ஊழலில் புரளும் புள்ளிகள்! மிரளும் காங்கிரஸ்! கூட்டணி தர்மம்!


காங்கிரசைப் பற்றிப் பதிவெழுதாமல் ஒரு மாதமாவது இருக்க முடியுமா என்ற முந்தைய பதிவில் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் கேட்டிருக்கிறார்!

காங்கிரசுக்கு நெகடிவ் விளம்பரம் கூடக் கொடுக்கக் கூடாது தான்! ஆனால், இந்த தேசத்தைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிற நேரு பரம்பரைப் பிரபாவமாகக் காங்கிரஸ் இருக்கும்போது எப்படி அதைப் பற்றி எழுதாமல் இருக்கமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை.இங்கே வலைப் பதிவுகளில் எழுதுவதால் மட்டுமே, அதுவும் குறைந்த எண்ணிக்கையில் வாசகர்கள், பின்தொடர்பவர்கள் என்றிருக்கிற இந்த வலைப்பூவில் எழுதுவதால் என்ன ரிசல்ட் கிடைத்து விடப்போகிறது என்று கணக்குப் பார்த்துத் தான் எழுத வேண்டுமா என்ன!

இணையத்தில் கருத்தைப் பகிர்ந்துகொள்வதால் மிகப் பெரிய விளைவுகள் கிடைத்துவிடப்போகிறது என்று நம்பி எதையும் எழுதுவதில்லை. மனதில் சரி என்று படுகிற விஷயங்களை மட்டுமே இந்தப்பக்கங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். சொல்லப்பட்டதில், நேர்மையற்றதாகவோ, தவறானதாகவோ எதுவும் இருந்தால், அதைத் திருத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் எனக்கு இருந்ததே இல்லை.

ஒரு கருத்துப் பரிமாற்றம், ஆரோக்கியமான விவாதம் நிகழ வேண்டும் என்பதற்காகவே, பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவுகளைப் படிக்க வரும் அத்தனை பேருமே தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்வதில்லை, அல்லது ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தவேண்டும் என்று முனைவதில்லை. தங்களுடைய மனதில் என்ன தோன்றுகிறது என்பதை, கூச்சமில்லாமல், பதிவில் பேசப்பட்ட விஷயங்களை விட்டு விலகாமல், பின்னூட்டங்களில் ஒரு ஆரோக்கியமான விவாதமாக, இந்தப்பக்கங்களில் நிகழவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை, முந்தைய பதிவுகள் சிலவற்றிலும் சொல்லியிருக்கிறேன்.

ஸ்ரீராம் உபயத்தில், அந்த வேண்டுகோள்  இப்போது மறுபடியும்! வேண்டுகோளை மீள்பதிவாக வெளியிடக் காரணமாக இருந்த காங்கிரசை மட்டும் மறந்து விடலாமா? அதற்காக, மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதற்காக..............



சிவப்புச் சேலை என்பது  ஒரு புத்தகம்!  

சிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை! ( The Red Saree: When Life is The Price of Power)!

ஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது.  


ஏற்கெனெவே இந்தப் புத்தகம்  பிரெஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது



புத்தகத்தின் முகப்பிலேயே " dialogues, conversations and situations found therein are the product of the author's own interpretation and do not necessarily reflect authenticity."  

உரையாடல்கள், சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை; அப்படியே அச்சு அசலாக நடந்ததாகச் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த அறுநூறு ப்ளஸ் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், மோதிலால் நேரு, ஜவஹர், ராஜீவ், சோனியா என்று மேற்கத்திய வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு வசதியாக நடப்பைத் தொகுத்திருப்பதாக ஆசிரியர் சொன்னதை, காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.  

சோனியாவின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிருக்கிறது.

நோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி! இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல  யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட!  யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.

காங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப்  புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி
ருக்கிறாராம்?

1977 இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா, ராஜீவ் மற்றும் தன்  குழந்தைகளை  அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம்! அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு  இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.

நேருவின் வீரப்பரம்பரை  வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம்! வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத்  திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....?

அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை! ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது! அம்புட்டுத்தேன்!

ஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்! தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன் வைக்கும் கேள்வி இது தான்!

"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லி
ருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லி இருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லிருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி ருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே!"


சாதாரண  சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும்மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான். கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா?

காங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்து
காண்பித்திருக்கிறார்! காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்!
இன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிருக்கிறார், அதில்  மூன்று பொய்கள் என்ற பகுதியை
இங்கே பார்க்கலாம்!

சொந்தக் கதையே காற்றில் பறந்து கொண்டிருக்கும்போது ஆ! ராசா விவகாரம் வேறுஇளித்துக் கொண்டிருக்கிறது !இந்த லட்சணத்தில் "கூட்டணி தர்மம்" பற்றிய தம்பட்டம் வேறு!

அதெல்லாம் இருக்கட்டும்! சேலையைப் பற்றிப் புத்தகம் எழுதினால் மிரளுகிற நேருவின் வீரப்பரம்பரை விசுவாசிகள், எங்கே போய் ஒளிந்து கொள்கிறார்கள் என்பதை ஹிந்து நாளிதழில் நேற்று  சுரேந்திரா வரைந்த இந்தக் கேலிச் சித்திரம், இவர்களை இன்னமும் விட்டு வைத்திருக்கிற இந்தியப் பிரஜைகள் அத்தனைபேரையும் சேர்த்தே கேலி செய்வதாக இருப்பதை கவனித்தீர்களா?

என்ன செய்வதாக உத்தேசம்?!







3 comments:

  1. ibnlive.co.in, ndtv.com இது பற்றி முழுவதுமாக அலறினாலும், பார்லிமென்ட் அல்லோகலப்பட்டலும், எப்படி தமிழ் பேப்பர்களில் இது பற்றி செய்தியே இல்லை? தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? இந்த அளவு மக்களை இருளில் வைக்க முடியுமா? அழிவுகாலத்தை நோக்கி காங்கிரஸ் மற்றும் திமுக செல்கிறது என்று நினைக்கிறேன் (நம்புகிறேன்)

    அது தான் போகட்டும். படித்தவர்கள் நிறைந்த பதிவுலகத்திலும் இது பற்றி செய்தியே இல்லையே ஏன்?

    நம் சுரணயின்மை தெரிந்ததுதான். ஆனாலும் இந்த அளவுக்கா? என் விட்டு கதவை தட்டாதவரை எந்த அநியாயம் எங்கு நடந்தாலும் பரவாயில்லை என்ற போக்கே தெரிகிறது.

    ReplyDelete
  2. // அது தான் போகட்டும். படித்தவர்கள் நிறைந்த பதிவுலகத்திலும் இது பற்றி செய்தியே இல்லையே ஏன்? //
    --------------andhu said...

    ஐயோ பாவம். இப்படி ஒரு நினைப்பா உங்களுக்கு? பதிவுலகில் அதிகம் எழுதி, படித்து, விவாதிக்கப்படும் விஷயம்
    நாட்டு நடப்போ, சமூக அக்கறை உள்ள விஷயங்களோ அல்லது அறிவியல் தொழில் நுட்ப விஷயங்களோ இல்லை.
    சினிமா, செக்ஸ், ஜாதீய வக்கிரங்கள்,ஆபாசம், சுய சொரிதல், குழு மனப்பான்மை அரசியல்,அடுத்தவரை அசிங்கமாக திட்டுதல். வேறு ஒன்றும் இங்கு பெரிதாக எவரும் சாதிக்க வில்லை. தேவையான செய்திகளை எழுதினால் "மொக்கை " என்று எவரும் வரமாட்டார்கள்.

    ReplyDelete
  3. திரு பந்து!

    ஊடகங்களில் வருக செய்திகளை சரியாகக் கவனிக்கிறீர்களா? ஒரு விதமான காழ்ப்புணர்வுடனேயே, ஒருதலைப் பட்சமான செய்திகளையே வழங்கிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா ? தேர்ந்தடுத்த, அனுபவமுள்ள பத்திரிகையாளர்களே இப்படி இருக்கும் போது, வலைப் பதிவர்களை மட்டும் குறை சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தீர்களா?

    மாணிக்கம் சொல்லி இருக்கிற மாதிரி,இங்கே குறிப்பாகத் தமிழ் வலைப்பதிவுகளில் போதுமான முதிர்ச்சி இன்னமும் ஏற்படவில்லை என்பதென்னவோ வாஸ்தவம் தான்! ஆனால் காலம் ஒரு நாள் மாறும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!