அரசியல் களத்தில் இன்று! காமெடி டைம்!

தேர்தல் நேரம் நெருங்க நெருங்க அரசியல்வாதிகளின் உளறல் மிகவும் விபரீதமான காமெடியாக மாறும் என்று தெரியாத அப்பாவியா நீங்கள்? உங்களுக்காகவே தான்  "டெல் மோடிஜி, உண்மை ஜெல்லும்" பப்பு மொழி! பதிவே எழுதினேன். வீடியோக்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்துக் கொண்டே வந்ததில் வைகோ பேசிய காமெடிக் கொடுமையும் கண்ணில் பட்டது.

   
பேமெண்ட் அட்வான்சாகவே கொடுத்துவிட்டார்களோ?உணர்ச்சிவசப்பட்டுத் தடுமாறுகிறார், ராகுல் மோடி என்று ராகுலை அழைக்கிறார். நையாண்டி செய்கிறாரா நிஜமாகவே உணர்ச்சிவசப்படுகிறாரா என்ற ஆராய்ச்சி எல்லாம் எதற்கு? நையப்புடை சேனல் நையாண்டி ஒன்றைப் பார்த்துவிடலாம்!
  
நையாண்டிபோதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? 
கமல் காசர் மட்டும் காமெடி செய்ய மாட்டாரா என்ன? நாடாளுமன்றத்தோடு சேர்த்து 18 சட்டசபைத் தேர்தலிலும் போட்டி! 10000 ரூபாய் கட்டுகிற எவர் வேண்டுமானாலும் விருப்பமனு வாங்கிக் கொள்ளலாம்! சினிமாவில் நடித்து வசூல்ராஜாவாக இருந்தாரோ என்னவோ, விருப்பமனு விற்பதில் ஆகிக் கொண்டு வருகிற மாதிரித் தெரிகிறது.      


அரசியல்வாதிகள்  வருகிறார்கள்! அம்பாரம் அம்பாரமாய் காதுல பூ சுற்றுவதற்கு! சுற்ற அனுமதித்துக் கொண்டே இருக்கப் போகிறீர்களா?

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! 

   

1 comment:

  1. Rahul Gandhi: I respect the people of Tamilnadu..

    Translator: நரேந்திர மோடி தமிழ் மக்களின் எதிரி...

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!