எது சரியான அரசியல்? மூன்றே வார்த்தைகளினால் ஆன இந்தக்கேள்விக்கு சரியான விடையை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியுமா? அதுவும் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் கல்லூரி மாணவிகளிடையே இந்தக்கேள்வி உண்மையிலேயே இருந்ததா? எனக்குத் தெரியாது, ஆனால் இந்த விவாதம் கொஞ்சம் கவனிக்க வைத்தது என்பதென்னவோ உண்மை!
முகநூல் பகிர்வுகளில் சில, படிக்கும்போதே அப்படி நெஞ்சை அள்ளும்! கிறித்தவம் எப்படி ஒரு தேர்ந்த வியாபாரமாக, மார்க்கெட்டிங் உத்திகளோடு தன்னை புதுப்பித்துக் கொண்டே வருகிறது என்பதை வெங்கடராமன் சீதாராமன் என்பவர் சுருக்கமாக இப்படி சொல்கிறார் ஒரு பிசினஸ் மேனேஜ்மென்ட் க்ளாஸ்ல பாடம் படிக்கிற மாதிரியே!
மீண்டும் சந்திப்போம்!
தொலைக்காட்சி விவாதங்களில் உண்மையைத் தேடுகிற தவறை நான் செய்ததில்லை! அதேநேரம், இவைகளைத் தவிர்க்கவும் முடியவில்லை. 40 நிமிடங்கள் நேரமிருந்தால் கேட்டுப்பாருங்கள்!
இந்த தேர்தலில் நாம் தோற்றால் அவ்வளவு தான்...: சாத்தூர் ராமச்சந்திரன் எச்சரிக்கை இதையே கொஞ்சம் உல்டாவாக ஆ! ராசா மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: ஆ.ராசா எச்சரிக்கை! இதேமாதிரி கனிமொழியும் பேசி இருந்தார். தோற்றால் தங்கள் கதி அதோகதிதான் என்று புரிந்து கொண்டு முதலில் இந்தமாதிரி இனிமேல் தேர்தலே இருக்காது என்று பயத்தில் கூக்குரல் எழுப்பியது காங்கிரசின் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தான்! மோடி மீதான பயமே இவர்களை மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்று பெனாத்த வைத்திருப்பது தெளிவாகவே வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது!
யேசு பத்து கட்டளைகள் கூறியதாக சொல்வார்கள். எனக்கு தெரிந்தவரை யேசுவை வைத்து வியாபாரம் செய்யும் நம் உள்ளூர் பெந்தகோஸ்டு கம்பெனிகள் உளவியல் ரீதியாக மூளையில் பத்து கட்டளைகளை தங்கள் விற்பனையாளரிடம் விதைத்து விடுவதாக தோன்றுகிறது. இந்த விற்பனையாளர்களும் அதை திறம்பட செய்வார்கள்.
அந்த பத்து கட்டளைகளையும் அதன் உள்ளார்ந்த காரணத்தையும், அதன் மார்கெட்டிங் நுட்பங்களையும் (Marketing Strategy) பார்ப்போம்.
கட்டளை 1) உங்கள் பெயரை இந்து பெயராகவே வைத்துக் கொண்டு, கூடவே கிறிஸ்துவ பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரனத்திற்கு ‘ராபர்ட் வரதராஜன்’, ‘அந்தோனி கருப்புசாமி’ போன்றவை. (Product Branding)
உள்ளார்ந்த காரணம். ஆங்கில/கிறிஸ்துவ பெயர்கள் ஒரு அந்நிய தன்மையை உருவாக்கும். அதனால் அப்பெயர்களை ஏற்றுக் கொள்ள பலர் தயங்குவார்கள். அதை இந்து பெயர்களோடு பினைப்பதால், கிறிஸ்துவமும் பாரதத்தை சேர்ந்ததுதான் என்பதுபோல் ஒரு மாயையை உருவாக்கும். பெயரை கேட்கும் ஒவ்வொருவரும் இவர் நம்மவர்தான், ஏதோ காரணத்திற்காக மதம் மாறி விட்டார் என்பதை உணரச் செய்யும்.
10% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
2) மிக சிறப்பாக உடை உடத்திக் கொள்ளுங்கள். “டக் இன்” செய்யப்பட்டு, ஷூ அனிந்துக் கொண்டு, ஒரு பெரிய கம்பெனியின் மேலாளர் போல் மேற்கத்திய பாணியில் உடை உடுத்திச் செல்லுங்கள். (Product positioning)
உள்ளார்ந்த காரணம் : இதனால் பலியாடுகள் வீட்டுக்குள் அனுமதிப்பார்கள். இவர் ஏதோ பெரிய மனிதர் என்கிற எண்ணத்தை இது உருவாக்கும். மேலும் இறக்குமதி செய்யப்பட்டது என்றால் நம் நாட்டில் அதற்கு கிராக்கி உண்டு.
இப்போது
20% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
20% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
3) முடிந்தவரை ஆங்கிலம், அல்லது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுங்கள். (Value addition)
இது மேலும் மதவியாபாரிகள் இமேஜை உயர்த்தும். இவர்கள் மிகவும் படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என்று பலியாடுகளை உணர வைக்கும்.
இப்போது
30% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
30% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
4) ஒருவரை மதமாற்ற முயற்சியை தொடங்கும் போது (அதாவது ஊழியம் செய்யத் தொடங்கும் போது) உங்களை கிறிஸ்துவர்கள் என்று காட்டிக் கொள்ளாதீர்கள், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளுங்கள். (Innovative product)
உள்ளார்ந்த காரணம். இது பலியடுகளுக்கு மதவியாபாரிகள் ஏதோ பொதுவாதிகள், எந்த மதத்தையும் சாராதவர்கள் என்பது போல் ஒரு எண்ணத்தை உருவாக்கும்
இப்போது
40% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
40% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
5) கிறிஸ்துவர்களை குறித்து யாரேனும் குறை கூறினால், ஆமாம் நீங்கள் சொல்வது சரி அவர்கள் ஆண்டவனால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுங்கள். அவர்கள் பாபிகள், வேடதாரிகள் என்று கூறுங்கள். எங்களுடைய சித்தாந்தம் வேறு என்று கூறுங்கள். (Product differentiation)
இதன் மூலம் கேட்பவர் ஏதோ புதியதாக தாங்கள் ஒன்றை அறிந்துக் கொள்வதாக நினைப்பார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கேட்பதற்கு ஆர்வம் ஏற்படும்
இப்போது
50% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
50% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
6) நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள். ஏன் இப்படி வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் என்று கேளுங்கள். (Problem Identification)
உள்ளார்ந்த காரணம். உலகில் பிரச்னை இல்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். ஏதேனும் ஒரு பிரச்னையில் தீவிரமாக இருக்கும் ஒருவரிடம் அதற்கு தீர்வு இருப்பதாக குறிப்பிட்டால் அவரை எளிதில் ஆட்கொண்டு விடலாம்.
இப்போது
60% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
60% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
7) நாங்களும் இந்துக்களாகதான் இருந்தோம். சமீபத்தில் தான் யேசுவை ஏற்றுக் கொண்டோம் என்று கூறுங்கள்.
(மதம் மாறினோம் என்று சொல்ல மாட்டார்கள்) (Direct Advertising)
உள்ளார்ந்த காரணம். அதாவது நாங்களும் உங்களில் ஒருவர்தான். உங்களை போலதான் முட்டாள்தனமாக இருந்தோம். ஆனால் இப்போது மாற்றத்தை அடைந்து விட்டோம். (உஜாலாவுக்கு மாறிவிட்டேன் என்பது போல்)
இப்போது
70% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
70% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
8) அவர்களின் நம்பிக்கைகளை மென்மையாக உடைக்க தொடங்குங்கள்.
உதாரணத்திற்கு நான் நடந்துக் கொண்டிருக்கும் போது என் கால்களால் ஒரு விநாயகர் படத்தை மிதித்தேன் அல்லது ஒரு நாய் ஒரு தேருவோர சிலையின் மேல் சிறுநீர் கழிப்பதை பார்த்தேன். தன்னையே காத்துக் கொள்ளாதது எப்படி கடவுளாகும் என்று கேளுங்கள். (Combating Competition)
உள்ளார்ந்த காரணம். இப்படி சொல்வதால் மதவியாபாரிகளுக்கு தங்கள் மேல் ஒரு பரிதாபம் இருப்பது போல் பலியாடுகள் உணர்வார்கள். மேலும் இது அவர்களை திடுக்கிட வைக்கும். நாம் ஏதோ தவறு செய்கிறோமோ என்று நினைக்க வைக்கும்.
இப்போது
80% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
80% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
9) தொடர்ந்து செல்லுங்கள். அவர்களை தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள்.
உள்ளார்ந்த காரணம். ஆரம்பத்தில் விருப்பம் இல்லாதவர்கள் கூட, திரும்ப திரும்ப அதற்கு உட்படுத்தப்படுவதன் மூலமாக மாற வாய்ப்பு உள்ளது. (Repetitive implanting and Product demonstrating)
இப்போது
90% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
90% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
10) அவர்களை ஜெபத்திற்கு அழையுங்கள். அவர்களை ஜெபம் செய்ய வைத்து “ஆஹா நீங்கள் ஜெபித்தது மற்றவர்களை விட சிறப்பாக இருந்தது” என்று கூறுங்கள். (Product experimentation and Motivating)
தங்கள் மேல் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்று பலியாடுகளை உணர வைக்கும். தாங்கள் ஏதோ வித்த்தியாசமான ஒன்றை செய்து விட்டதாக உணர வைக்கும
இப்போது முழுவதும் முட்டாள் ஆக்கப்பட்டீர்கள்.
இவ்வளவு தாங்க கிருஸ்தவம். மீண்டும் சந்திப்போம்!
இந்தத் தேர்தலில் திமுக தோற்றால், சாத்தூர் ராமசந்திரனுக்குத்தான் கஷ்டம். அவங்க பசங்க, அவர்கிட்ட இருந்த பணத்தையெல்லாம் ஏற்கனவே சுருட்டிட்டாங்க, அவர் வட்டிக்குத்தான் பணம் வாங்கி அரசியலில் இருக்கார் என்று பெரிய கட்டுரை சில வருடங்களுக்கு முன்பே பார்த்தேன்.
ReplyDeleteஉண்மைதான்! ஜெயிக்கிற குதிரை மேல் பணம்கட்டியே அண்ணாச்சி இத்தனைகாலம் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருந்தார். இப்போது காரியம் சாதித்துக் கொடுக்கிற நிலையில் அவரோ அவருடைய கட்சியோ இல்லை. ஆனால் தோற்றால் இனிமேல் எழுந்திருக்கவே முடியாதென்ற நினைப்பு அசோக் கெலாட் கனிமொழி ஆ ராசா அப்புறம் சாத்தூரார் எல்லோருக்குமே வந்துவிட்டது என்பதுதான் நான் சொல்லவந்தது.
Deleteவிவாதம் ரசிக்கவில்லை. எப்போதும்போல், குற்றச்சாட்டு சொல்கிறவர்கள், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எந்த ஆணியைப் பிடுங்கினார்கள் என்பதும் தெரியவில்லை.
ReplyDeleteபாலபாரதி உப்புச்சப்பில்லாத விஷயங்களையே பேசி விவாதத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டாரோ? மாணவிகளுடைய கேள்விகளும் அவ்வளவு தெளிவாக இல்லை.
Deleteஎப்படி இருந்த சாத்தூரார்....!
ReplyDeleteகிறிஸ்தவத்தின் புதிய பத்துக் கட்டளைகள் ரசித்தேன். கவனத்தில் கொள்ளத்தக்கது.
சாத்தூராருக்குக் காரியத்தை முடித்துக் கொடுக்கிற சாமர்த்தியம் அந்தநாட்களில் மிக அதிகமாக இருந்ததென்பதை இப்போதும் மறுக்க முடியாது ஸ்ரீராம்!
Deleteஎன்னுடைய நண்பர்களில் சிலர் சிறிய அளவில் ஜெப ஊழியம் செய்தே லட்சங்களில் கொழிப்பதை பார்த்திருக்கிறேன்! அதை பெரிய லெவலுக்கு MLM மாதிரிக் கொண்டுபோய் மிகப்பெரிய அறுவடை செய்கிற சாமர்த்தியம் DGS தினகரனுக்கு இருந்தது.
பத்து கட்டளைகள் - எப்படி எல்லாம் திட்டமிடுகிறார்கள். இது மிகப் பெரிய வியாபாரம்.
ReplyDeleteஉண்மைதான்! எவ்வளவு பெரிய வியாபாரம், எவ்வளவு பெரிய சிலந்திவலை என்பது இங்கே நிறையப்பேருக்கு பிடிபடாத சமாசாரம்! எங்கேயோ மழைபெய்கிறதென்று இருப்பதும் அதனால்தான்!
Delete