சண்டேன்னா மூணு! அரசியல்! சினிமா! #MeToo

சண்டேன்னா மூணு! அரசியல்! சினிமா! #MeToo இப்படித் தனித்தனியாகச் சொன்னாலும், மூன்றிலும்  மைய நீரோட்டமாக ஒருவித அரசியல் இருப்பதைக்
கவனித்திருக்கிறீர்களா?

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டார்!ரஜனிகாந்த் சொல்லிக்கொண்டே இருக்கிறார்! விஜய் படங்களில் பன்ச் டயலாக் பேசிப்பேசியே கொஞ்சம் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்! ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்பே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே அரசியல் களத்தில் இறங்கியதோடு தேர்தல்களை சந்தித்து 29 சமஉக்களோடு எதிர்க் கட்சித்தலைவராகவும் ஆன தேதிமுக தலைவர் விஜய்காந்த் மீண்டும் அரசியல் களத்தில்! இங்கே விவாதத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்!


தேதிமுக மீண்டும் புத்துயிர் பெறுமா என்பதைக் காலமும் தேர்தல்களமும் தான் சொல்லவேண்டும்!


விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் தந்தை உடல் நலம், தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து இங்கே பேசியிருப்பதையும் பாருங்கள்! குழப்பமில்லாமல் தெளிவாகப் பேசுகிற இந்த இளைஞனை அரசியல் பகுதியில் அறிமுகமாக!
   
           *******


இப்படி இளையராஜா பாடிக் கொண்டாடிய சினிமா இன்றைக்கு  நிலையில் இருக்கிறது? கூத்தாடிகள் இரண்டுபட்டால் ஊரெல்லாம் கொண்டாட்டம் என்ற மாதிரியா?

  
அப்படியெல்லாமில்லை! எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலென்ன என்று அது பாட்டுக்கு என்வழி தனிவழி என்று போய்க்கொண்டே தானிருக்கிறது! 2018 இல் வெளியான தமிழ்ப்படங்களில் வித்தியாசமான களத்தை வைத்து வந்த படங்களாக 96, சீதக்காதி இரண்டுமே இருந்தன என்பதை மறுக்க முடியாது!

******* 
#MeToo என்பதை இந்தியாவில் நானாபடேகர் மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தி முதலில் ஆரம்பித்து வைத்தவர் தனுஸ்ரீ தத்தா என்கிற நடிகைதான்! அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட இந்த நடிகை கடந்த செப்டம்பரில் Zoom TV ற்கு கொடுத்த ஒரு பேட்டியில் நானாபடேகர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆரம்பமான #MeToo இங்கே தமிழ் நாட்டில் கண்டுகொள்ளப்படாமலேயே போயிருக்கும்!

திரைப்படப்பாடகி சின்மயி தனக்கும் அது நடந்ததாக ட்வீட்டரில் ஆரம்பிக்கப்போக இங்கேயும் அது கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. எத்தனை நாளைக்கு? ராதாரவி வந்து ஆட்டையைக் கலைக்கிற வரைதான்! டப்பிங் யூனியனில் இருந்து தன்னை நீக்கி விட்டதாக, தான் ஆயுட்கால மெம்பர் என்றெல்லாம் பேசியதில் அக்கப்போர் வேறொரு திசைக்கு மாறி 
இப்போது இங்கே வந்து நிற்கிறது!

     
இந்த ஞாயிறு, இந்த மூணு போதுமா?

   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!