வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! ஜனங்கள் ஏன் எப்போதும் தோற்கிறார்கள்...?




அரிசி, பருப்பு, அப்புறம் ஒன்றுக்கும் ஆகாத தலைவர்கள்!
அவுட்லுக் வார இதழின் அட்டைப்படம்!
 

லைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள், தலைவர்கள் ஜெயிக்கும் விதம் என்ற தலைப்புக்களில் பதிவை எழுதிவிட்டு நான் எதிர்பார்த்துக் காத்திருந்த கேள்வி இது!உள்ளூர் நிலவரங்களில், தலைவர்களின் யோக்கியதையை  நன்றாகத் தெரிந்து வைத்திருந்தும்கூட  ஜனங்கள் ஏன் அவர்களிடம் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்  என்பது தான்!

ந்தப் பதிவுகளைப் படிக்க வரும் வாசகர் எவரிடமிருந்தும் அப்படி ஒரு கேள்வி இதுவரை வரவில்லை. குறைந்தபட்சம் அப்படி ஒரு கேள்வியைத் தங்களுக்குள்ளேயாவது எழுப்பிக் கொண்டிருப்பார்களா என்பதை ஊகிக்கவும் முடியவில்லை.

ரு கதை தான்! பாரதியாருடைய கவிதைகளில் படித்தது!

ஒரு முனிவருக்கு சாபம். பன்றியாகப் பிறக்க வேண்டுமென்று.

முனிவருக்குத் தாள முடியாத துக்கம், எவ்வளவு ஜபம், எவ்வளவு நியமத்தோடு காரியங்கள் ......கடைசியில் பன்றியாகப் பிறப்பதற்குத் தானா? மகனைக் கூப்பிட்டார்.

"கனே, சாபத்தினால் பன்றியாகப் பிறக்க வேண்டியுள்ளது.அப்படிப் பிறந்தவுடன், தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொன்று விடு."

கனும் தந்தைக்கு அப்படியே செய்வதாக வாக்களித்தான்.முனிவரும் பன்றியாகப் பிறந்தார். மகன், வாளை எடுத்துக் கொண்டு கொல்லப் போனான். புதிதாகப் பிறந்த குட்டிப் பன்றி சொன்னது, "மகனே, இப்போது தான் பிறந்திருக்கிறேன். ஆறு மாதம் கழித்து வா." மகனும் வாளை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனான்.

று மாதம் முடிந்தது. மகனும் வாளை எடுத்துக் கொண்டு பன்றியை வெட்டுவதற்காக வந்தான். பன்றி வளர்ந்து, பெண்பன்றி, குட்டிகள் எனப் பெருகி, குடும்பமாய் வாழ்வதைக் கண்டான். "நில்லடா, இப்போது தான் பன்றியாய் வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டிருக்கிறேன், சிறிது காலம் கழித்து வா."

கனுக்குத் தாள முடியாத துக்கம். வேதம் படித்தவர். கல்வி, கேள்விகளில் சிறந்தவர்.ஏதோ, முன் வினை, இப்படி இழிபிறப்பாய்ப் பிறந்து, உழன்று கொண்டிருக்கிறாரே என்று வாளை ஓங்கி வெட்ட முனைந்தான்.

வ்வளவுதான், முற்பிறப்பில் அவனுக்குத் தந்தையாய் இருந்த அப்பன்றி வெகுண்டெழுந்தது. கோபத்தோடு சொன்னது, "முட்டாளே, என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? பன்றி வாழ்க்கை என்றால் கேவலமா? இதில் எத்தனை சுகம் இருக்கிறது தெரியுமா உனக்கு? உனக்குத் தெரியவில்லை என்றால் ஒதுங்கிப்போய் விடு. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா, அதைக் கெடுக்காதே, போய்விடு.வேண்டுமானால், வாளை உன் நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு மடிந்து போ "

க்ரோஷமாய் உறுமிவிட்டு, பன்றி தன் பெண்டு பிள்ளை குட்டிகளோடு ஓடி மறைந்தது. மகன் இந்த விநோதத்தைக் கண்டு விக்கித்து நின்றான்.


"செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்பமுடைத் தேயாம்;
நினைக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக"
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
இனத்தோடும் ஓடி இன்னுயிர் காத்தது.

பாரதி கவிதை வரிகளில் இந்தக் கதையைக் கேட்டதுண்டு. கேட்ட பொழுதில், ஒரு வினோதமான கதை என்ற அளவிற்கு மேல் யோசிக்கத் தெரிந்ததில்லை.

ம்முடைய எண்ணங்கள் செயல்கள் எல்லாவற்றிற்கும் நாமே எஜமானர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். விருப்பமாக, ஆசையாக எழுபவை எல்லாம் நம்முடையவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்
தோம் என்றால், எதுவெல்லாம் நம்முடையது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அத்தனையும் வெளியில் இருந்து வருவது, புலன்கள் வழி மனம் போகும் போது, ஏற்படுகிற மயக்கம், ஒரு விகாரம் அவ்வளவு தான்.

ழக்கம் எப்படி ஆரம்பிக்கிறது? முதலில், கொஞ்சம் சுகமாக, சௌகரியமாக இருப்பதாக நம்ப வைத்து, சமையல் அறைச் சுவற்றில், எண்ணைப் புகை அழுத்தமாகப் படிந்து போவது போல, நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றன. ஆரம்பத்தில், நாம் அதற்கு எஜமானர்களாக இருக்கிறோம். அல்லது அப்படி நம்மை நம்ப வைத்து, நம்மை அதனதன் போக்கில் அலைக்கழித்து, ஆட்டிவைக்கும் எதிரிகளாக ஆகி விடுகின்றன.


காலையில் எழுந்தவுடன் சிலருக்கு காபி அல்லது டீ உடனே குடித்தாக வேண்டும். அப்புறம் செய்தித்தாள் படிக்கிற வேலை, வெண்குழல் வத்தியைப் பற்ற வைத்துக் கொண்டு சிந்தனை வருகிறதோ இல்லையோ, புகையை விட்டுக்கொண்டு, பெரிய சிந்தனாவாதி போல, ஒரு லுக்கு விட வேண்டியது. இப்படி ஒவ்வொருவரும், நம்மையே கூர்ந்து கவனித்துப் பார்த்
தோம் என்றால்  நம்முடைய வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பழக்கங்களின் அடிமையாகவே  இருந்து கழிப்பதை, உணர முடியும்.

நமக்குக் கற்பிக்கப் பட்டிருக்கிற பழக்கங்கள், நம்முடைய ஒவ்வொரு சிந்தனை இழையையும், செயலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைக் கூட நம்மால் உணர முடிவது இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு, செயல்களுக்கு, நாம் எஜமானனாக இருப்பதற்குப் பதிலாக, பழக்கங்கள், மிக சாமர்த்தியமாக நம்மை அடிமையாக வைத்திருக்கின்றன. பழக்கங்கள் தீயவை என்று தெரிகிறது, ஆனாலும் அவற்றை விட முடியவில்லை என்று மட்டுமே நினைக்கிறோம். ஆனால், பழக்கங்கள், நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை, பின்வழியாக நம்முடைய எஜமானர்களாகவே ஆகி விட்டன என்பது காலம் கடந்து தான் தெரிகிறது.

ந்தக் கதையை இங்கே விரிவாக ஏற்கெனெவே பேசி
ருக்கிறோம். வேறொரு விஷயத்தைத் தொட்டு இங்கே பேசியதும் கூட ஜனங்கள் ஏன் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு விடை சொல்வதாக இருக்கிறது. இங்கே மதவாதிகளின் இடத்தில் தலைவர்கள், கட்சிகள், அரசு என்று மாற்றி வைத்துப் பாருங்களேன்!


தனால் இப்படி எல்லாம் தலை கீழாக மாறிப் போகிறது ?

தனால் இப்படி முரண்பாடுகள் தோன்றுகின்றன ?

ந்த பிரபஞ்ச வெளியில் ஒரு பொதுவான விதி உண்டு . பௌதீகத்தில் புவியீர்ப்பு விசை என்று சொல்வது போலவே , உயிர்கள் ஒரு மாற்றத்திற்குத் தயாராகும் போது பழைய பழக்கங்களின் பிடிமானம் கீழ் நோக்கி இழுப்பது இயல்பே . பழக்கங்களின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு , கீழ்நிலைக்கு இழுக்கும் சக்தியிலிருந்து விடுபடுவதற்கு , அதனிலும் வலிமையான ஒன்றின் துணை வேண்டும் .

Escape Velocity போல ஒன்று வேண்டும். நமது முன்னோர்கள் அதற்குச் சரியானது ஆன்மிகம் தான் என்பதில் தெளிவாக இருந்தார்கள். பலவிதமான வழிபாட்டு முறைகள், பல்லாயிரம் தெய்வங்கள் என்று கேலி பேசப்பட்டாலும், அதெல்லாம் வெறும் ஆரம்பப் படிகள் தான் என்பதை, தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு மறைத்ததே இல்லை. ஏதோ ஒன்றிலிருந்து ஆரம்பித்தாக வேண்டும் அல்லவா?

ப்படிப்பட்ட ஒன்றாக, ஆன்மிகம் மட்டுமே ஒரு உள்ளார்ந்த மாற்றத்தை , சக்தியை , கீழ்நிலை உணர்வுகளை எதிர்த்து வெல்லும் வலிமையை மனிதனுக்கு அளிக்கிறது என்பதையும், கண்டு சொன்னார்கள்.

தங்களை பரப்புகிறவர்களுக்கு , இந்த உள்ளார்ந்த பார்வை ,மாற்றம் , முயற்சி எதுவும் தேவை இல்லை . அவர்களுக்குத் தேவை , ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம், தன்னுடைய சொந்த முயற்சி எதுவும் இன்றி யாரோ ஒரு மீட்பர் வந்து ரட்சிப்பார் என்று சொன்னால் , அதை அப்படியே கிளிப்பிள்ளை போலச் சொல்லிக்கொண்டிருக்கும் ஒருகூட்டம் . "வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! என்னிடம் வாருங்கள், நானே இளைப்பாறுதலைக் கொடுப்பேன்!" இப்படிச் சுவர்களில் பெரிதாக எழுதி வைத்திருப்பதைப் படித்திருப்பீர்கள் இல்லையா?

மாற்றம் என்பது கொஞ்சம் பயமுறுத்துகிற விஷயம் . இது சாக்கடை தான் , ஆனாலும் இதை சுத்தம் செய்வது என்னால் ஆகாது , அதனால் இப்படியே இருந்து விட்டுப் போகிறேன், நாற்றம் தாங்கமுடியவில்லை தான், ஆனாலும் எனக்குப் பழகிப் போய்விட்டது, இருந்து விட்டுப் போகட்டுமே, மாற்றம் என்பது எப்படியிருக்குமோ, நமக்கேன் வம்பு என்றிருக்கும் மனிதர்களை மதமான பேய் பிடித்து ஆட்டுவதில் வியப்பொன்றுமில்லை.

மாறுவதைவிட, அடுத்தவன் சொல்லுக்குத் தலையாட்டிக் கொண்டிருப்பது சுலபம் இல்லையா? பரலோக சாம்ராஜ்ஜியம் கிடைத்தால் நல்லது தான், ஆனால் அதற்காக நான் ஏன் சிரமப்படவேண்டும்?  

ழியக்காரரிடம் , தசமபாகம் [டென்பெர் சென்ட்] கொடுத்து விட்டால், அவர் நமக்காக ஜெபம் செய்வார், மீட்பரிடம் நம்மை ரட்சிக்கும்படி மன்றாடுவார், சிபாரிசு செய்வார்! சங்கீதம் பாடுவார், மேடையில் ஆடுவார்! அது போதாதா? நான் வேறு எதற்காக, கஷ்டப்பட வேண்டும்?

தங்கள் வணிக நிறுவனங்களாகிப்போனதற்கு ஊழியம் என்ற பெயரில்காணிக்கையாகப் பெறுகிற டென் பெர் சென்ட் ப்படி ஒரு காரணமோ, அதைவிடப் பெரிய காரணம் வழிபாடு என்ற பெயரில், நான் ஒன்றுமே செய்ய வேண்டாம், முயற்சி செய்ய வேண்டாம், கஷ்டப்பட்டு என்னிடம் இருக்கும் மிருகத் தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றிருக்கிற சோம்பல், மாறுவதற்குத் தயாராக இல்லாத தன்மை, மாறவேண்டுமே என்ற நினைப்பே பெரிதும் பயமுறுத்துவதாக  -இதுதான்!

துதான் மிகப்பெரிய கோளாறு!

மாற்றங்களுக்கு அஞ்சிச் சோம்பல் கொள்ளும் சமுதாயத்திற்குக் கிடைப்பது ஏமாற்றமும் துயரமும் தான்! வேறு என்ன கிடைத்து விடும் என்று நினைக்கிறீர்கள்?




 

2 comments:

  1. பரலோக சாம்ராஜ்யம் கிடைக்க வேண்டும் என்று எல்லோருமே ஆசைப் படுகிறோம். ஆனால் யாருமே சாக விரும்புவதில்லை என்று ஒரு எஸ் எம் எஸ் வந்ததாக நினைவு. மாற்றங்களை யாரும் விரும்புவதில்லை. மாற்றம் தானாக வந்தாலும் பின்னர் அதிலிருந்தும் மாற விரும்புவதில்லை. இந்தச் சூழ்நிலையை ஏமாற்ற விரும்புபவர்கள் நன்றாகவே பயன் படுத்திக் கொள்கிறார்கள். சோம்பேறித்தனங்கள் சுகமாகிவிடும் போது ஏமாற்றங்களும் துயரங்களும் உணரப் படுவதில்லை. படித்ததும் இதுதான் தோன்றியது.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்!

    பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்து விடுவது, Creature of habits என்பது புவியீர்ப்பு விசை மாதிரி, மிருகங்களாகவே இருக்கும் பழைய கீழ்நிலை உணர்வுகளுக்குள் இழுக்கப் படுவது! அதை மீறித் தான் மிருகங்களுக்கு மேற்பட்ட மனித நிலை என்பது பரிணாமத்தில் சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் இது ஒரு இடைப்பட்ட நிலைதான்!

    //இங்கே பேசியதும் கூட ஜனங்கள் ஏன் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு விடை சொல்வதாக இருக்கிறது. இங்கே மதவாதிகளின் இடத்தில் தலைவர்கள், கட்சிகள், அரசு என்று மாற்றி வைத்துப் பாருங்களேன்!//

    பழக்கங்களின் அடிமை, Creature of habits என்ற குறியீட்டுச் சொற்களில் தேடினால் இதை வெறும் மதங்களுடைய பிரச்சினையாக அல்லது ஒரு கற்பனையாகப் பார்ப்பதில் இருந்து இன்னூம் கொஞ்சம் கோடிட்டுச் சொல்லியிருப்பதைப் பார்க்க முடியும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!