உலகக் கோப்பையும், இந்தியாவின் பிரபலமான உதை பந்தாட்டமும் என்று ஒரு பதிவில் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி பெர்னார்ட் ஷா சொன்ன ஒரு கருத்தைத் தொட்டு எழுதியிருந்தேன்! பிரியமுடன் பிரபு என்ற கிரிக்கெட் ரசிகர் பின்னூட்டத்தில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்.
"அப்போ உதைபந்து விளையாடுபவன் அறிவாளினு எவனாச்சும் சொன்னானா??"
அப்போது இந்தக் கேள்விக்கு என்ன விடை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை! டிவிட்டரர்கள் தயவில், ப்ரெட் எர்லிஷ் என்ற டிவிட்டரர் எனக்காகவே விடையைக் கண்டு பிடித்துச் சொன்ன மாதிரி! நீங்களும் பாருங்களேன்!
இரண்டும்கெட்டான் என்றால் அது கால்பந்தாட்டம் தான்! அவர்கள் இரண்டு மணி நேரம் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டு இருப்பார்கள், எவரும் ஸ்கோர் செய்ய மாட்டார்கள். ஆனாலும் கால்பந்தாட்ட ரசிகர்கள் நூறு கோடிப் பேரும் உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று தான் சொல்வார்கள்!
மூன்று நிமிடத்தில் ஒரு காதல்!
நான் டாட் நெட்டோ, ஜாவாவோ தெரிந்தவன் அல்ல! ஆனாலும் ஜாவாதான் எப்போதும் என்ற இந்தக் காதல் கதையை யூட்யூபில் பார்த்த பிறகும், காதலுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் எப்படி!
சிரிப்போ சிரிப்பு! இது என் எஸ் கிருஷ்ணனின் ஒரிஜினல் சிரிப்பு!
வேறு எந்த ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு! உண்மைதான் இல்லையா! அப்புறம் எதற்காக வால்பையனும் ஆல் இன் ஆல் ராஜனும் தங்களிடம் இருக்கும் அற்புதமான நகைச்சுவை உணர்வை விட்டு விட்டு வேறுபக்கமே போய்க் கொண்டு இருக்கிறார்கள்?
//வேறு எந்த ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு! உண்மைதான் இல்லையா! அப்புறம் எதற்காக வால்பையனும் ஆல் இன் ஆல் ராஜனும் தங்களிடம் இருக்கும் அற்புதமான நகைச்சுவை உணர்வை விட்டு விட்டு வேறுபக்கமே போய்க் கொண்டு இருக்கிறார்கள்?//
ReplyDeleteயார் சொன்னா!?
நாங்க எப்பவும் சிரிச்சிகிட்டு தான் இருக்கோம்!
:)
வால்ஸ்!
ReplyDeleteநீங்களும் ராஜனும் சிரிச்சுக் கிட்டே இருக்கீங்கன்னு எனக்கும் தெரியுமே! ஆனால், பின்னூட்டக் கும்மிகளில் மெய்மறந்து ரெண்டு பேரும் அப்புறம் சிலரும் அடிக்கிற லூட்டியில நிறையப் பேரால சிரிக்க முடியாமப் போயிடுதே! அங்ஙனே கொஞ்சம் கவனிங்க!
இப்பவே ஒருத்தர் வாலுக்கும் ஆலுக்கும் தடை, புறக்கணிப்புன்னு போஸ்டர் ஓட்டக் கிளம்பிட்டார்!
//இப்பவே ஒருத்தர் வாலுக்கும் ஆலுக்கும் தடை, புறக்கணிப்புன்னு போஸ்டர் ஓட்டக் கிளம்பிட்டார்! //
ReplyDeleteஇலவ்ச விளம்பரம் கொடுக்கிறார்!
அவருக்கு நன்றி சொல்லனும்!
//இரண்டும்கெட்டான் என்றால் அது கால்பந்தாட்டம் தான்! அவர்கள் இரண்டு மணி நேரம் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டு இருப்பார்கள், எவரும் ஸ்கோர் செய்ய மாட்டார்கள். ஆனாலும் கால்பந்தாட்ட ரசிகர்கள் நூறு கோடிப் பேரும் உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று தான் சொல்வார்கள்!//
ReplyDeleteசத்தியமான உண்மை, ஒரு பந்தை மாறி மாறி உதைப்பார்கள் அதில் என்ன சுவாரிசியமோ.....என்னா (பார்க்க) முடியல. :)
ஹ ஹ பதிலுக்கு நன்றி
ReplyDeleteஎல்லாமெ நல்ல விளையாட்டுத்தான் இதுல நாந்தான் ஒசத்தினு சொல்லுறான் பாரு அவந்தான் முட்டாள்
வாருங்கள் கோவி.கண்ணன்!
ReplyDeleteஎனக்கு சதுரங்கம் தவிர வேறு விளையாட்டுக்களில் அதிகப் பரிச்சயம் இருந்ததில்லை. என்னுடைய பொழுதுகள் எல்லாம் பெரும்பான்மை புத்தகங்களில் தான்! அதனால் தான் அந்த கிரிக்கெட் ரசிகர் கொஞ்சம் ஆவேசத்தோடு கேட்ட கேள்விக்கு அப்போதைக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை! தவிர, அந்தப் பதிவு விளையாட்டைப் பற்றியல்ல, இங்கே அரசியல்வாதிகள் எப்படி ஜனங்களைப் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக எழுதப் பட்டது!
எங்கேயோ படித்த கடிஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. இரண்டு அணிகள் வெறியுடன் கால்பந்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தன. பார்வையாளர் ஒருவர் சொன்னாராம், "ஒரு பந்துக்காக எதற்கு இப்படி அடித்துக் கொள்கிறார்கள்? என்னிடம் வந்தால், ஆளுக்கொரு பந்து கொடுப்பேனே!"
சத்தியமான உண்மை, ஒரு பந்தை மாறி மாறி உதைப்பார்கள் அதில் என்ன சுவாரிசியமோ.....என்னா
ReplyDelete////////////
அதுதானே ஒரு அப்பாவி பந்த 20 பேரு உதைப்பாய்களாம் அடிப்பாய்களாம் அது என்ன விளையாட்டு சின்ன புள்ளதனமா?
கொஞ்சம் ஆவேசத்தோடு கேட்ட கேள்விக்கு
ReplyDelete///////////
ஹா ஹா ஆவாசமா?
சும்ம கூலா கேட்டேன்
தனக்கு பிடிக்கலைனா அது முட்டாள் தனம்னு சொல்லுறது சிரிப்பதான் வரவலைக்குது,அதனாலதான் கிண்டலா அப்படி கேட்டேன்
பிரபு! மூன்று வலைப்பதிவுகளை வைத்திருக்கிறீர்கள்!
ReplyDeleteபதுவுகளை, பின்னூட்டங்களைப் பிழையின்றி எழுத, குறைந்தபட்சம் அதற்கான முயற்சியோடு ஆரம்பிப்பீர்களேயானால், உண்மையிலேயே நீங்கள் பிரியமுள்ள பிரபுவாகவே ஆகி விடலாம்!
கிரிக்கெட் மீதான எனது அபிப்பிராயம் இப்போதும் மாறிவிடவில்லை. நீங்கள் அதை விளையாட்டாக மட்டும் பார்க்கிறீர்கள். நான் அதை ஒரு சூதாட்டமாக, ஜனங்களை ஏமாற்றும் ஒரு வணிக உத்தியாகப் பார்க்கிறேன். ஐ பி எல், சசி தரூர், லலித் மோடி, பவார் விவாகாரங்கள் வெளிவந்த பிறகும் கூட நீங்கள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கிறீர்கள் என்றால், அது உங்கள் விருப்பம்!