நம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக!
தேர்தல் திருவிழாவா? ஊழல், திருட்டுக்கு அச்சாரமா?
பொதுத் தேர்தல் வந்தால் கூடவே புறக்கணிப்பு செய்யப் போவதாக சிலபல இடங்களில் போராட்ட அறிவிப்புக்களும் வருவது நம்மூர் ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு, வாடிக்கை! இப்போது தங்களுடைய அபிமான வேட்பாளரை நிறுத்தாததால் தீக்குளிப்பு அறிவிப்பு வரைபோனது சோனியா காங்கிரசில் என்பது இன்னொரு புதுவித வேடிக்கை!
9 வங்கிக் கணக்கு; ஆனால் வைத்திருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல் என்றுதிமுகவின் அழகான வேட்பாளரின் பின்னணிபற்றி தினமணி செய்தி சொல்கிறது ப்ப்பூ! இதெல்லாம் ஒரு மேட்டரா?
பானாசீனா விவசாயியாம்! கோடிக்கணக்கில் விவசாய வருமானம் வருகிறதாம்! வருமானவரித்துறையும் ஆமாம்! பண்ணையாரே களத்தில் இறங்கி விவசாயம் செய்து சம்பாதித்ததாக ஒத்துக் கொண்ட கூத்தை விடவா தமிழச்சி மேட்டர் பெரிது?
இன்னொரு கூத்தையும் பார்த்துவிடலாம்!
கார்த்தி சிதம்பரம் குழம்புகிறாராம்! அவ்வப்போது மேடைகளில் நாத்திகம் பேசும் செட்டிகளுக்கு வேண்டுமானால் குழப்பமாக இருக்கலாம்! ஆனால் நம்பிக்கையுள்ள இந்துவுக்கு அது கர்மா, கர்மவினை என்பது நன்றாகவே தெரியும். அப்பச்சிகள் ஆரம்பநாட்களில் வாக்குறுதி அளித்த கிராபைட் தொழிற்சாலை முதற்கொண்டு எந்த தேர்தல் வாக்குறுதியைத்தான் நிறைவேற்றியிருக்கிறார்கள்? வேட்பு மனுதாக்கல் செய்யும்போதே அராஜகத்தில் இறங்கிய கார்த்தி சுயேட்சை வேட்பாளரை வெளியே தள்ளிவிட்டு நல்லநேரம் முடிவதற்குள் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் என்கிறது செய்தி.
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆரம்பநிலையிலேயே கழித்துக் கட்ட இங்குள்ள அதிகாரிகள் முனைகிறார்களா என்ன? இங்கே பெரம்பலூரில் வேட்புமனுவை ஏற்க மறுப்பு! திருப்பூரில் டார்ச்லைட் சின்னத்தோடு இருந்த சட்டையைக் கழற்றிவிட்டு வரச்சொல்லிக் குடைச்சல்! வேட்புமனு பரிசீலனை முடிவில் இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்குமோ? உங்களால் ஊகிக்க முடிகிறதா? TTV தினகரன் விஷயத்திலாவது அதிமுக தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டினால் இருக்கலாமோ என்று நம்ப முடிகிறது. ஆனால் கமல் காசர் கட்சி விவகாரத்தில் சிலபல அதிகாரிகளே ஓவராகப் போகிற மாதிரித்தான் தெரிகிறது.
பெரும்பாலான வேட்பாளர்களுக்கு (குறிப்பா ஆயிரம்கோடீஸ்வரர்களுக்கு) சொந்தமா வாகனம் இருப்பதில்லை. இதன் காரணம் தெரியலை. நான் நினைக்கிறேன்... ஏதேனும் ஆக்சிடண்ட் பண்ணினால் தப்பிப்பதற்காக இருக்குமோ? என்ன காரணமாயிருக்கும்? தமிழ்நாட்டில் பாதியை விலைக்கு வாங்கும் சக்தி படைத்த மாறனுக்கும் சொந்த வாகனம் கிடையாது.
மாறன்கள் மாதிரி கார்ப்பரேட் ஆகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை, ஏதோ ஒரு நிறுவனம் நடத்திவந்தால் கூட வாகனங்கள், பராமரிப்பு செலவெல்லாம் நிறுவன செலவுக்கணக்கில் கொண்டுபோய் விடலாம். ஆனால் தமிழச்சி மாதிரியானவர்கள் தங்களிடம் TVS XL உம் கணவருக்கு ஆக்டிவா மட்டுமே இருப்பதாகச் சொல்வதெல்லாம் பானாசீனா விவசாயியாகி வரிவிலக்குப் பெற்ற கதை மாதிரித்தான்
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!
பெரும்பாலான வேட்பாளர்களுக்கு (குறிப்பா ஆயிரம்கோடீஸ்வரர்களுக்கு) சொந்தமா வாகனம் இருப்பதில்லை. இதன் காரணம் தெரியலை. நான் நினைக்கிறேன்... ஏதேனும் ஆக்சிடண்ட் பண்ணினால் தப்பிப்பதற்காக இருக்குமோ? என்ன காரணமாயிருக்கும்? தமிழ்நாட்டில் பாதியை விலைக்கு வாங்கும் சக்தி படைத்த மாறனுக்கும் சொந்த வாகனம் கிடையாது.
ReplyDeleteமாறன்கள் மாதிரி கார்ப்பரேட் ஆகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை, ஏதோ ஒரு நிறுவனம் நடத்திவந்தால் கூட வாகனங்கள், பராமரிப்பு செலவெல்லாம் நிறுவன செலவுக்கணக்கில் கொண்டுபோய் விடலாம். ஆனால் தமிழச்சி மாதிரியானவர்கள் தங்களிடம் TVS XL உம் கணவருக்கு ஆக்டிவா மட்டுமே இருப்பதாகச் சொல்வதெல்லாம் பானாசீனா விவசாயியாகி வரிவிலக்குப் பெற்ற கதை மாதிரித்தான்
Delete