Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

இட்லி வடை பொங்கல்! #66 பாகிஸ்தானுக்கு பதிலடி! #அசுரன் இன்னொரு பார்வை! இப்போது வாசிப்பில்!

காஷ்மீரில் கடும்பனி நிலவுவதை பயன்படுத்தி பாகிஸ்தானில் சிறப்புப்பயிற்சி பெற்ற தீவீரவாதிகள் கேரன் செக்டாரில் குப்வாரா பகுதியில் ஊடுருவியதைக்  கண்டுபிடித்த நமது நாணுவத்தின் சிறப்புப்படை கமாண்டோக்கள் ஐந்து தீவீரவாதிகளைக் கொன்றனர். நமது வீரர்கள் ஐந்து பேர் வீரமரணமடைந்தனர் என்ற செய்தியை சென்ற ஞாயிற்றுக்கிழமை வாக்கில் படித்திருக்கலாம். மார்பளவுக்கு உறைபனியில் தீவீரவாதிகளோடு நேருக்குநேர் hand to hand combat வகையிலான மோதல் அது என்பதை இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் விவரித்த வீடியோ மற்றும் செய்தியை இரண்டுமூன்று நாட்களுக்கு முன் வாசித்தேன். நமது வீரர்கள் உயிரிழப்புக்குப் பதிலடி தருகிற விதத்தில் நேற்றைக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் துல்லியமான பீரங்கித் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானிய ஆயுத கிடங்கு, தீவீரவாதிகளைப் பயிற்றுவிக்கிற நிலைகள் தகர்க்கப் பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. தாக்குதல்களை drone வழியாகப் படம்பிடித்து இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஊர் உலகம் முழுதும் கொரோனா தொற்றால் அலறிக்  கொண்டிருக்கிற நேரமாக, பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை ஏவுகிற வேலைதான்  மிகவும் முக்கியமாக இருக்கிறது என்பது ஆகப் பெரிய பரிதாபம்! ஒரு 12 நிமிட வீடியோ செய்தித்தொகுப்பு இங்கே 


இங்கே இந்த ட்வீட்டர் செய்தியில் 53 வினாடி வீடியோவைப் பார்க்கலாம். 



 

பாகிஸ்தானிய ISIயின் செய்திப்பிரிவு வேறுவழியில்லாமல் பதிலடி வாங்கிக் கொண்டதை ஒப்புக் கொண்டு தொடர்ச்சியாக 3 ட்வீட்டர் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. திருந்த மாட்டார்கள்! 


உயிர்த்தியாகம்  செய்த  நமது வீரர்களுக்கு அஞ்சலி செய்வோம்! உங்கள் தியாகத்தை தேசம் என்றும் மறவாது.


வெற்றிமாறனின் அசுரன் திரைப்படம் வெளியாகி வெற்றிப்படமானதுகூட மறந்துபோய்விட்ட நேரமாகப் பார்த்து இந்தப்படத்தைப்பற்றிய ஒரு வித்தியாசமான பார்வையை முகநூலில் பார்த்தேன்.

Saravana Kumar பெறுநர் 

அசுரன் படம் பார்த்த உடனே எழுதத் தோன்றியது...

நோட்ஸில் எழுதி வைத்தது. இன்று தான் கண்ணில் பட்டது.

"நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ ரூவா இருந்தா புடிங்கிக்குவானுவ ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது சிதம்பரம்"

- அசுரன் பட கிளைமாக்ஸ் வசனம்.

இன்றைய சமூகத்தில் யாரெல்லாம் அந்த சிதம்பரம்?

1. ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து கல்வியைக் கொழுகொம்பாய்ப் பற்றி சாதி வெறுப்பைக் கடந்து, நீந்தி அவமானங்களை முதலை போல் ஜீரணம் செய்து, தான் அந்த சமூக சிக்கலுக்குள் சிக்கிவிடாமல் 'நானும் மனிதர்களில் ஒருவன், எனக்கான இடம் இங்கே உண்டு, எனக்கு அது வேண்டும், யார் தடுத்தாலும் முடியாது' என்று எதிர்நீச்சல் போட்டு நிலைநாட்டிய எண்ணற்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சாதனையாளர்கள்

2. 'உப்பு விக்கப் போனா மழை பெய்யுது, மாவு விக்கப் போனா காத்தடிக்குது' என்ற நிலையில், சட்டப்பூர்வமாக எதைச் செய்தும் தொழிலின் மூலமும் அடுத்த நிலைக்கு மேம்பட முடியாத கையறு நிலையில் இருக்கும் பலப்பல இடைசாதி மக்களின் வீடுகளில் இருந்து வந்து அதே கல்வியைக் கொழுகொம்பாகப் பற்றி 'இங்கே எனக்கும் ஒரு பங்குண்டு, அதை நியாயமாக எடுத்துக் கொள்ள உரிமையுண்டு' என்று வாழ்க்கைக் களம் காணும் அவர்களின் பிள்ளைகள்

3. "நீ கலக்கலைன்னா உங்க தாத்தன் கலக்கியிருப்பான்" என்ற ஆடு - ஓநாய் கதை போல அரசியல் நோக்குடன் வார்த்தெடுக்கப்படும் சாதி பழிவாங்கல் வன்மத்தால் பாப்பான் பாப்பாத்தி என்று சில முன்னோரின் தவறுகளுக்காக வசை பாடப்பட்டு பல அக்ரஹாரங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில் கல்வி ஒன்றே கொழுகொம்பென்று பற்றி பிறந்த மண்ணில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று தமக்கான வாழ்க்கைப் பாதையை மாற்றியமத்துக்கொண்ட ஒவ்வொரு பாப்பானும் பாப்பாத்தியும் அம்பியும்

மேலே சொல்லப்பட்ட அசுரன் பட வசனத்தில் மூன்றாம் வரியை பிள்ளைகளைப் படிக்க வைக்கும் எல்லா பெற்றோரும் சொல்வது தான். முதல் இரண்டு வரிகள் எல்லோர் கண் முன்னே இருந்த, உணர்ந்த உண்மைதான்.

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளில் கண் முன்னே இருந்தும் யாரும் பேசாத கவனிக்காத விஷயங்களை பகுத்து உண்மையை வெளிக்கொணர்வது போல வெற்றிமாறன் முதல் இரண்டு வரிகளையும் படத்தில் அழகாக வடித்துள்ளார்.

மேலே எழுதியதைப் படித்ததும் 'ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருப்பதாகவும் ஒடுக்குவோர் ஒடுக்கிக் கொண்டே இருப்பதாகவும்' நினைப்போருக்கு எட்டிக்காய் அல்லது பச்சைமிளகாய் கடித்தது போலிருக்கலாம். நான் பொறுப்பல்ல...

Paulo Freire — 'The oppressed , instead of striving for liberation, tend themselves to become oppressors.' - இதுதான் இன்றைய நிதர்சனம்.

தமிழாக்கம்: பாவ்லோ ஃப்ரெய்ரே - ஒடுக்கப்பட்டோர் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை அடைவதற்கு முனையாமல் தாங்களே ஒடுக்குவோராய் மாற எத்தனிக்கிறார்கள்

இது உண்மையில்லை என்று ராமசாமியைத் தூக்கிக் கொண்டு வருவோருக்கு - முடிந்தால் இது தவறென்று சான்றுகளுடன் 'பகுத்தறிவு'க்கு எட்டும் வகையில் நிரூபிக்கவும். 

இந்த அடிப்படையான விஷயம் புரிவதற்கே இத்தனை நாட்களாயிற்றா? இதுதான்  என்னுடைய ஆச்சரியம், கேள்வி! கம்யூனிஸ்டுகளையே எடுத்துக் கொள்ளுங்களேன்! பொதுநலம் பேசுவார்கள், போராட வாருங்கள் என்றழைப்பார்கள், கலகத்தைத் தூண்டிவிடுவார்கள்! ஆட்சி கைக்கு வந்தால் என்னென்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஜார்ஜ் ஆர்வெல் தன்னுடைய விலங்குப்பண்ணை நாவலில் (1945) இரண்டே வரிகளில் சொல்லிவிட்டாரே! "எல்லாப்பன்றிகளும் சமம்! ஆனால் சில பன்றிகள் மற்றவைகளைவிட அதிகசமம்!" இங்கே ஆண்டஜாதி குறித்த சர்ச்சைகளை கூகிளில் தேடினீர்களானால் நிறையவே காறித்துப்பும்.

 

கொரோனா ஊரடங்கு ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாய்ப் படுத்திக் கொண்டிருப்பதை மேலே போகன் சங்கர் பகடி செய்வதாக எழுதிக்கலக்கிக் கொண்டிருப்பதே சாட்சி. இந்த வாசிப்பு மட்டும் இல்லாவிட்டால் என்போன்றவர்கள் பாடு உண்மையிலேயே திண்டாட்டம் தான்! இன்று மீள்வாசிப்பாக எடுத்துக் கொண்டபுதினம் ORIGIN டான் ப்ரவுன் எழுதியது. மேவி என்கிற விஸ்வநாத் தியாகராஜன் இந்தப்புத்தகம் வெளிவந்த தருணத்தில் வாங்கியாச்சு என்று கூகிள் பிளஸ்சில் பகிர்ந்ததைப் பார்த்து விட்டுப் போட்டிக்காக புத்தகத்தைத் தேடிப்பிடித்து வாசித்துவிட்டு, வாசித்து முடித்தாகிவிட்டது என்று 
பதில் பிளஸ்சில் சொன்ன 2017 ஆம் வருட ஞாபகங்களுடன்!

   
  மீண்டும் சந்திப்போம். 

வால் பையன் என்கிற பதிவர் அருண் ராஜ்!

இந்தப் பக்கங்களில் வால் பையன் என்று கொஞ்சம் தேடினீர்களானால் ஏகப்பட்ட பதிவுகள், அவரைத் தொட்டு அல்லது அவருடைய பதிவுகளுக்கு பதில் சொல்கிற மாதிரியானவை அல்லது அவருடைய சரவெடி மாதிரி அடுத்தடுத்த பின்னூட்டங்கள் என்றிருந்த  பழைய நாட்களின்   நினைவுகள் இருக்கும். அந்தநாட்களில் மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்த போது வால் பையனைச் சந்திப்பதற்காகவே ஒரு கூட்டத்துக்குப் போனேன் என்று சொல்வதில்  இந்த இளைஞன் எப்படியோ என்னுடைய அபிமானத்துக்கு உரியவராக மாறிப்போன அதிசயம் இருக்கிறது. இத்தனைக்கும் அவருடைய வாழ்க்கைமுறை, அனுபவம், கருத்துக்கள் இப்படி எல்லாவற்றிலும் என்னிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால், தமிழ்ப் பதிவுலகத்தின் செல்லப் பிள்ளையாகவும் இருந்தவர்!


நேற்றிரவு காலமானார் என்பதை முகநூலில் இன்று காலை பார்த்தபோது என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படி ஒரு தவிப்பு! பதிவர் உண்மைத் தமிழன் முகநூலில் இப்படி உருகி அஞ்சலிப்பதிவு எழுதி இருக்கிறார்.

ன்புத் தம்பி.. வால் பையன் என்னும் வாலு..
இந்தப் பூலோகத்தில் சூரியனுக்கு கீழே இருக்கும் அனைத்தும் விமர்சனத்துக்குட்பட்டதுதான் என்று சொல்லி அத்தனை சப்ஜெக்ட்டுகளையும் பேசுவான்.
நாத்திகம், ஆத்திகத்தில் இருந்து கேலக்ஸிவரையிலும் தம்பி தொடாத விஷயமே கிடையாது. அனைத்தும் மேம்போக்காக இல்லை.. முழுவதும் படித்துவிட்டுத்தான் எடுத்து இயம்பியிருக்கிறான்.
நான் வலைத்தளம் புகுந்த சமயத்தில் அசுரனின் வலைப்பூ பக்கத்தில் நாத்திகம், ஆத்திகம், திராவிடம், ஈழம் பற்றி விலாவாரியாக கமெண்ட்டுகள் மூலம் பரிமாறிக் கொண்ட விஷயமெல்லாம் இன்றைக்கு எத்தனை நூலகங்களுக்கு படையெடுத்து புத்தகங்களைத் தேடியெடுத்து படித்தால்கூட கிடைக்காது. அப்படியொரு அறிவுத் தேடலைக் கொடுத்தது..
அத்தனையையும் பேசிவிட்டு தன்னுடைய உடல் நலனில் அக்கறையில்லாமல் வழக்கம்போல மது என்னும் அரக்கனின் துணை கொண்டு போதையுலகத்தில் வாழ்ந்த தம்பி..
அந்தச் சனியனையும் விட்ட தருணத்தில் குடும்பப் பிரச்சினை தலை தூக்கி தம்பியை முடக்கிப் போட.. அதையும் எதிர் நீச்சல் அடித்து எழுந்து வந்து "அண்ணே வந்துட்டண்ணே,,," என்ற குரலைக் கேட்டபோது மனதுக்கு அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுத்தது.
அவனது குழந்தைகள் பற்றி தினமும் அவன் போடும் அப்டேட்டுகள் அவனது சந்தோஷ வாழ்க்கையைச் சொல்லிக் கொண்டேயிருந்தது. அதுவும் பொறுக்கவில்லை அவன் நம்பிய இயற்கைக்கு..
இரண்டு நாட்களுக்கு முன்பாக "மீண்டும் பேச்சு வந்துவிட்டது.. இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக வந்துவிடும்" என்றவனை இன்றைக்கு மாரடைப்பு என்ற எமன் வந்து அழைத்துச் சென்றுவிட்டானாம்..
இதற்குத்தான் அதிசயமாக இன்று காலை சீக்கிரமாக எழ வேண்டிய கட்டாயமா எனக்கு.. முகநூலைத் திறந்தவுடன் முதல் செய்தியே இந்தக் கொடுமைதான்..!
"இறந்தவர்களெல்லாம் பாக்கியவான்கள்" என்று பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்கும்போது மனம் கேட்க மறுக்கிறது. அவனது பிள்ளைகளை நினைக்கும்போது இயற்கையை ஏசத்தான் நினைக்கிறது மனம்.
தமிழ் வலையுலகம் மிகச் சிறப்பான ஒரு வலைப் பதிவரை இன்று இழந்திருக்கிறது. நாத்திக உலகம் மிகச் சிறப்பான ஒரு பரப்புரையாளரை இழந்துவிட்டது.. அறிவுத் தேடலில் ஒரு விரிவான விரிவுரையாளரை என் போன்ற மக்குகளும் இழந்துவிட்டோம்.
போய் வாடா தம்பி.. மீண்டும் உன் வீட்டில் நீயே வந்து பிறப்பாய்.. இப்போதைக்கு இளைப்பாறு..!
#ArunRaj #VaalPaiyan #Vaalu

என் செல்லப்பிள்ளையாகவும்  இருந்த இந்த இளைஞனுக்கு என்ன சொல்லி வழியனுப்புவது?
...................................... 
      

ஒரு அஞ்சலி! சில நினைவுகள்!

பொதுவாக அஞ்சலிப் பதிவுகள் எழுதுகிற வழக்கமான நடைமுறை எனக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. ஆனால் எப்போதாவது ஒருசில விதிவிலக்குகளும் இருந்தே ஆகவேண்டும் இல்லையா? Take off மலையாளத் திரைப்படம் மாதிரி ஒருதலைப்பட்சமாக மலையாளி முதலமைச்சர், மலையாளி தூதரக அதிகாரி, ஒரு மலையாளி தொழிலதிபர், ஒரு மலையாளி நர்ஸ் என்று மலையாளிகள் கூட்டு மட்டுமே சிரியாவில்  ISIS பிடியில் சிக்கிய 46 மலையாளி நர்ஸ்களை மீட்டதாகக் கதை பண்ணிவிடக் கூடாதல்லவா?  வெளியுறவுத்துறை அமைச்சராகக் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாகப்பணியாற்றிய திருமதி ஸ்வராஜ் நேற்றிரவு டில்லியில் மாரடைப்பால் காலமான செய்தியைக் கேட்டதும் நினைவுக்கு வந்த விஷயம், இதற்கு முன்னால்  இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் எவரையும் விட, வெளிநாடுகளில் சிக்கலில் மாட்டிக் கொண்ட இந்தியர்களை மீட்பதில் அவர் காட்டிய அசாத்திய வேகம், திறமை இவைகள் தான்!     


प्रधान मंत्री जी - आपका हार्दिक अभिनन्दन. मैं अपने जीवन में इस दिन को देखने की प्रतीक्षा कर रही थी. ji - Thank you Prime Minister. Thank you very much. I was waiting to see this day in my lifetime.
7:23 PM · Aug 6, 2019Twitter Web App



गृह मंत्री श्री अमित शाह जी को उत्कृष्ट भाषण के लिए बहुत बहुत बधाई. I congratulate the Home Minister Shri ji for his outstanding performance in Rajya Sabha.
7:09 PM · Aug 5, 2019Twitter Web App


பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். 
இளம் வயதிலேயே அமைச்சரான பெண் என்ற பெருமைக்குரியவர், அதுமட்டுமில்லாமல் டெல்லியில் முதலமைச்சராக  பதவி வகித்தவர். அதைபோன்று  பாஜகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து இருக்கிறார். சட்ட துறையில் பட்டம் பயின்று இருக்கிறார். சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களுடைய கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளித்ததின் காரணமாக மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றியிருந்தார். 

வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வவ்போது ட்விட்டரில் கருத்துக்களையும், செய்திகளையும் பதிவிட்டு வந்தவர். 

சுஷ்மா வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட பல்வேறு இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வந்தவர். 

குறிப்பாக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 46 இந்திய செவிலியர்களை பத்திரமாக மீட்டு வர நடவடிக்கை மேற்கொண்டார். வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாக இருந்த இந்தியர்கள் மீட்பு, நைஜீரியாவில் சிக்கிய இந்திய மாலுமிகள் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக செய்துமுடித்தார் சுஷ்மா.என்று அஞ்சலி செய்வது NDTV தமிழ் செய்திகள்! அவர்களால் கூட மறைக்க அல்லது குறைத்துச் சொல்ல முடியாத விஷயங்களாக இருந்தது. மாநிலங்களவையில் திரு வெங்கையா நாயுடு சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு இரங்கல்  செய்தியை வாசித்து விட்டு ஓம் சாந்தி சாந்தி சாந்தி: என்று மனம் மொழி மெய் என மூன்றும் அமைதிபெறப் பிரார்த்தனை செய்த மாதிரி,  நாமும் அவரது ஆன்மா சாந்திபெற பிரார்த்தனை செய்வோம்!  

  கண்ணன் கழலிணை சேர சிந்தைவைப்போம்!  

மனோகர் பரிக்கர் மறைவு! அஞ்சலி!

கோவா முதலமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பிஜேபி அரசில் திறம்படப் பணி செய்த திரு மனோகர் பரிக்கர் உடல்நலம் குன்றியிருந்து சற்றுமுன் காலமானார்.    


In a video clip from an alumni day function at IIT Bombay in 2014, the four-time Goa Chief Minister and former Union Defence Minister Manohar Parrikar — who passed away on Sunday evening after a prolonged illness — is described as the “original Aam Aadmi”. என்று The Hindu நாளிதழில் ஷோபனா கே நாயர் அஞ்சலி செய்திருக்கிறார்.

திறமைசாலியான ஒரு நல்ல நிர்வாகி, தலைவர் மறைவுக்கு மனப்பூர்வமான அஞ்சலிகள்!  

Extremely sorry to hear of the passing of Shri Manohar Parrikar, Chief Minister of Goa, after an illness borne with fortitude and dignity. An epitome of integrity and dedication in public life, his service to the people of Goa and of India will not be forgotten
7:59 PM - 17 Mar 2019 

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருக்கக் கூட முடியாத காங்கிரஸ் கோவாவில் ஆட்சியமைக்க மாலை ஆறுமணிக்கே கவர்னரிடம் மனு! 
Congress stakes claim to form government in Goa; writes to Governor to dismiss BJP-led govt which is in "minority" & call "single-largest party Congress to form govt".Also states in its letter, "any attempt to bring Goa under President's rule will be illegal & will be challenged"

இதுதான் காங்கிரஸ்! இதுதான் இந்திய அரசியலின் அழுகிப்போன பக்கம்!  

செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமே!

நண்பர் அசோக்குமார் தனது தினசரிக் கடமையாக கூகிள் பிளஸ்சில் நாட்காட்டி ஒன்றைப் பகிர்வதுபற்றி ஏற்கெனெவே இங்கே பேசியிருக்கிறோம்! இன்றைய நாட்காட்டி    இப்படி நினைவுபடுத்துகிறது: நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்  என்ற வாசகங்களுக்கு கீழே பொருத்தமாக  சிலரை நினைவு கூர்கிற மாதிரியும்!


நினைத்துப் பார்க்கிறோமா? இந்தக் கேள்வியை நானும் நீங்களும் கேட்டுக் கொண்டால் என்ன சொல்வோம்?

#வாஜ்பாய் #பிறந்தநாள்: நினைவிடத்தில் #மலர் தூவி #பிரதமர் #மோடி #மரியாதை!நவபாரதச் சிற்பி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி சிரத்தாஞ்சலி செய்தனர். முன்னதாக நேற்று வாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயமும் வெளிப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன.முன்னாள் பிரதமர் என்பதற்காகவோ இன்றைய ஆளும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்பதனால் மட்டுமல்ல! ஜனசங்கமாக ஒரு அரசியல் இயக்கத்தை நிறுவியதிலும், நாடே பெரிது என்று 1977 இல் அதை ஜனதா தளத்தில் இணைத்து இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை முறியடிப்பதில் பங்காற்றியதிலும், பழைய ஜனசங்கத்தினரில் பலரும் RSS இலும் உறுப்பினர்களாக இருக்கிறார்களே என்று கிளப்பிவிடப்பட்ட விஷமத்தனமான வெறுப்பரசியலில் நொந்து ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி புதிதாக பாரதீய ஜனதா கட்சியை நிறுவியதிலும் முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் அடல் பிஹாரி வாஜ்பாய் என்றென்றும் இந்திய வரலாற்றில் நினைவு கொள்ளத் தகுந்தவரே!
*******

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, ராஜாஜி, திராவிடங்களால் தேவைப்படும்போது மூதறிஞர் தேவைப்படாதபோது குல்லுக பட்டர் என்று ஏளனப்படுத்தப்பட்ட ராஜாஜியின் நாற்பத்தாறாவது நினைவு தினம் இன்று!

ராஜாஜியின் பேரனும் முன்னாள் மேற்கு வங்க  கவர்னருமான கோபாலக்ருஷ்ண காந்தி ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் இருந்து எடுத்திருக்கும் இந்தத் தலைப்பு ஒரு ஐம்பதாண்டு கால அரசியலைக் கொஞ்சம் பின்னோக்கித் திருப்பிப் பார்க்க வைத்தது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது தான் தமிழகத்தில் மதுவிலக்கு  செய்யப்பட்டு, சாராயக்கடைகள்  கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன  தன்னுடைய வயது, இருந்த பதவியின் கவுரவம் எதையும் பொருட்படுத்தாமல் கருணாநிதியின் வீட்டுக்கே சென்று மதுவிலக்கை ரத்து செய்யும் முடிவைக் கைவிடுமாறு வேண்டிக் கொண்டார்.


ராஜாஜியின் பல அரசியல் நிலைபாடுகள் எனக்கு  உடன்பாடாக இருந்ததில்லை என்றாலும் எத்தனை எதிர்ப்பு வந்தாலும், தன்னுடைய கருத்தை எடுத்துச் சொல்ல அஞ்சாத ஒரு மாமனிதர் என்ற வகையில் இன்றைக்கு அவரது நினைவு தினம் என்பதை இங்கே நினைவுபடுத்துவதற்காக...!


CR was pious, he was not pietist. He was religious, not religiose. He was traditional, not orthodox. He could rebel, but not dally with heterodoxy. He prized intelligence but did not pickle his brains in the vinegar of cleverness. He was accepting of what Time served him, not servile before its buffetings.

ராஜாஜி முதல்வராக இருந்த போது அவருடைய நண்பர் ஒருவர் தனது மாவட்ட ஆட்சித் தலைவர் லஞ்சம் வாங்குவதாகவும் அவரை வேறு இடத்திற்கு மாற்றும்படியும் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். அதற்கு ராஜாஜி, " அவரை மாற்றமுடியாது. ஏனென்றால் லஞ்சத்தையும் ஊழலையும் ஒரு ஜில்லாவிலிருந்து இன்னொரு ஜில்லாவுக்கு மாற்ற விரும்பவில்லை. வேண்டுமானால் அவரிடமுள்ள குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக எழுதி அனுப்புங்கள். அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறோம்!'' என்று பதில் எழுதினார்.  
******* 
#கிறித்தவம் திணித்த #ஆங்கிலேயரை... #ஆயுதமேந்தி எதிர்த்த #தமிழ் மண்ணின் வீரமங்கை... #வேலு #நாச்சியார்!
டிசம்பர் 25:- ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி – முத்தாத்தாள் தம்பதிக்கு பெண் வாரிசாக 1730ஆம் ஆண்டு சக்கந்தியில் பிறந்தவர்.

நினைவுக்கு வருகிறதா? சுட்டியில் பாருங்கள்!

*******


சார்லி சாப்ளின் பற்றித் தனியாக என்ன சொல்வது? இந்த சிறு படமே அந்த மகாகலைஞனை இன்னாரென்று சொல்லிவிடுமே!

*******  
இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன்.
பாகிஸ்தானில் நேற்றைக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் குற்றச்சாட்டுக்களில் தண்டிக்கப் பட்டதை இப்படிக் கொண்டாடுகிறார்கள்!

Real movie release in pakistan now.. Full jam packed house 😂🤣😜
6:06 AM - 24 Dec 2018