எங்கள் Blog ஸ்ரீராமுக்குப் போட்டியாக இன்றைய பதிவை ஒரு அருமையான பாடலோடு ஆரம்பித்து விடலாமா? அலுப்பைத்தரும் அரசியல்சூட்டைக் கொஞ்சம் தணித்துக் கொள்ள உதவியாக இருக்கும்!
பாடலாசிரியர் சரியாகத்தான் எழுதியிருக்கிறார்! ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை! ஆனால் சரியான கேள்விகளைக் கேட்க சமூகம் ஏன் தொடர்ந்து தவறிக்கொண்டே இருக்கிறது? கேள்வி கேட்பார் இன்றி அரசியல்வாதிகள் அரசியல்வியாதிகளாக நம்மைப் படுத்திக் கொண்டே இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தும் கூட கேள்விகள் கேட்கத் தயங்கிக்கொண்டே இருப்பதும் ஏன்?
ஆனால் ரங்கராஜ் பாண்டே தொடர்ந்து கேள்விகளைக் கேளுங்கள் என்று சொல்லிக் காரியத்திலும் (பதில் சொல்வதில் தான்) இறங்கி விட்டார். குமுதம் வார இதழில் இரண்டுவாரங்களாக அவருடைய பதில்கள் வந்து கொண்டிருக்கிறது. முதல்வாரம் வந்த கேள்விகளுக்கான பதிலை மேலே உள்ள வீடியோவில் கேட்கலாம். குமுதம் போன்ற அச்சுப்பிச்சு பத்திரிகைகளை வாங்குவது படிப்பது இரண்டையும் நிறுத்தி விட்ட எனக்கு இது பெரிய வரம்!
மோடியை தந்தை என்று அழைப்பதே அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு! பீட்டர் அல்போன்ஸ் சிறப்புப் பேட்டி இது இன்று இணையத்தில் வாசித்த அரசியல் காமெடி!
திராவிடக் கழகங்கள் பெரியாரைத் தந்தை என்று பெருமிதத்தோடு அழைக்கிறது. ஆனால், இன்று அதிமுக மோடியை தந்தை என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. இது அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு என்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.
அல்போன்ஸ்களிடம் கேள்விகேட்டும் பயனில்லை! அதனால் இங்கே வரும் நண்பர்களிடம் கேட்டுவிட வேண்டியது தான்! முதலில் இந்திராவை அன்னை என்றார்கள்! அப்புறம் சோனியா G அன்னையானார்! இப்போது பிரியங்காவிடத்தில் அன்னையைத் தேடிக் கொண்டிருக்கிற காங்கிரஸ்காரர்களுக்கு, அதிமுகவைக் குறைசொல்கிற அருகதை உண்டா?
91 வயதான LK அத்வானிக்கு காந்திநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லையாம்! ஓரம் கட்டிவிட்டார்களே என்று காங்கிரஸ் உருகுவது இந்த தேர்தல்நேரத்தில் இன்னொரு காமெடி! இந்த விவாதத்தில் பிஜேபியின் KT ராகவன், சரியான பதிலை திருகல் வேலைசெய்யும் பத்திரிகையாளர் ராதா கிருஷ்ணனுக்குச் சொல்லியிருக்கிறார்!
இறந்துபோனவர் வந்து அப்பீலா செய்யப் போகிறார்? தீர்ப்பின் ஒருபகுதி இது! தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரிய திமுக வேட்பாளர் சரவணனின் மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்ததை சொல்லாமல் இருப்பது நம்மூர் ஊடக அறம்!
மூன்று ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்ட தினகரன் அலுவலக எரிப்பு வழக்கின் தீர்ப்பு தினகரனிலேயே மூன்றாம் பக்க செய்திதான். குடும்ப அரசியலில் உண்மையான சாமானியர்களின் உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பு😔
அந்தத் துயர சம்பவம் நடந்த போது கலாநிதி மாறன் மதுரைக்கு வந்து என்ன குதிகுதித்தார் என்னென்ன சவால்கள் விட்டார் என்பது அவர்களுக்கே இன்று மறந்து போயிருக்கும்! செத்தவர்கள் வேலைக்காரர்கள் தானே!
பதிவை நிறைவு செய்வதற்கு முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதியை நையாண்டி செய்த ஒரு காணொளியொடு!
கோ..ப்பால்! இது என்ன கொடுமை கோ..ப்பால்?
ஏகே போஸ் விஷயத்தில் இவ்வளவு விரைவாக தீர்ப்பு சொல்லிவிட்டதே உயர்நீதிமன்றம். ப.சி. தேர்தல் வழக்கை 2060க்குள் சொல்லிவிடுவார்களா?
ReplyDeleteஇங்கே சென்னை உயர்நீதிமன்றத்தின் பலதீர்ப்புக்களும் நக்கீரன் கோபால். திமுக, மற்றும் காங்கிரசுக்குச் சாதகமாக வந்து கொண்டிருப்பது சிதம்பர ரகசியம்! வக்கீல்கள் பாஷையில் இதை bench shopping என்றும் சொல்வார்கள்! அரசு மேல்முறையீட்டுக்குப் பின்னால் இந்தத் தீர்ப்பு நிற்குமா என்பதே சந்தேகம்.
Deleteமேல்முறையீட்டுக்குப் போனால் என்றிருக்க வேண்டும்.
Delete//நம்மைப் படுத்திக் கொண்டே இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தும் கூட கேள்விகள் கேட்கத் தயங்கிக்கொண்டே இருப்பதும் ஏன்? //
ReplyDeleteகேள்விகள் எல்லாம் கேட்கிறார்கள். பதில்களை எதிர்பார்ப்பதில்லை. அடுத்த கேள்விக்கு தயார் ஆகிவிடுவார்கள்!
//காங்கிரஸ்காரர்களுக்கு, அதிமுகவைக் குறைசொல்கிற அருகதை உண்டா?//
இல்லைதான்.
ரராபா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் அதிகம் பார்த்ததில்லை. இப்போது இங்கு காணொளி கண்டேன். அவர் சேனலுக்கு சாணக்யா என்று தேடவேண்டுமா?
ஸ்ரீராம்! இது சாணக்யாவின் யூட்யூப் சேனல் முகவரி https://www.youtube.com/channel/UC-70aykpX67dIXeQ8HQQ-VA
Deleteமுகநூலில் சாணக்யா என்று தேடினாலே வரும். நேரலையில் வரும்போது அதன் முகவரி வேறாக இருக்கும் அதை ஏற்கெனெவே ஒரு பதிவில் கொடுத்திருக்கிறேன்.
சாணக்கியா பற்றி கேட்க வேண்டும் என்று நானும் எண்ணியிருந்த பொழுது பதில் கிடைத்து விட்டது. நன்றி.
ReplyDelete