Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

சண்டேன்னா மூணு! #அரசியல் #சினிமா #அக்கப்போர்

வெட்டி அக்கப்போர்களால் ஆனது அரசியல், சினிமா. இலக்கியம் என்பதை நம்மூரில் தொடர்ந்து நிரூபித்து வருகிற காமெடியை ஜனங்களாகிய நாம் ரொம்பவும் ரசிக்கப் பழகி விட்டோமா? அல்லது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறமாதிரி அமைதியாக இருந்தே, ஆட விட்டுவிட்டோமா? இப்படி இங்கே நான் என்னதான் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் பதில் வராது என்பது கூடத் தெரிந்ததுதான்! 

    
இந்த வீடியோவை இப்போது பார்க்கும்போது யூட்யூப் தளத்தில் இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 42ஆயிரத்தை தாண்டி விட்டது என்பதில் அக்கப்போர்கள்  தமிழர்களுடைய வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா? இத்தனைக்கும் தவாஉ கட்சியோ வேல்முருகனோ தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பிரபலம் அல்ல!   வீடியோ 28 நிமிடம் 


Behindwoods ஆவுடையப்பன்! அனல் பறக்கும் விவாதம் நடத்தக் கூடியவர் என்பதை இந்த வீடியோவுக்கு அவர்கள் கொடுத்திருக்கிற தலைப்பிலிருந்துதான் நான் தெரிந்து கொண்டேன்! திரௌபதி திரைப்படம் குறித்து அதன் இயக்குனர் மோகன் Gயுடன் இந்த விவாதத்தில் என்ன சொல்ல வருகிறார்? யாருடைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் நிறையப்பேரை இந்தப்படம் கலவரப்படுத்தியிருக்கிறது என்பது இதே ஆவுடையப்பன் இதே தளத்தில் இன்னுமொரு விவாதத்தை செங்கொடி, கோபி இவர்களுடன் நடத்தியிருப்பதில் இருந்து தெளிவாகிறது. ஒருபக்கச் சார்பாகவே பேசுவது இங்கே ஊடகங்களின் பொதுவான இயல்பாகவே ஆகிவிட்டது என்பதால் பா, ரஞ்சித்தின் அத்துமீறல்களை  சகித்துக் கொள்கிறவர்கள், திரௌபதி படத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதில் ஆச்சரியமில்லைதான்! அப்படி ஒரு படம் பிடிக்கவில்லை என்றால், அதை சட்டைசெய்யாமல் போய்விடுகிற ஆப்ஷன் ஜனங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்! திரௌபதி படத்துக்கு The News Minute தளத்தில் எடுக்கப்பட்டிருக்கவே கூடாத படம் என்று  தலைப்பிட்டு ஒரு விமரிசனம் வந்திருந்தது.  ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.


#அக்கப்போர் #சினிமா என்று பார்த்துவிட்டு #அரசியல் பக்கம் பார்க்க வேண்டாமா? புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த 45 நிமிட வீடியோ விவாதத்தில் CAA எதிர்ப்பு அரசியலைக் குறித்து மிகத் தெளிவாக, தன்னுடைய கருத்துக்களை சொல்கிறார். News 7 சேனல் மிக நேர்மையாக ஒரு விவாதத்தை குறுக்கீடுகள், கோணல் கேள்விகள் இல்லாமல்  நடத்தும் என்று நினைப்பதே தவறுதான்! விஜயனுடைய குறுக்கீடுகளையும் மீறி டாக்டர் கிருஷ்ணசாமி எப்படித் தன்னுடைய கருத்துக்களை முன்வைக்க முடிந்தது என்பது ஆச்சரியம்! 

இத்தனையும் பார்த்துவிட்டு, இலக்கியத்தில் என்ன அக்கப்போர், அதைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என்று யாரும் கேட்கமாட்டீர்கள் என்று நம்புவதால் அதை சாய்ஸில் விட்டாயிற்று. கட்டாயம் அதுவும் வேண்டும் என்று யாருக்காவது ஆசை இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்! link, reference எல்லாம் தருகிறேன்!

மீண்டும் சந்திப்போம்.            
          

கொறிப்பதற்கு கொஞ்சம் சினிமா சங்கதிகள்!

அமேசான் பிரைமில் The Family Man என்கிற வெப் சீரீஸ் பத்து எபிசோடுகள், மொத்தம்  எட்டுமணிநேரம் ஓடுவதில் முதல் நான்கு எபிசோடுகளைப் பார்த்து முடித்தாயிற்று. தைரியமாக எங்கள் Blog ஸ்ரீராமுக்குப் பரிந்துரை செய்யலாம்!  தமிழிலேயே பார்க்க முடிந்தது என்னுடைய நல்ல நேரம். .


Netflix வெப் சீரீஸ்களில் வருகிற  மாதிரி soft porn மற்றும் நிறைய கெட்ட வார்த்தைகளில் திட்டுவதென்பது, இதில் பார்த்த வரை இல்லை என்பது கொஞ்சம் நிம்மதி! 


ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு பதிவர் உண்மைத்த.மிழன் எழுதியிருக்கிற விமரிசனத்தைப் படித்த பிறகு இந்தப் படம் பார்க்கலாமென்று முடிவு செய்தாகி விட்டது. படத்துக்கு அவர்  4/5  ரேட்டிங் கொடுத்திருக்கிறார். பார்த்திபன் ஒருவர் மட்டுமே soloவாக நடித்திருக்கிறார், மற்ற கதாபாத்திரங்கள் எவரையும் காட்டாமல் பின்னணிக் குரலில் மட்டும் அவர்களது இருப்பையும் சேர்த்துக் கதை பின்னியிருக்கிறார் என்று உண்மைத்தமிழன் சொல்கிறார்.

      
இது கார்டூனிஸ்ட் மதனுடைய வீடியோ விமரிசனம். ஆனால் இது பார்த்திபனுடைய ஒரிஜினல் ஐடியா தானா? இல்லை என்பது தமிழில் இதே மாதிரி ஒரு படத்தை யூட்யூபிலேயே ரிலீஸ்  செய்திருந்ததை 2016 வாக்கிலேயே பார்த்துவிட்டு  கூகிள் பிளஸ்சில் திரைப்பட விமரிசனமும் எழுதியிருந்தேன். அதில் ஒரு எழுத்தாளருடைய மனைவியின் மரணத்தை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வருகிறார். கேள்விகள் பதில்கள் என்பதோடு மற்ற கதாபாத்திரங்களுடைய இருப்பு பின்னணிக் குரலாகவே போவதில் க்ளைமேக்ஸ்  யாரும் எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்டுடன் முடிகிறது.  அதுவரை பார்த்ததெல்லாம் வெறும் ஒத்திகைதான்! மனைவியை இனிமேல்தான் எழுத்தாளர் கொலை செய்யப்போகிறார்! ஒரு குற்றத்தை perfect ஆக செய்வதற்காக என்ற பன்ச் வரியோடு முடிகிற அந்தப்படத்தின் கதை வசனம் தயாரிப்பு எல்லாம் ஒரு விளம்பர ஏஜென்சி நடத்துகிற ஒருவருடையது. இன்ஸ்பெக்டராகவும் எழுத்தாளராகவும் நடித்த்தும் அவரே என்பது தான் கூடுதல் சுவாரசியம். படத்தின் பெயரோ அதைத் தயாரித்தவருடைய பெயரோ இப்போது நினைவுக்கு வரவில்லை. (விரைவில் தேடிக்கண்டுபிடித்துச் சொல்வேன்!) மிகக்குறைந்த செலவில் தயாரித்தது என்பதால் தயாரிப்பாளர் தியேட்டர் ரிலீசுக்கு முயற்சி செய்யவே இல்லை.நேரடியாக யூட்யூபில் வெறும் 25 ரூ கொடுத்துப் பார்க்கிறவர்கள் பார்க்கலாம், காசு கொடுக்காமலும் பார்க்கலாம் என்று விட்டு விட்டார்! பார்த்திபன் இதில் கூடுதல் கொலைகளைச் சேர்த்து இருக்கிறார் என்பதாலேயே இது அவரே ஜொந்தமா ஜிந்திச்சது ஆகிவிடுமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இதைப் பார்க்க விரும்புகிறேன் என்பது இங்கே பதிவின் twist!


என்னதான் சினிமா கொறிப்பு என்று பதிவை ஆரம்பித்தாலும் அரசியல் பேசாமல் இருந்துவிட முடியுமா? கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரவர கார்டூன்களிலும் உளற ஆரம்பித்து விட்டார் என்பதற்கு மேல் இந்தக் கார்டூன் சொல்லவருவது தான் என்ன? சென்செக்ஸை வைத்துப் பொருளாதார ஆரோக்கியத்தை அளந்தது எல்லாம் சீனாதானா காலத்துச் சித்துவேலைகள்! பிஜேபியில் எவராவது சென்செக்ஸ் புள்ளிகளை வைத்துப் பொருளாதாரத்தை அளந்திருக்கிறார்களா என்ன? இங்கே சொல்ல வருகிற மாதிரி இந்தியப் பொருளாதாரம் ஒன்றும் படுத்த படுக்கையாகவோ நொண்டிக்கொண்டோ இல்லை!

சினிமாக் கொறிப்போடு, கொஞ்சம்  யோசிப்பதற்காகவும் ஒரு விஷயம் வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்.                        

சண்டேன்னா மூணு! அரசியல்! சினிமா! #MeToo

சண்டேன்னா மூணு! அரசியல்! சினிமா! #MeToo இப்படித் தனித்தனியாகச் சொன்னாலும், மூன்றிலும்  மைய நீரோட்டமாக ஒருவித அரசியல் இருப்பதைக்
கவனித்திருக்கிறீர்களா?

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டார்!ரஜனிகாந்த் சொல்லிக்கொண்டே இருக்கிறார்! விஜய் படங்களில் பன்ச் டயலாக் பேசிப்பேசியே கொஞ்சம் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்! ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்பே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே அரசியல் களத்தில் இறங்கியதோடு தேர்தல்களை சந்தித்து 29 சமஉக்களோடு எதிர்க் கட்சித்தலைவராகவும் ஆன தேதிமுக தலைவர் விஜய்காந்த் மீண்டும் அரசியல் களத்தில்! இங்கே விவாதத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்!


தேதிமுக மீண்டும் புத்துயிர் பெறுமா என்பதைக் காலமும் தேர்தல்களமும் தான் சொல்லவேண்டும்!


விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் தந்தை உடல் நலம், தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து இங்கே பேசியிருப்பதையும் பாருங்கள்! குழப்பமில்லாமல் தெளிவாகப் பேசுகிற இந்த இளைஞனை அரசியல் பகுதியில் அறிமுகமாக!
   
           *******


இப்படி இளையராஜா பாடிக் கொண்டாடிய சினிமா இன்றைக்கு  நிலையில் இருக்கிறது? கூத்தாடிகள் இரண்டுபட்டால் ஊரெல்லாம் கொண்டாட்டம் என்ற மாதிரியா?

  
அப்படியெல்லாமில்லை! எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலென்ன என்று அது பாட்டுக்கு என்வழி தனிவழி என்று போய்க்கொண்டே தானிருக்கிறது! 2018 இல் வெளியான தமிழ்ப்படங்களில் வித்தியாசமான களத்தை வைத்து வந்த படங்களாக 96, சீதக்காதி இரண்டுமே இருந்தன என்பதை மறுக்க முடியாது!

******* 
#MeToo என்பதை இந்தியாவில் நானாபடேகர் மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தி முதலில் ஆரம்பித்து வைத்தவர் தனுஸ்ரீ தத்தா என்கிற நடிகைதான்! அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட இந்த நடிகை கடந்த செப்டம்பரில் Zoom TV ற்கு கொடுத்த ஒரு பேட்டியில் நானாபடேகர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆரம்பமான #MeToo இங்கே தமிழ் நாட்டில் கண்டுகொள்ளப்படாமலேயே போயிருக்கும்!

திரைப்படப்பாடகி சின்மயி தனக்கும் அது நடந்ததாக ட்வீட்டரில் ஆரம்பிக்கப்போக இங்கேயும் அது கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. எத்தனை நாளைக்கு? ராதாரவி வந்து ஆட்டையைக் கலைக்கிற வரைதான்! டப்பிங் யூனியனில் இருந்து தன்னை நீக்கி விட்டதாக, தான் ஆயுட்கால மெம்பர் என்றெல்லாம் பேசியதில் அக்கப்போர் வேறொரு திசைக்கு மாறி 
இப்போது இங்கே வந்து நிற்கிறது!

     
இந்த ஞாயிறு, இந்த மூணு போதுமா?