கேடி பிரதர்ஸ் : தாத்தாவுக்குத் தெரியா(து)தா?!


தாத்தாவுக்குத் தெரியா(து)தா?!

நெல்லை கண்ணன்

First Published : 20 Jul 2011 02:34:14 AM IST


டைசிவரை மன்மோகன் சிங்கின் முன்னர் பணிந்து தனது மத்திய அமைச்சர் பதவியை விடாமல் இருப்பதற்கு சகல முயற்சிகளையும் செய்து இறுதியில் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன்.

லித் ராசா இந்த விஷயத்தில் எத்தனை சரியாக நடந்து கொண்டார். பிரதமர் சொன்னவுடனே பதவியை விட்டு விட்டாரே! கருணாநிதி கூறுவது போல, தாழ்த்தப்பட்டவர் என்பதால்தான் திமுக தலைமை அவருக்கு ஒரு நீதி, பேரனுக்கு ஒரு நீதி என்று செயல்படுகிறதோ என்று யாரும் கேட்டு விடக் கூடாது. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பம். அந்தக் குடும்ப விவகாரங்களில் தலையிடும் உரிமை அந்நியருக்குக் கிடையாது என்று கருணாநிதி வகையறாக்கள் வீரவசனம் பேசுவார்கள்.

யாநிதியை ஊடகங்கள் பழிவாங்கி விட்டனவாம்! கருணாநிதி சொல்லுகிறார். அது மட்டுமல்ல, தயாநிதி மீது இப்படி ஒரு குற்றச் சாட்டு இருப்பதே நேற்றுத்தான் அவருக்குத் தெரியுமாம்!

பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் அண்டப்புளுகன் என்றெல்லாம் அவரைப் பற்றி யாரும் கூறிவிடக் கூடாது. அது தமிழினத் துரோகம் என்று வியாக்யானம் செய்வார் கருணாநிதி.

திமுக அவரோடு நிற்குமாம். கருணாநிதி கூறி இருக்கிறார். தலித் ராசா இன்னும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலர். அவரோடு திமுக இன்னும் நின்று கொண்டிருப்பதை இந்தியா பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது? இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் எல்லாம் அவருக்காக நீதிமன்றத்தில் வாதிட்டனரே! கருணாநிதியே நேரில் சென்று தில்லியில் இருந்தல்லவா அந்த தலித்துக்காகக் கண்ணீர் வடித்தார்.

ருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் அவரது மருமகன் முரசொலி மாறன். "முரசொலி மாறனைப் பார்த்தவுடன் இந்திரா காந்தி அம்மையார் நினைப்பாராம், இப்படி ஒரு அழகான வாலிபனுக்கு கட்டிக்கொடுக்க தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்று''. இப்படிச் சொன்னவர் மறைந்த நாஞ்சில் மனோகரன். "கருவின் குற்றம் பற்றி நாஞ்சில் மனோகரன் பின்னாளில் சொன்னது தனிக்கதை.

ந்த முரசொலி மாறன் தமிழ் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு சைக்கிள் வாங்க எத்தனை கஷ்டப் பட்டார் என்று. மாமா கருணாநிதி மிகவும் சங்கடப் பட்டு ஒரு ஹெர்குலிஸ் சைக்கிள் அறுநூறு ரூபாய்க்கு வாங்கித் தந்தார் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் மருமகன் முரசொலி மாறன்.

ன்று மாறன் சகோதரர்கள் இருபது தொலைக்காட்சிக்கு சொந்தக் காரர்கள். நாற்பத்தைந்து பண்பலை வானொலிக்குச் சொந்தக்காரர்கள். ஒரு விமான நிறுவனத்துக்கே சொந்தக்காரர்கள். ஒரு டிடிஹெச் நிறுவனத்துக்குச் சொந்தக் காரர்கள். ஆனால், இவர்களிடம் வேலை பார்க்கும் எந்த ஊழியர்க்கும் நல்ல சம்பளம் கிடையாது. அவர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுகிறார்களா என்று நானும் பலரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். பதில் கிடையாது.

டகங்கள் இத்தனை வைத்துக்கொண்டு இவர்கள் மக்களுக்கா சேவை செய்தார்கள். ஜெயலலிதாவையும் அவரது இயக்கத்தையும் அவதூறு செய்வதையே வேலையாகச் செய்தார்களா இல்லையா? அதெல்லாம் கருணாநிதிக்கு நினைவுக்கு வராது!

கே.பி.கந்தசாமி உருவாக்கி வளர்த்த செய்தி ஊடகத்தை அவரது மகனிடம் இருந்து எப்படி மாறன் சகோதரர்கள் வாங்கினார்கள் என்பது இன்றுவரை மர்மம்தான். அந்தத் தினகரன் செய்தித் தாளினாலேதானே கருணாநிதி குடும்பத்திலேயே குழப்பம் வந்தது.

திலேதானே இந்தியாவிலேயே மக்கள் மத்தியில் பெரும்பான்மை மதிப்பைப் பெற்றுள்ள அமைச்சர் தயாநிதி மாறன் என்று செய்தி போட்டார்கள். சிதம்பரத்துக்கெல்லாம் வாக்குக் குறைவாக இருந்தது. அழகிரியோ மிக மிகக் கீழே இருந்தார்.

ந்த ஊடகத்தினாலேதானே மதுரையில் மூன்று இளைஞர்கள் எரிக்கப் பட்டார்கள். அந்தக் கருணாநிதியாரின் பேரன் ஊடகம் தமிழகத்தில் ஒரு பெரிய கொலைக் குற்றத்துக்கான காரணமாய் இருந்ததே, அது அவருக்கு வயோதிகம் காரணமாக நினைவுக்கே வராது!

தன் விளைவுதானே அழகிரி கருணாநிதி குடும்பத்துக்கென்று ஒரு தனி தொலைக்காட்சி ஊடகத்தையே கலைஞர் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கினர். அந்தத் தொலைக்காட்சிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு வந்தது என்றும் அதற்குக் காரணம் கனிமொழி என்றும் அவரும் இயக்குநர் சரத்குமாரும் சிறையில் இருக்கின்றனர் என்பதாவது நினைவில் இருந்தால் சரி!!

ந்தக் கலைஞர் தொலைக்காட்சியிலேதானே தேர்தல் முடிவுகள் அன்று விமர்சனத்துக்காக உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் பத்தே நிமிடத்தில் வெளியேறி மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று. அதற்கெல்லாம் ஊடகங்கள்தான் காரணமென்றால் அது நியாயமான வார்த்தை.

மிழ்நாட்டின் தலைசிறந்த ஊடகங்களெல்லாம் இந்தக் குடும்ப அட்டூழியத்தை இந்தக் குடும்பச் சண்டையினால் ஏழை இளைஞர்கள் மூவர் கொடுமையாகக் கொல்லப்பட்டதைக்கூட மறந்துவிட்டு அதே பேரனை மீண்டும் மத்திய அமைச்சராகிய அவலத்தை எழுதின.

ருணாநிதிக்குச் சொந்தமான குங்குமம் வார இதழையும் மாறன் சகோதரர்களே வாங்கிக் கொண்டனர். சன் தொலைக் காட்சியில் பங்கைக் கொடுத்துக் கலைஞர் குடும்பத்தைக் கழற்றியும் விட்டனர் மாறன் சகோதரர்கள்.

ரசுத் தொலைபேசித் துறையின் எத்தனை தொடர்புகள் மாறன் சொந்த நிறுவனத்துக்குப் பயன்பட்டுள்ளன என்பது இப்போது சிபிஐயின் விசாரணையிலிருந்து தெரியவந்திருக்கிறது.

ர்செல் நிறுவனம் மிரட்டப்பட்டிருக்கிறது. பதவியையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்த மலேசிய நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மிரட்டி வாங்கிய விவகாரம் இப்போது நீதிமன்றம்வரை வந்துவிட்டது.

பாவிகள் அத்துடன் விட்டார்களா? காந்தி மண்டபத்தை "ஏர்செல்' விளம்பரத்துக்குப் பயன்படுத்திய அநியாயத்தை ஏன் அன்றைய திமுக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்தது என்பது இப்போதல்லவா தெரிகிறது!

சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபம் "ஏர்செல்' விளம்பர மண்டபமான மர்மத்தின் முடிச்சு மாறன் சகோதரர்களின் முற்றத்தில் அல்லவா போய் முடிகிறது!

கோடிக்கணக்கான பணத்தை வைத்து திருமங்கலம் பார்முலாத் தேர்தலை நடத்தி விடலாம் என்று எல்லாத் தவறுகளையும் மிக மிகத் தைரியமாகச் செய்து விட்டு தேர்தல் ஆணையத்தின் சிறந்த முயற்சியாலும் நல்ல காவல் துறை அதிகாரிகள் சிலராலும் மக்கள் தீர்ப்பின் வேகத்தில் துவண்டு கிடக்கும் இவர்களுக்குச் சட்டம்தான் கடமையைச் செய்யத் தொடங்கிய டனே கோபம் வருகிறது.

ருணாநிதியார் குடும்பத்தினரை விட அதிகம் அரசியலை வைத்துச் சம்பாதித்தது மாறன் குடும்பம்தான்! இது உலகறிந்த உண்மை!!

டகங்களைக் குற்றம் சொல்கிறாரே கருணாநிதி இவரது முரசொலி தான் பெருந்தலைவர் காமராஜர் வாடகைக்குக் குடியிருந்த வீட்டை அவரது சொந்த வீடு என்று போட்டு ஏழைப் பங்காளர் காமராஜரின் வீட்டைப் பாருங்கள் என்று செய்தி போட்டது. பெரியவர் காமராஜர் ஆந்திர வங்கியில் ஒரு கோடிரூபாய் போட்டு வைத்திருக்கிறார் என்று ஓர் உலகப் புளுகைச் செய்தியாகப் போட்டது.

செய்தியாளர்கள் கேட்டபோது காமராஜர் சொன்னார்: "அவர் கிட்ட அதற்கான செக் புக் இருந்தா வாங்க்கிட்டு வாங்கண்ணே, கையெழுத்துப் போட்டுத் தாரேன் அவரையே வாங்கிக்கிடச் சொல்லுங்க'' என்றார்.

ழல் அனைத்தையும் செய்துவிட்டு ஊடகங்களைக் குற்றம் சொல்லிப் பேரனைக் காப்பாற்ற தாத்தா முயற்சி செய்கிறார்.

த்தனை மாதங்களாக தயாநிதியை பாஜக, கம்யூனிஸ்ட்கள், அஇஅதிமுக, தேமுதிக என்று எல்லா கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்? மன்மோகன் சிங் கேட்கவில்லை.

ன்று உச்ச நீதிமன்றத்திலேயே குற்றச்சாட்டு பதிவான பிறகு பிரதமர் கட்டாயப் படுத்தித்தானே விலகல் கடிதத்தை வாங்க முடிந்திருக்கிறது.
 ஊடகங்கள்தான் தீர்மானிக்கின்றன என்கிறார் கருணாநிதி.

த்தனைநாள் கருணாநிதியின் பேரன்கள் நடத்திய ஊடகங்கள் தீர்மானித்தது உண்மை. இப்போது உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கிறது. ஊடகங்கள் பிரதி பலிக்கின்றன. தாத்தாவுக்கு வயதாகிவிட்டது. பாவம், தெரியவில்லையோ என்னவோ?

து தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், மறந்தாலும் மறக்காவிட்டாலும் "குறளோவியம்' எழுதிய கருணாநிதிக்குத் "திருக்குறள்' தெரியாமல் இருக்க வழியில்லை. காமத்துப் பால் மட்டுமல்லாமல், அவர் அறத்துப் பாலும், பொருட்பாலும்கூடப் படித்திருக்கிறார்.

"தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்'' என்பது குறள்.

 வள்ளுவருக்குக் கோட்டமும் வள்ளுவருக்குச் சிலைகளும் வைத்த கருணாநிதிக்கு இது எப்படித் தெரியாமல் போகும்?
 

தாத்தாவுக்குத் தெரியா(து)தா?!

தயாநிதி தூக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நெல்லை கண்ணன் என்ற காங்கிரஸ்காரர் உறக்கம் கலைந்து எழுதிய செய்திக் கட்டுரை இது! இன்றைய தினமணி நாளிதழில், பார்த்தவுடனேயே எனக்கே சந்தேகம்!  

தாத்தாவுக்குத் தெரியாதா என்று கொஞ்சம் எள்ளலுடன் நன்றாகத்தான் எழுதியிருக்கிறார்!ஆனால், காங்கிரஸ்காரர்களுக்கு, அரசியல் நாணயம், விவேகம்,நேர்மை, துணிச்சலுடன் செயல்படுவது என்பதெல்லாம் எப்போதுமே ஒட்டாத விஷயம்!போகட்டும் இப்போதாவது உறக்கம் கலைந்து, கூட்டணி தர்மத்தை உத்தேசித்து மெல்லக் கடிதோச்சி ருக்கிறாரே என்று சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்! ஆனால், இவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் தலைமையைக் குறித்து இப்படி சந்தோஷப்படுகிற மாதிரி சொல்லிவிட முடியுமா?

இப்போதுகூட, உச்ச நீதி மன்றத்தின் நேரடிப் பார்வையில் இருப்பதால் மட்டுமே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் இந்த அளவுக்காவது, விசாரணை கைது என்று தோ பெயரளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது

உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சிபிஐ, காங்கிரஸ்வாலாக்களால் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் ரேஞ்சுக்குக் குறுகிப்போன ஒரு அமைப்பு! நம்பகத்தன்மை இல்லாத சிபிஐ அதிகாரிகள் பட்டியலைத் தருமாறு நீதிமன்றமே கேட்கிற அளவுக்குப் புகழ் பெற்றது. இவர்கள் இத்தனை ஊழல் வழக்குகளை எப்படி விசாரிக்கிறார்கள், எப்படி வழக்கை நடத்தப் போகிறார்கள் என்பது ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரி, விடை தெரியாத கேள்விதான்!  

காங்கிரஸ்காரர்களுக்கு ஊழல் விவகாரம் குறித்து உறக்கம் கலையாமல் இருப்பது எல்லாம் காரணமாகத்தான்! இப்போதே, இந்த விவகாரம் கைமீறி வேகமாக ஓடிவிட்டது என்ற மாதிரி அவர்களுக்கு ஒரு நினைப்பு இருக்கிறது. கூட்டணி தர்மத்தில் கூட்டாளிகளைக் காப்பாற்றுவது என்று அதற்கு அர்த்தமில்லை! இதே வேகத்தில் போனால், வரிசையாகக் காங்கிரஸ் கட்சிக்காரர்களே உள்ளே போக வேண்டியிருக்கும் என்ற அச்சம், சத்தமே இல்லாமல் விவகாரங்களைக் கொஞ்சம் ஆறப் போடுகிறமாதிரி நடந்து கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது!

ஆ.ராசாவும், அவரது  தனிச் செயலாளராக இருந்த ஆர் கே சந்தோலியாவும்  இன்றைக்கு,சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், எடுத்து வைத்திருக்கிற வாதங்கள்! முதலில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கலாகட்டும் மொத்தமாக, எங்கள் தரப்பை எடுத்து வைக்கிறோம் என்று ஆரம்பித்து இன்றைக்கு, இவ்வளவு அவசர அவசரமாக வாதங்களை எடுத்துவைக்க நாளை இருபத்தொன்றாம் தேதி குறித்து வைத்திருப்பதைக் கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஆர் கே சந்தோலியா,ஒருபடி மேலேயே போய், சொன்னதைச் செய்த ஊழியன் நான், என்னை ஒரு சாட்சியாக மட்டுமே விசாரித்திருக்க வேண்டும்! அதை விட்டு விட்டுக் கூட்டுச் சதியாளர் என்று சிறையில் அடைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டிருக்கிறார்.

எண்பதாயிரம் பக்கக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது மட்டுமே சிபிஐ தன்னுடைய பொறுப்பை சரியாக செய்திருக்கிறது என்பதன் அடையாளம் இல்லை. சாட்சியங்களை எப்படி ஒருங்கிணைத்துக் குற்றப்பத்திரிகையில் சொல்லியிருப்பதை நிரூபிக்கப்போகிறார்கள் என்பது இன்னமும்  நம்பிக்கையூட்டுகிற விதத்தில் வெளிப்படவில்லை!

இங்கே காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மீது தொடரப்பட்ட கொலை வழக்கில் சாட்சியங்களைப் பிறழ் சாட்சியங்களாக மாறுவதை சத்தமே இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே கதைபோலாகிவிடாமல் இருந்தால் சரிதான்!

தலைவர்கள் எப்படி உருவாகிறார்கள்? தலைமைப்பண்பு பிறப்பிலேயே வருவது என்கிறார் ஜெயதேவதாஸ் என்ற நண்பர்!இதற்கு முந்தைய பதிவில் தொடர்ச்சியாக அவர் எழுதிய பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதென்றால், ஒரு தனிப்புத்தகமே எழுதலாம்! 

இந்தப்பக்கங்களில், மேலாண்மை, நிர்வாகம், தலைமைப் பண்பு  குறித்து நிறையவே பேசியிருக்கிறோம். நடப்பு அரசியலோடு பொருத்தியும், பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

தலைமை, தலைமைப்பண்பு என்பது பிறப்பில் வருவதில்லை. தனக்குக் கிடைக்கும் வாய்ப்பை ஒருவர் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதிலேயே தலைமைப் பொறுப்புக்கு அவர் தகுதியானவர்தானா என்பதைக் கணித்துவிடலாம்.கணிப்பது ஒரு ஆரம்பப் படி தான்! அதற்கு அப்புறம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் முழுமையான விடை இருக்கிறது. இணைப்பில் கொடுத்திருக்கும் சுட்டிகள், மற்றும் குறியீட்டுச் சொற்களைப்
பயன் படுத்திப் பழைய பதிவுகளை நேரமிருந்தால் படித்துப் பார்த்துவிட்டு, என்ன தோன்றுகிறது என்பதைப் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

நோய்நாடி நோய் முதல் நாடி என்று வள்ளுவர் சொல்வதற்கேற்ப, நம்மை என்ன நோய் பீடித்திருக்கிறது, அதற்கு மூல காரணமென்ன என்பதை சரியாகப் புரிந்து கொண்டால் குணப்படுத்துவது எளிது! நம்மை நாமறிவோம்!தயார் தானே! 
பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித் தெரிவியுங்களேன்!

3 comments:

  1. தாத்தாவைப் பற்றி புட்டு புட்டு வைத்த பதிவு அருமை கலக்கிட்டீங்க போங்க!

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி! "புட்டு" வைத்தது நெல்லை கண்ணன்! ஒரு காங்கிரஸ்காரர்! கொஞ்சம் தாமதமாக உறைத்து தினமணியில் எழுதிய செய்திக் கட்டுரை இது. அதற்குக் கீழே சிவப்புக் கலரில் இருப்பது, பதிவரின் விமரிசனம்.

    ReplyDelete
  3. சுந்தரராஜன் சே என்ற பதிவரிடம் இருந்து, நெல்லை கண்ணன் இப்பொழுது காங்கிரசில் இல்லை என்ற தகவல் பின்னூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தகவலைப் பிரசுரம் செய்கிறேன். தன்னுடைய சுயவிவரம் சிறிதளவும் ப்ரொபைலில் இல்லாததால் பின்னூட்டத்தை நிராகரிக்க வேண்டியிருக்கிறது என்ற தகவலையும் தெரிவிக்கிறேன். கமென்ட் பெட்டிக்கு மேல் இருப்பதையும் படித்துவிட்டுப் பின்னூட்டம் எழுதினால், நல்லது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!