் இல்லாமல் போய்விட்டது என்று சர்டிபிகேட் வாங்கி டிபென்ஸ் எடுக்குமோ இன்னொரு ?

******
இன்றைய போட்டுத் தாக்கு!

தொலைத் தொடர்புத்துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹூரா, சிபிஐ சிறப்புநீதிமன்றத்தில் இன்றைக்குத் தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்திருப்பதில், ப.சிதம்பரம், அன்றைய நிதித்துறை செயலாளராக இருந்த டி சுப்பா ராவ் இருவரையும் சந்திக்கு இழுத்திருக்கிறார். 

ஒட்டுமொத்த அமைச்சரவையுமே இந்த குளறுபடிக்குப் பொறுப்பு என்று காங்கிரசுக்குத் தெரியாத "அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை" நினைவு படுத்தியிருக்கிறார்! 








 
பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித் தெரிவியுங்களேன்!