Showing posts with label காதல் கதை. Show all posts
Showing posts with label காதல் கதை. Show all posts

வெள்ளிக் கிழமை! கேள்விகள்,விவகாரங்கள் வேண்டாமே!


பதிவுலகம் எப்போதுமே சூடாகவே இருக்க வேண்டுமா என்ன! ஒரு மாற்றத்திற்காகக் கொஞ்சம் சிரிக்க, பார்க்க, படங்களுடன்!

உலகக் கோப்பையும், இந்தியாவின் பிரபலமான உதை பந்தாட்டமும் என்று ஒரு பதிவில் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி பெர்னார்ட் ஷா சொன்ன ஒரு கருத்தைத் தொட்டு எழுதியிருந்தேன்! பிரியமுடன் பிரபு என்ற கிரிக்கெட் ரசிகர்  பின்னூட்டத்தில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்.

"அப்போ உதைபந்து விளையாடுபவன் அறிவாளினு எவனாச்சும் சொன்னானா??"

அப்போது  இந்தக் கேள்விக்கு என்ன விடை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை! டிவிட்டரர்கள் தயவில், ப்ரெட் எர்லிஷ் என்ற  டிவிட்டரர் எனக்காகவே  விடையைக் கண்டு பிடித்துச் சொன்ன மாதிரி! நீங்களும் பாருங்களேன்!


இரண்டும்கெட்டான் என்றால் அது கால்பந்தாட்டம் தான்! அவர்கள் இரண்டு மணி நேரம் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டு  இருப்பார்கள், எவரும் ஸ்கோர் செய்ய மாட்டார்கள். ஆனாலும் கால்பந்தாட்ட ரசிகர்கள் நூறு  கோடிப் பேரும் உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று தான் சொல்வார்கள்!

மூன்று நிமிடத்தில் ஒரு காதல்!



நான் டாட் நெட்டோ, ஜாவாவோ தெரிந்தவன் அல்ல! ஆனாலும் ஜாவாதான் எப்போதும் என்ற இந்தக் காதல் கதையை யூட்யூபில் பார்த்த பிறகும், காதலுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் எப்படி!

சிரிப்போ சிரிப்பு! இது என் எஸ் கிருஷ்ணனின்  ஒரிஜினல் சிரிப்பு!

 
 

வேறு  எந்த ஜீவராசிகள்  செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு! உண்மைதான் இல்லையா! அப்புறம் எதற்காக வால்பையனும் ஆல் இன் ஆல் ராஜனும் தங்களிடம் இருக்கும் அற்புதமான நகைச்சுவை உணர்வை விட்டு விட்டு வேறுபக்கமே போய்க் கொண்டு இருக்கிறார்கள்?