Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

ஒண்ணுமே புரியலே ஒலகத்துலே!

ஒண்ணுமே புரியலே சார்! இது முந்தைய பதிவுக்கு வந்த ஒரே பின்னூட்டம்! இதுவரை எனக்குத் தெரிந்த தமிழில் தடுமாறாமல் தானே எழுதிக் கொண்டிருக்கிறேன்?  

மாதா மாதம் கேபிள் அல்லது DTH கட்டணத்தை இவர் வந்து தருவாராமா?எனக்கும் கூட சிலவிஷயங்களில் இப்படித் தொடர்ந்து ஏமாளிகளாகவே இருந்துவிடத் துடிக்கும் ஜனங்களைப் பற்றி ஒன்றுமே புரிவதில்லை!
தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கட்டும்! அதிமுகவிலிருந்து எத்தனை எம் எல் ஏக்கள். ஏன் மந்திரிகள் கூட ஓடிவருகிற லிஸ்டில் இருப்பதாக எந்த நம்பிக்கையில் இசுடாலின் பேசுகிறார்? இதுகூட ஒண்ணுமே புரியலே ரகத்தில் வருகிற விஷயம்தான்!
தமிழிசை பேசுவதும் கூட ஒண்ணுமே புரியலே ரகம் தானா?
எது எப்படியோ, இது நிச்சயமாக ஒண்ணுமே புரியலே கேஸ்தான்!   
          

ஊழலில் புரளும் புள்ளிகள்! மிரளும் காங்கிரஸ்! கூட்டணி தர்மம்!


காங்கிரசைப் பற்றிப் பதிவெழுதாமல் ஒரு மாதமாவது இருக்க முடியுமா என்ற முந்தைய பதிவில் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் கேட்டிருக்கிறார்!

காங்கிரசுக்கு நெகடிவ் விளம்பரம் கூடக் கொடுக்கக் கூடாது தான்! ஆனால், இந்த தேசத்தைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிற நேரு பரம்பரைப் பிரபாவமாகக் காங்கிரஸ் இருக்கும்போது எப்படி அதைப் பற்றி எழுதாமல் இருக்கமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை.இங்கே வலைப் பதிவுகளில் எழுதுவதால் மட்டுமே, அதுவும் குறைந்த எண்ணிக்கையில் வாசகர்கள், பின்தொடர்பவர்கள் என்றிருக்கிற இந்த வலைப்பூவில் எழுதுவதால் என்ன ரிசல்ட் கிடைத்து விடப்போகிறது என்று கணக்குப் பார்த்துத் தான் எழுத வேண்டுமா என்ன!

இணையத்தில் கருத்தைப் பகிர்ந்துகொள்வதால் மிகப் பெரிய விளைவுகள் கிடைத்துவிடப்போகிறது என்று நம்பி எதையும் எழுதுவதில்லை. மனதில் சரி என்று படுகிற விஷயங்களை மட்டுமே இந்தப்பக்கங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். சொல்லப்பட்டதில், நேர்மையற்றதாகவோ, தவறானதாகவோ எதுவும் இருந்தால், அதைத் திருத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் எனக்கு இருந்ததே இல்லை.

ஒரு கருத்துப் பரிமாற்றம், ஆரோக்கியமான விவாதம் நிகழ வேண்டும் என்பதற்காகவே, பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவுகளைப் படிக்க வரும் அத்தனை பேருமே தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்வதில்லை, அல்லது ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தவேண்டும் என்று முனைவதில்லை. தங்களுடைய மனதில் என்ன தோன்றுகிறது என்பதை, கூச்சமில்லாமல், பதிவில் பேசப்பட்ட விஷயங்களை விட்டு விலகாமல், பின்னூட்டங்களில் ஒரு ஆரோக்கியமான விவாதமாக, இந்தப்பக்கங்களில் நிகழவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை, முந்தைய பதிவுகள் சிலவற்றிலும் சொல்லியிருக்கிறேன்.

ஸ்ரீராம் உபயத்தில், அந்த வேண்டுகோள்  இப்போது மறுபடியும்! வேண்டுகோளை மீள்பதிவாக வெளியிடக் காரணமாக இருந்த காங்கிரசை மட்டும் மறந்து விடலாமா? அதற்காக, மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதற்காக..............



சிவப்புச் சேலை என்பது  ஒரு புத்தகம்!  

சிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை! ( The Red Saree: When Life is The Price of Power)!

ஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது.  


ஏற்கெனெவே இந்தப் புத்தகம்  பிரெஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது



புத்தகத்தின் முகப்பிலேயே " dialogues, conversations and situations found therein are the product of the author's own interpretation and do not necessarily reflect authenticity."  

உரையாடல்கள், சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை; அப்படியே அச்சு அசலாக நடந்ததாகச் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த அறுநூறு ப்ளஸ் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், மோதிலால் நேரு, ஜவஹர், ராஜீவ், சோனியா என்று மேற்கத்திய வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு வசதியாக நடப்பைத் தொகுத்திருப்பதாக ஆசிரியர் சொன்னதை, காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.  

சோனியாவின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிருக்கிறது.

நோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி! இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல  யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட!  யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.

காங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப்  புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி
ருக்கிறாராம்?

1977 இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா, ராஜீவ் மற்றும் தன்  குழந்தைகளை  அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம்! அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு  இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.

நேருவின் வீரப்பரம்பரை  வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம்! வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத்  திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....?

அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை! ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது! அம்புட்டுத்தேன்!

ஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்! தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன் வைக்கும் கேள்வி இது தான்!

"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லி
ருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லி இருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லிருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி ருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே!"


சாதாரண  சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும்மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான். கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா?

காங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்து
காண்பித்திருக்கிறார்! காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்!
இன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிருக்கிறார், அதில்  மூன்று பொய்கள் என்ற பகுதியை
இங்கே பார்க்கலாம்!

சொந்தக் கதையே காற்றில் பறந்து கொண்டிருக்கும்போது ஆ! ராசா விவகாரம் வேறுஇளித்துக் கொண்டிருக்கிறது !இந்த லட்சணத்தில் "கூட்டணி தர்மம்" பற்றிய தம்பட்டம் வேறு!

அதெல்லாம் இருக்கட்டும்! சேலையைப் பற்றிப் புத்தகம் எழுதினால் மிரளுகிற நேருவின் வீரப்பரம்பரை விசுவாசிகள், எங்கே போய் ஒளிந்து கொள்கிறார்கள் என்பதை ஹிந்து நாளிதழில் நேற்று  சுரேந்திரா வரைந்த இந்தக் கேலிச் சித்திரம், இவர்களை இன்னமும் விட்டு வைத்திருக்கிற இந்தியப் பிரஜைகள் அத்தனைபேரையும் சேர்த்தே கேலி செய்வதாக இருப்பதை கவனித்தீர்களா?

என்ன செய்வதாக உத்தேசம்?!







வெள்ளிக் கிழமை! கேள்விகள்,விவகாரங்கள் வேண்டாமே!


பதிவுலகம் எப்போதுமே சூடாகவே இருக்க வேண்டுமா என்ன! ஒரு மாற்றத்திற்காகக் கொஞ்சம் சிரிக்க, பார்க்க, படங்களுடன்!

உலகக் கோப்பையும், இந்தியாவின் பிரபலமான உதை பந்தாட்டமும் என்று ஒரு பதிவில் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி பெர்னார்ட் ஷா சொன்ன ஒரு கருத்தைத் தொட்டு எழுதியிருந்தேன்! பிரியமுடன் பிரபு என்ற கிரிக்கெட் ரசிகர்  பின்னூட்டத்தில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்.

"அப்போ உதைபந்து விளையாடுபவன் அறிவாளினு எவனாச்சும் சொன்னானா??"

அப்போது  இந்தக் கேள்விக்கு என்ன விடை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை! டிவிட்டரர்கள் தயவில், ப்ரெட் எர்லிஷ் என்ற  டிவிட்டரர் எனக்காகவே  விடையைக் கண்டு பிடித்துச் சொன்ன மாதிரி! நீங்களும் பாருங்களேன்!


இரண்டும்கெட்டான் என்றால் அது கால்பந்தாட்டம் தான்! அவர்கள் இரண்டு மணி நேரம் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டு  இருப்பார்கள், எவரும் ஸ்கோர் செய்ய மாட்டார்கள். ஆனாலும் கால்பந்தாட்ட ரசிகர்கள் நூறு  கோடிப் பேரும் உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று தான் சொல்வார்கள்!

மூன்று நிமிடத்தில் ஒரு காதல்!



நான் டாட் நெட்டோ, ஜாவாவோ தெரிந்தவன் அல்ல! ஆனாலும் ஜாவாதான் எப்போதும் என்ற இந்தக் காதல் கதையை யூட்யூபில் பார்த்த பிறகும், காதலுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் எப்படி!

சிரிப்போ சிரிப்பு! இது என் எஸ் கிருஷ்ணனின்  ஒரிஜினல் சிரிப்பு!

 
 

வேறு  எந்த ஜீவராசிகள்  செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு! உண்மைதான் இல்லையா! அப்புறம் எதற்காக வால்பையனும் ஆல் இன் ஆல் ராஜனும் தங்களிடம் இருக்கும் அற்புதமான நகைச்சுவை உணர்வை விட்டு விட்டு வேறுபக்கமே போய்க் கொண்டு இருக்கிறார்கள்?

வாரான் வாரான் பூச்சாண்டி! கூட்டணி வண்டியிலே!


செம்மொழி மாநாடு வருகிறதே, அதற்குப் பதிவுலகக் கடமையை எப்படி ஆற்றுவது என்று கொஞ்ச நாட்களாக ஒரு குடைச்சல், குழப்பம்!

பதிவர்கள் சார்பாகப் போடவிருக்கும் கடைக்குத் தன்னார்வலராகச் சேர்ந்து கொள்ளலாமா என்றால் அது நமக்கு ஒத்துக் கொள்ளாது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இணையத்தில் சில புதிய தமிழ்ப்பதிவர்களை தேடிப்படித்துக் கொண்டிருந்தபோது, மார்க்கண்டேயன் என்ற மதுரைக்காரப் பதிவர் பக்கங்களில்  நா அப்படித்தான் ஈஸ்வரி ஆத்தாவின் பின்னூட்டத்தைப் பார்த்தேன்! வால்பையனுடைய பழைய
பதிவு ஒன்றில், இன்னொரு பதிவரை போடா லூசு என்று திட்டிப் பின்னூட்டம் எழுதியதும், அந்தப் பதிவர் பயந்துபோய், இன்னொரு தரம் போடா லூlசு பட்டம் வாங்க நான் தயாராக இல்லை என்று ஜகா வாங்கிய பழைய வரலாறு கண்முன்னே விரிய, ஈஸ்வரியின் பதிவுகளில் தேடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பதிவு கண்ணில் பட்டது!


அம்மா இங்கே வா வா! என்று பாட்டுப் பாடி ஆனா ஆவன்னா கற்றுத் தரும் இந்தப் பாடலைவிட செம்மொழிக்கு நம்மால் என்ன பெரிதாகச் செய்து விட முடியும்? ஒழுங்காகத் தமிழைக் கற்றுக் கொண்டு தமிளைத் தமிழாகப் பேசுவதைவிட வேறு என்ன செம்மை செய்து விட முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே, நா அப்படித்தான்! என்று மண்டையில் அடித்துச் சொல்கிற ஈஸ்வரி  எழுதிய நகைச்சுவை இது  இங்கே!

இந்த பாடல் கேட்கும் போது எங்கள் சுபிக்ஷா பாப்பாவின் நினைவு வரும்.

சுபிக்ஷா என் அக்காவின் குழந்தை
அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும் போது என் அக்கா அவளுக்கு இந்த பாடல் சொல்லி தந்தாள். அப்போது அவள் பட்ட பாடு இப்போது நினைத்தாலும் எங்களுக்கு சிரிப்பும், சந்தோசமும் தான் வருகிறது.

அக்கா: அம்மா இங்கே வா வா
பாப்பா: அம்மா தான் இங்க இருக்கீங்க. இன்னொரு அம்மாவை கூப்பிடணுமா?

அக்கா இந்த வரியிலே அதிர்ச்சி ஆகிட்டாள். பின் விளக்கம் சொல்லி கொடுத்து அடுத்த வரிக்கு வந்தாள்

அக்கா: ஆசை முத்தம் தா தா
பாப்பா: நிஜமாலும் முத்தம் கொடுத்தாள்

அக்கா: இலையில் சோறு போட்டு
பாப்பா: நிஜமாலும் போட போகிறார்கள் என்று நினைத்து எனக்கு சோறு வேண்டாம் வேண்டாம் ன்னு ஒரே சிணுங்கள்

அக்கா: ஈ யை தூர ஓட்டு
பாப்பா: எங்க மா ஈயி  ? இங்கே காட்டு. என் கண்ணுக்கு தெரியலையே...

ஒவ்வொரு முறையும் விளக்கம் சொல்லி, சொல்லிகொடுத்த அக்காவிற்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. அன்றைய பாடம் அத்தோடு முடிந்தது. எங்கள் குட்டி தேவதை எப்போதும் அக்காவிடம் பாடம் படிக்கும் போது இப்படி தான் எதையாவது கேட்பாள் அல்லது அடம் பிடிப்பாள். இப்போது பேபி School க்கு(Pre K.G) போயி நிறைய Tamil/English பாட்டு கத்துகிட்டு எங்களுக்கு போன்ல பாடி காட்டுறா.

வருங்கால IAS / IPS / Doctor ஒருத்தங்க எங்க வீட்டு
க்குள்ளும்  இருக்காங்கப்பா.

ஈஸ்வரி 2010 இல் ஒரே ஒரு பதிவுதான் எழுதியிருக்கிறார். ஆனால், நேரம் கிடைக்கும்போது பதிவுகளைத் தொடர்ந்து பின்னூட்டம் மட்டும் எழுதுகிறார் என்று தெரிகிறது!

அப்பப்ப கொஞ்சம் பதிவுகளும்  எழுதுங்க ஈஸ்வரி!

******
தமிழன் பத்துப்பாட்டும் பதிற்றுப்பத்தும் பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டும் தமிழ் செம்மொழியாகி விடுமா என்ன? 

இது குத்துப்பாட்டு காலமில்லையோ? திடீரென்று இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டது!


பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்தால், தர்பாரைக் கூட்டலாம்! என்னை மாதிரி சாமானியர்களுக்கு, கூகிளைத் தவிர வேறு கதி...?! கூகிள் ஆண்டவர் தேடினவுடன் கிராக்கி பண்ணிக் கொள்ளாமல் ஒரு செமையான குத்துப் பாட்டைக் காண்பித்தார்!


மானாட மயிலாடக் குத்துப் பாட்டில் காலத்தைக் கழிக்கும் தமிழன், செம்மொழியை இதை விட சம்மு சம்மு சம்மிக்  குத்த முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது!


என்ன சொல்கிறீர்கள்?



 

தலைப்புச் செய்திகள்! கொஞ்சம் சிரிக்க..நிறையக் கொதிக்க!

பாதுஷா கனவுகள், சந்தேகத்தில் நேற்றைய பொழுது போனபடியால், வெள்ளிக்கிழமைக் கேள்விகள் இன்று சனிக்கிழமைக்கு மாறி விட்டன! ஸ்ரீராம் வந்து மாற்றம் தொடருமா என்று கேட்பதற்கு முன்னாலேயே, அப்படி எந்த உத்தரவாதமும் இல்லை என்று சொல்லிவிடுகிறேன்.

பதிவுகள், கேள்விகள், அல்லது பதில்கள் என்பவை அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளால்  ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்தவை!செய்திகளும் அதன் தாக்கங்களும்  மாறிக் கொண்டே இருக்கும்! சூரியக் குடும்ப டிவி மாதிரி அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு நித்தியானந்தாவைத் துவைத்துக் கொண்டே பிழைப்பை ஓட்ட முடியாது இல்லையா!

முதல் கேள்வி, கேள்விப்பட்டதே இல்லையே!?

ஒரு கட்சித் தலைவர், தன்னுடைய மாநிலக் கட்சி அலுவலகத்திற்கு வருவது அதிசயமா  என்ன?  காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அப்படித்தான்!

உலகமகா அதிசயங்களில், அல்லது ஆச்சரியங்களில் இதையும் சேர்த்துவிடலாம் போல இருக்கிறது! புதிய தலைமைச் செயலக திறப்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டு, அப்படியே காங்கிரஸ் சரித்திரத்தில் ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக இல்லாத பழக்கமாக, சோனியா காண்டி, சத்தியமூர்த்தி பவனுக்கும் வருகிறாராம்! 1956 ஆம் ஆண்டுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் எவருமே  எவருமே சத்தியமூர்த்தி பவனுக்குள் எட்டிப் பார்த்ததே இல்லையாம்!முதன் முதலாக எட்டிப் பார்த்த வாரிசு, ராகுல் காண்டி, இப்போது சோனியா!  சத்தியம் என்றால் அவ்வளவு பிரியம் போல இருக்கிறது!

கேள்வி இரண்டு! வருமா, வராதா?

இடுக்கண் வருங்கால் நகுக என்பதை யாரோ சோனியாவுக்கு விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள் போல! அம்மையார், திமுக உதவி இல்லை என்றால், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா சாத்தியமே ஆகியிருக்காது என்று போகிற போக்கில்  சிரிக்காமல் சொல்லியிருக்கிறார்! 


கூத்தாடிகள் சங்கம், கூட்டணிக் கொசுறுகள்  மாதிரி, தனியாகப் பாராட்டு விழா நடத்தி, மானாடவும் மயிலாடவும் விட்டு அப்புறம்  இதைச் சொல்லாமல் போனதற்காகவே முரசொலியில் ஒரு கண்டனக் கவிதையை விரைவில் எதிர்பார்க்கலாமா?
 


படம் பாருங்கள்! ரிப்பன் கத்தரிப்பது கூட ரிப்பனுக்கு வலிக்குமே என்று கவலைப் படுகிற மாதிரி இல்லை...? மன்மோகன் சிங் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறார். இப்போது மறுபடியும்! உள்ளூர் கோஷ்டிகள், வேட்டி கிழிப்பு கலாசார சங்கமம் நிகழ்ச்சியை நடத்தாமல் இருந்தால் சரி!

இன்றைய நகைச் சுவை!

" பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2010 ஆம் ஆண்டுக்கான "உலகின் சிறந்த ராஜ தந்திரி' என்ற விருதை அமெரிக்காவைச் சேர்ந்த கன்சைன்ஸ் அறக்கட்டளை வழங்குகிறது."

அமெரிக்கர்களுக்கு நகைச் சுவை உணர்வு கொஞ்சம் குரூரமாக இருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்!  

அவர்களால் பாராட்டப் படும் உலகின் தலைசிறந்த ........... யைப் பார்த்து இந்திய மக்கள் பெருமிதப் பட்டுக் கொள்ள முடியாது! நாளை மறுநாள், 15 ஆம் தேதி, அணுமின் நிலைய விபத்துக்கள், நஷ்ட ஈடு வரையறுக்கப் படும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இன்றைய ஹிந்து நாளிதழில் சர்ச்சைக்குரிய இந்த மசோதா முன்வரைவைப் பற்றிக் கொஞ்சம் விரிவான கண்ணோட்டத்தை பிரம்ம செலானி எழுதியிருக்கிறார். அதில் இருந்து........ 


"Under the Bill, the foreign reactor builder — however culpable it is for a nuclear accident — will be completely immune from any victim-initiated civil suit or criminal proceedings in an Indian court or in a court in its home country. The Bill actually turns the legal liability of a foreign reactor supplier for an accident into mere financial compensation — that too, pegged at a pittance and routed through the Indian state operator of the plant. Foreign suppliers will have no direct accident-related liability."

மூன்றாவது கேள்வி!
 
இப்படி ஒரு முட்டாள்தனமான சலுகை அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்காவிலேயே கிடைக்காது! இங்கே மட்டும் ஏன்? எதற்காக? 

கட்டுரை, அணுக் கதிரியக்கத்தின் அபாயத்தைச் சொல்லவில்லை! அதைவிட மோசமான, சட்ட வடிவத்தை, இங்கே ஆட்சி செய்பவர்கள்  இந்த நாட்டு மக்கள் மீது எப்படிப்பட்ட சுமையை, ஆபத்தை வலிந்து திணிக்கிறார்கள் என்பதை சொல்கிறது.அதைப் படித்துவிட்டு  வாசகர் கருத்தாக ஒன்று  இது-"நேற்று, யூனியன் கார்பைடு ஆண்டர்சன் சட்ட விரோதமாகத் தப்பித்ததை, இன்றைக்கு சட்டபூர்வமாகவே தப்பிக்க உதவுகிற சட்டம்" என்று இப்படிச் சொல்வதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! 
 
'What Anderson got away with illegally, we have successfully managed to legalize, it seems. In a country where the potential of wind energy generation is around 50,000 MW and that of solar photo-voltaics is around 20,000 MW, and we are not yet considering solar thermal energy which in India has a potential unlike anywhere in the world.'
from:  shirish joshi

இங்கே இந்தப் பக்கங்களில், உலகில் எங்குமில்லாத அதிசயமாக, அமெரிக்க பகாசுர நிறுவனங்களைக் காப்பாற்றும் அப்பட்டமான சட்டவரைவு இது என்பதைக் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். இங்கே அணுமின் நிலையங்களைக் குறித்த விவாதமோ, அதன் பாதுகாப்பு அம்சத்தை  இந்திய விஞ்ஞானிகள் அறியாதவர்கள் என்றோ சொல்லவில்லை. Accountability! பொறுப்பு! பொறுப்பிலிருந்து விடுவிக்கும் சட்டத்தை அவசர அவசரமாக முன்வைக்க வேண்டிய அவசியம் என்ன? கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன!

சில மர்ம முடிச்சுக்களை எப்போதும்போலக் காலமும் கடவுளும் தான் விடுவிக்கவேண்டும்! அப்போதும் கூடக் காங்கிரஸ் கட்சிக்கு முதுகெலும்பு, நேர்மை, சுதந்திரமான சிந்தனை இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!

அப்புறம், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை, அதில் உள் ஒதுக்கீடு  செய்யப் படாமல் இருப்பதால் தான் எதிர்க்கிறோம் என்று லொள்ளு மற்றும் தில்லு முல்லு யாதவ்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வது, முஸ்லிம் பெண்களுக்குத் தனியாக உள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமாம்! சிறுபான்மை இனத்தவரின் தனிப்பெரும் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் நாடகம் இது என்பது இங்கே அரசியலில் அ'னா, ஆவன்னா தெரிந்த சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும்!

ஒரு செய்தியைச் சொன்னால்  ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பது, கேள்வியை மறுபடி கேட்டால் மூன்று கூட இல்லை இரண்டே முக்கால் தான் என்று சொல்வது பாலைவனங்களில் வேண்டுமானால், சரியாக இருப்பது போல பர்தா போட்டு மூடி வைத்துவிடலாம்.. 


இந்தியா மாதிரிப் பன்முகம், பலமொழி, பல இனத்தவர் கூடி வாழும் நாட்டில் எடுபடாது. என்பது  அ. மு. செய்து$  மாதிரிப் பதிவர்களுக்கெல்லாம் தெரியுமா தெரியாதா என்று தான்  தெரியவில்லை! சில இஸ்லாமிய மத குருமாக்கள் பெண்கள் இட ஒதுக்கீடு அனாவசியம் என்று சொல்வதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.பெண்களைக் குறித்து அவர்களால் இப்படிக் குறுகிய பார்வையில் தான் பார்க்க முடியும் என்பதை அப்பட்டமாகச் சொல்லும் செய்தி இது.
 .

சால்வை அழகர் பானா சீனா பதவியை விட்டு இறங்கினால், பட்டிமன்றப் பேச்சாளராக வருவார் என்று நம்புகிற அளவுக்கு இந்த செய்தி இருக்கிறது!

இந்த மாதிரி ஒரு மந்திரியை என்ன பாவம் செய்து பெற்றோம் என்று வாக்களித்தவர்கள் கேட்க வேண்டிய நேரம் இது!

"ஜிகாதியை விட மோசம் நக்சல்': ""மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கத் தேவையான அளவுக்கு படைகளை பயன்படுத்த, மத்திய அரசுக்கு தார்மீக உரிமையுண்டு. மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டால் மட்டுமே அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்,'' என அமைச்சர் சிதம்பரம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ஜிகாதி பயங்கரவாதத்தை விட மோசமானது நக்சல் பயங்கரவாதம். இந்த அரசின் பதவிக்காலம் முடிவதற்குள் மாவோயிஸ்ட்கள் ஒடுக்கப்படுவர். மாவோயிஸ்ட்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். இந்தியாவுக்கு எதிராக போரை அறிவித்துள்ளனர். ஏழைகள் அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதை, அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவதை மாவோயிஸ்ட்கள் விரும்புவதில்லை. அதே நேரத்தில், எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கும் வகையில், நமது பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்."

சால்வை அழகர் பானா சீனாவுக்கு இந்த தேசத்தின் ஏழை மக்கள் மீது தான் எவ்வளவு அக்கறை! எவ்வளவு அக்கறை!! அவர்கள் விடுதலையில் தான் எத்தனை பொறுப்பு! இதைக் கேள்வியாக எடுத்துக் கொண்டாலும் சரி, பாராட்டி சால்வை அணிவிப்பது மாதிரி எடுத்துக் கொண்டாலும் சரி, உங்கள் இஷ்டம்!

பதிவிலும் கூட மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன?

Guest post எழுதித்தர முன்வருகிற மகளிர் வாசகர்யாராவது தயாராக இருந்தால்,  பின்னூட்டத்தில் தன்னுடைய மின்னஞ்சலுடன் தகவல் சொல்லலாம்! இப்போதைக்கு மம்தா பானர்ஜி குறித்த ஒரு செய்தி மட்டும்!

"தனியாரை துணைக்குச் சேர்ப்பதால், ரயில்வே துறைக்கு லாபம் குறையுமே தவிர, அதிகரிக்காது. கட்டணம் அதிகம் என்பதால் பணக்காரர்கள் மட்டுமே இந்த சிறந்த சேவைகளைப் பெறுவார்கள். ஏழைகளுக்கு தற்போது இருக்கும் சேவைகளும் இல்லாமல் போய்விடும்.அரசு தனியார் பங்கேற்பு என்பது, கிராமத்து பாணியில் சொல்வதென்றால், அரிசியை நீ கொண்டு வா, உமியை நான் கொண்டு வருகிறேன். இருவரும் ஊதித் தின்னலாம் என்கிற கதைதான்! " இங்கே பொதுத்துறை, கூட்டு முயற்சி எந்த லட்சணத்தில் என்பதை முத்தாய்ப்பாக முடிப்பது தினமணியின் தனி முத்திரை!

தினமணியின் தலையங்கம்! எப்போதும் போல சிந்திக்க வைக்கிற மாதிரி, நேர்மையோடு எழுதப்பட்ட தலையங்கம். சிந்திக்க முடிந்தவர்கள், என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பின்னூட்டத்தில் நாலுவார்த்தை சொல்லுங்கள்!




இன்னும் கொஞ்சம் சிரிக்க! கூடவே கொதிக்க....!

அதென்னமோ தெரியலீங்க! 

கொஞ்சம் விவகாரமான பதிவு இருந்தாத் தான் மொத்தமா வந்து படிப்போம்னுட்டு எல்லா வாசகப் பெருமக்களும் கங்கணம் கட்டித் திரியற மாதிரித் தான், ஒரு அம்மணி குடிச்சுட்டு ப்ளாட்டாக் கிடந்தபோது, ஒரு நாய் வந்து நம்ம உலக மகா டாக்டர் மாதிரி ரசிச்சு நிதானமா பிரெஞ்சு கிஸ் அடிச்ச பதிவைத் தான் ரொம்பப் பேரு, ரொம்ப நேரம் வந்து பாத்த மாதிரித் தகவல் சொல்லுதுங்க!

முத்தம்னாலே ஒவ்வொருவருக்கும் கற்பனை சும்மாப் பிச்சுக் கிட்டுப் போகுமில்லையா!

இங்க பாருங்க!


சாங் சியாங் சிங் என்ற சீனக் கலைஞர் பீங்கானில் வடிவமைத்த காப்பி-தேநீர் முத்தம்!

காப்பியும் டீயும் கலந்தாக் கண்றாவியா இல்ல இருக்கும் என்று சொல்பவர்களுக்கு- உங்களுக்கு ரசனையே இல்லை! அம்புட்டுத்தேன்!!

முத்தம் கொடுக்கிறதே ஒரு அறிவியல் கூறாம்! அதுக்கு ஒரு காலரி வேறு! உங்க கிட்டே சுவாரசியமான படம், அல்லது கலைப் படைப்பு இருந்தா அனுப்புங்கன்னு கேக்கறாங்க!

******

அம்மிணிங்க இருக்கட்டும், நம்ம  அய்யாக்கமாருங்க என்ன செய்வாங்கன்னு எல்லோருக்குமே தெரியும்! 

டாஸ்மாக் வாசலில் இருந்து வீடு வந்து சேர்ற வரை என்னென்ன அலப்பறை எல்லாம் செய்வாங்கன்னு தெரியும்! 

தத்துவம் வரும், கவிதை வரும், மூக்கில் குத்தும் விழும்! அனுதாபப் பதிவுகள் வரும்! இது இது இதைத்தானே எதிர்பார்த்துக் காத்துக் கிட்டே இருந்தேன்னுட்டு சும்மாப் பின்னூட்டங்கள் பிச்சுக் கிட்டுக்கிளம்பும்! 

கொஞ்சம் ஜீரோ டிகிரிக்குப் போனாக்க, என் நாய்க்குத் தச்சி மம்மு ஒத்துக்காதே, என்கிட்டே காசு எட்டுப் பைசாத் தானே இருக்குன்னெல்லாம் அலம்பும். 

ஆனாக்க இந்த அய்யா மாதிரி, ஒருத்தருமே செஞ்சிருக்க முடியாதுங்கோ!

கீழே உள்ள சுட்டியில் பார்க்கலாம்! கோப்புப் கொஞ்சம் பெரிது!

கையில பீர் பாட்டில் இருந்தாக்கப் பன்னி மேல கூட சவாரி செய்யலாம்னு இதைப் பாத்தப்புறம் தானே தெரிஞ்சது!
பீருக்கே இந்தப்பாடுன்னா ரெண்டு ஷாட் டகீலாவுக்கு....?

******

ஐ பாட் மார்க்கெட்டுக்கு இன்னமும் வரவில்லை! அதற்குள், அது இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என்று ஏகப்பட்ட பதிவுகள், எதிர்ப்புக்கள்! தங்களுடைய தயாரிப்பை  வெறுப்பவர்களாலேயே  அதிகம் விளம்பரப் படுத்தப் படுகிற ஒரே நிறுவனம் ஆப்பிளாகத் தான் இருக்கும்! 

டிசைன் ஆப்பிளின் தனி ஸ்பெஷாலிடி என்றால், இந்த எதிர்ப்பு விளம்பரங்கள் ஆப்பிளின் கூடுதல்பலம்!  


இது காமெடி டைம்! காங்கிரஸ் சானலில்!


பார்ப்பதற்கு அப்பாவியாக, ஐயோ பாவமே என்று தோன்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூட சிரிக்காமலேயே, அடுத்தடுத்து இரண்டு காமெடி ஷோ நடத்தியிருக்கிறார்! முதலாவது, தெலங்கானா பற்றியது! மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு தெலங்கானா மாநிலம் அமைப்பதில் கருத்தொற்றுமை ஏற்படும் வரை பொறுத்திருப்போம், அவசரப்பட மாட்டோம்  என்று உறுதி அளித்திருக்கிறாராம்!

ஜோக்கு! இது முதல் ஜோக்கு!

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியப்படி கருத்தொற்றுமை என்றால் என்ன என்று அவருக்கு மறந்துபோயிருக்கக் கூடும்! அல்லது பயத்தில் மன்மோகன் சிங் கண்ணை இறுக்க மூடிக் கொண்டிருந்திருக்கலாம்! இங்கே சென்னை சத்தியமூர்த்தி பவனில்,வேட்டியைக் கிழித்துக் கொண்டு, நாற்காலி வீசி அடிதடியில் கடைசியாக 'மேலிடம்' வந்து ஏற்படுத்தும் கருத்தொற்றுமை பற்றி எல்லோருக்குமே நன்றாகத் தெரியும்!

அடுத்த ஜோக்கு! இதை  எப்படி சிரிக்காமல் சொன்னார் என்பதற்காகவே மன்மோகன் சிங்குக்கும், ஏதோ சங்கங்கள் எல்லாம் சேர்ந்து சமாளிப்புத் தலைமகன், ஜோக் ஜுஜூபி விருதுகளை கொடுத்திருக்கலாம்!

வி பி சிங்குக்கு கிடைத்த மாதிரி இந்த சிங்குக்கும்...!

கூட்டணி தர்மம், குறைந்த பட்ச செயல் திட்டம் என்று காங்கிரசுக்கும் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கிற மாதிரி, கழகங்கள் இந்த வித்தையைக் காங்கிரசுக்கும் சொல்லித் தரக்கூடாதோ!

"காங்கிரசால் மட்டுமே சவால்களை எதிர்கொள்ள முடியும்!"

இப்படி, அடுத்துச் சொன்னது தான், ஜோக்கா, சாபமா என்று புரியவில்லை!  காங்கிரஸ் பிரதமர் நன்றாகவே குழப்பி விட்டார்! தேசத்தின் தலைவிதி காங்கிரசோடு  பின்னிப்  பிணைந்து இருக்கிறதாம்! 

ஆண்டவனே காப்பாத்து!

காங்கிரசைத் தொட்டுப் பதிவுகள் எழுதுவதில் எனக்கு அவ்வளவு விருப்பமில்லை என்றாலுமே கூட, ஒரு தலைமை, நிர்வாகம் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது, செயல்படக் கூடாது என்பதில், காங்கிரஸ் கட்சி எப்போதுமே ஒரு சிறந்த உதாரணம். அதனால் தான் காங்கிரஸ் கலாசாரத்தை வைத்து  எதை எதையெல்லாம் கற்றுக் கொள்ளக் கூடாது, எதெல்லாம் தவிர்க்கப் படவேண்டியது என்பதை இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்!

Consensus! கருத்தொற்றுமை!

டோனி மோர்கன் என்ற பதிவரை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம்! இவருடைய பதிவுகள், பெரும்பாலானவை, கிறித்தவ சர்ச்சுக்களின் நிர்வாகம், நிதி, இயக்கம் சார்ந்தவை, சர்ச்சுக்களால்  ஸ்பான்சர் செய்யப் படுபவை  என்றாலுமே கூட, சில பதிவுகள், நிர்வாகம், மேலாண்மை, குறித்த விஷயங்களில் பொருந்தியும், சிந்திக்கத் தூண்டுபவையாகவும் இருக்கிறது.

இந்தக் கருத்தொற்றுமை என்ற வார்த்தையையே ரொம்பக் கெட்ட வார்த்தையாகப் பார்க்கும் விதத்தில், இவர் எழுதிய ஒரு பதிவு ஒன்றைப் படித்து விட்டு, நாட்டு நடப்பு, உலக நடப்போடு பொருந்தி வருகிறதா என்று பார்த்தபோது தான், மன்மோகன் சிங் பேசினது செம காமெடியாக இருந்தது.

எப்படி என்பதைப் பார்ப்போமா? டோனி மோர்கன், இந்தக் கருத்தொற்றுமை என்பது வெறும் கேலிக் கூத்து என்பதைக் குறைந்தது ஐந்து காரணங்களை வைத்தாவது சொல்லிவிட முடியும் என்கிறார். ஒவ்வொன்றாக, நம்முடைய சூழ்நிலைக்குப் பொருந்துகிற விதத்தில், அரசியலை அல்ல, நிர்வாகம், மேலாண்மை, தலைமைப் பண்பு, இந்தத் தலைப்புக்களை மையப்படுத்தி மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாமல், பார்க்கலாமா?

கற்றுக் கொள்வதில் இரண்டு விதம், ஒன்று நம்முடைய சொந்த அனுபவங்களில் இருந்து. இரண்டாவது, அடுத்தவருடைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்வது. இதுவும் இரண்டு விதமாகப் பிரிந்து, எப்படி சரியாகச் செய்வது என்பதாகவும், எப்படிச் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதாகவும் இருக்கும் இல்லையா?!


கருத்தொற்றுமை ஏற்பட சில அடிப்படைத் தேவைகள்! விதங்கள்!
கருத்தொற்றுமை என்பது அர்த்தமே இல்லாத வெற்று வார்த்தை! எப்படி என்றால்,

முதலாவதாக, கருத்தொற்றுமை என்ற வார்த்தை, குறிப்பிட்ட ஒரு தருணத்துச் சூழ்நிலையோடு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.. மாற்றம் என்பது  ஒரு பக்குவ நிலை, அதற்குத் தயாராக இருக்கும் தைரியம் எல்லோருக்குமே இருப்பதில்லை. கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே, மாற்றத்திற்குத் தயாராக இருப்பவர்கள், இல்லாதவர்கள் இரண்டு தரப்பையும் ஒன்றாக உட்கார்த்தி வைக்கும்போதே, தேக்க நிலை வந்து விடுகிறது. Status Quo என்றபடிக்கு எப்படி இருந்ததோ அதே பழைய நிலையிலேயே நிற்றல் என்பது, கருத்தொற்றுமை என்பதன் முதல் கோணலாக, அவலட்சணமாக இருக்கிறது. 

இரண்டாவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும்போதே, அங்கே எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகி சந்தைக் கடை மாதிரி இரைச்சலும், கூச்சலுமாகிப் போய் விடுகிறது. தரங்கெட்ட விஷயங்களும், எதிர்மறையான போக்குகளும், கெட்ட எண்ணம் உடையவர்களுமே கூட சம வாய்ப்பு என்ற சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து, உண்மையான குறிக்கோளை எட்ட விடாமல் செய்துவிடுகிற வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது.

மூன்றாவதாக, தைரியமான முடிவுகளை, விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் எடுபடாமல் போய்விடுகிறது. நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைப் பேச முடியாமலேயே போய்விடுகிறது. நடுநிலை என்பது ஆகச் சிறந்தது எது என்று சீர்தூக்கிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது என்பதற்குப் பதிலாக, மதில் மேல் பூனை மாதிரி ரெண்டுங் கெட்டானான  நிலையை எடுப்பது தான் என்றாகிப் போய்விடுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம், இங்கே மதச் சார்பின்மை-செக்குலரிசம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கும் விதம்!

நான்காவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்யும் முனைப்பு, பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே வளர்த்துக் கொண்டிருப்பதாக மாறிப்போய் விடுகிறது. ரு ஆரோக்கியமான விவாதம், அழுத்தமான கருத்தைப் பேசினால், எங்கே மற்ற தரப்பு விறைத்துக் கொள்ளுமோ என்ற பயத்தில், நடக்காமலேயே தவிர்க்கப் படுகிறது. அந்த நேரத்துக்கு, இரண்டு தரப்பையும் சமாதானமாகப் போகும்படிக்  கெஞ்சலாக,  விரிசலை பெயின்ட் அடித்து மறைத்துவிடலாம் என்கிற மாதிரியானதாக, நின்று விடுகிறது.

ஐந்தாவதாக,கருத்தொற்றுமை என்கிற பெயரில், இப்போதிருக்கும் நிலையை விட உயரத் தவிக்கும் கனவுகளின் சிறகுகளை முறிப்பதாக மட்டுமே நடக்கிறது. கொஞ்சம் வித்தியாசமாக, ஆக்கபூர்வமாகச் சிந்திக்க முற்படுபவர்களை, கூட்டத்தோடு கோவிந்தா என்று போய்விடும்படி வற்புறுத்துகிறது. மறுப்பவர்களை வலுக்கட்டாயமாகப்  பேசாமல் இருக்கும்படி மிரட்டுகிற கட்டப்பஞ்சாயத்தாகவுமே பெரும்பாலான சமயங்களில் மாறிவிடுகிறது.

அரசியலாகட்டும், அல்லது பணிபுரியும் இடமாக இருக்கட்டும்! கருத்தொற்றுமை என்பது எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்! தேக்கமடைந்து விடுவதை உங்கள் மீது திணிக்கிறதா? எதில் கருத்தொற்றுமை அவசியம் என்பதை விட்டு விலகி, சம்பந்தமே இல்லாமல், சந்தைக் கடையாகவும், சண்டைக்களமாகவும் ஆகி விடுகிறதா? மிகச் சொற்பமான அளவிலேயே சொல்லப் பட்டாலும், சொல்வதன் உண்மையை ஏற்றுக் கொள்ள முடிகிறதா, அல்லது கும்பலாகக் கூச்சல் போட்டே நல்ல விஷயம் கூட அம்பலமேறாமல் போய் விடுகிறதா? கூட்டமாகச் சொல்வது தான் சரி, அது சரி அது சரி என்று தலையாட்டிப் பொம்மைகளாக்குகிறதா அல்லது, தீர்க்கமாகச் சிந்திக்க இடம் இருக்கிறதா?

இந்த ஐந்து காரணங்கள் அத்தனையும்உங்களுடைய அனுபவத்தில், யோசித்ததில்  பொருந்துகிறதா? கூடுகிறதா? குறைகிறதா?

உங்களுடைய  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கேட்போம்!



இங்கே பொய்யே வேதமுன்னு ஆச்சு!

 சிரிப்புப் படம்! கருத்துப் படமும் கூட!

"ரஜினியும் கமலும் என்றைக்கும் சிறந்த நடிகர்கள்தான்!"

"இந்த நிகழ்ச்சியிலே ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் என்பதற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கிய காரணத்தால் தான் அவர் சிறந்த நடிகர் என்பதல்ல. என்றைக்கும் அவர் சிறந்த நடிகர் தான். அதைப் போல கமல்ஹாசனுக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. என்றைக்கும் அவர் சிறந்த நடிகர்தான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்- எனக்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது வழங்கப்படாவிட்டாலும், நான் சிறந்த உரையாடல் ஆசிரியர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்."

இது உளியின் ஓசை திரைப்படத்திற்குச் சிறந்த திரைக்கதை வசனகர்த்தா என்ற பட்டத்தை திரையுலகின் சார்பில் இருவரும் வழங்கியபோது, தமிழ்நாட்டு முதல் அமைச்சர் செய்த எதிர் மரியாதை!

அந்நியன் படத்தில், பிரகாஷ்ராஜும், விக்ரமும் சேர்ந்து கலக்கிய காட்சி ஒன்று

போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் விக்ரம் சாது அம்பியாகவும், அந்நியனாகவும், மாறி மாறி முகபாவங்களைக் காட்டி கெஞ்சி, மிஞ்சி, மிரட்டி நடிக்கும் போது பிரகாஷ் ராஜ் பேசுகிற வசனம், "நான் எம்ஜியார் நடிச்சுப் பாத்திருக்கேன், சிவாஜி நடிச்சுப் பாத்திருக்கேன்......உன்னை மாதிரி ஒருத்தனை இது வரை பார்த்ததே இல்லை!!" என்ற மாதிரி வியந்து அல்லது பயந்து பேசுகிற மாதிரி வருமே, நினைவுக்கு வருகிறதா?

தொழிலில் எப்படியோ, ஆனால், மேலே உள்ள ஒரு படம் போதும், ரஜனியும், கமலும் சிறந்த நடிகர்கள் தான் என்று சொல்வதற்கு!  என்ன பவ்யமாக மண்டியிட்டு, சிறந்த வசனகர்த்தா விருதை வழங்கியிருக்கிறார்கள் பாருங்கள்! எப்படி சிரிக்காமல் சமாளித்து நடித்தார்கள் என்பதை வியக்காமல் இருக்கமுடியவில்லை!

போதாக்குறைக்கு, கவிதைக்குப் பொய் மட்டுமே அழகு என்று முடிவு செய்துவிட்ட ஒருவரும், சின்னக் கலைவாணர் என்று டைட்டில் கார்ட் போட்டுக் கொண்டு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனை அவமதித்துக் கொண்டிருக்கிற ஒருவரும், ஆக எல்லோருமே பொய் சொல்லப் போறோம் என்று போஸ் கொடுத்துச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதை, இன்றைய தமாஷாக!

oooOooo 

சென்ற ஆண்டு, அமெரிக்காவில் நிதித்துறை சீரழிந்து, பல லட்சக்கணக்கான மக்களை, வீடிழந்தவர்களாக ஆக்கிய Sub Prime Crisis பற்றிக் கொஞ்சம் பேசியிருக்கிறோம். கீழே இருக்கிற இந்த இரண்டு வீடியோ விளக்கங்களைக்  கொஞ்சம் பாருங்கள். பிரச்சினையைக் கொஞ்சம் எளிமையாக விளக்க முயன்றிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் தான்!தமிழில் டப் செய்து வெளியிடும் அளவுக்கு, தொழில்நுட்ப ஞானமில்லை, பொறுத்துக் கொள்ளுங்கள்!


இந்த எளிமையான விளக்கம்  ஏமாந்த, அல்லது பிரச்சினை என்னவென்றே புரிந்துகொள்ள முடியாத அமெரிக்கர்களுக்கு! இதுவும் சில அடிப்படைகளை, அமெரிக்க நிதித்துறை எப்படி இயங்குகிறது, எப்படி இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்பதையும் சொல்கிறது. இங்கே இந்திய வங்கிகள் இயங்குகிற அல்லது ஆட்டுவிக்கப் படுகிற விதமே வேறு! அதனால் தான், அமெரிக்கா ஆடிக் கொண்டிருந்த போது, நாங்கள் வலுவாக இருந்தோம் என்று சொல்லிக் கொள்ள முடிந்தது. அதையுமே கொஞ்சம் கொஞ்சமாகப்பார்க்கலாம்.

அமெரிக்கா சந்தித்த நிதித்துறைப்  பிரச்சினையை வேறு கோணங்களில் இருந்தும் பார்த்தால் தான், ஆக்டோபஸ் பிடியில் சிக்கின மாதிரி, உலகப் பொருளாதாரம் ஒவ்வொன்றும் இந்தச் சரிவில் சிக்கியிருப்பதையும், தீர்வு அவ்வளவு எளிமையானது அல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

துபாய் உலகம் கவிழ்ந்ததற்குப் பின்னாலும், அமெரிக்க முதலீடுகள், முந்தைய காலத்தில்  வந்தது போல வரவில்லை என்பதும், ரியல் எஸ்டேட் விலைகள் சரிந்தது, வாங்குவார் இல்லாமல் போனது என்று சில அம்சங்கள் பொதுவாக இருந்தாலும் கூட, மோசமான நிர்வாகம், ஒளித்து மறைத்துவைக்கப்பட்ட கணக்கிடும் முறைகள் இவைகளே பெரும் காரணமாக இருந்தன என்று சில தகவல்களில் இருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.

தொடர்ந்து பேசுவோம்!


 

என் கேள்விக்கென்ன பதில் ?


ஒரு ஒட்டகம். பக்கத்தில் அதன் குட்டி.

குட்டி தாயிடம்  கேட்டது."அம்மா, எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன, கேட்டால் சொல்வாயா?"

தாய் சொன்னது :"தாராளமாகக் கேள்! தெரிந்ததைச் சொல்கிறேன்!"

"நமக்கு என் முதுகில் இவ்வளவு பெரிய திமில் இருக்கிறது?"




"நாமெல்லாம், பாலைவனத்தில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லவா? அதனால், நமக்குத் தேவைப் படும் தண்ணீரை, நம் உடலிலேயே சேர்த்து வைத்துக் கொள்வதற்காக திமில் இருக்கிறது."

"சரி அம்மா! அப்புறம் ஏன் நமக்கு மட்டும் உயரமான கால்கள், அகலமான குளம்புகள் என்று இப்படி கொஞ்சம் வித்தியாசமாகவே  இருக்கிறது?"




"நல்ல கேள்வி! இப்படி கால்கள் உயரமாகவும், குளம்புகளும்  இருப்பதால் தான் மணற்பாங்கான பாலைவனத்தில், நம்மால் வேறு எவரை விடவும் வேகமாக ஓட முடிகிறது!"

"சரிதான்! அப்புறம் இந்தக் கண்ணிமைகள் இவ்வளவு பெரிதாக, முடிகளோடு இருக்கிறது? சமயங்களில், சரியாகப் பார்க்கக் கூட முடிவதில்லையே?"




"என் செல்லமே! இது கேள்விகள் வாரமா?   கண் இமைகள் பெரிதாகவும், முடிகளோடும் இருப்பதனால் தான், பாலைவனத்தில் அவ்வப்போது ஏற்படும் மணல் சூறாவளியில், கண்களில் மண் விழுந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது?"

" அம்மா!நான் புரிந்து கொண்டது சரிதானா என்று சொல்! திமில்கள் இருப்பது, பாலைவனத்தில் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்வதற்காக. சரிதானா?"

"ஆமாம் செல்லம்!"

"உயரமான கால்கள், வித்தியாசமான குளம்புகள், பாலைவனத்தில் மண் பரப்பில் வேகமாக ஓடுவதற்காக! சரிதானா?"

"சரிதாண்டா செல்லம்!"

"கண் இமைகள் பெரிதாக, முடிகளோடு, கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரி இருந்தால் கூட, அதுவுமே பாலைவனத்தில் அடிக்கடி ஏற்படும் மணல் சூறாவளியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்! அப்படித்தானே?"

"ஆமாண்டா ராசா!"




"அப்புறம்  எதற்காக நம்மை மீனாட்சி கோவில் திருவிழாக்களில் கலர்த் துணி எல்லாம் போர்த்தி, முன்னால் இழுத்துச் செல்கிறார்கள்? பாலைவன ஒட்டகங்களுக்கும், மீனாட்சி கோவில் திருவிழாவுக்கும் என்ன சம்பந்தம்?"

" இப்படியே போனால், மதுரையும் ஒருநாள் பாலைவனமாகிவிடும் என்பதை மதுரைமாநகர ஜனங்களுக்கு சிம்பாலிக்காகச் சொல்வதற்காகக் கூட இருக்கலாம்டா செல்லம்!"

"அம்மா! இன்னும் ஒரு கேள்வி!"

"கேளடா செல்லம்!"

"கோவில் திருவிழா  ஒட்டகம் முன்னால் வர மதுரையில் தான் சரி! அப்புறம் ஏன் நம் சகோதரர்களை காட்சிப் பொருளாக, மிருகக் காட்சி சாலைகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள்  ?"




"இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் நாம் ஒட்டகங்களாகப் பிறந்திருக்கவே மாட்டோமாடா செல்லம்! மனிதர்களாகப் பிறந்திருப்போம்!"

"அப்படியா சொல்கிறாய் அம்மா! இந்த மனிதர்கள் இருக்கிறார்களே, இவர்கள் தங்களை மூளைக் காரர்கள், ஆறறிவு படைத்தவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களே! அது உணமைதானா?"




"மூளை என்று ஒரு உறுப்பு மனிதர்களிடம் இருக்கிறது! ஆனால்,அதைப் பயன்படுத்துவதே இல்லை! கைகால்களில் உழைக்கத் தெம்பும் இருக்கிறது!

உழைக்கத் தேவையே இல்லை,  நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து இலவசங்களால் நிரப்புவோம் என்று சொல்பவர்களிடம் மயங்கி, இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். தொலைக் காட்சி என்று ஒன்று இருக்கிறதாம்! அதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அறிவு சுத்தமாகவே மழுங்கிவிடும் என்று கூடச் சொல்கிறார்கள்!"


"அம்மா! ...."

"போதுமடா செல்லம்! வியாதிகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது கூட, வியாதிகளுக்கு நாம் கொடுக்கும் வரவேற்பாக ஆகிவிடக் கூடும்! உருப்படியான நல்ல விஷயங்களை பேசலாமடா ராசா!"

இப்போதைக்கு இது போதும்!-பகுதி 2


இப்போதைக்கு இது போதும் - இன்ஸ்டால்மெண்டு 1
இப்போதைக்கு இது போதும் - இன்ஸ்டால்மென்டு 2

"ஏதோ வலைப் பதிவுகளைத் திரட்டுற திரட்டிகளைப் பத்திக் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்த மாதிரி இருந்ததே! அதுக்காக இரண்டு திரட்டிகளில் கூட இணைஞ்ச மாதிரி இருந்ததே? புதிதாக ஏதாவது தெரிஞ்சதா, இல்லை, எல்லோரும் பாடும் பதிவுப் பாட்டுத்தானா?"

புள்ளிராஜா வங்கி தந்த புள்ளிவிவரச் சிங்கம், புள்ளி வைத்தவுடனேயோ, வைப்பதற்கு முன்னாலேயோ, புள்ளிக்கே புள்ளி வருமா, எப்பெப்போ என்னென்ன கலர்களில் வரும் என்பதையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கும் நண்பர், இன்றைக்கு என்னவோ நேரடியாகவே, விஷயத்திற்கு வந்து விட்டார்.

"அது என்ன பதிவுப் பாட்டு? பதியாதபாட்டு??" என்றேன் நான். வந்ததும் வராததுமாக புள்ளிவிவரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. எதற்கு வம்பு?

"எந்த ஒலகத்துல இருக்கே நீ? சினிமாவெல்லாம்பாக்குறதே இல்லையா?"
நண்பர்
கொஞ்சம் அதிர்ச்சியுடனேயே கேட்ட மாதிரி இருந்தது.அவர் நினைத்த உலகத்தில் இல்லாமல் போய்விட்டால், அப்புறம் யாரிடம் புள்ளிவிவர மூட்டையை அவிழ்த்து விடுவது என்று பயத்துடனேயே கேட்ட மாதிரியும் இருந்தது.

"அதுதான் நிறைய சினிமாவுல கதாநாயகன் குடும்பத்துக்கு மட்டும்னு ஒரு குடும்பப் பாட்டு இருக்கும், காணாமப் போனவுங்க, இங்க ஒத்தர் அண்ணா சாலையில அந்தப் பாட்டபடிச்சாருன்னா, அமெரிக்காவுல இருக்குற இன்னொருத்தர் அதைக் கேட்டு "அண்ணா"ன்னு ஓடிவந்து கட்டிப் புடிச்சுச் சேந்துக்குவாங்களே ....அந்தமாதிரி, ஏதோ ஒரு திரட்டியில, ஒருத்தரோட பதிவுக்கு முக்கியத்துவம் கிடைக்கலைன்னாலும், அல்லது வேறு யாரோட பதிவுக்கு ரொம்ப முக்கியத்துவம் கிடைச்சாலும், தன்னோட பதிவுல ஒரு பாட்டுப் படிப்பாங்களே, அது தான் பதிவுப் பாட்டு! இதுகூடத் தெரியாம, நீங்க எல்லாம் என்ன பதிவு போடறீங்க, என்னத்த எழுதறீங்க?"

நண்பரை மேலும் பேச விட்டால் நக்கல் கொஞ்சம் அதிகமாகி விடும் என்பது தெரியும், இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? விதி வலியது என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம் என்றால், நண்பர் விடுவதாகவே இல்லை.

லாப்டாப்பை எடுத்துக் கொண்டார். கணக்குப் போட ஆரம்பித்தார். சரி இன்னைக்கும் கிளிஞ்சது கிருஷ்ணகிரின்னு வாயை மூடிக் கொண்டு நண்பர் உதிர்க்கப் போகும் புள்ளி விவரத்தை பயபக்தியுடன் கேட்பது போல பாவனை செய்யக் கஷ்டப்பட்டு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

"அது ஏன் எப்பவுமே கிருஷ்ணகிரியே கிளிஞ்சிட்டிருக்கனும்னு தானே நினைக்கிறே? வேற ஊர் எதுவும் மாட்டலையானும் நினைக்கிற இல்லே?"

எதுவோ முன்னால போனாக் கடிக்கும், பின்னால வந்தா உதைக்கும்னு சொல்வாங்க இல்லையா?அதேமாதிரித் தான், இந்தப் புள்ளி விவர ஆசாமிங்களும்னு தெரியும். வெளியில சொல்லிற முடியுமா? பாருங்க! ஏறின விலைவாசி அப்படியே ஏறினபடிக்கே இருக்கும், ஆனாக்க நம்ம அரசாங்கம் வெளியிடுற புள்ளிவிவரம் பாத்தாக்க, பண வீக்கம் கொறஞ்சுகிட்டே இருக்கும், ஆனாக்க விலைவாசிப் புள்ளி கூடுற மாதிரிக் கூடி, அப்புறம் கொறயும்!

எல்லாம் அந்தப் புள்ளிவிவரத்தோட மகிமை அது!
புள்ளிவிவரமும் கூடக் கடவுள் மாதிரி! மணியாட்டிக் கற்பூரம் காட்டி இருக்குங்கிற மாதிரியும் காட்டலாம்! இல்லேன்னாக்கப் பகுத்தறிவுப் பகலவனாகி, கிளிப்பிள்ளை மாதிரி இல்லை இல்லைன்னு சொல்லிக் கிட்டே இருந்தாக்க, இல்லைன்னும் ஆக்கிப்புடலாம்!!


இதுனாலதான், புள்ளிராஜா வங்கியில, தினப்படி, வாராந்திர, மாதாந்திர, அப்புறம் நிமிஷத்துக்கொரு தரம் ஸ்டேட்மென்ட் போடற வேலையை அவ்வளவு பயபக்தியோட, எவ்வளவு தப்பாச் செய்ய முடியுமோ அவ்வளவு தப்போட இன்னிக்கும் செஞ்சுகிட்டிருக்காங்க போல!

நண்பர் நல்ல மூடில் இருந்தார் என்பது, ஜோசியம் பார்க்கிற மாதிரிக் கைவிரல்களை நீட்டி மடக்கிக் கணக்குப் போடுவது போல ஒரு பாவனையில் சுகமாக இருப்பதிலேயே தெரிந்தது.

"எல்லாஞ்சரிதான் அண்ணாச்சி, சொல்ல வந்ததைச் சொல்லிப்புடுங்க! அதுக்கு ஏன் குடும்பப் பாட்டு, பதிவுப் பாட்டுன்னு பாட்டுப் பாடிப் பயமுறுத்தறீங்க?" என்றேன். என்னுடைய திடீர் தைரியத்தைக் கண்டு நண்பர் கொஞ்சம் அசந்துபோயிருக்க வேண்டும்!

"சமீப காலமாத் தமிழ்ப் பதிவர்கள் ஒலகத்துல, ஹிட்ஸ் பத்தின கணக்கு, அது சும்மா கள்ளக் கணக்குல்லேன்னு அதன் மேல கமென்ட், அப்புறம், இந்தத் திரட்டி இன்னாருக்குச் சார்பாவே போயிட்டிருக்கு, இல்லே எனக்கு எதிரா சதிபண்ணுது , இப்படிப் பரபரப்பா எத்தையாவது கிளப்பிக் கொண்டே இருக்கறது தான் ஃபேஷன், தெரியுமா ஒனக்கு?"

"அத்தைத் தெரிஞ்சு நான் என்ன செய்யப்போறேன் அண்ணாச்சி, நீங்க என்ன சொல்ல வாரீங்கங்கறதை மட்டும் பேசுங்க." என்னுடைய தைரியத்தைக் கண்டு, இப்ப எனக்கே ஆச்சரியம் வந்திட்டது!

"இப்ப ஒன்னோட பதிவையே எடுத்துக்குவமே! போன ஜூன் மாசத்தில நடுவுல தான் ஒன்னோட பதிவத் திரட்டிகளில் இணைச்சிருக்கே இல்லையா?"

லாப்டாப்பைத் திறந்து, அண்ணாச்சி தேட ஆரம்பித்தார். நான் பேசாமல் இருந்தேன்.

"ஜூன் மாசம் திரட்டிகளில் இணைக்கிறதுக்கு முன்னாடி, கிட்டத்தட்ட ஒம்போது மாசம், அறுபது பதிவுகள்னு எழுதியிருந்தும் கூட ஹிட்ஸ் பாத்தா வெறும் மூவாயிரம் தான் இல்லியா? அதுலயும், நீ வந்து பாத்தது, கமெண்ட்ஸ் ஏதாவது இருந்தா பதில் சொல்ல வந்தது இப்படி அப்படின்னு ஒரு 25 பெர் சென்ட் கழிச்சாக் கூட, ஒரு ரெண்டாயிரம், ரெண்டாயிரத்து இருநூறுன்னுதான் தேறும் இல்லியா?"

"சரிதான். அதுக்கென்ன இப்போ?"

"ஜூலை மாசம் 15 ஆம் தேதி வேணும்னே ஒரு தலைப்பை வச்சு விளையாட ஆரம்பிச்ச பொறவுதானே சூடு பிடிக்க ஆரம்பிச்சுது இல்லியா?"

"இப்படி இன்னும் எத்தனை தடவ இல்லியா, இல்லியான்னே கேட்டுகிட்டே இருக்கப் போறீங்க அண்ணாச்சி? புள்ளிவிவரம் இந்தச் சின்னக் கணக்குப் பாக்கிறதுக்குத் தானா? இல்ல, வேற உருப்படியான சோலி எதுனாச்சும் இருந்தாப் பாப்பமா?" என்றேன்.

உள்ளூர எனக்கு அழுகை அழுகையாக வந்தது. பிரபலப் பதிவர், பரபரப்பான பதிவர் ஆகுற யோக்கியதை, எனக்கில்லே, சொக்கா, எனக்கில்லேன்னு திருவிளையாடல் நாகேஷ் மாதிரியோ, வேற வீராவேசமான பதிவருங்க மாதிரியோ கோவில் பிரகாரம், பார்க், பீச்சுன்னு திரிய முடியுமா?பத்தாக்குறைக்கு, பார்க்,பீச்செல்லாம் கூடத் தமிழ் நாட்டுல இட ஒதுக்கீட்டின் கீழ் வந்து விட்டதாக பதிவர் டோண்டு ராகவன் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருக்கார்! பைனான்ஸ் கம்பனியில எமாந்தவங்களுக்குப் பனகல் பார்க், இப்படி அப்படின்னு!

நண்பருக்கு உள்ளே நான் அழ முடியாமல் அழுது கொண்டிருந்தது தெரிந்திருக்க வேண்டும். பொம்பளை அழுதா இரக்கப் படுவாங்க. ஆம்பளை அழுதா, அடச்சீ, நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா, இப்படி மூசுமூசுன்னு அழுதுகிட்டு என்று திட்டுவாங்க.

பதிவு எழுதறவன் அழுதா......நண்பர் மாதிரி ஊரே கூடி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுடாதா? அதுவும் புள்ளி விவரம்லாம் பாக்குறவங்களுக்கு இன்னும் கொஞ்சம் நக்கலாகிப்போய் விடாதா?

அழுகை கோபமாக மாறி, நண்பரைக் கடுப்புடன் பார்த்துக் கொண்டே, "சரி அண்ணாச்சி, உண்மைதான், பதிவ ஆரம்பிச்ச முதல் ஒம்போது மாசங்கள்ல வந்ததை விட ஜுலை 15 இற்கும் இப்பத்தைக்கும் வந்தவுங்க எண்ணிக்கை தான் அதிகம். அதுக்கு என்ன இப்போ?" என்றேன்.

என்னுடைய கோபம் நண்பருக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும். சிரித்துக் கொண்டே நண்பர் சொல்ல ஆரம்பித்தார்.

"முன்னாடியே பேசினது தான் நண்பா! அப்பப் பேசினது அப்போதைக்குப் போதும்னு சொன்னேன். இப்ப மிச்சத்தையும் பாத்துடலாமில்லியா?"

"பேசவேண்டாமின்னு சொன்னாக் கேக்கவா போறீங்க அண்ணாச்சி! பேசணும்னு தானே முடிவெடுத்து வந்திருக்கீங்க, பேசிடுங்க!" என்றேன். வேறென்னத்தச் சொல்ல?

"நண்பா! இந்தப் பதிவுலக நுண்ணரசியல், நுணுக்கமான அரசியல்னு சொல்றாங்க பாரு, அது ஒண்ணுமே இல்லை! உரிக்க உரிக்கக் காணாமப் போயிடும் வெங்காயம்! அவ்ளோதான்!"

"என்ன தத்துவமா? வெங்காயமெல்லாம் உரிக்கறீங்க?" வெங்காயம்னு சொன்ன உடனேயே ஒரு தெம்பு வருது பாருங்க, அத அனுபவிச்சுத் தான் தெரிஞ்சுக்கணும்!

"கொஞ்சம் வெங்காயத் தொலிய ஓரங்கட்டி வச்சுட்டு, சொல்றதைக் கேளு! பதிவு எளுத ஆரம்பிக்கிற எல்லாருமே, தன்னை அடையாளம் காட்டிக்கத் தான் எளுதறாங்கன்னு சொன்னேன் இல்லியா? அப்படி ஆரம்பிக்கும்போது அங்கே இங்கே மத்தவுங்க எழுதறதைப் பாத்துட்டு, தன்னோட சொந்த அடையாளத்தை மறந்துடறாங்க! இது தான் ஒரிஜினல் பிரச்சினை!"

"யாருக்காகவோ எழுதணும்னு நெனைக்கிறதை விட்டுட்டு, தனக்காகவே எழுதணும்னு நெனைச்சிருந்தாங்கன்னா, திருவிழாக் கூட்டத்துல தொலஞ்சுபோற பிள்ளைமாதிரி ஆகாம இருக்கலாம். நீ கூட, திருவிழாவுல தொலைஞ்சுபோன பிள்ளை மாதிரி ஃபீல் பண்ணி ஒரு பதிவு எழுதியிருந்தே, இல்லியா? தனக்காக, தான் ரசிக்கிறதுக்காகவுன்னே எளுத ஆரம்பிச்சா, உன்னையும் இந்த உலகம் தேடி வந்து ரசிக்கும்! நெசம்! தனக்குன்னு எளுதும்போது, கொஞ்சம் வக்கணையா, பொய்க் கலப்பு இல்லாம, ருசியா இருக்கணும்னு நினைப்போமில்லியா, அதுதான் சூட்சுமம்!"

என்னதான் மூச்சடக்கி, கஷ்டப்பட்டு முத்துக் குளிச்சாலும், நல்ல வெலை கெடைக்க ஒரு செட்டியார் தயவு வேணுமில்லியா?

அங்கே தான், இந்தத் திரட்டிகளுடைய அவசியமே வருது!

திரட்டிங்க பண்றதெல்லாம், ஷோக்கா டிபார்ட்மென்ட் ஸ்டோரில் டிஸ்ப்ளேல, சரக்குகளை வெளிச்சம் போட்டு வச்சிருப்பாங்கள்ள, அதே மாதிரித்தான்! நீ அவங்க கிட்டஇணைஞ்சப்புரம் பதிவுகளை சமர்ப்பிக்கும்போது, வாசகர் பரிந்துரைன்கிற பேர்ல கொஞ்சம் ஓட்டுக் கிடைக்கும்! யாருடா, நம்மையும் மதிச்சு ஓட்டுப் போட வந்தவுங்கன்னு பாத்தா, அதுக்குன்னே சில பேர் இருப்பாங்க. பெரும்பாலும் இவங்க அடையாளத்துக்கும், இவங்க எழுதற பதிவுக்கும் முடிச்சே இல்லாத மாதிரித் தான் மேலோட்டமாத் தெரியும்.

ஏதோ ஒரு அளவுகோல் வச்சு, குறிப்பிட்ட சரக்குகளை மட்டும் கொஞ்சம் கூடுதலா வெளிச்சம் போட்டு, இது தான் சூடான பதிவு, அதிகம் பரிந்துரைக்கப் பட்ட பதிவுன்னு காமிப்பாங்க.

இப்பப் புதுசு புதுசாத் திரட்டிகள் வந்துட்டதால, ஏற்கெனெவே மணம் பரப்பிக் கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு திரட்டி, வலியவே போய், உங்களோட பதிவை எங்கள் திரட்டியில் 4000, 4500, 5000, 5500, 6000 ஆவது பதிவாக இணைத்திருக்கிறோம் என்று பரிவட்டம் கட்டி ஆளை இழுத்து வருகிற வேலையை ஆரம்பித்ததும் நடந்து கொண்டிருக்கிறது. மற்றவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் பின்னூட்டம் இடுகிற சந்தடி சாக்கில், உங்கள் பதிவை எங்கள் வளையத்தில், எலி வலைக்குள் சேர்த்திருக்கிறோம் என்று சொல்ல ஆரம்பித்ததில், ஒரு அறிவிக்காத யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி வெளிச்சம் போட்டுக் காமிக்கிரதுல சில பதிவுகளும், பெரும்பாலான நேரங்களில் பதிவர்களுமே பிரபலமாகிப் போவது ஜஸ்ட் ஒரு ஆக்சிடென்ட் அவ்வளவுதான்! இதுல வேறு மோடி வித்தை, சூட்சுமம் எதுவுமே இல்ல. இப்படி அதிகம் வெளிச்சம் பட்ட பதிவர்கள் எல்லாருமே சரக்கோட எப்பவுமே எழுதறதும் இல்ல. இதையும் மனசுல வச்சுக்கோ.

உன்கிட்ட இருக்கிறது நத்தைக் கூடா, நல்ல முத்தான்னு தேடரவுங்களுக்குத் தெரியாதுல்ல! நல்ல முத்தைப் பிரிச்சுத் தாரேன்னு தான் ஒவ்வொரு திரட்டியை உருவாக்கி நடத்துறவங்களும் சொல்றாங்க. ஒரு அளவுக்கு, அதே மாதிரி பிரிச்சும் தராங்க!ஆனாக்க ஒரு அளவுக்கு மேல போனப்புறம், திரட்டிஙகறது புரட்டுன்னு ஆகிப் போவதை, அவ்வப்போது நடக்கும் சர்ச்சைகள், சூடான வம்பு, சூடான இடுகை, சூடான வாக்குவாதம், சூடான கண்ணீர்னு வரிசையாக் காட்டிக் கொடுத்துடுது!

திரட்டிகளில் சேருவது என்பது உன்னோட பதிவை வாசகருக்குக் கொண்டு சேர்ப்பதுல இருக்கிற பல வழிகளில் ஒரு வழி, அவ்வளவுதான்! இதைக் கொஞ்சம் மனசுல வச்சுக்கோ."

மூச்சு விடாமல் நண்பர் சொல்லிக் கொண்டே போனதில் நான் தான் அதிகக் களைப்பாகிப் போனேன்.

இப்போதைக்கு இது போதும்!

புள்ளிவிவரச் சிங்கமே, மனமுவந்து மிச்சத்தை அடுத்த இன்ஸ்டால்மென்டுல பாத்துக்கிடலாம்னு பெருந்தன்மையா நிறுத்திக் கொண்டார்!

இப்போதைக்கு இது போதும்!


"சாரு-ஜெமொவைப்பற்றியே எழுதிக் கொண்டிருந்தது, நகைச்சு வையுற மாதிரிஆயிடுச்சு போல!" என்று சொல்லிக் கொண்டே நண்பர் உள்ளே வந்தார். அவரே விஷயத்தைக் கிண்டி கிளறட்டும் என்று அமைதியாக இருந்தேன்.

"நீ ஒண்ணப் புரிஞ்சுக்காமலேயே எழுதினதுல தான் தப்பு இருந்தது, விஷயத்தில இல்ல, அதாவது ஒனக்குத் தெரியுமா?" என்று கேள்வியைக் கொக்கி போட்டு விட்டு, கையில் இருந்த சில காகிதங்களை உன்னிப்பாகக் கவனிக்கிற மாதிரி, அதே நேரம் நான் என்ன நினைக்கிறேன் என்பதை என் முகத்திலிருந்து கண்டு பிடிக்கிற மாதிரி,ஒரு கோணத்தில் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார். எதைப் புரிந்து கொள்ளாமல் எழுதினேன் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும், கொக்கியில் சிக்கிக் கொண்டால், அடுத்ததடுத்த கொக்கிகளுள் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை மணி உள்ளே அடித்ததால், ஏதோசொல்ல வந்தவன், அப்படியே நிறுத்திக் கொண்டேன்.

நண்பர், இதற்கெல்லாம் அசருகிறவர் இல்லை. புள்ளிராஜா வங்கியில், பணியாற்றியவர், புள்ளி விவரம் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி! புள்ளி ராஜாவுக்குப் புள்ளி வருமான்னு கேட்டா என்னென்ன கலர்ல எத்தனை எத்தனை புள்ளி வரும்னு விவரத்தோட சொல்றவர். புள்ளிராஜா வங்கியில, இவர மாதிரிப் புள்ளி வச்சுக் கோலம் போடறவங்களை நிறையவே பாத்ததுனால, நண்பர் ஏதோ புள்ளிவிவரம், கோலமெல்லாம் வரஞ்சு வச்சுத் தான் வந்திருக்கணும்னு தெரிஞ்சது. விதி யாரை விட்டது?!

"வலைப்பதிவு எழுதறவங்க எல்லாம் ஏதோ தெரிஞ்சுக்கணும்னு தேடி வர்றவங்க இல்ல. ச்சும்மா, டைம் பாஸ் பண்றதுக்காக வர்றவங்க, அப்படியே நல்ல மூடுல இருந்தால், விஷயத்தைத் தெரிஞ்சுக்கவும் கொஞ்சம் படிப்பாங்க. அவ்வளவு தான்! இது தெரியாம, நீ என்னமோ, பெரிசா கருத்துக் களம், விவாதக் களம்னு சொன்னாக்க, யார் படிப்பாங்க?"

சரி, இன்னிக்குப் புள்ளி வச்சுக் கோலம் போடாமப் போக மாட்டார்னு நல்லாவே தெரிஞ்சது. பரிதாபமாக, முகத்தை வைத்துக் கொள்ள முயன்றதில், ஒரு காப்பங்கு வடிவேலு ரேஞ்சுக்குத்தான் அவ்வ..வ்வ்வ்வ்..வ்வ்வ்வ்..வ்னு பம்ம முடிஞ்சது. பம்மினாலும் எங்க விடறாங்க?

லாப்டாப்பில விறுவிறுவென என் பக்கங்களைப் புரட்டினார். ஜாதகம் பாக்கறவுங்க, கை விரலை நீட்டி, மடக்கி வாய்க்குள்ளாரையே கணக்குப் போடற மாதிரி கொஞ்சம் பந்தாக் காண்பித்துக்கொண்டிருந்தார். சரி, இன்னிக்குக் கிளிஞ்சது கிருஷ்ணகிரின்னு , அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ரொம்ப நேரம் காக்க வைத்தால், வர்ர்ட்டான்னு டாட்டா சொல்லிட்டுப் போயிடுவேன்னு நண்பருக்குப் புரிந்திருக்க வேண்டும். புள்ளி விவரங்களை, அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார். அப்படித் தெளிச்சதுல இருந்து கொஞ்சம் இங்கேயும்:

"அடிக்கடி வாசிப்பு அனுபவத்தைத் தொட்டு எழுதியிருக்கே இல்லியா? லிடரேச்சர் கிளாசா நடக்குது இங்க?

இணையத்துல வர்றவங்க பெரும்பாலும் வாசிக்கறதுக்காக்ன்னு வரல, பொழுது போக்கத் தான் வர்றாங்க! உண்மையான வாசிப்பு அனுபவம், இன்னும் கூடப் புத்தகங்களில் தான் கிடைக்கிறது. பொழுதுபோக்க இணையத்துக்கு வர்றவங்க, சுவாரசியமா இருந்தா அங்கே இங்கேன்னு கொஞ்சம் வாசிக்கவும் செய்யறாங்கங்கறது உண்மைதான், ஆனாலும் இன்னும் பரவலாகவில்லை."

நான்: அது உண்மைதான்.

"நம்ம தமிழ் வாத்தியாரை ஞாபகம் இருக்கா? கட்டுரை எழுதுன்ற கேள்விக்கு மாஞ்சு மாஞ்சு பதில் எழுதியிருப்போம்..பாவி வாத்தியான் விரக்கடையால அளந்து மார்க் போடுவாரே, அது மாதிரித் தான் இங்கயும், ஆனாக்க அப்படியே உல்டா! நீ எழுதற அத்தனை விஷயத்தையும் நீ ஒத்தன் மட்டும் தான் படிக்கோணும். மேலோட்டமா, பதிவைப் பாப்பாங்க, இண்டரஸ்ட் இருந்தாக்கக் கொஞ்சம் படிப்பாங்க. அத மொதல்ல ஞாபகம் வச்சுக்கோணும்."

நான்: உண்மை, உண்மை! இதைத் தான் நானும் ஒரு பதிவுல, கூத்துக்கட்டுகிறவன் எப்படி ஆடியன்சை இழுத்துப் பிடிச்சு வைப்பாங்கன்னு சொல்லியிருந்தேனே!

"சொல்லியிருந்தா மட்டும் போதுமா? அதே டெக்னிக் பதிவிடும் போது இருக்க வேண்டாமா?

படிக்க வர்றவங்க பெரும்பாலும் 600 வார்த்தைகளுக்கு மேல இருந்தா, அல்லது நீளமா இருந்தா, அப்பாலிக்காப் பாத்துக்கலாம்னு போயிடுவாங்க! கண்ணுல படற வரிகள் கொஞ்சம் இழுத்துப் பிடிச்சு வச்சாத்தான், கொஞ்சமாச்சும் படிப்பாங்க!

அப்படிப் படிக்கிரவங்களுமே கூட, முழுசாப் படிக்கிறதில்ல. அதிக பட்சம் அறுபது சதவீதத்தைத் தான் படிக்கறாங்க.அப்படிப்படிக்கிறதுலயுமே எவ்வளவு புரிஞ்சுப்பாங்க, தெரிஞ்சுப்பாங்கங்கிறது இன்னொரு ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரித்தான்! செல்லுபடியாகுமான்னு தெரியற வரைக்கும் சஸ்பென்ஸ் தான்"

நான்: நீ சொல்வது எனக்குக் கொஞ்சம் புரிகிறது!

"இதத்தான் சொன்னேன்! கிட்டத்தட்ட ஆறு வருஷமா ப்ளோக் எழுதினவன் நீ. ஆனாலும், இப்பத் தான் கொஞ்சம் கொஞ்சமாப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கே, இல்லையா?"

நான்: நான் பதிவிட ஆரம்பித்த சூழ்நிலையே வேறு! இதை ஒரு டயரிக் குறிப்பு மாதிரித் தான் ஆரம்பித்தேன். என்னுடைய டயரி என்ற அளவுக்கு மேல், வாசகர்கள் என்ற அளவில் யோசித்ததே இல்லை.

"இப்பத்தான் சாக்ரடீஸ் சொன்னமாதிரி 'உன்னையே நீ அறிவாய்' கட்டத்திற்கு வந்திருக்க நண்பா. திவுலகத்திற்கு வர்ற எல்லாருமே, இப்படித்தான் ஆரம்பிக்கிறாங்க! தடுமாறுவதும் கூட இந்தக் கட்டத்துல தான்! தன்னை எப்படி அடையாளம் காட்டிக்கிறது என்பதில் தடுமாற்றம்! தன்னுடைய உண்மையான தன்மை, அடையாளத்தை அறியாமலே இருப்பதும் இன்னொரு தடுமாற்றம்!

மொதல்ல, இந்தப் பரந்த பூமியில நானும் இருக்கேன்னு மத்தவங்களுக்கு சொல்ல ஆரம்பிக்கிற முயற்சி தான். என்னை அடையாளம் காட்டிக்க, என்னோட உணர்வுகளைப் பகிர்ந்துக்கன்னு ஆரம்பம் தான் எழுத்து. அது நீ உயிரோட்டத்தோடு, உணர்வோடு இருப்பதற்கு அடையாளம் அவ்வளவுதான்."

நான்: ம்ம்ம்..மேல சொல்லு!

"இப்படித் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள, தன்னோட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிற ஒரு முயற்சி, ஒரு தெளிவான பார்வையோ, நோக்கமோ இல்லாதனால, சீக்கிரமே நீர்த்துப் போகவோ, தடம் மாறவோ செய்கிறது. திருவிழாக் கூட்டத்துல தொலைஞ்சு போன பிள்ளை மாதிரி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள வருபவன், இங்கே பார்க்கிற ஏகப்பட்ட அடையாளங்களைப் பார்த்துக் குழம்பி தன்னுடைய அடையாளம் என்ன என்பதிலேயே தடுமாறுகிற அனுபவமும் கூடக் கிடைக்கும்."

நான்: ஐயா! புள்ளி விவர ராசா! நான் பாட்டுக்கு ஏதோ எழுதி, எதை எதையோ படித்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னை ஏதோ ஒரு திருவிழாவில் தொலைத்துவிட்டுத் தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக் கொண்டு குழப்புகிற மாதிரி இருக்கிறது.

"குழப்பம் வருவது, தெளிதலுக்கான முதல் படி"

நான்: இப்படியே பேசிக்கிட்டிருந்தா, அடி தான் கிடைக்கும்!

"படிக்க வர்றவங்க ரொம்பத் தெளிவா இருக்காங்க நண்பா! நான் பள்ளிக்கூடத்திலேயே கட் அடிச்சு சைட் அடிக்கப் போனவன், இங்க நெட்ல ஏதோ கொஞ்சம் பொழுது போக்கலாம்னு வந்தா இங்கேயும் வந்து இம்சையை கூட்டுனா எப்பூடீன்னு எச்சரிக்கையாத் தான் இருக்காங்க!"

நான்: இதனால், புள்ளி விவர ராசா, சொல்ல வருவது..?

"யாருக்காக எழுதுகிறோம் என்பதை விட , என்ன எழுதுகிறோம் என்பதில், எவ்வளவு எழுதுகிறோம் என்பதில் தெளிவாக இரு."

"இப்போதைக்கு இது போதும்!"