அரசியல் காமெடிகள் என்றால் தமிழக அரசியலுக்கு அதிலே முதல் இடம் இல்லாமலா? ஓசிச்சோறு வீரமணி முதற்கொண்டு எத்தனை எத்தனை காமெடியன்கள் இருக்கிற மாநிலம் இது! ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் இருந்து ஒரு graphics கலக்கல்!
தலைப்பென்னவோ 7 கட்டத்தேர்தல் என்றிருந்தாலும் இதில் 2வது கட்டத்திலேயே தேர்தல்கள் முடிந்துபோன தமிழகத்தில் அரசியல்வாதிகள் படுகிற பாட்டோடு முடித்துவிட்டு, தொடரும் என்று போடுகிறார்கள். 2 நிமிட வீடியோ கலக்கல் காமெடி இது.
இது 2 வருடங்களுக்கு முந்தைய வீடியோ
கமல் காசர் இன்றும் கூட எல்லைக்கோட்டைத் தாண்டுவதில்லை
கமல் காசர் பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதா! நன்றி குமுதம் FB பக்கங்கள் என்ன நக்கல், லந்து?!!
கமல்ஹாசன் உளறுவதற்கெல்லாம் சினிமாக்காரர்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஜால்ரா அடித்து வந்திருக்கிறார்கள். பாவம் அவர்கள், கமல் கொடார்ட் என்று ஒரு பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன எழவு புரியப் போகிறது? கொதார் என்ற ஃப்ரெஞ்ச் பெயரைத்தான் அப்படி உளறுகிறார் என்று அவர்களுக்கு என்ன தெரியும்?
ஒரு இங்க்லீஷ்காரன் கேண்டி கேண்டி என்று சொன்னால் மற்ற இங்க்லீஷ் மடையன்களுக்கு அது காந்தியைக் குறிக்கிறது என்று தெரியுமா என்ன?
கமல் உளறுவதற்கெல்லாம் 40 ஆண்டுகளாகத் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள். சினிமா மட்டும் அல்ல; அவர் தன் அலுவலகத்துக்கு வரவழைத்துப் பேசும் எழுத்தாளர்களும் ஜால்ராதான் அடிக்க வேண்டும். மீறிப் பேசுபவர்களை அவர் சந்தித்ததும் இல்லை; பேசியதும் இல்லை. 40 ஆண்டுகளாக ஜால்ராக் கூட்டத்துக்கு இடையிலேயே ஒருத்தர் பேசிக் கொண்டிருந்தால் கமல் இப்போது பேசுவதே ரொம்பத் தெளிவு என்பேன்.
யோசித்துப் பாருங்கள்; ஒருத்தர் 40 ஆண்டுகளாக ஜால்ரா கூட்டத்துக்கு நடுவில் மட்டுமே பேசிக் கொண்டிருந்து விட்டு இந்த அளவுக்கு நிதானமாக இருப்பதே உலக ஆச்சரியம். பிரச்சினையின் ஆணி வேர் என்னவென்றால், நன்கு படித்த, நல்லவிதமாக சிந்திக்கக் கூடிய, தெளிவான புத்திஜீவி என்று சொல்லக் கூடிய சாருஹாசனே கமலை ஜீனியஸ் என்கிறார் என்றால் 40 ஆண்டுகளாக கமல் வளர்ந்த, இருந்த சூழலை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
கமலைப் பற்றி யோசிக்கும் போது, 40 ஆண்டுகள் மனிதத் தொடர்பே இல்லாமல் ஒரு குகையில் வளர்க்கப்பட்ட மனிதன் ஒருவனே எனக்கு ஞாபகம் வருகிறான். இப்போதுதான் முதல்முதலாக அந்த மனிதன் வெளி உலகைப் பார்க்கிறான். இந்துதான் முதல் தீவிரவாதி என்கிறான்.
எல்லோரும் கிராமத்துக்குச் செல்லுங்கள் என்கிறான். அப்படித்தான் கமலும். எனவே கமலை மன்னித்து விடுங்கள். இப்போதுதான் அவர் பேச ஆரம்பித்திருக்கிறார். மழலைப் பேச்சில் தப்பு கண்டு பிடிப்பது பர்வர்ஷன்.
ரங்கராஜ் பாண்டே சாணக்யாவாகி இப்போது தேர்தல் முடிவுகளின் தனிக்காட்டு ராஜாவாகவும் ஆகிவிட்டாராம்! தேர்தல் முடிவுகளை வியாழன் காலை 8 மணிமுதலே நேரலை ஒளிபரப்பாம்! சொல்கிறார்கள்!
மார்க்சிஸ்டுகள் கட்டாந்தரையாக ஆக்கிய மேற்கு வங்கத்தில் மீண்டும் பசுமை துளிர்க்கிறதாம்! மம்தா பானெர்ஜிக்கு ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் கேட்டால் இடியோசை கேட்ட நாகம் என்று சொல்வார்களே, அதுமாதிரி பயம் வருவது இயற்கைதானே!
எது சரியான அரசியல்? மூன்றே வார்த்தைகளினால் ஆன இந்தக்கேள்விக்கு சரியான விடையை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியுமா? அதுவும் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் கல்லூரி மாணவிகளிடையே இந்தக்கேள்வி உண்மையிலேயே இருந்ததா? எனக்குத் தெரியாது, ஆனால் இந்த விவாதம் கொஞ்சம் கவனிக்க வைத்தது என்பதென்னவோ உண்மை!
தொலைக்காட்சி விவாதங்களில் உண்மையைத் தேடுகிற தவறை நான் செய்ததில்லை! அதேநேரம், இவைகளைத் தவிர்க்கவும் முடியவில்லை. 40 நிமிடங்கள் நேரமிருந்தால் கேட்டுப்பாருங்கள்!
இந்த தேர்தலில் நாம் தோற்றால் அவ்வளவு தான்...: சாத்தூர் ராமச்சந்திரன் எச்சரிக்கை இதையே கொஞ்சம் உல்டாவாக ஆ! ராசாமோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: ஆ.ராசா எச்சரிக்கை! இதேமாதிரி கனிமொழியும் பேசி இருந்தார். தோற்றால் தங்கள் கதி அதோகதிதான் என்று புரிந்து கொண்டு முதலில் இந்தமாதிரி இனிமேல் தேர்தலே இருக்காது என்று பயத்தில் கூக்குரல் எழுப்பியது காங்கிரசின் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தான்! மோடி மீதான பயமே இவர்களை மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்று பெனாத்த வைத்திருப்பது தெளிவாகவே வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது!
முகநூல் பகிர்வுகளில் சில, படிக்கும்போதே அப்படி நெஞ்சை அள்ளும்! கிறித்தவம் எப்படி ஒரு தேர்ந்த வியாபாரமாக, மார்க்கெட்டிங் உத்திகளோடு தன்னை புதுப்பித்துக் கொண்டே வருகிறது என்பதை வெங்கடராமன் சீதாராமன் என்பவர் சுருக்கமாக இப்படி சொல்கிறார் ஒரு பிசினஸ் மேனேஜ்மென்ட் க்ளாஸ்ல பாடம் படிக்கிற மாதிரியே!
யேசு பத்து கட்டளைகள் கூறியதாக சொல்வார்கள். எனக்கு தெரிந்தவரை யேசுவை வைத்து வியாபாரம் செய்யும் நம் உள்ளூர் பெந்தகோஸ்டு கம்பெனிகள் உளவியல் ரீதியாக மூளையில் பத்து கட்டளைகளை தங்கள் விற்பனையாளரிடம் விதைத்து விடுவதாக தோன்றுகிறது. இந்த விற்பனையாளர்களும் அதை திறம்பட செய்வார்கள்.
அந்த பத்து கட்டளைகளையும் அதன் உள்ளார்ந்த காரணத்தையும், அதன் மார்கெட்டிங் நுட்பங்களையும் (Marketing Strategy) பார்ப்போம்.
கட்டளை 1) உங்கள் பெயரை இந்து பெயராகவே வைத்துக் கொண்டு, கூடவே கிறிஸ்துவ பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரனத்திற்கு ‘ராபர்ட் வரதராஜன்’, ‘அந்தோனி கருப்புசாமி’ போன்றவை. (Product Branding)
உள்ளார்ந்த காரணம். ஆங்கில/கிறிஸ்துவ பெயர்கள் ஒரு அந்நிய தன்மையை உருவாக்கும். அதனால் அப்பெயர்களை ஏற்றுக் கொள்ள பலர் தயங்குவார்கள். அதை இந்து பெயர்களோடு பினைப்பதால், கிறிஸ்துவமும் பாரதத்தை சேர்ந்ததுதான் என்பதுபோல் ஒரு மாயையை உருவாக்கும். பெயரை கேட்கும் ஒவ்வொருவரும் இவர் நம்மவர்தான், ஏதோ காரணத்திற்காக மதம் மாறி விட்டார் என்பதை உணரச் செய்யும்.
10% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
2) மிக சிறப்பாக உடை உடத்திக் கொள்ளுங்கள். “டக் இன்” செய்யப்பட்டு, ஷூ அனிந்துக் கொண்டு, ஒரு பெரிய கம்பெனியின் மேலாளர் போல் மேற்கத்திய பாணியில் உடை உடுத்திச் செல்லுங்கள். (Product positioning)
உள்ளார்ந்த காரணம் : இதனால் பலியாடுகள் வீட்டுக்குள் அனுமதிப்பார்கள். இவர் ஏதோ பெரிய மனிதர் என்கிற எண்ணத்தை இது உருவாக்கும். மேலும் இறக்குமதி செய்யப்பட்டது என்றால் நம் நாட்டில் அதற்கு கிராக்கி உண்டு.
இப்போது 20% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
3) முடிந்தவரை ஆங்கிலம், அல்லது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுங்கள். (Value addition)
இது மேலும் மதவியாபாரிகள் இமேஜை உயர்த்தும். இவர்கள் மிகவும் படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என்று பலியாடுகளை உணர வைக்கும்.
இப்போது 30% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்.
4) ஒருவரை மதமாற்ற முயற்சியை தொடங்கும் போது (அதாவது ஊழியம் செய்யத் தொடங்கும் போது) உங்களை கிறிஸ்துவர்கள் என்று காட்டிக் கொள்ளாதீர்கள், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளுங்கள். (Innovative product)
உள்ளார்ந்த காரணம். இது பலியடுகளுக்கு மதவியாபாரிகள் ஏதோ பொதுவாதிகள், எந்த மதத்தையும் சாராதவர்கள் என்பது போல் ஒரு எண்ணத்தை உருவாக்கும்
இப்போது 40% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
5) கிறிஸ்துவர்களை குறித்து யாரேனும் குறை கூறினால், ஆமாம் நீங்கள் சொல்வது சரி அவர்கள் ஆண்டவனால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுங்கள். அவர்கள் பாபிகள், வேடதாரிகள் என்று கூறுங்கள். எங்களுடைய சித்தாந்தம் வேறு என்று கூறுங்கள். (Product differentiation)
இதன் மூலம் கேட்பவர் ஏதோ புதியதாக தாங்கள் ஒன்றை அறிந்துக் கொள்வதாக நினைப்பார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கேட்பதற்கு ஆர்வம் ஏற்படும்
இப்போது 50% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
6) நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள். ஏன் இப்படி வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் என்று கேளுங்கள். (Problem Identification)
உள்ளார்ந்த காரணம். உலகில் பிரச்னை இல்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். ஏதேனும் ஒரு பிரச்னையில் தீவிரமாக இருக்கும் ஒருவரிடம் அதற்கு தீர்வு இருப்பதாக குறிப்பிட்டால் அவரை எளிதில் ஆட்கொண்டு விடலாம்.
இப்போது 60% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
7) நாங்களும் இந்துக்களாகதான் இருந்தோம். சமீபத்தில் தான் யேசுவை ஏற்றுக் கொண்டோம் என்று கூறுங்கள்.
(மதம் மாறினோம் என்று சொல்ல மாட்டார்கள்) (Direct Advertising)
உள்ளார்ந்த காரணம். அதாவது நாங்களும் உங்களில் ஒருவர்தான். உங்களை போலதான் முட்டாள்தனமாக இருந்தோம். ஆனால் இப்போது மாற்றத்தை அடைந்து விட்டோம். (உஜாலாவுக்கு மாறிவிட்டேன் என்பது போல்)
இப்போது 70% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
8) அவர்களின் நம்பிக்கைகளை மென்மையாக உடைக்க தொடங்குங்கள்.
உதாரணத்திற்கு நான் நடந்துக் கொண்டிருக்கும் போது என் கால்களால் ஒரு விநாயகர் படத்தை மிதித்தேன் அல்லது ஒரு நாய் ஒரு தேருவோர சிலையின் மேல் சிறுநீர் கழிப்பதை பார்த்தேன். தன்னையே காத்துக் கொள்ளாதது எப்படி கடவுளாகும் என்று கேளுங்கள். (Combating Competition)
உள்ளார்ந்த காரணம். இப்படி சொல்வதால் மதவியாபாரிகளுக்கு தங்கள் மேல் ஒரு பரிதாபம் இருப்பது போல் பலியாடுகள் உணர்வார்கள். மேலும் இது அவர்களை திடுக்கிட வைக்கும். நாம் ஏதோ தவறு செய்கிறோமோ என்று நினைக்க வைக்கும்.
இப்போது 80% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
9) தொடர்ந்து செல்லுங்கள். அவர்களை தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள்.
உள்ளார்ந்த காரணம். ஆரம்பத்தில் விருப்பம் இல்லாதவர்கள் கூட, திரும்ப திரும்ப அதற்கு உட்படுத்தப்படுவதன் மூலமாக மாற வாய்ப்பு உள்ளது. (Repetitive implanting and Product demonstrating)
இப்போது 90% முட்டாள் ஆக்கப்படுவீர்கள்
10) அவர்களை ஜெபத்திற்கு அழையுங்கள். அவர்களை ஜெபம் செய்ய வைத்து “ஆஹா நீங்கள் ஜெபித்தது மற்றவர்களை விட சிறப்பாக இருந்தது” என்று கூறுங்கள். (Product experimentation and Motivating)
தங்கள் மேல் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்று பலியாடுகளை உணர வைக்கும். தாங்கள் ஏதோ வித்த்தியாசமான ஒன்றை செய்து விட்டதாக உணர வைக்கும
உலகத்திலேயே மிக மோசமான முதலமைச்சர் யார்?
இதைக் கூகிளில் தேடினால் வருகிற விடை என்னவாக இருக்கும்?
bad என்கிற வார்த்தைக்குப் பதில் worst என்று தேடினாலுமே கூட பிணரயி விஜயன்தான் முன்னால் வந்து நிற்கிறார்! சபரிமலை விவகாரத்தில் மட்டும் மார்க்சிஸ்டுகள் காட்டும் அதீத அக்கறையில் நேற்று ஞாயிறு மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதுமாக 1772 வழக்குகளில் 5397 நபர்களைக் கைது செய்திருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் By standing firm on Sabarimala, CPI(M) hopes to win support of silent majority in Kerala என்கிறது இந்தச் செய்தி
அமைதியாகப்பார்த்துக் கொண்டிருக்கிறவர்களில் அப்படி எத்தனை பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கப்போகிறார்கள் என்பதற்கு கூகிள் தேடல் முடிவுகளே ஒரு கட்டியமோ?
*******
ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு அப்புறம் நாடு முழுதும் மக்களுடைய மனநிலை எப்படி, இப்போது தேர்தல் வந்தால் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்று ஒரு கருத்துக் கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே நேற்றைக்கு வெளியிட்டிருக்கிறது.
According to the survey, conducted between December 15-25 at the fag end of last year in all 543 parliamentary constituencies, the NDA may get 257 seats and the Congress-led UPA (minus SP and BSP) may get 146 seats, far off the magic mark.
ராவுல் பாபா காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் ஆனது மாதிரியே நாட்டுக்குப் பிரதமராகவும் ஆகிவிட முடியுமா என்ன? இசுடாலின் முன்மொழிந்ததே வேஸ்ட் தானோ?
அதைவிடக் கொடுமையான காமெடியாக, உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடக் காங்கிரசுக்குப் போனால் போகிறதென்று இரண்டே இரண்டு சீட்டுகள் மட்டும் தருவதாக அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள்
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 2 தொகுதி களில் மட்டும் போட்டியிடுவதாக இருந்தால் தங்களுடன் கூட்டணி அமைக்கலாம் என காங்கிரஸுக்கு பகுஜன் சமாஜும், சமாஜ்வாதி கட்சியும் நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதுவே காங்கிரசுக்கு லாபமாம்!
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சமாஜ்வாதி கட்சி வட்டாரம் கூறுகையில், "காங்கிரசுக்கு ஒதுக்குவதாக இருந்த 6 தொகுதிகள் தற்போது 2-ஆக குறைக்கப் பட்டிருக்கிறது. எங்கள் கூட்டணியில் சேர்வதால் காங்கிரசுக்குதான் அதிக லாபம்" எனத் தெரிவித்தன.
*******
புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகங்களோடு, சாரு நிவேதிதா, அரசியல் எல்லாம் சேர்ந்துதான் வரும்!