இங்கே பொய்யே வேதமுன்னு ஆச்சு!

 சிரிப்புப் படம்! கருத்துப் படமும் கூட!

"ரஜினியும் கமலும் என்றைக்கும் சிறந்த நடிகர்கள்தான்!"

"இந்த நிகழ்ச்சியிலே ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் என்பதற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கிய காரணத்தால் தான் அவர் சிறந்த நடிகர் என்பதல்ல. என்றைக்கும் அவர் சிறந்த நடிகர் தான். அதைப் போல கமல்ஹாசனுக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. என்றைக்கும் அவர் சிறந்த நடிகர்தான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்- எனக்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது வழங்கப்படாவிட்டாலும், நான் சிறந்த உரையாடல் ஆசிரியர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்."

இது உளியின் ஓசை திரைப்படத்திற்குச் சிறந்த திரைக்கதை வசனகர்த்தா என்ற பட்டத்தை திரையுலகின் சார்பில் இருவரும் வழங்கியபோது, தமிழ்நாட்டு முதல் அமைச்சர் செய்த எதிர் மரியாதை!

அந்நியன் படத்தில், பிரகாஷ்ராஜும், விக்ரமும் சேர்ந்து கலக்கிய காட்சி ஒன்று

போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் விக்ரம் சாது அம்பியாகவும், அந்நியனாகவும், மாறி மாறி முகபாவங்களைக் காட்டி கெஞ்சி, மிஞ்சி, மிரட்டி நடிக்கும் போது பிரகாஷ் ராஜ் பேசுகிற வசனம், "நான் எம்ஜியார் நடிச்சுப் பாத்திருக்கேன், சிவாஜி நடிச்சுப் பாத்திருக்கேன்......உன்னை மாதிரி ஒருத்தனை இது வரை பார்த்ததே இல்லை!!" என்ற மாதிரி வியந்து அல்லது பயந்து பேசுகிற மாதிரி வருமே, நினைவுக்கு வருகிறதா?

தொழிலில் எப்படியோ, ஆனால், மேலே உள்ள ஒரு படம் போதும், ரஜனியும், கமலும் சிறந்த நடிகர்கள் தான் என்று சொல்வதற்கு!  என்ன பவ்யமாக மண்டியிட்டு, சிறந்த வசனகர்த்தா விருதை வழங்கியிருக்கிறார்கள் பாருங்கள்! எப்படி சிரிக்காமல் சமாளித்து நடித்தார்கள் என்பதை வியக்காமல் இருக்கமுடியவில்லை!

போதாக்குறைக்கு, கவிதைக்குப் பொய் மட்டுமே அழகு என்று முடிவு செய்துவிட்ட ஒருவரும், சின்னக் கலைவாணர் என்று டைட்டில் கார்ட் போட்டுக் கொண்டு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனை அவமதித்துக் கொண்டிருக்கிற ஒருவரும், ஆக எல்லோருமே பொய் சொல்லப் போறோம் என்று போஸ் கொடுத்துச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதை, இன்றைய தமாஷாக!

oooOooo 

சென்ற ஆண்டு, அமெரிக்காவில் நிதித்துறை சீரழிந்து, பல லட்சக்கணக்கான மக்களை, வீடிழந்தவர்களாக ஆக்கிய Sub Prime Crisis பற்றிக் கொஞ்சம் பேசியிருக்கிறோம். கீழே இருக்கிற இந்த இரண்டு வீடியோ விளக்கங்களைக்  கொஞ்சம் பாருங்கள். பிரச்சினையைக் கொஞ்சம் எளிமையாக விளக்க முயன்றிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் தான்!தமிழில் டப் செய்து வெளியிடும் அளவுக்கு, தொழில்நுட்ப ஞானமில்லை, பொறுத்துக் கொள்ளுங்கள்!


இந்த எளிமையான விளக்கம்  ஏமாந்த, அல்லது பிரச்சினை என்னவென்றே புரிந்துகொள்ள முடியாத அமெரிக்கர்களுக்கு! இதுவும் சில அடிப்படைகளை, அமெரிக்க நிதித்துறை எப்படி இயங்குகிறது, எப்படி இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்பதையும் சொல்கிறது. இங்கே இந்திய வங்கிகள் இயங்குகிற அல்லது ஆட்டுவிக்கப் படுகிற விதமே வேறு! அதனால் தான், அமெரிக்கா ஆடிக் கொண்டிருந்த போது, நாங்கள் வலுவாக இருந்தோம் என்று சொல்லிக் கொள்ள முடிந்தது. அதையுமே கொஞ்சம் கொஞ்சமாகப்பார்க்கலாம்.

அமெரிக்கா சந்தித்த நிதித்துறைப்  பிரச்சினையை வேறு கோணங்களில் இருந்தும் பார்த்தால் தான், ஆக்டோபஸ் பிடியில் சிக்கின மாதிரி, உலகப் பொருளாதாரம் ஒவ்வொன்றும் இந்தச் சரிவில் சிக்கியிருப்பதையும், தீர்வு அவ்வளவு எளிமையானது அல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

துபாய் உலகம் கவிழ்ந்ததற்குப் பின்னாலும், அமெரிக்க முதலீடுகள், முந்தைய காலத்தில்  வந்தது போல வரவில்லை என்பதும், ரியல் எஸ்டேட் விலைகள் சரிந்தது, வாங்குவார் இல்லாமல் போனது என்று சில அம்சங்கள் பொதுவாக இருந்தாலும் கூட, மோசமான நிர்வாகம், ஒளித்து மறைத்துவைக்கப்பட்ட கணக்கிடும் முறைகள் இவைகளே பெரும் காரணமாக இருந்தன என்று சில தகவல்களில் இருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.

தொடர்ந்து பேசுவோம்!


 

3 comments:

  1. //இங்கே பொய்யே வேதமுன்னு ஆச்சு!//

    தலைப்புக்கு பெரிய ஒரு 'ஓ......'

    இளைராஜா சைடுல தலைக்காட்டும் அளவுக்கு அவரு நிலைமை ஆச்சா ! ஆ............!

    ReplyDelete
  2. உடம்புக்கு ஏதும் முடியலையா?
    பதிவு சிறுசா இருக்கே!


    கமல், ரசினி, கருணாநிதி மாறி மாறி சொறிஞ்சிகிறாங்க!
    நாம ஏன் அதை வேடிக்கை பார்க்கனும்!

    ReplyDelete
  3. வேடிக்கை பாக்க மட்டும் தானே நமக்குத் தெரியும்? சந்துல, gap ல , அப்படியே மான், மயில், புவி எதுவுமே தெரியலன்னுட்டு வருத்தமா நாம ஏன் வேடிக்கை பார்க்கணும்னு கேக்கறீங்கன்னு தோணுதே வால்ஸ்!

    கோவி சார்! ஒண்ணு ரெண்டெல்லாம் பத்தாது! 49 O போட்டாக் கூட சரியாகுமான்னு தெரியலே!
    தலைப்பை நீங்க சரியா கவனிக்கலேன்னு நினைக்கிறேன்! வேதம் பொய் என்று நான் சொல்லவில்லை! பொய்யையே வேதம் மாதிரித் தாங்கிப் பிடிக்கிறார்களே, அவர்களுக்காகத் தான் இந்தத் தலைப்பு!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!