ஒருவழியாக, மன்மோகன் சிங் வரும் வரும் என்று சொல்லிக் கொண்டிருந்த மந்திரிசபை மாற்றத்தைக் கொண்டே வந்துவிட்டார்!
அடுத்த வருஷம் வரப்போகிற சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு சல்மான் குர்ஷீத் உள்ளே வந்திருக்கிறார். சட்ட அமைச்சராக! சட்ட அமைச்சராக இதுவரை இருந்த வீரப்ப மொய்லி கார்பரேட் விவகார அமைச்சராகியிருக்கிறார். வேண்டாதவர்கள் சேர்ந்து என்னை சட்ட அமைச்சகத்தில் இருந்து கழற்றி விட்டு விட்டார்கள் என்று மனிதர் வருத்தப்பட்டுக் கொள்கிறார்.
மும்பையைச் சேர்ந்த குருதாஸ் காமத், தனக்குக் காபினெட் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று குறைப் பட்டுக் கொண்டார். பதவியேற்புக்குக் கூட இரண்டு அமைச்சர்கள் வரவில்லை! அதில் இந்தக் காமத்தும் ஒருவர். கொடுத்த பதவியை வாங்கிக் கொண்டால் ஆயிற்று, இல்லையென்றால் அதுவும் கிடைக்காது என்று மேலிடம் சொன்னதாம்! மனிதர் எனக்குக் கட்சிப் பொறுப்பே போதும் என்று ராஜினாமா செய்துவிட்டார்.
ஆக, மன்மோகன் சிங்கும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, இப்போதெல்லாம் என்ன செய்தாலும் ஏறுக்குமாறாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது!
கூட்டணிதர்மத்தைப்பற்றிப் பேசி இன்றைக்கும் மன்மோகன் சிங் தமாஷ் செய்திருக்கிறார்! கூட்டணிக் கட்சி எதுவும் இவரை மதிப்பதில்லை, கூட்டணி தர்மத்தையும் மதிப்பதில்லை என்பது தெரிந்தே மனிதர் காமெடி செய்துகொண்டிருப்பது, அசிங்கமாக இருக்கிறது.திமுகவின் டி ஆர் பாலு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைந்து பார்த்தார்! கதைக்கு ஆகவில்லை!
In his annual declaration to the Prime Minister's Office on March 31, 2010 Alagiri did not declare his assets to the PMO office. These documents have also been accessed by Headlines Today. But when confronted by Headlines Today with this proof, the minister replied: "Show me papers. Don't ask stupid question."
சீச்சீ, நாயும் பிழைக்குமோ இந்தப் பிழைப்பு என்று மன்மோகன் சிங், தியாக சிகரம் சோனியா காந்தி, ஐமு கூட்டணிக் குழப்பத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியைப் பார்த்தும் காறித் துப்புவதோடு விட்டுவிடாமல், தேர்தல்களிலும் சரியான பாடம் புகட்ட வேண்டிய கடமை இந்திய மக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
This comment has been removed by the author.
ReplyDeleteennaththa solla.. vaalththukkal
ReplyDeleteDo we have any alternative to Italian congress party?
ReplyDeleteBJP is no better than Italian maphia
// ஏற்கெனெவே அம்மா அலட்டல் அதிகம்! இப்போது ராஜாங்கமும் சேர்ந்து கொண்டு என்ன பாடுபடுத்தப் போகிறதோ தெரியவில்லை!//
ReplyDeleteஉண்மை !!
ரெவெரியன்!
ReplyDeleteவருகைக்கு நன்றி! ஒற்றைவரிப் பின்னூட்டங்களில் சொந்தப்பதிவுக்கு விளம்பரம் தேடிக் கொள்வது ஒரு எல்லை வரை சரிதான்! உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தினால், வாசகர் வட்டம் தானே வரும்!
சரவணன் சார்!
ஆசிரியர் நீங்கள்! நீங்களே என்னத்தச்சொல்ல என்று மென்று முழுங்கினால் சரிவருமா? ஒரு சரியான விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய தருணம் இது!
வாருங்கள் கௌதமன் சார்!
ReplyDeleteசிலகாலத்துக்கு முன்னால் அம்மணியிடம் பானாசீனா படாதபாடுபட்டுக் கொண்டிருந்த கதை தெரியுமோ? காங்கிரஸ் பேச்சாளர் என்ற ஹோதாவில் தொலைக்காட்சிகளில் அம்மணி அடுத்தவரைப் பேசவே விடாமல் முழங்கிக் கொண்டிருந்தபோதே, இவர் சீக்கிரம் "முன்னுக்கு" வந்துவிடுவார் என்று ஊகிக்க முடிந்ததுதான்!
வாருங்கள் சக்ரபாணி!
தேவைகளே கண்டுபிடிப்புக்களை உருவாக்குகின்றன என்பது தெரியுமில்லையா? காங்கிரசுக்கு மாற்றித் தேடவேண்டும் என்கிற எண்ணம் முதலில் நம்மிடமிருக்கிறதா?
1975 நெருக்கடி நிலைக்குப் பிறகு, எதிரும்புதிருமாக இருந்த ஜனசங்கம், இடதுசாரிகள் ஒன்று சேரவில்லையா? பிஜேபி மட்டுமல்ல, இப்போதுள்ள தேர்தல்முறையில், எல்லாக் கட்சிகளுமே மோசமானவைதான்!அதற்காகக் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்துவிட முடியுமா? இந்தக் கேள்விகளை எழுப்பிக் கொண்டு, விடைகளைத் தேடிப்பாருங்கள், கிடைக்கவில்லைஎன்றால் நாமே உருவாக்க வேண்டியதுதான்!