செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமே!

நண்பர் அசோக்குமார் தனது தினசரிக் கடமையாக கூகிள் பிளஸ்சில் நாட்காட்டி ஒன்றைப் பகிர்வதுபற்றி ஏற்கெனெவே இங்கே பேசியிருக்கிறோம்! இன்றைய நாட்காட்டி    இப்படி நினைவுபடுத்துகிறது: நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்  என்ற வாசகங்களுக்கு கீழே பொருத்தமாக  சிலரை நினைவு கூர்கிற மாதிரியும்!


நினைத்துப் பார்க்கிறோமா? இந்தக் கேள்வியை நானும் நீங்களும் கேட்டுக் கொண்டால் என்ன சொல்வோம்?

#வாஜ்பாய் #பிறந்தநாள்: நினைவிடத்தில் #மலர் தூவி #பிரதமர் #மோடி #மரியாதை!நவபாரதச் சிற்பி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி சிரத்தாஞ்சலி செய்தனர். முன்னதாக நேற்று வாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயமும் வெளிப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன.முன்னாள் பிரதமர் என்பதற்காகவோ இன்றைய ஆளும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்பதனால் மட்டுமல்ல! ஜனசங்கமாக ஒரு அரசியல் இயக்கத்தை நிறுவியதிலும், நாடே பெரிது என்று 1977 இல் அதை ஜனதா தளத்தில் இணைத்து இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை முறியடிப்பதில் பங்காற்றியதிலும், பழைய ஜனசங்கத்தினரில் பலரும் RSS இலும் உறுப்பினர்களாக இருக்கிறார்களே என்று கிளப்பிவிடப்பட்ட விஷமத்தனமான வெறுப்பரசியலில் நொந்து ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி புதிதாக பாரதீய ஜனதா கட்சியை நிறுவியதிலும் முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் அடல் பிஹாரி வாஜ்பாய் என்றென்றும் இந்திய வரலாற்றில் நினைவு கொள்ளத் தகுந்தவரே!
*******

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, ராஜாஜி, திராவிடங்களால் தேவைப்படும்போது மூதறிஞர் தேவைப்படாதபோது குல்லுக பட்டர் என்று ஏளனப்படுத்தப்பட்ட ராஜாஜியின் நாற்பத்தாறாவது நினைவு தினம் இன்று!

ராஜாஜியின் பேரனும் முன்னாள் மேற்கு வங்க  கவர்னருமான கோபாலக்ருஷ்ண காந்தி ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் இருந்து எடுத்திருக்கும் இந்தத் தலைப்பு ஒரு ஐம்பதாண்டு கால அரசியலைக் கொஞ்சம் பின்னோக்கித் திருப்பிப் பார்க்க வைத்தது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது தான் தமிழகத்தில் மதுவிலக்கு  செய்யப்பட்டு, சாராயக்கடைகள்  கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன  தன்னுடைய வயது, இருந்த பதவியின் கவுரவம் எதையும் பொருட்படுத்தாமல் கருணாநிதியின் வீட்டுக்கே சென்று மதுவிலக்கை ரத்து செய்யும் முடிவைக் கைவிடுமாறு வேண்டிக் கொண்டார்.


ராஜாஜியின் பல அரசியல் நிலைபாடுகள் எனக்கு  உடன்பாடாக இருந்ததில்லை என்றாலும் எத்தனை எதிர்ப்பு வந்தாலும், தன்னுடைய கருத்தை எடுத்துச் சொல்ல அஞ்சாத ஒரு மாமனிதர் என்ற வகையில் இன்றைக்கு அவரது நினைவு தினம் என்பதை இங்கே நினைவுபடுத்துவதற்காக...!


CR was pious, he was not pietist. He was religious, not religiose. He was traditional, not orthodox. He could rebel, but not dally with heterodoxy. He prized intelligence but did not pickle his brains in the vinegar of cleverness. He was accepting of what Time served him, not servile before its buffetings.

ராஜாஜி முதல்வராக இருந்த போது அவருடைய நண்பர் ஒருவர் தனது மாவட்ட ஆட்சித் தலைவர் லஞ்சம் வாங்குவதாகவும் அவரை வேறு இடத்திற்கு மாற்றும்படியும் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். அதற்கு ராஜாஜி, " அவரை மாற்றமுடியாது. ஏனென்றால் லஞ்சத்தையும் ஊழலையும் ஒரு ஜில்லாவிலிருந்து இன்னொரு ஜில்லாவுக்கு மாற்ற விரும்பவில்லை. வேண்டுமானால் அவரிடமுள்ள குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக எழுதி அனுப்புங்கள். அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறோம்!'' என்று பதில் எழுதினார்.  
******* 
#கிறித்தவம் திணித்த #ஆங்கிலேயரை... #ஆயுதமேந்தி எதிர்த்த #தமிழ் மண்ணின் வீரமங்கை... #வேலு #நாச்சியார்!
டிசம்பர் 25:- ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி – முத்தாத்தாள் தம்பதிக்கு பெண் வாரிசாக 1730ஆம் ஆண்டு சக்கந்தியில் பிறந்தவர்.

நினைவுக்கு வருகிறதா? சுட்டியில் பாருங்கள்!

*******


சார்லி சாப்ளின் பற்றித் தனியாக என்ன சொல்வது? இந்த சிறு படமே அந்த மகாகலைஞனை இன்னாரென்று சொல்லிவிடுமே!

*******  
இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன்.
பாகிஸ்தானில் நேற்றைக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் குற்றச்சாட்டுக்களில் தண்டிக்கப் பட்டதை இப்படிக் கொண்டாடுகிறார்கள்!

Real movie release in pakistan now.. Full jam packed house 😂🤣😜
6:06 AM - 24 Dec 2018
இன்னைக்கு இது போதுமா? 
  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!