மண்டேன்னா ஒண்ணு! தேர்தல் அரசியல்!

தமிழக தேர்தல்களம் தயாராகி வருவதில் நிறைய வேடிக்கைகளும், குழப்பங்களும் இருப்பது வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது. விசிகவுக்கு 2 தொகுதிகள் என்று திமுக கூட்டணியில் உறுதியாகி விட்டதாக செய்திகள் வந்தாலும் ஜெயலலிதா பாணியில் விசிக திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற  நிபந்தனையை விசிக தாண்டிவருமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை என்கிறார்கள் இங்கே மதிமுக இன்னமும் முறுக்கிக் கொண்டுதான் இருக்கிறது போல! புஸ்வாணம் ஆகிப்போன பின்னாலும் எதற்கு இந்தக் கோமாளித்தனம்?

அதுதானையா தமிழ்நாடு அரசியல்!   
திமுக அதிமுக இரண்டு தரப்பிலுமே யார் பலமான கூட்டணி அமைப்பது என்பதில் நிலவிய போட்டியில் ஆரம்பத்தில் இருந்த வலுவான மெகா கூட்டணி என்ற இமேஜ் திமுகவுக்கு இருந்ததைக் கோட்டை விட்டு விட்டார்கள்!  கூட்டணி வேறு தொகுதிப்பங்கீடு வேறு என்று சப்பைக்கட்டு ரெடியாக இருக்கவே இருக்கிறது!  

வைகோ / திருமாவளவன் உதயகுமார்/டேனியல் காந்தி/
பியூஸ் மணுஷ்/மனுஷ்யபுத்திரன் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்/
P.R. பாண்டியன்/அய்யாக்கண்ணு மதிமாறன் /தியாகு/ கௌதமன்
தூத்துக்குடி பாத்திமா /சுந்தரவள்ளி தோழி புவனேஸ்வரி/ தோழி ரோகிணி
சைமன் செபாஸ்டியன்/ வேல்முருகன் சுப.வீரபாண்டியன் / வீரமணி/ வைரமுத்துதாமஸ் பாண்டியன் / அருணன் / வளர்மதி பாரதிராஜா /அமீர்/ மக்கள் அதிகாரம் இடது & வலதுகள் மசூதிகள் & சர்ச்சுகள் 
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர்களின் ஆதரவுடன்தானே திமுக காங்கிரஸ் கூட்டணி,நாடாளுமன்றத் தேர்தலைச்சந்திக்கப் போகிறது? எந்தக் கொள்கையும் இல்லை!எந்த புண்ணாக்கும் இல்லை!.நாட்டின் வளர்ச்சியின் மீது எந்த அக்கறையும் இல்லை!

இப்படி முகநூலில் மகேந்திரன் மகி என்பவர் தமிழக அரசியலின் பரிதாபங்களை புட்டுப் புட்டுவைக்கிறார்! 
இல்லாத பூச்சாண்டி ஒன்றைக் கற்பனை செய்து பூதாகாரமாக்குவது! ஒயிக! ஒயிப்போம்! என்று கூக்குரல் எழுப்பவேண்டியது! இதுதானே திராவிடங்கள் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, கட்டிக் காப்பாற்றிவரும் திராவிட மாயை! 

இவர்களோடு சேர்ந்து சனாதன வேரறுப்போம் என்று விசிக  கூவியே ஒரு இரண்டு சீட்டைப் பிடித்தாயிற்று! நரேந்திர மோடியை பூதமாக்கி ஒயிக! மோடியே ஓடிப்போ! எங்க ஏரியா உள்ளே வராதே என்று கூவுகிறவர்கள் எல்லோரும் இன்று ஒரே அணியில் என்பதற்குமேல், இவர்களிடம் ஆதரிக்கக் கூடிய, ஆதரிக்க வேண்டிய ஒரு நல்ல விஷயமாவது இருக்கிறதா?  

கும்பலாகச் சேர்ந்து நரேந்திர மோடியை இவர்கள் எதிர்ப்பது ஏன்? பரப்புரை செய்கிற விஷயங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இவர்கள் ஒவ்வொருவரும் மோடியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது மோடியை முன்னிறுத்தி பிஜேபி வளர்வது தங்களுடைய இருப்புக்கே உலைவைத்துவிடும் என்ற அச்சத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

இந்தக் கும்பல் எதிர்ப்பதாலேயே நரேந்திர மோடியை  ஆதரிப்பது ஒன்றுதான் சரியான முடிவு என்று சொன்னால் சரியா? தவறா? 

கொஞ்சம் சொல்லுங்களேன்!

                    

15 comments:

  1. //பரப்புரை செய்கிற விஷயங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இவர்கள் ஒவ்வொருவரும் மோடியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,//

    இது காரணமாயிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Demonetisation ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம்!

      Delete
    2. ஜிஎஸ்டியும் ஒரு கூடுதல் காரணம்! விசிக கம்யூனிஸ்ட்களுக்கு அதில் என்ன பாதிப்பு?

      Delete
  2. ஒரு கம்யூனிஸ்ட்காரர் (பெயர் ஞாபகமில்லை) அதிமுகவை குறைந்த தொகுதிகளில் போட்டியிட வைக்கவேண்டும் என்கிற தங்கள் திட்டம் நிறைவேறி விட்டதாகச் சொல்லி இருந்ததைப் படித்தேன்! குவிமீமஒ!

    ReplyDelete
    Replies
    1. அதிமுக கூட்டணியில் நடத்திவிட்டதாகச் சொல்லும் அதேவேலையைத் தானே இவர்கள் திமுக கூட்டணியிலும் செய்து கொண்டிருக்கிறார்கள்?!! வெறும் 18 எம்பிக்களை வைத்து கருணாநிதி ஐமுகூட்டணியில் ஆதிக்கம் செலுத்திய பழைய கதை இனிமேல் திரும்பவராது என்பதை 2014 போலவே 2019 தேர்தலும் நிரூபிக்கும்!

      Delete
    2. எனக்கு ஸ்டாலினின் அரசியல் திறமைமேல் நம்பிக்கை இல்லை. கருணாநிதி எப்போதும் மார்க்ஸ்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்கு முதலில் தொகுதிகளை வழங்குவார், 2 சீட். அப்புறம் இடது கம்யூனிஸ்டுகளை தலையால் தண்ணீர் குடிக்கச் சொல்லி 1லிருந்து ஆரம்பித்து 1லேயோ இல்லை 2 லேயோ நிறுத்துவார். ஆனால் தங்களுக்கு எப்போதுமே சப்போர்டிவ் ஆக இல்லாத இடது கம்யூனிஸ்டுகளுக்கு முதலில் சீட் ஒதுக்கியது ஆச்சர்யமாக இருக்கு (ஒருவேளை டேனியல் ராஜாவின் இன்ஃப்ளூயன்ஸா தெரியலை)

      Delete
    3. இதற்கென்ன சொல்வது நெல்லைத்தமிழன்?

      இசுடாலின் கருணாநிதி மகனாக வேண்டுமானால் இருக்கலாம்! ஆனால் கருணாநிதியின் தந்திரங்கள் தெரியாதவர்!

      Delete
    4. நெல்லை.. ஒரு சின்ன திருத்தம்.

      இடது கம்யூனிஸ்ட் என்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

      இந்திய கம்யூனிஸ்ட் தான் வலது கம்யூனிஸ்ட் என்று வழக்கத்தில் சொல்வது.

      இந்திய கம்யூனிஸ்ட் ராஜ்யசபா உறுப்பினர் தான் டேனியல் ராஜா. கிட்டதட்ட 4 டெனியுர்களுக்கு இவர் திராவிட கட்சிகளின்
      (திமுக அல்லது அதிமுக) ஆதரவிலேயே ராஜ்ய சபா உறுப்பினர் ஆகியிருக்கிறார். தொகுதியே கொடுக்கவில்லையென்றாலும் D. ராஜாவுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கிறதென்றால் இவர்களுக்கு சரியே. எப்படியிருந்த கட்சிகள்?.. கம்யூன் வாழ்க்கை.. நினைத்துப் பார்க்கவே முடியாத தியாகங்கள்.. ஜெயகாந்தனின் ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்கள் புத்தகம் படித்தால் இரத்தம் கொதிக்கும். திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட்டின் கோட்டை. அதை திராவிடக்கட்சி தங்கள் வசமாக்கிக் கொண்டது. நாகப்பட்டிணத்தை இழந்தார்கள்.
      புதுவையில் வ.சுப்பையாவும், ரங்கநாதனும் கட்டிக் காப்பாற்றிய இயக்கம். குபேர் காலத்திலிருந்தே காங்கிரஸூம் இந்திய கம்யூனிஸ்ட்டும் தான் மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகள்,
      வ. சுப்பையா, ரங்கநாதன் போன்றவர்கள் கட்டிக்காப்பாற்றிய யூனியன் பிரதேசத்தை இழந்து நிற்கிறார்கள். குறிப்பிட்ட சதவிகித வாக்குகள் கிடைக்கவில்லை அகில இந்திய கட்சி என் கிற அந்தஸ்த்தையே இழக்கும் அபாயத்தில் இருக்கும் நிலையை நினைத்துப் பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகிறது.

      Delete
  3. ரிசல்ட் 5 இவங்க, 35 அவங்க என்று வருமோ? விஜயகாந்த் பிரச்சாரம் செய்யப்போவதில்லை. பிரேமலதா பிரச்சாரம் செய்தால் வரும் வாக்குகளும் வராது. பாமக எவ்வளவு தூரம் முனைப்புடன் பிரச்சாரம் செய்யும் (அவர்களது 7 தொகுதிகளைத் தவிர) என்பதும் கேள்விக்குறி. ஜெ. தலைமை இல்லாததும், 10-15% தினகரன் எடுக்க வாய்ப்பு இருக்கும் என்பதும்தான், ஸ்டாலின் தெம்பாக இருக்கக் காரணம். நிச்சயம் 20 சீட்டுகளாவது திமுக வெற்றி பெறும் என்று அவர் நம்புகிறார். அதனால்தான் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்கச் சொல்கிறார்.

    வைகோவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை எதுவும் கிடையாது என்பதால் அவர் சூரியன் சின்னத்திலேயே நிற்கலாம். அல்லது, கைச் சின்னத்தில் நிற்பது இன்னமும் சரியானதாக இருக்கும் (ஏன்னா மோடி, பாஜகவை எதிர்ப்பது என்பது மட்டும்தானே அவர் கொள்கை)

    ReplyDelete
    Replies
    1. சுவாசிக்கப்போறேங்க தளத்தில் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான் இந்த கணக்குகள் எப்படிச் செல்லுபடியாகாது என்று சொல்ல ஆரம்பித்தேன்! சீட்டுக்கட்டைக் கலைத்துப் பிரித்துப் போட்டபிறகு போனமுறை வந்த கார்டுகள் அப்படியே வருமா?

      Delete
  4. இந்தத் தேர்தலில் திமுகவின் 25%, 9%+5% + காங்கிரசின் 5% வாக்குகள் பெற்று, எதிர் தரப்பை விட ஒவ்வொரு தொகுதியிலும் 5-10%மாவது அடுத்த வேட்பாளரை விட வாக்குகள் வாங்குவார்கள் என்று தோன்றுகிறது. இளைஞர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. புதிய வாக்காளர்கள் மற்றும் இதற்கு முன்பு ஒருமுறை வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சுமார் நாலில் ஒருபங்கு! இவர்களில் எத்தனைபேர் தினகரன் கமல் போன்ற புதிய குதிரைகள் மீது பெட் கட்டுவார்கள் என்பது இப்போது தெரிந்துகொள்ள முடியாத விஷயம்!

      முக்கியமாக இவர்கள் இதற்கு முன் யாரை ஆதரித்தார்கள் என்பதோ இப்போது யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதோ தெரியாமல் 2014, 2016 தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு, சதவீதங்களாகக் கூட்டுவது தவறாக முடியக்கூடிய அனுமானம்.

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. எது சொன்னாலும் பிரசுரிக்கப்போவதில்லை பின்பு ஏன் என்ன தயக்கம் சொல்லவேண்டியதைச் சொல்லுங்கள் என்று கேட்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார் ஒருவர்! கமெண்ட் பெட்டிக்கு மேலே தங்களைப் பற்றிய சிறு அறிமுகம் இல்லாதவர்கள், அனானிகள் கமெண்ட் ஏற்பதற்கில்லை என்று தெளிவாக இருப்பதை மறந்து விட்டு என்னைக் கேள்வி கேட்டிருக்கிறார்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!