தேர்தல் நேரம்! சில செய்திகள்! அரசியல் களம் இன்று!

தேர்தல் என்றாலே கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பும், உளவுத்துறை சொல்வதாக செய்திகளும்,  ஏற்கெனெவே குழம்பியிருக்கும் குட்டையை இன்னும் கொஞ்சம் குழப்புவதற்காகவே கசியவிடப்படும் என்பது தெரிந்த விஷயம்தானே? தெரியவில்லை என்றால் உங்களைவிட அப்பாவி எவரும் இருக்கமுடியாது என்று உங்களுக்கு நீங்களே சர்டிபிகேட் கொடுத்துக் கொள்ளலாம்! தவறே இல்லை!      

பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துறை போலீஸ் அதிகாரி ஒருவர், "மக்களவைத் தேர்தல் மூலம் மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார் என்பதைவிட, தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதே பிரதானம். ஏற்கெனவே களம் கண்ட பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக, கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம். தேமுதிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுடன், புதிதாக அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட புது கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிடுகின்றன.

கமலஹாசன் அவரது ரசிகர்கள் ஓட்டுகளுடன் கணிசமாக இளைஞர்கள் ஓட்டுகளைப் பிரிக்கலாம். அதிமுக- அமமுக குழப்பத்தால் நிர்வாகிகள், தொண்டர்கள் யார் பக்கம் என, முழுமையாக தீர்மானிக்க முடியாத சூழலில் இத்தேர்தல் அதற்கு விடை அளிக்கும். மண்டலம் வாரியாக எழுந்துள்ள பிரச்சினைகளைப் பொறுத்து இளைஞர்களின், விவசாயிகள், அமைப்புகள் ஓட்டுகள் சிதறும்.
வட மாவட்டங்களில் பாமகவுக்கும், டெல்டா பகுதியில் கஜா புயலால் ஆளும் கட்சிக்கு எதிராவும், தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு அதரவாகவும், கொங்கு மண்டலத்தில் ஆளும் கட்சிக்கும் ஆதரவு இருக்கும் என்றாலும், சமூக வலைதளங்கள் தாக்கம் அதிகரிப்பால் தமிழகத்திலுள்ள 2.50 கோடி இளைஞர்கள் ஓட்டு யார் பக்கம் என, தீர்மானிக்க முடியாது. இவர்களே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக அமையலாம். தேர்தல் தேதி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வைப் பொறுத்து ஒவ்வொரு கட்சிக்கும் செல்வாக்கு, நிலைப்பாடு மாறும்" என்று சொன்னதாக ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது.  

உளவுத்துறை, ஊடகங்கள் என்ன சொல்வது? கலிங்கப்பட்டியில் இருந்து களம் பல கண்ட வைகோவே சொல்லிவிட்டார்! 

2016 இல் இதே ஆசாமி என்னமோ சொல்லி என்னமோ ஆயிற்றே என்றெல்லாம் கேட்காதீர்கள்! நம்பகத்தன்மை பற்றி எல்லாம் யாரிங்கே கவலைப்படுகிறார்கள்? 
துக்ளக்  இந்த வார அட்டைப்பட நையாண்டி!வெறும் நையாண்டிதானே என்று ஒதுக்கிவிடுவீர்களா? இந்த கேள்விக்கு இந்த ட்வீட்டர் செய்தியிலேயே பதிலும் இருக்கிறது!  

தந்திடிவி இப்போது யார்பக்கம்? இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கிறதா? இந்த வீடியோவை ஒரு தரம் பார்த்துவிடுங்கள்! ஜாமீன் சிதம்பரம் என்ன அமர்த்தலாய்ப் பேசுகிறார்?
 

குலைகுலையா முந்திரிக்கா 
நரியே நரியே சுத்தி வா 
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான் 
வீடியோ பார்த்து கண்டுபிடி!
   
கண்டுபிடித்துவிட்டீர்களா? என்ன செய்வதாக உத்தேசம்? கமென்ட் பெட்டிக்கு மேலே என்ன சொல்லியிருக்குன்னும் பார்த்துவிட்டு கொஞ்சம் சொல்லுங்களேன்! 

8 comments:

 1. எனக்கு ஒரு சந்தேகம்.... 1-2 மணி நேரம், 3-4 நாட்கள் பேச என்ன விஷயம் இருக்கும்? 2 தொகுதிக்கா இத்தனை அல்லாட்டம்? ஒருவேளை, அதிக நேரம்னு வெளில காண்பிப்பதற்கு, அறிவாலயத்தின் உள்ளேயே கேண்டீன்லாம் இருக்குமா இல்லை பேசாம ரெஸ்ட் எடுப்பாங்களா? வைகோ பேசறது, 'தளபதியுடன் நான் கலந்து பேசி' - நல்லாத்தான் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. கொள்கை அரசியல் என்றால் தேவைப்படுவது சில நிமிடங்கள். மானங்கெட்ட அரசியல் என்றால் தேவைப்படுவது சில மணி நேரம். (ரொம்பவே சிரிக்க வச்சுறீங்க)

   Delete
  2. மணிக்கணக்கில் பேசுவதாகக் காட்டிக் கொள்வதெல்லாம் சும்மா ஒரு பில்டப் என்பதற்கு மேல் வேறில்லை!
   :)))

   Delete
 2. உங்களுக்கு ஒரு கேள்வி. மய்யம் நிற்கப்போகும் தொகுதிகள் எண்ணிக்கை என்ன? 0, 1, 5க்கும் குறைவு, 39.

  பார்க்கலாம் உங்கள் அரசியல் கணிப்பு (அல்லது ஜோசியம்) சொல்லும் திறமையை.... எனக்கென்னவோ கமல் ராமநாதபுரத்துல நிற்பார்னு தோணுது. ரொம்ப நீங்க கமலைப் பற்றி ஆர்டிகிள் எழுதிக்கிட்டே இருந்தீங்கன்னா, உங்களையும் ஒரு தொகுதில நிற்க வைக்க, அவரே விருப்ப மனு கொடுத்துடுவார்னு தோணுது.

  ReplyDelete
  Replies
  1. மய்யம் புதுச்செருப்பு! எத்தனை இடங்களில் கடிக்கும் என்று கணிப்பது கடினம். :)))

   கமல் காசர் ராமநாதபுரத்தில் நின்றால் ஜெயித்துவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. கடலூரில் Naturals தொழிலதிபர் CK குமரவேல் நிற்கலாம், விசிக பாமக என்று கச்சைகட்டிக் கொண்டிருக்கிற களத்தில் ஜெயிக்க முடியாது ஆனால் tough fight கொடுக்கலாம். தெற்கே திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் யாரேனும் களம் இறங்கலாம் என்பது கணிப்பு. முற்றிலும் தவறாகிவிடக் கூடிய வாய்ப்பும் (ராமநாதபுரம் தவிர) இருக்கிறது.

   Delete
 3. எனக்கென்னவோ கமல் அடுத்த முறை எளிதாக கூட்டணிகளில் ஒரு ஐந்து சீட் வாங்கும் அளவு முன்னேறிவிடுவார் என்று தோன்றுகிறது. அதைவிட அதிகமாக சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை.

  ReplyDelete
  Replies
  1. மொத்தம் ஒரு லட்சம் ஓட்டு வாங்கினால் திருப்பூர் வாங்க பார்ட்டி தர்றேன்.

   Delete
  2. ஜோதிஜி! இப்போதிருக்கிற கட்சிகளின் பேரில் ஜனங்களுக்கு எத்தனை வெறுப்பு இருக்கிறது என்று தெரிந்தால் இப்படி சவால் விடமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! மொத்தம் ஒருலட்சம் ஒட்டுக்குமேல் ....?

   ராமநாதபுரம் ஒருதொகுதியிலேயே அதை வாங்கிவிட முடியும் என்பது என் கணிப்பு.
   பந்து!

   கமல் காசர் கட்சி வரும் சட்டசபைத் தேர்தல் வரை தாக்குப்பிடிக்குமா என்பதே எனக்குள் எழும் கேள்வி.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!