Showing posts with label இன்று என்ன செய்தி. Show all posts
Showing posts with label இன்று என்ன செய்தி. Show all posts

சண்டேன்னா மூணு! ரஜனி வாய்ஸ்! ரங்கராஜ் பாண்டே பார்வை! நச்சுன்னு ஒரு கமெண்ட்!

கொரோனா கால அரசியல் மிக விசித்திரமாகத்தான் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது போல! எப்போதாவது செலெக்டிவாக வாய்ஸ் கொடுக்கும் ரஜனி கூட டாஸ்மாக் கடை திறப்பு விவகாரத்தில் லேட்டாக இருந்தாலும் லேட்டஸ்ட்டாக ஒரு காமெடி செய்திருக்கிறார். என்ன என்பதை ஒரு 2 நிமிட வீடியோவில் பார்த்து விடலாம்  ரஜனி காமெடியை விட சாணக்யா தளத்தில் வெளியான இந்தப் படம் மிகவும் தெளிவாக நிலைமையைச் சொல்லிவிடுகிறது.

 
அப்புறமும் என்ன பஞ்சாயத்து? வாய்ஸ், சவுண்ட் உடறது?   
 
கேட்டுக்கு வெளியே வந்து நிருபர்களிடம் பேசவில்லை. சும்மா ட்வீட்டரில் ஒரு கீச்சு! அவ்வளவுதான்! அதற்கே தராசு ஷ்யாம் லபோதிபோவென அடித்துக் கொள்கிறார் கொரோனா விபத்தில் நீண்ட தூக்கத்திலிருந்து ரஜனிகாந்த் இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறாரா என்பது ஷ்யாம் வெளிப்படுத்தியிருக்கிற சந்தேகம். ஆக ரஜனி என்ன பேசினாலும் எதிர்ப்பது என்று ஒரு கும்பல் அலைவது தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.ரஜனியும் சரி, எதிர்க்கிற கும்பலும் சரி கஜானாவை நிரப்ப வேறு நல்ல வழிகள் எவை என்பதைச் சொல்ல ஒரு சின்ன முயற்சிகூடச் செய்ய முடியவில்லை என்பது தமிழக அரசியல் களத்தின் ஆகப்பெரிய பரிதாபம்! குறைகளைமட்டுமே ஊதிப்பெரிதாக்குவோம் என்று அலைகிறவர்களிடம் நேர்மறையான சிந்தனை செயல்களை எதிர் பார்க்க யூடியுமா என்ன?


பாண்டே பார்வை என்கிற தலைப்பில்  இந்த 31 நிமிட வீடியோவில் ரங்கராஜ் பாண்டே அதிமுக - பாஜக உறவில் விரிசல் ஆரம்பம் என்று விரிவாகப் பேசியிருக்கிறார். எனக்கு வருகிற சந்தேகம் எப்போது இந்த இரண்டுகட்சிகளுக்கும் சுமுகமான உறவு இருந்தது என்பது தான்! காரியத்துக்காக பரஸ்பரம் சொறிந்து கொண்டதையெல்லாம் சுமுக உறவு என்று எடுத்துக் கொள்ள முடியுமா? 



ரசனிகாந்து வாய்ஸ் கொடுத்துவிட்டார்! ரங்கராஜ் பாண்டேவும் தன்னுடைய எக்ஸ்பெர்ட் கருத்தை நீட்டி முழக்கிச் சொல்லிவிட்டார் என்பதெல்லாம் சரி! ஆனால் மேலே ஜயகாந்த் என்றொருத்தர் நச்சுன்னு ஒரு கருத்தைச்  சொல்லி  முடித்துவிட்டாரே, அதற்கென்ன சொல்வீர்களாம்?

மீண்டும்  சந்திப்போம். 

இன்றைக்கென்ன விசேஷம்? அட, செய்திகளில் தான்!

நவம்பர் 19 இந்த நாளுடைய விசேஷம் என்னவென்று தெரியுமா? இப்படிக்கு கேட்டுக் கொண்டே வந்தார் அண்ணாச்சி! அண்ணாச்சி வங்கி வேலையில் இருந்த நாட்களில் எனக்கு சீனியர், விவரம் தெரிந்தவர். பதிவு எழுதவந்த ஆரம்பநாட்களில் எனக்கு ஒருவிதத்தில்  உந்துசக்தியாகக்கூட இருந்திருக்கிறார்! "இன்னைக்கு யாருக்காச்சும் பொறந்த இல்லே  இறந்த நாளா? சரியா ஞாபகம் வரலியே அண்ணாச்சி." அதான் எனக்குத் தெரியுமே என்று முந்திரிக்கொட்டை மாதிரிப் பதில் சொல்லாமல் அண்ணாச்சியைப் பேச விட்டுவிட வேண்டும்! இல்லையென்றால் என்பாடு திண்டாட்டமாகி விடும் என்பது அனுபவ பாடம்!


"இன்னைக்கு உலகக்  கழிப்பறைகள் தினம்! ஐக்கிய நாடுகள் சபை இப்படி அறிவிச்சுப் பத்தொம்பது வருஷம் ஆகிப் போச்சே! நீகூட இதைப்பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தியே! அதுவுமா மறந்து போச்சு?" அண்ணாச்சி கொஞ்சம் சூடான மாதிரித் தெரிந்தது. ஆமாம்! உலகக் கழிப்பறை தினம்! கழிப்பறைகள் சுத்தமாக இல்லாவிட்டால் என்னென்ன கேடுகள் வரும் என்ற விழிப்புணர்வைப் பரப்புகிற நாளாக இந்த நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறது. லிங்கைச் சொடுக்கிப் பாருங்கள்    என்று 2011 இல் எழுதியிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. கழிவறைகள் இல்லாத வீடுகள் ஏராளமாக இருந்த இந்த நாட்டில் சமீபகாலமாகத்தான் மத்திய அரசின் பெரும் முயற்சியால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது வரவேற்கப்பட வேண்டிய செய்தி.


சதீஷ் ஆசார்யா வரைந்திருக்கிற இந்த கார்டூன் சில விஷயங்களைப் புட்டுவைத்திருக்கிறது என்று கருத்தை சொன்னார் அண்ணாச்சி. எனக்கென்னவோ சதீஷ் ஆசார்யா செய்திகளின் நடப்புநிலவரத்தைத் தெரிந்து கொள்ளாமலேயே மூன்று கட்சிகளுமே அந்தரத்தில் தொங்குகிற மாதிரி நினைத்து வரைந்தமாதிரித்தான் தெரிகிறது. தன்னுடைய மனக்கோட்டை நிறைவேறாத கடுப்போடு சிவசேனா மட்டும்தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாகப்படுகிறது. பிஜேபியைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இன்றைய சாம்னா நாளிதழ் (சிவசேனாவின் தம்பட்டம்)  பலமுறை தோற்றபிறகும் கூட பிரித்விராஜ் சவுஹானால் உயிர்பிழைத்த மொகமது கோரி கடைசியில் ஒரு போரில் ஜெயித்தவுடன் ப்ரித்விராஜைக் கொன்ற கதையைச் சொல்லிக் காட்டியிருக்கிறது. மஹாராஷ்டிராவிலும் கோரி செய்ததுபோல் பலமுறை முயற்சித்துத் தோற்றவர்கள் இப்போது சிவசேனாவின் முதுகில் குத்த முயற்சிக்கிறார்கள் என்று கதைக்கிறது சாம்னா!   கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையாக, பிஜேபியை உதறிவிட்டு வா என்று சரத் பவார் சொன்னபடி செய்வார்களாம்! அதைவைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவுக்கு இடம் கொடுத்ததை, யாரைக் கேட்டு முடிவு செய்தீர்கள் என்று கேள்வியும் கேட்பார்களாம்! இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் டில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் அபூர்வானந்த்.A betrayal in the offing: Why Congress should give a second thought to allying with Shiv Sena  காங்கிரசுக்கு சிவசேனாவுடன் கூட்டு வேண்டாம் என்று எச்சரிக்கிற ஒருசெய்திக் கட்டுரையைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன்!


தேவே கவிதாவின் மதசாரபற்ற ஜனதாதளம் (JDS) கட்சியின் சின்னம் புல்கட்டு சுமக்கிற பெண் என்பதை வைத்துப் பகடி செய்ய முயற்சிக்கிறார் சதீஷ் ஆசார்யா! நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு என்ற வழக்குச் சொல் அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாது என்பது அவருக்குத்தெரியாது போலிருக்கிறது!


சீனாதானா ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது நாளை புதன்கிழமை  உச்சநீதிமன்றத்தில் விசாரணை 

மீண்டும் சந்திப்போம்.                  

இன்று ஒரு சேதி! #அரசியல்

நேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் முந்தைய பதிவில் பின்னூட்டமாகச் சொல்லியிருந்தார்.முந்தைய நாட்களைப் போல எடியூரப்பா அவசரப்பட்டு மானம்கெட விடாமல் பிஜேபியின் தலைமை கட்டுப்படுத்தி வைத்து இருப்பது ஒரு நல்ல விஷயம்! தவிர கர்நாடக சபாநாயகர் தந்திடிவிக்கு நேற்று அளித்த  பேட்டியில், இரண்டுநாட்கள் பொறுங்கள்! பத்தாவது ஷெட்யூல் எத்தனை வலிமையானது என்பது தெரியவரும் என்று சொல்லியிருப்பதும்,பிஜேபி அவசரப்படாமல் இருப்பதற்கான வலுவான காரணமாக இருக்கலாம்!



இந்தப் பத்தாவது ஷெட்யூல் என்பதென்ன?

The 10th Schedule to the Indian Constitution, that is popularly referred to as the ‘Anti-Defection Law’ was inserted by the 1985 Amendment to the Constitution. ‘Defection’ has been defined as, “To abandon a position or association, often to join an opposing group” The Advanced Law Lexicon defines defection as, “crossing the floor by a member of a Legislature is called defection.” In short, defection is an act by a member of a particular party of disowning his loyalty towards that particular party and pledging allegiance to another party. This is what the Law Lexicon describes as ‘crossing the floor’. கர்நாடக சபாநாயகர் சொன்னமாதிரி இந்தப் பத்தாவது ஷெட்யூல் உச்சநீதிமன்றத்தால் ஏற்கெனெவே பரிசீலனை செய்யப்பட்டு கெட்டியானது தானா? நீதிமன்றத் தீர்ப்புக்களும், வரையறைகளும் மாற்றப்படக் கூடியவை தான் என்பதால் சபாநாயகர் முடிவை, அது என்னவாக இருந்தாலும், உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தினால் தான் உண்டு. மேற்கொண்டு சட்ட நுணுக்கங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இங்கே பார்த்துக் கொள்ளட்டும் என்பதோடு, இந்த விஷயத்தை இப்போதைக்கு விட்டுவிடலாம்!    சதீஷ் ஆசார்யா வரைந்த கார்டூன் என்ன?


"இப்போது பாஜக நிச்சயம் இந்த அசிங்கத்தை மேற்கொண்டு செய்து ஆட்சியில் அமரக்கூடாது. காங்கு விடாது துரத்தும் கருப்பு போலவே செயல்படுவார்கள். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். மக்களை கவனிக்க முடியாது. அவர்கள் அயோக்கியர்கள் என்று சுட்டிக்காட்டுவது எந்த அளவுக்கு சரியோ நாம் யோக்கியன் என்று நிரூபிப்பது மிக முக்கியமானது. புதிய தேர்தல் மூலம் பாஜக ஆட்சிக்கு வருவது தான் சரி. அது அவர்களுக்கு வாய்ப்புள்ளது என்று நம்புகிறேன்"  இது நண்பர் ஜோதிஜி முந்தைய பதிவில் சொன்னது!

ஆனால் எடியூரப்பாவோ நாமோ அதைத் தீர்மானிக்கிற இடத்தில் இல்லை என்பதாலும்  சபாநாயகர் அதிருப்தி MLAக்கள் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதிலிருந்தே அடுத்த கட்ட நகர்வுகள், மேல்முறையீடுகள் இருக்கும் என்பதாலும்!  இதுவே இன்றைக்குச் சொல்ல வந்த செய்தி!

தினமணி நாளிதழ் வேறுவிதமான ஊகத்தை சொல்கிறது.  

மீண்டும் சந்திப்போம்.    
    

மனைவி சொல்லே மந்திரம்! அரசியலுக்காகுமா?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் கருதப்பட்டவர். தேசிய கட்சியின் அகில இந்திய தலைவர்களையே தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் ஜெயலலிதா, விஜயகாந்தையும் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்து பரிதாபமாய் தி.மு.க. தோற்க காரணமாய் இருந்தவர். இப்படி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக பார்க்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.வின் நிலை இப்போது பரிதாபமாய் காட்சியளிக்கிறது என்கிறது ஆசியாநெட் நியூஸ் தமிழ். 

அங்கும் இங்கும் பேரம்பேசுவதிலேயே காலம் கடத்திக் கொண்டே இருக்கும் தேதிமுகவை துரைமுருகன் நன்றாக வைத்துச் செய்துவிட்டாரோ? ரெண்டு முருகனாக, கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்! 



மகனுக்கு சீட் வாங்கி விட்ட சந்தோஷம் வேறு!  

அரசியலில் கிடைத்த வாய்ப்பைத் தொடர்ந்து கோட்டை விடுகிற கட்சியாக, தேர்தலுக்கு முன்னாலேயே தோல்வியைத் தழுவுகிற கட்சியாக விஜய்காந்தின் தேதிமுக ஆகி இருப்பது இன்றைய அரசியல் களத்தின் பரிதாபம்! இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட பீயுஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்! 
இதெல்லாம் அதிமுகவைக் காப்பாற்றப்போவதில்லை என்று தலையங்கம் எழுதி இங்கே டிவியிலும் வாசித்தாலும் பயனில்லை என்று உள்ளூர உதறல் எடுத்திருப்பதால் தானே தடைகோரி உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்? அய்யம்பேட்டை வேலை என்பது இதுதானே! 

The small political parties in TN have hit a jackpot .. parties that don’t deserve even a single seat and those who don’t deserve so many seats are enjoying the ‘VACUUM’ .. Vacuum is TN politics cannot be ‘FILLED’ at least for few more years ..
3:34 PM - 6 Mar 2019  இப்படி திமுக தொகுதிப் பங்கீட்டை  நக்கல் அடித்திருப்பது மு க அழகிரியின் மகன் துரை தயாநிதி தான்! 

இன்னும் என்னென்ன வருமோ?


மண்டேன்னா ஒண்ணு! தேர்தல் அரசியல்!

தமிழக தேர்தல்களம் தயாராகி வருவதில் நிறைய வேடிக்கைகளும், குழப்பங்களும் இருப்பது வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது. விசிகவுக்கு 2 தொகுதிகள் என்று திமுக கூட்டணியில் உறுதியாகி விட்டதாக செய்திகள் வந்தாலும் ஜெயலலிதா பாணியில் விசிக திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற  நிபந்தனையை விசிக தாண்டிவருமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை என்கிறார்கள் இங்கே மதிமுக இன்னமும் முறுக்கிக் கொண்டுதான் இருக்கிறது போல! புஸ்வாணம் ஆகிப்போன பின்னாலும் எதற்கு இந்தக் கோமாளித்தனம்?

அதுதானையா தமிழ்நாடு அரசியல்!   
திமுக அதிமுக இரண்டு தரப்பிலுமே யார் பலமான கூட்டணி அமைப்பது என்பதில் நிலவிய போட்டியில் ஆரம்பத்தில் இருந்த வலுவான மெகா கூட்டணி என்ற இமேஜ் திமுகவுக்கு இருந்ததைக் கோட்டை விட்டு விட்டார்கள்!  கூட்டணி வேறு தொகுதிப்பங்கீடு வேறு என்று சப்பைக்கட்டு ரெடியாக இருக்கவே இருக்கிறது!  

வைகோ / திருமாவளவன் உதயகுமார்/டேனியல் காந்தி/
பியூஸ் மணுஷ்/மனுஷ்யபுத்திரன் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்/
P.R. பாண்டியன்/அய்யாக்கண்ணு மதிமாறன் /தியாகு/ கௌதமன்
தூத்துக்குடி பாத்திமா /சுந்தரவள்ளி தோழி புவனேஸ்வரி/ தோழி ரோகிணி
சைமன் செபாஸ்டியன்/ வேல்முருகன் சுப.வீரபாண்டியன் / வீரமணி/ வைரமுத்துதாமஸ் பாண்டியன் / அருணன் / வளர்மதி பாரதிராஜா /அமீர்/ மக்கள் அதிகாரம் இடது & வலதுகள் மசூதிகள் & சர்ச்சுகள் 
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர்களின் ஆதரவுடன்தானே திமுக காங்கிரஸ் கூட்டணி,நாடாளுமன்றத் தேர்தலைச்சந்திக்கப் போகிறது? எந்தக் கொள்கையும் இல்லை!எந்த புண்ணாக்கும் இல்லை!.நாட்டின் வளர்ச்சியின் மீது எந்த அக்கறையும் இல்லை!

இப்படி முகநூலில் மகேந்திரன் மகி என்பவர் தமிழக அரசியலின் பரிதாபங்களை புட்டுப் புட்டுவைக்கிறார்! 
இல்லாத பூச்சாண்டி ஒன்றைக் கற்பனை செய்து பூதாகாரமாக்குவது! ஒயிக! ஒயிப்போம்! என்று கூக்குரல் எழுப்பவேண்டியது! இதுதானே திராவிடங்கள் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, கட்டிக் காப்பாற்றிவரும் திராவிட மாயை! 

இவர்களோடு சேர்ந்து சனாதன வேரறுப்போம் என்று விசிக  கூவியே ஒரு இரண்டு சீட்டைப் பிடித்தாயிற்று! நரேந்திர மோடியை பூதமாக்கி ஒயிக! மோடியே ஓடிப்போ! எங்க ஏரியா உள்ளே வராதே என்று கூவுகிறவர்கள் எல்லோரும் இன்று ஒரே அணியில் என்பதற்குமேல், இவர்களிடம் ஆதரிக்கக் கூடிய, ஆதரிக்க வேண்டிய ஒரு நல்ல விஷயமாவது இருக்கிறதா?  

கும்பலாகச் சேர்ந்து நரேந்திர மோடியை இவர்கள் எதிர்ப்பது ஏன்? பரப்புரை செய்கிற விஷயங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இவர்கள் ஒவ்வொருவரும் மோடியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது மோடியை முன்னிறுத்தி பிஜேபி வளர்வது தங்களுடைய இருப்புக்கே உலைவைத்துவிடும் என்ற அச்சத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

இந்தக் கும்பல் எதிர்ப்பதாலேயே நரேந்திர மோடியை  ஆதரிப்பது ஒன்றுதான் சரியான முடிவு என்று சொன்னால் சரியா? தவறா? 

கொஞ்சம் சொல்லுங்களேன்!

                    

ஒண்ணுமே புரியலே ஒலகத்துலே!

ஒண்ணுமே புரியலே சார்! இது முந்தைய பதிவுக்கு வந்த ஒரே பின்னூட்டம்! இதுவரை எனக்குத் தெரிந்த தமிழில் தடுமாறாமல் தானே எழுதிக் கொண்டிருக்கிறேன்?  

மாதா மாதம் கேபிள் அல்லது DTH கட்டணத்தை இவர் வந்து தருவாராமா?எனக்கும் கூட சிலவிஷயங்களில் இப்படித் தொடர்ந்து ஏமாளிகளாகவே இருந்துவிடத் துடிக்கும் ஜனங்களைப் பற்றி ஒன்றுமே புரிவதில்லை!
தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கட்டும்! அதிமுகவிலிருந்து எத்தனை எம் எல் ஏக்கள். ஏன் மந்திரிகள் கூட ஓடிவருகிற லிஸ்டில் இருப்பதாக எந்த நம்பிக்கையில் இசுடாலின் பேசுகிறார்? இதுகூட ஒண்ணுமே புரியலே ரகத்தில் வருகிற விஷயம்தான்!
தமிழிசை பேசுவதும் கூட ஒண்ணுமே புரியலே ரகம் தானா?
எது எப்படியோ, இது நிச்சயமாக ஒண்ணுமே புரியலே கேஸ்தான்!   
          

செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமே!

நண்பர் அசோக்குமார் தனது தினசரிக் கடமையாக கூகிள் பிளஸ்சில் நாட்காட்டி ஒன்றைப் பகிர்வதுபற்றி ஏற்கெனெவே இங்கே பேசியிருக்கிறோம்! இன்றைய நாட்காட்டி    இப்படி நினைவுபடுத்துகிறது: நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்  என்ற வாசகங்களுக்கு கீழே பொருத்தமாக  சிலரை நினைவு கூர்கிற மாதிரியும்!


நினைத்துப் பார்க்கிறோமா? இந்தக் கேள்வியை நானும் நீங்களும் கேட்டுக் கொண்டால் என்ன சொல்வோம்?

#வாஜ்பாய் #பிறந்தநாள்: நினைவிடத்தில் #மலர் தூவி #பிரதமர் #மோடி #மரியாதை!நவபாரதச் சிற்பி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி சிரத்தாஞ்சலி செய்தனர். முன்னதாக நேற்று வாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயமும் வெளிப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன.முன்னாள் பிரதமர் என்பதற்காகவோ இன்றைய ஆளும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்பதனால் மட்டுமல்ல! ஜனசங்கமாக ஒரு அரசியல் இயக்கத்தை நிறுவியதிலும், நாடே பெரிது என்று 1977 இல் அதை ஜனதா தளத்தில் இணைத்து இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை முறியடிப்பதில் பங்காற்றியதிலும், பழைய ஜனசங்கத்தினரில் பலரும் RSS இலும் உறுப்பினர்களாக இருக்கிறார்களே என்று கிளப்பிவிடப்பட்ட விஷமத்தனமான வெறுப்பரசியலில் நொந்து ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி புதிதாக பாரதீய ஜனதா கட்சியை நிறுவியதிலும் முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் அடல் பிஹாரி வாஜ்பாய் என்றென்றும் இந்திய வரலாற்றில் நினைவு கொள்ளத் தகுந்தவரே!
*******

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, ராஜாஜி, திராவிடங்களால் தேவைப்படும்போது மூதறிஞர் தேவைப்படாதபோது குல்லுக பட்டர் என்று ஏளனப்படுத்தப்பட்ட ராஜாஜியின் நாற்பத்தாறாவது நினைவு தினம் இன்று!

ராஜாஜியின் பேரனும் முன்னாள் மேற்கு வங்க  கவர்னருமான கோபாலக்ருஷ்ண காந்தி ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் இருந்து எடுத்திருக்கும் இந்தத் தலைப்பு ஒரு ஐம்பதாண்டு கால அரசியலைக் கொஞ்சம் பின்னோக்கித் திருப்பிப் பார்க்க வைத்தது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது தான் தமிழகத்தில் மதுவிலக்கு  செய்யப்பட்டு, சாராயக்கடைகள்  கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன  தன்னுடைய வயது, இருந்த பதவியின் கவுரவம் எதையும் பொருட்படுத்தாமல் கருணாநிதியின் வீட்டுக்கே சென்று மதுவிலக்கை ரத்து செய்யும் முடிவைக் கைவிடுமாறு வேண்டிக் கொண்டார்.


ராஜாஜியின் பல அரசியல் நிலைபாடுகள் எனக்கு  உடன்பாடாக இருந்ததில்லை என்றாலும் எத்தனை எதிர்ப்பு வந்தாலும், தன்னுடைய கருத்தை எடுத்துச் சொல்ல அஞ்சாத ஒரு மாமனிதர் என்ற வகையில் இன்றைக்கு அவரது நினைவு தினம் என்பதை இங்கே நினைவுபடுத்துவதற்காக...!


CR was pious, he was not pietist. He was religious, not religiose. He was traditional, not orthodox. He could rebel, but not dally with heterodoxy. He prized intelligence but did not pickle his brains in the vinegar of cleverness. He was accepting of what Time served him, not servile before its buffetings.

ராஜாஜி முதல்வராக இருந்த போது அவருடைய நண்பர் ஒருவர் தனது மாவட்ட ஆட்சித் தலைவர் லஞ்சம் வாங்குவதாகவும் அவரை வேறு இடத்திற்கு மாற்றும்படியும் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். அதற்கு ராஜாஜி, " அவரை மாற்றமுடியாது. ஏனென்றால் லஞ்சத்தையும் ஊழலையும் ஒரு ஜில்லாவிலிருந்து இன்னொரு ஜில்லாவுக்கு மாற்ற விரும்பவில்லை. வேண்டுமானால் அவரிடமுள்ள குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக எழுதி அனுப்புங்கள். அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறோம்!'' என்று பதில் எழுதினார்.  
******* 
#கிறித்தவம் திணித்த #ஆங்கிலேயரை... #ஆயுதமேந்தி எதிர்த்த #தமிழ் மண்ணின் வீரமங்கை... #வேலு #நாச்சியார்!
டிசம்பர் 25:- ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி – முத்தாத்தாள் தம்பதிக்கு பெண் வாரிசாக 1730ஆம் ஆண்டு சக்கந்தியில் பிறந்தவர்.

நினைவுக்கு வருகிறதா? சுட்டியில் பாருங்கள்!

*******


சார்லி சாப்ளின் பற்றித் தனியாக என்ன சொல்வது? இந்த சிறு படமே அந்த மகாகலைஞனை இன்னாரென்று சொல்லிவிடுமே!

*******  
இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன்.
பாகிஸ்தானில் நேற்றைக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் குற்றச்சாட்டுக்களில் தண்டிக்கப் பட்டதை இப்படிக் கொண்டாடுகிறார்கள்!

Real movie release in pakistan now.. Full jam packed house 😂🤣😜
6:06 AM - 24 Dec 2018

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அரசியல்!அரசியல்!

`தேசியக் கட்சிகள் மாநில நலனில் சரியாக செயல் பட முடியாமல் இருக்கிறது. காவிரி பிரச்னை, பெரியார் அணை பிரச்னைகளில் வாக்கு வங்கி அரசியலுக்காக நடுநிலையோடு செயல் படவில்லை’ என குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி.தினகரன் சீறினார் என்கிற தலைப்போடு ஆனந்தவிகடன் செய்தி வெளியிட்டிருக்கிறது 
டி.டி.வி.தினகரன்
இங்கே நேரு காலத்தில் மாநிலங்களுடைய பிரச்சினைகள் அடியோடு புறக்கணிக்கப் பட்டதில் தான் மாநிலக்கட்சிகள் கிளைத்தெழுந்தன என்பதை நேற்று சரண்சிங் பிறந்தநாள் எப்படி  விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்ற செய்தியைத் தொட்டும், நேரு, சாஸ்திரி, தலைமைப்பண்பு என்கிற குறியீட்டுச் சொற்களில் ஏற்கெனெவே எழுதிய பல பதிவுகளிலும் பேசி இருக்கிறோம். இங்கே சென்னை மாகாணமாக இருந்த நாட்களில் இருந்தே திராவிட அரசியல் எப்படியெல்லாம் சந்தர்ப்பத்துக்கேற்ற மாதிரி முகமூடியுடன் சுயநல அரசியலாகவே வளர்ந்து கழகங்களானது என்பதன் நீட்சிதான் தினகரன் பேச்சு! கழகம் என்றாலேயே சூது, மோசடி, ஊழல், அதிகாரக்கொலைகள், மோசடி, ஊழல் செய்வதற்காகவே கூட்டணி தர்மம் என்கிற அர்த்தங்கள் புரிந்துவிடுகிறது, இல்லையா!!
*******     
இங்கே மூச்சுக்கு மூச்சு இது பெரியார் மண் என்று திராவிடம் பேசிப் பிழைப்பு நடத்துகிறவர்கள் பேசக் கேட்டிருப்பீர்கள்! ஈவெரா நினைவுதினம் இன்று. நண்பர் மாணிக்கம் கூகிள் பிளஸ்சில் பகிர்ந்த ஒரு படம் பழையநினைவுகளைக் கிளறி விட்டதோ?
 பதிவர் மறைந்த டோண்டு ராகவனின் இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டம் இது இதைப்படித்தால் மேலே உள்ள படத்துக்கும் டோண்டு சாரின் பதிவுக்கும் என்ன சம்பந்தம் எனப்புரிந்துவிடும் !


Blogger Suresh Ram said...
கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது.

http://www.vinavu.com/2010/09/17/untouchability-in-temples/
September 30, 2010 5:30 PM

அதிசயப்பட்டு மூக்கில் விரலை வைப்பதற்கு முன்னால் அவர் கொடுத்திருக்கும் சுட்டியில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டுத் தெளிவாகக் குழம்பவும்! #வினவு வழக்கமாகக் கையாளும் உத்திதான்!   

டோண்டு ராகவனின் ஒரு பின்னூட்டம் 
டோண்டு சாரின் பதிவையும் பதிவுக்கு வந்த 83 பின்னூட்டக்  கணைகளை யும் வாசித்துப் பார்க்கும்போது டோண்டு ராகவனோடு, அந்தநாட்களில் வலைப்பதிவு எழுதுவது எத்தனை சுவாரஸ்யமாக இருந்தது என நினைத்துப்பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது 
*******
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதன் தலைவர்  திருமாவளவனும் தொடர்ந்து  சர்ச்சைகளில், ஊடகவெளிச்சத்தில் சிக்குவது தற்செயலானதுதானா?

இப்போ தெரியுதா ஏன் விடுதலை சிறுத்தைகள் பொன்மாணிக்கவேலை பதவி நீக்கணும்னு சொன்னாங்கனு?  என்று கேள்வி கேட்கிறார்கள்! 

இன்றைய செய்திகள் எழுப்பும் அரசியல் கேள்விகள் இவை! உங்களிடம் விடை இருக்கிறதா? கொஞ்சம் சொல்லுங்களேன்!