தேர்தல் வருதே! ஜோக்கர்கள் வாராக! காமெடி டைம்!

நாடெங்கும் தேர்தல் காமெடித் திருவிழா களைகட்ட ஆரம்பித்திருப்பதில், நம்மூர் டிவி சேனல்களுக்கு விவாதத் தலைப்பு என்ன வைக்கலாம், எப்படி வைக்கலாம் என்ற போட்டாபோட்டியே ஆகப் பெரிய காமெடியாக இருக்கிறதோ?


வைகுண்டராஜன் சேனல் அதிலும் முந்திக் கொண்டே வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்! தந்திடிவி கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குத் தள்ளப்படுகிறதோ?

யாரப்பா அது? ஒரண்டை முருகன் பெயரிலேயே ஆர்மி அமைத்து, இப்படியொரு  கருத்துக்கணிப்பும் நடத்தி ஒரண்டை இழுக்கறது? 

""சரி, விஜயகாந் கேப்டனாக இருந்து சிப்பாய் ஆனதாகவே வைத்துக் கொள்ளுவோம். ஆனால், தங்களின் தந்தையின் நிலை என்ன என்று நினைவுள்ளதா ஜாமீன் குடும்ப வாரிசு அவர்களே? அவர், தமிழ்நாட்டு ஆதரவு இல்லாததால், தமிழ்நாட்டிலிருந்து பாராளுமன்றத்திற்கு செல்ல யோக்கிதை இல்லாமல், மஹாராஷ்டிராவிலிருந்து ராஜ்ய சபாவிற்கு சென்றுள்ளார். சீமான் பாஷையில் கூறவேண்டுமானால் மஹாராஷ்டிராவின் வந்தேறியாகிவிட்டார், தங்கள் தந்தை!. விஜயகாந்தோ தமிழ்நாட்டிலேயே அரசியல் செய்கிறார். முதலில் உங்களை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள்" என்கிறார் செல்வராஜ் மாணிக் .

இந்தியா டுடே தளம் இதை வெளியிட்டு, பொய்யான தகவல் என்று தெரிவித்திருக்கிறது! பொய்க்கு இத்தனை விளமபரம் ஏனோ?
    
விஜயகாந்த் மகன் எங்கேப்பா என்று இருபெரும் கட்சியினரும் தேடுவதாக ஒரு புரளியை இணையத்தில் ஒரு க்ரூப் கிளப்பிவிட்டது. இங்கேதாம்ப்பா இருக்கேன் என்று நேற்று பெரம்பலூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரபாகரன் சொன்னவிதம்  கொஞ்சம் வித்தியாசமாக!  

   

துரைமுருகனின் பேச்சால் தேமுதிகவின் திருஷ்டி கழிந்து விட்டது: விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேச்சு

ஒரண்டை முருகனை இப்படித் திருஷ்டிப் பூசணிக்காய் ரேஞ்சுக்கு இறக்கிவிட்டாரே என்று சிரிப்பதா? வேண்டாமா?  

வேறென்ன செய்வதாம், சொல்லுங்களேன்!  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!