உண்மையைத் தேடி......!


புதிய ஏற்பாட்டில் ஒரு பகுதி:

பிலாத்து மன்னனிடம் யாரோ ஒருவன் "உண்மையை" பற்றிப் பேசப் போக, பிலாத்து கேட்டானாம்

" உண்மை! யாருடைய உண்மை? உன்னுடையதா அல்லது என்னுடையதா?"

இப்படித் தான் ஒவ்வொருவரும் உண்மையை தாம் அறிந்து கொண்டிருப்பதாக அல்லது தமது வசதிக்கேற்றபடி புரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டுகாலம் கடத்திக் கொண்டிருக்கிறோம்.விவாதம், எதிர்வாதம், கடைசியில் இறுகிப் போன பிடிவாதமாக இப்படித் தான் மேலும் மேலும் குழப்பிக் கொண்டிருக்கிறோம்.

யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்து, ஒவ்வொருவரும் யானை இப்படித் தான் இருக்கும் என்று சொன்ன கதையைப் போல.

கதையைப் படித்துவிட்டு, அடுத்த நபர் எப்படி இந்த கதையில் வரும் குருடனைப் போல யானை இப்படித் தான் இருந்தது என்று சொல்வதாக, அவரை விமரிசிக்கவும் தயங்குவதில்லை. அதே கதையில் வரும் இன்னொரு குருடன் யானையைப் பற்றித் தன் கருத்தை சொல்வது போலவே தானும் சொல்லிக் கொண்டிருப்பது மட்டும் நமக்குப் புரிவதேயில்லை.

"Were Truth to manifest in such a way as to be seen and understood by all, they would be terrified by the enormity of their ignorance and false interpretation."

விலகி நின்று பார்க்கும் போது தான் இவனும்,இன்னும் பலரும் பிலாத்து மாதிரியே உண்மையை தன் வசதிக்கேற்றபடி புரிந்து கொண்டு அதுவே உண்மை என்று பினாத்திக் கொண்டிருந்தது புரிகிறது.

The defenders of the truth are often worse than the enemies of the truth.

"உண்மையின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், உண்மையின் விரோதிகளை விட மோசமானவர்கள். "

ஸ்ரீ அன்னைக்கும், சத்ப்ரேம் என்று அழைக்கப் பட்ட பிரெஞ்சு அன்பர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் தொகுப்பின் இந்த ஒரு பக்கத்தைப் படித்த போது கூட பிலாத்து மாதிரித் தான், நாம் ஒவ்வொருவருமே உண்மையை நமக்கு வசதிப்படுகிற மாதிரியோ, அல்லது நமக்கு புரிந்தது மட்டுமே என்ற அளவில் குறுக்கியோஅது தான் 'உண்மை' என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்,நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது போல, உண்மை என்பது,  உள்ளது உள்ளபடிக்கே எல்லோராலும் புரிந்துகொள்கிறமாதிரி, பார்க்கமுடிகிற மாதிரி வெளிப்படுமேயானால், ஒவ்வொருவருமே தன்னுடைய அறியாமையையும், புரிந்துகொள்வதில் ஏற்பட்ட தவறும்  எவ்வளவு பெரிது என்பதைக் குறித்து அச்சம் கொள்ள வேண்டியிருக்கும்.

"Were Truth to manifest in such a way as to be seen and understood by all, they would be terrified by the enormity of their ignorance and false interpretation."

உண்மை என்பது ஒரே ஒருமுறை கற்றுக்கொண்டு  அதுவே என்றைக்குமான விதியாகக் கருதும் வரட்டுத் தனமான கோட்பாடு அல்ல.சத்தியம் என்பது பரம் பொருளைப் போலவே எல்லையற்றதாக, உண்மையாகவும் விழிப்போடும் இருப்பவர்களிடம் ஒவ்வொரு கணத்திலும் உதிப்பதாகவும் இருக்கிறது என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

உண்மை என்பதுகாலாவதியாகிப்போன ஒன்றல்ல. உயிரோட்டமாக, அதைத் தேடுபவர்களுக்கு என்றைக்கும் இருப்பது!

"Truth is not a dogma that one can learn once and for all and impose as a rule. Truth is as infinite as the supreme Lord and It manifests every instant for those who are sincere and attentive."

உண்மை என்பது தேடப்படுவது மட்டும் அல்ல.

உரை, மனம், கடந்து அனுபவிக்கப் படுவது.

சாட்சிகளால் மட்டும் நிரூபிக்கப் படுவதல்ல.

சாட்சியமே தேவைப்படாத அனுபவ சத்தியம்.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னிடம் இவனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தும் சமர்ப்பணம் ஆகட்டும்.இன்னமும், நான் எனது என்கிற இருளில் தோய்ந்திருக்கிற பகுதிகள் அனைத்தும் உனது ஒளியால் நிறைவிக்கப் பெறட்டும்.

புண்ணிய பூமியாக வணங்கப்படும் பாரத தேசம், இன்றைக்கு எல்லையற்ற சீரழிவுகளை, உள்ளேயும் அண்டை நாடுகளிடமிருந்து அச்சுறுத்தலாகவும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உறுதியான தலைமை இல்லாமல், தேசம் சிறுமைப் பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணங்களில், தெய்வத் துணை ஒன்றே வழிகாட்டுவதாக இருக்க வேண்டும்.

**மீள்பதிவு.

6 comments:

  1. //"உண்மையின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், உண்மையின் விரோதிகளை விட மோசமானவர்கள். "//


    எந்த உண்மையின் பாதுகாவலர்கள், உங்களுடயதா, என்னுடயதா!?

    ReplyDelete
  2. //சாட்சியமே தேவைப்படாத அனுபவ சத்தியம்.//


    இல்லியூசன் எனப்படும் கற்பனை அனுபவங்கள் தானே இன்று சாட்சியமே தேவைபடாத அனுபவமாக இருக்கிறது, அது தான் சத்தியமா!?

    மனநல மருத்துவமனையில் பலர் கடவுளை பார்த்ததாக பிதற்றி கொண்டிருக்கிறார்கள்!

    ReplyDelete
  3. //புண்ணிய பூமியாக வணங்கப்படும் பாரத தேசம், இன்றைக்கு எல்லையற்ற சீரழிவுகளை, உள்ளேயும் அண்டை நாடுகளிடமிருந்து அச்சுறுத்தலாகவும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உறுதியான தலைமை இல்லாமல், தேசம் சிறுமைப் பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணங்களில், தெய்வத் துணை ஒன்றே வழிகாட்டுவதாக இருக்க வேண்டும்.//


    பூமி எப்படி புண்ணியம் பண்ணும், அண்டை நாடுகளின் அச்சுறத்தல் எந்த நாடுகளுக்கு தான் இல்லை, தமிழ்நாட்டுக்கே கேரளாவில் இருந்தும், கர்நாடகாவிலிருந்தும் தொல்லை வருகிறது, இவ்ளோ பெரிய நாட்டுக்கு வராதா!? இதை எப்படி தெய்வதுணை வழிகாட்டும்!?

    ReplyDelete
  4. என்னோட விருப்பம் இதுபோலத்தான், இதுபோல அடிக்கடி எழுதுங்க, மீள்பதிவானாலும் பரவாயில்லை..

    ReplyDelete
  5. //தெய்வத் துணை ஒன்றே வழிகாட்டுவதாக இருக்க வேண்டும்.//

    :-)

    ReplyDelete
  6. வால்ஸ்!

    /எந்த உண்மையின் பாதுகாவலர்கள், உங்களுடயதா, என்னுடயதா!?/

    உண்மை என்பது நீங்கள் சொல்வதிலும் இல்லை, நான் சொல்வதிலும் இல்லை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்று கூட சொல்லப்படுவதுண்டு!

    /மனநல மருத்துவமனையில் பலர் கடவுளை பார்த்ததாக பிதற்றி கொண்டிருக்கிறார்கள்!/

    ஒரு கோட்பாடு அல்லது விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே அல்லது தங்களுக்கு ஒரு நல்ல வருமானமுள்ள பிழைப்பை தேடித் தருகிறது என்பதற்காகவே இங்கே இயேசு அழைக்கிறார் ரக கடவுள் நம்பிக்கையைப் பேசுகிற கூட்டம் மாதிரியே, தங்களுக்குத் தெரியவில்லை என்பதற்காகவே கடவுள் இல்லை அல்லது அப்படிச் சொல்லிக் கொள்வது கூட பாபுலாரிட்டி, காசு, ஆதரவாளர் கூட்டம் என்று கிடைப்பதனாலேயே இங்கே நிறையப்பேர் மன நல மருத்துவ மனைகளுக்கு வெளியில் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

    /தமிழ்நாட்டுக்கே கேரளாவில் இருந்தும், கர்நாடகாவிலிருந்தும் தொல்லை வருகிறது/

    விதைத்ததைத் தானே அறுவடை செய்ய முடியும்!

    வாருங்கள் சிவா!

    நேயர் விருப்பம் என்னவென்று கவனத்தில் குறித்து வைத்துக் கொண்டேன்.

    @கும்மி

    :-))

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!