Showing posts with label கேள்விகளைக் கேள்வி கேளுங்கள். Show all posts
Showing posts with label கேள்விகளைக் கேள்வி கேளுங்கள். Show all posts

ஒரு புதன் கிழமை! ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை!

கேள்விகள் இல்லாமல் இந்த உலகத்தில் எதுவுமே இருந்தது இல்லை என்பது தெரிந்ததுதான்! ஆனால் பதிவுகளிலும், அரசியலிலும் மட்டும் தான் கேள்விகள் கேட்பதையே வெறுக்கும் போக்கு  இன்னமும் நீடிக்கிறதோ?  



எல்லோரும் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரே ஒரு கருத்துக் கணிப்பு மட்டும் ஹரியானா ரிசல்ட் வேறுமாதிரி இருக்கும் என்று செல்கிறதாம்! 

According to the India Today-Axis My India exit poll, there is a tight race between the ruling Bharatiya Janata Party (BJP) and the Indian National Congress.The poll predicts BJP winning 32-44 seats and the Congress winning 30-42 seats. Both parties, with these numbers, would fall just short of the majority mark of 46. Haryana has a total of 90 Assembly seats. இன்னும் 24-30 மணிநேரத்தில் வாக்கு எண்ணிக்கையின் போக்கில் இது சரிதானா இல்லையா என்பது தெரிந்து விடும் என்பதால், பொறுத்திருந்து பார்த்து விடலாம்! 

தோல்விகள் ஒருபக்கமிருக்கட்டும்! அதற்கு என்ன காரணம் சொல்வது யார் மீது பழிபோடுவது என்பதில் நாளை ரிசல்ட் வருவதற்கு முன்னாலேயே  சரத் பவாரின் NCPக்கும் காங்கிரசுக்கும்  நேற்றைக்கே வார்த்தைப்போர் ஆரம்பித்துவிட்டது. நேற்றைக்கு சரத் பவார்கட்சியின் ராஜ்யசபா எம்பி மஜீத் மேமன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவோ பிரியங்காவோ தேர்தல் பிரசாரத்துக்கு வரவே இல்லை. ராகுல் காண்டி வந்தார் என்றாலும் மாநிலத்தில் காங்கிரஸ்கட்சிப் பிரபலங்கள் எவரும் கூட வரவில்லை. சரத் பவார் மட்டுமே இந்தத் தேர்தலில் மிக்க கடுமையாக உழைத்தார். NCP மட்டுமே தனித்துப் போட்டியிட முடியாது என்பதாலேயே காங்கிரசோடு கூட்டு சேரவேண்டியதாக இருந்தது என்று உண்மை நிலவரத்தைப் போட்டு உடைத்து விட்டார்.

உண்மையை சகித்துக் கொள்ள முடியாத ஒரு கும்பல் தான்  சோனியா காங்கிரஸ் என்பது மேமன் சொன்னதை சகித்துக் கொள்ள முடியாத மாநிலக் காங்கிரஸ் தலைவர் ராஜன் போன்சாலே பதிலுக்குப் பொங்கியதில் வெளிப்பட்டதாம்!
Memon’s remarks evoked a sharp response from the Congress, with the party’s state general secretary Rajan Bhonsale saying, “You do not really need an enemy when you have an ally such as the NCP,” he said.Taking a further dig at the NCP, Bhonsale asked, “With the exception of Sharad Pawar, you did not see any other NCP leader campaign across the state. Despite facing health issues, an 80-year-old man had to travel across the state to hold public meetings.” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. அவர் கூட சரத் பவார் கடுமையாகத் தேர்தல் பிரசாரம் செய்ததை மறுக்கவில்லை. 



NCP தலைவர்கள் இப்படிச் சொல்லிப் பஞ்சாயத்தை முடித்து விட்டார்கள். உண்மையைச் சொன்னால் கூட அதையே  அக்கப்போர் என்று மாற்றி விடுவது  டூப்ளிகேட் காண்டிகள் யோக்கியதை! வேறெப்படிச் சொல்வது? 



அமலாக்கத்துறை விசாரணைக்கைதியாக கர்நாடகாவின் காங்கிரஸ் பணமுதலை DK சிவகுமார் திஹார் சிறையில் இருக்கிறார். சோனியா நேற்றைக்கு அவரை திஹார் சிறைக்கே சென்று சந்தித்தார் என்பது சேனல்களில் ஒரு நிமிடச் செய்தியாகக் குறுகிப்போயிருப்பதே, சோனியாG காங்கிரசுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை ஒரு கோடி காட்டுவதாக இருக்கிறது. திரும்பவும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்பதாலேயே எமெர்ஜென்சி தவறுகளுக்குப் பின்னால் கூட அதிகார வர்க்கத்தின் ஒருபகுதி இந்திராவுக்கு ஆதரவாக நிறைய உள்ளடிவேலைகளைச் செய்து வந்தது. 1980 இல் மறுபடி இந்திரா ஜெயித்துவந்தார்! 1984 இல் அவருடைய மரணத்துக்குப் பின்னாலும் கூட அதே அதிகாரவர்க்கம் ராஜீவ் காண்டி காலத்திலும், ஏன், மிகச் சமீப காலம் வரையிலும் கூட காங்கிரசுக்கு விசுவாசியாகவே இருந்து வந்தது. 

அப்படி காங்கிரஸ் விசுவாசிகளாக இருந்தவர்கள், இப்போது முற்றிலும் நம்பிக்கை  இழந்துவிட்டார்கள் போல்!  நடப்பவை எல்லாம் அப்படித்தான் என்பதை உறுதி செய்வதுபோலத் தான் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அரசியல்வாதிகள் மட்டும் தான் மாறுவார்களா? அதிகாரிகளும் நீதிமான்களும் மாறமாட்டார்களா?  

செய்திகளின் வேரைப்பிடித்து ஏன் எப்படி என்று கேள்வி எழுப்பித் தெரிந்துகொள்ள வேண்டிய சங்கதி இது.

அரசியலுக்குத் தொடர்பிருக்கிறதோ இல்லையோ, கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவாக இங்கே
   
மீண்டும் சந்திப்போம்.   

வெள்ளிக்கிழமை! கேள்விகள் கேள்விகளாகவே இருந்துவிடுவது ஏன்?

இந்த இரண்டரை நிமிட வீடியோ செய்தியைப் பார்த்து விட்டு என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா என்று நான் கேள்வி கேட்கப்போவதில்லை! எங்களைக் கேள்வி கேட்கிற உனக்கு பதில் தெரியுமா? தெரிந்தால் சொல்லிவிட்டுப் போயேன்! அதென்ன, எங்களைக் கேள்வி கேட்பது? இப்படி நண்பர்கள் மனதில் ஓடுகிற மாதிரிப் பட்சி சொல்கிறது!😉🙏     


ஆந்திராவில்...ஜெகன்மோகன் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவிருந்த சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
தேர்தல் நேரத்தில்..நாயுடுகாரு ..தமிழகத்திற்கு நேரில் வந்திருந்து ஆதரவு தெரிவித்து போனாரே..அதனால்...
''ஜனநாயக படுகொலை செய்யும் பாசிச ஜெகன்மோகன் ரெட்டி ஒழிக'' என்று வழக்கமான முறையில் தமிழகத்திலிருந்து எதிர்க்கட்சிகளின் குரல் கேட்குமா என்றால் கேட்காது. 
ஏனெனில்..வேறு சில காரணங்களுக்காக,  ஜெகன்மோகன் ரெட்டி தேவைப்படுகிறார். அதனால் பகைத்துக் கொள்ளாமல் பதுங்குகின்றன
சில கட்சிகள் குத்தகை எடுத்து பேசும் பாசிஸ எதிர்ப்பும், வெங்காயமும் ஒன்று. உரிக்க உரிக்க ஒன்றுமில்லை 
நன்றாகப்பார்த்துவிட்டு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடிந்தவர்கள் சொல்லலாம்! நண்பர் ராஜசங்கருடைய  முகநூல் பகிர்வு வழியாக இந்தச் செய்தி, படத்தைப் பார்த்தேன். ஒரு முன்னாள் வங்கியாளனாக இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது ஊகிக்க முடிந்ததும் கூட!  Demonetisation  ஏன் நிறையப் பேருக்கு வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வலித்தது, ஊமைக்குத்தாக இருந்தது என்பதுகூடப் புரிய வரலாம்!



மனுஷ்ய புத்திரன் என்கிற இந்த திமுக ஆசாமி மட்டுமல்ல திமுக தலீவரே, பேசும்போதெல்லாம் காமெடியாகிக் கொண்டு தான் வருகிறார்! சமீபத்தில் சாத்தனார் என்பதைக் கீர்த்தனராக்கிப் பேசிய வீடியோவைப் பார்த்தவர்கள் பாக்கிய வான்கள்! ஜட லோக சாம்ராஜ்யம் அவர்களுடையது! 


இது இன்றைக்கு நியூஸ் 7 சேனலின் தளத்தில் பார்த்தது. 
விவசாயிகள் பெயரில் பெரு முதலாளிகள் வங்கிகளில் நகைக் கடன்களை வாங்குவதைத் தடுக்கவே, நகைக் கடன் வழங்குவதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 
புதுக்கோட்டை அருகே திருமயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஹெச். ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ப. சிதம்பரத்தை போன்று தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என தெரிவித்தார். தமது இலவச இணைப்பில் உள்ள ஒரு கட்சியை கழற்றி விடுவது திமுக-வுக்கு நல்லது என்றும் அவர் கூறினார். 

கேள்விகள் கேட்பதும் விடைதேட முயற்சிப்பதும் வளர்ச்சியின் அறிகுறி, வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சமும் கூட    என்பதைப் புரிந்துகொண்டால் கேள்விகளை எதிர் கொள்ளத் தயங்கவும்  மாட்டோம்! வெளிப்படையாக பதில் சொல்லவும் தயங்கமாட்டோம்!  

மீண்டும் சந்திப்போம். 

மம்தா பானெர்ஜி! கான் மார்க்கெட் #ஊடகவிபசாரம்

அமித் ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு வலுவான நியாயங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானெர்ஜியின் அதீத மமதையும்  கிறுக்குத் தனமும்  எந்த அளவுக்கு முற்றிப்போய் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்! மம்தா வீழ்ச்சியை சந்திக்க 2021 சட்டமன்றத் தேர்தல்கள் வரைகூடக் காத்திருக்கவேண்டாம் போலத் தான் தெரிகிறது.


தமிழக ஊடகங்களுடைய அராஜகமான திரிசமன் வேலைகள் இன்னும் ஓயவில்லை. அதிமுகவுக்கு மந்திரிசபையில் இடம் இல்லை என்பது உண்மையிலேயே இவர்களுடைய கவலையா என்ன? எதையாவது கொளுத்திப் போடவேண்டியது, அது         நமத்துப் போனதும் வெட்கமே இல்லாமல் இன்னொன்றைக் கொளுத்திப் போடவேண்டியது Presstitutes என்ற கேவலமான அடைமொழிக்குப் பொருத்தமானவர்கள்தான் இவர்கள்!


ஆனந்த விகடன் உட்பட இங்கே பெரும்பாலான ஊடகங்கள் யோக்கியதை இதுதான்! #ஊடகவிபசாரம் 

#தில்லி #லட்யன்ஸ் #கும்பல் - அறிமுகம், விளக்கம்
( துக்ளக் 5-6-2019 இதழின் தலையங்கத்திலிருந்து )
------------------------------------------
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் நரேந்திர மோடி , - ' நான் டெல்லி கான் மார்க்கெட் கும்பல் ( Khan Market Gang ) உருவாக்கிய தலைவன் அல்ல ' என்று கூறியபோது , பலருக்கு - குறிப்பாக தமிழக மக்களுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
டெல்லியில் பத்திரிகைகள், அறிவு ஜீவிகள் , இடைத்தரகர்கள், தொழிலதிபர்களின் பிரதிநிதிகள், முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கூட்டம்தான் டெல்லியில் பழம் தின்று கொட்டை போடும் கான் மார்க்கெட் கும்பல் என்பது. இந்தக் கும்பலுக்கு 'லட்யன்ஸ் டெல்லி கும்பல் ' என்கிற அடைமொழியும் உண்டு.
புதுடெல்லியை உருவாக்கிய எட்வின் லட்யன் என்கிற ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளரின் பெயரை வைத்து, புதுடெல்லியை லட்யன் தில்லி என்று அழைக்கிறார்கள். அதுவே இந்தக் கும்பலுக்கும் அடைமொழிப் பெயராக இருக்கிறது. உலக மயமாக்கல் காலத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் , வெளிநாட்டு அரசுகளுக்கும் வக்காலத்து வாங்குபவர்களும் இந்தக் கும்பலில் இணைந்தனர்.
புதுடெல்லியின் மையத்தில் இருக்கும் கான் மார்க்கெட் உணவகங்களில் அமர்ந்து, மணிக்கணக்கில் அரட்டை அடித்து, அக்கப்போர் செய்து, உண்மையும் பொய்யும் கலந்த வதந்திகளைப் பரப்புவதில் நிபுணத்துவம் பெற்றது அந்தக் கும்பல். அது மத்திய அரசுக்கும் , பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் , ஏன் நீதிபதிகளுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ கருத்துக்களை உருவாக்க வல்ல , செல்வாக்கும், அறிவுக்கூர்மையும் கொண்ட கூட்டம் அது.
அந்தக் கும்பல் அக்கப்போர்களையும், வதந்திகளையும் டெல்லியில் உருவாக்கி , அதை செய்தியாக மாற்றி , நாடு முழுதும் பரப்புவதற்கு , அதனுடன் இணைந்த பிரபல பத்திரிக்கையாளர்களை அது பயன்படுத்துகிறது. அவர்களை குஷிப்படுத்தாத யாரும் நிம்மதியாக இருக்க முடியாது.
பிரதமர்களும், அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அவர்கள் சிபாரிசு செய்பவர்களையும் சந்திக்க வேண்டும். அதைக் கண்டு அஞ்சாத அரசோ, பிரதமரோ, அரசியல் கட்சியோ, தலைவரோ, அதிகாரியோ, ஏன் நீதிபதியோ கூடக் கிடையாது.
லட்யன்ஸ் கும்பலின் வாயில் புகாமல் இருக்கவே அனைவரும் முயற்சிப்பார்கள். இப்படிப்பட்ட வர்க்கத்தை அப்படியே ஓரம் கட்டினார் மோடி. அவர்களுக்கு இருந்த எல்லாச் சலுகைகளையும் நீக்கினார். பெரிய பத்திரிக்கையாளர்கள் கூட்டம் அரசாங்க செலவில் வெளிநாடுகளுக்கு சொகுசுப் பயணம் செல்வதை நிறுத்தினார். அவர்களை சந்திப்பதை அறவே தவிர்த்தார். அதனால் அவர்களின் மவுசு குறைந்தது. ஆத்திரம் அடைந்த அவர்கள் , மோடிக்கு எதிராக நாடு முழுவதும் செய்திகளை பரப்பினர்.
மோடியின் சாதனைகளை மறைத்து, அவரைப் பற்றி அவதூறு கூறி, அங்கும் இங்குமாக நடந்த சிறு சிறு நிகழ்வுகளை பெரிதுபடுத்தினர். நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு, அதன் சகிப்புத்தன்மை குறைந்து, மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோய் நாடே மாறிவிட்டது என்றெல்லாம் கூறி , மோடியின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முழுவதும் அவர்கள் அக்கப்போர் செய்து வந்தனர். வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து உலக அளவில் நாட்டையே தலைகுனிய வைத்தனர். அந்த லட்யன்ஸ் கும்பலைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள்தான் '2019 தேர்தலில் மோடி தோற்றுவிடுவார் ' என்கிற தோற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தினர்.
எதிர்க்கட்சிகளும் அதை நம்பி , அப்படியே பகற்கனவு கண்டனர். முடிவில் , தோற்றது எதிர்கட்சிகள் மட்டுமல்ல, லட்யன்ஸ் கும்பலும்தான். 

இங்கே தமிழகத்திலும் ஒரு கும்பல் லட்யன்ஸ் கும்பல் மாதிரியே செயல்படுகிறது. கொட்டம் அடக்கப்பட  வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கிறதா? 


புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் எந்த ஊரு என்ன சாதி என்றெல்லாம் கேள்விகேட்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார். இதே மாதிரி சிலவாரங்கள் முன்பு அன்புமணி ராமதாசும், பிரேமலதா விஜய்காந்தும் சிலநிருபர்களுடைய விஷமத்தனமான கேள்விகளை எதிர் கொள்ள வேண்டிவந்தது நினைவிருக்கலாம். 
      



உண்மையைத் திசைதிருப்பும் ஊடகங்களைக் கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது. 

மீண்டும் சந்திப்போம் 

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே!

எங்கள் Blog ஸ்ரீராமுக்குப் போட்டியாக இன்றைய பதிவை ஒரு அருமையான  பாடலோடு ஆரம்பித்து விடலாமா? அலுப்பைத்தரும் அரசியல்சூட்டைக் கொஞ்சம் தணித்துக் கொள்ள உதவியாக இருக்கும்! 

பாடலாசிரியர் சரியாகத்தான் எழுதியிருக்கிறார்! ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை! ஆனால் சரியான கேள்விகளைக் கேட்க சமூகம் ஏன் தொடர்ந்து தவறிக்கொண்டே இருக்கிறது? கேள்வி கேட்பார் இன்றி அரசியல்வாதிகள் அரசியல்வியாதிகளாக நம்மைப் படுத்திக் கொண்டே இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தும் கூட கேள்விகள் கேட்கத் தயங்கிக்கொண்டே இருப்பதும் ஏன்?      

ஆனால் ரங்கராஜ் பாண்டே தொடர்ந்து கேள்விகளைக் கேளுங்கள் என்று சொல்லிக் காரியத்திலும் (பதில் சொல்வதில் தான்)  இறங்கி விட்டார். குமுதம் வார இதழில் இரண்டுவாரங்களாக அவருடைய பதில்கள் வந்து கொண்டிருக்கிறது. முதல்வாரம் வந்த கேள்விகளுக்கான பதிலை மேலே உள்ள வீடியோவில் கேட்கலாம். குமுதம் போன்ற அச்சுப்பிச்சு பத்திரிகைகளை வாங்குவது படிப்பது இரண்டையும் நிறுத்தி விட்ட எனக்கு இது பெரிய வரம்! 
  
மோடியை தந்தை என்று அழைப்பதே அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு! பீட்டர் அல்போன்ஸ் சிறப்புப் பேட்டி இது இன்று இணையத்தில் வாசித்த அரசியல் காமெடி! 

திராவிடக் கழகங்கள் பெரியாரைத் தந்தை என்று பெருமிதத்தோடு அழைக்கிறது. ஆனால், இன்று அதிமுக மோடியை தந்தை என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. இது அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு என்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.   

அல்போன்ஸ்களிடம் கேள்விகேட்டும் பயனில்லை! அதனால் இங்கே வரும் நண்பர்களிடம் கேட்டுவிட வேண்டியது தான்! முதலில் இந்திராவை அன்னை என்றார்கள்! அப்புறம் சோனியா G அன்னையானார்! இப்போது பிரியங்காவிடத்தில் அன்னையைத் தேடிக்  கொண்டிருக்கிற காங்கிரஸ்காரர்களுக்கு, அதிமுகவைக் குறைசொல்கிற அருகதை உண்டா?


91 வயதான LK அத்வானிக்கு காந்திநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லையாம்! ஓரம் கட்டிவிட்டார்களே என்று காங்கிரஸ் உருகுவது இந்த தேர்தல்நேரத்தில்   இன்னொரு காமெடி! இந்த விவாதத்தில் பிஜேபியின் KT ராகவன், சரியான பதிலை திருகல் வேலைசெய்யும் பத்திரிகையாளர் ராதா கிருஷ்ணனுக்குச் சொல்லியிருக்கிறார்! 


இறந்துபோனவர் வந்து அப்பீலா செய்யப் போகிறார்? தீர்ப்பின் ஒருபகுதி இது! தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரிய திமுக வேட்பாளர் சரவணனின் மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்ததை சொல்லாமல் இருப்பது நம்மூர் ஊடக அறம்!  

‪மூன்று ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்ட தினகரன் அலுவலக எரிப்பு வழக்கின் தீர்ப்பு தினகரனிலேயே மூன்றாம் பக்க செய்திதான். குடும்ப அரசியலில் உண்மையான சாமானியர்களின் உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பு😔


அந்தத் துயர சம்பவம் நடந்த போது கலாநிதி மாறன் மதுரைக்கு வந்து என்ன குதிகுதித்தார் என்னென்ன சவால்கள் விட்டார் என்பது அவர்களுக்கே இன்று மறந்து போயிருக்கும்!  செத்தவர்கள் வேலைக்காரர்கள் தானே!  

பதிவை நிறைவு செய்வதற்கு முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதியை நையாண்டி செய்த ஒரு காணொளியொடு!

   
கோ..ப்பால்! இது என்ன கொடுமை கோ..ப்பால்?  
        

கருத்துக் கணிப்புகள்! கணிப்பா, திணிப்பா?

நிறைய விஷயங்களை இங்கே ஸ்பூனில் ஊட்டிவிட்டுத் தான் சொல்ல வேண்டியிருக்கிறதோ? கொஞ்சம்  தேடிப் பார்த்தாலேயே எளிதில் எல்லா விஷயங்களையும், இணையம் நம்முன்னால் கொண்டுவந்து கொட்டத் தயாராக இருக்கும்போது கூட, ஏன் தகவல்களைத் தேடி, சரிபார்த்துக் கொள்ள  தோன்றுவதே இல்லை?

மக்கள் யார்பக்கம் என்று ஒரு சரியான கணிப்பை, ஒரு மிகச்சிறிய பகுதியிடம் மட்டும் கேட்டு முடிவு செய்து விட முடியுமா? Sample size சிறிதோ பெரிதோ ஒரு சரியான representative factors இருக்குமானால், கணிப்பு சரியாகவே இருக்குமென்று தான் புள்ளியியல் பாடம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் காண்பதென்ன?

இங்கே ஜனங்களுடைய நாடித்துடிப்பை சரியாகக் கணிக்கிறார்களா என்பதை முடிவு செய்வதற்கு முன் ஒவ்வொரு ஊடகத்தையும், ஒருபக்கச் சார்போடு செயல் படுகிறார்களா? கிடைத்த தகவல்களை சரியாக அனலைஸ் செய்து உள்ளது உள்ளபடியே சொல்கிறார்களா? தகவல்களைத் திரித்து தங்களுடைய வசதிக்கேற்றபடி சொல்கிறார்களா?
விலைக்கு வாங்கப்பட்ட செய்தியாக, கருத்து கணிப்புகள் இருக்கிறதா? 

பதிவில் இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருந்தால், மூடிவைத்து விட்டு அடுத்த வரியைப் படிக்கப் பொறுமையில்லாமல், நகர்ந்து விடுகிறவர்கள் எண்ணிக்கை இங்கே 90%.. 95% மேல் இருக்கிற கள யதார்த்தத்தை, கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமானால், ஒரு நல்ல கருத்து கணிப்பு நடத்துவதற்கு, களநிலவரத்தை சரியாக நாடிபிடித்துப் பார்ப்பதற்கு, சரியான கேள்விகள், உறுதிப்படுத்திக் கொள்ள உதவியாக இன்னும் கொஞ்சம் துணைக்கேள்விகள், கேள்வி கேட்கப் படுகிறவருடைய அரசியல் சாதிச்சார்பு இவைகளைப் புரிந்துகொண்டு பதிலை வகைப்படுத்துவது, இவையெல்லாம் முக்கிய காரணிகளாக இருந்தாலும் .......

நம்மூர் ஜனங்கள் இங்கே கருத்துக் கணிப்புக்காக சொல்கிற பதில், அப்படியே தேர்தல் முடிவுகளோடு ஒத்துப்போகும் என்பதற்கு கொஞ்சமும் உத்தரவாதம் இல்லை. கேள்விக்கு குண்டக்க மண்டக்க பதில் சொல்லிக் குழப்புவது இங்கே சர்வ சாதாரணம். 

     
இவ்வளவு நீண்ட விவாதமெல்லாம் தேவையில்லையே!ஆர்கே நகர் தொகுதியில் டெபாசிட் இழந்ததற்கு என்ன என்ன காரணம் என்று ஸ்டாலின் ஒரு கோடிகாட்டியதே போதுமானது! ஆர்கேநகர் இடைத்தேர்தலில் ஒரு பூத்தில் திமுகவுக்கு விழுந்த வாக்குகள் 11 ஆனால் அங்கே இருந்த திமுக ஆதரவு பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கை 25 என்று சொல்லியிருக்கிறார்.இதில் புதிய செய்தி எதுவுமில்லை. கழகம் ஆட்சியில் இருந்த சமயத்தில் வாக்குப்பதிவில் காட்டிய அதே வித்தையை தினகரனும் செய்து காட்டினார். அவ்வளவுதான்!    

கருத்து கணிப்புகள் பெரும்பாலான நேரங்களில் கருத்துத் திணிப்பாக, ஸ்பான்சர் செய்யப்பட்ட செய்திகளாக, விலைக்கு வாங்கப்படக் கூடியவையாக இருப்பதை NDTV பிரணாய் ராய் உள்ளிட்ட சில ஊடகக்காரர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், வளர்ந்த விதம்,பர்கா தத், வீர் சங்வி போன்றவர்கள் ஊட்டி வளர்க்கப்பட்டகதை, நிரா ராடியா போன்ற கார்பரேட் தரகர்கள் மத்திய மந்திரி சபையில் கேட்ட துறையை வாங்கி கொடுக்கக் கூடிய விதத்தில் வளர்ந்ததெல்லாம் இப்போது சமீபத்தில் நம் கண்முன் நடந்த கதை.

ஊடகங்களில் வருகிற செய்திகளின் வேர் எதுவென்று தேடிப்பார்க்கப் பழகினாலேயே அவைகளின் உண்மை இன்னதென்று உரைத்துப் பார்த்துவிட முடியும்.

அப்படிப் பார்க்கப் பழகிக் கொள்ளப் போகிறோமா? இதுதான், இது மட்டுமே தான் நமக்கு முன்னால் இருக்கும் கேள்வி! 


கேள்விப்படுகிற எல்லாவற்றையுமே கேள்வி கேட்கவும் தெரிந்து கொண்டாகவேண்டுமே! இல்லையென்றால் அம்பாரம் அம்பாரமாகக் காதுல பூ சுற்றிக்கொள்வது நிச்சயம்!