இந்தத் தேர்தல் பிரசாரங்களில் சில வித்தியாசமான காட்சிகள் கண்ணில் பட்டன. முதலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தென்சென்னை வேட்பாளர் ரங்க ராஜனை ஆதரித்து கமல்காசர் பிரசாரம் செய்தது. வித்தியாசம் என்னவென்றால் பிரபலம் பிரசாரம் செய்தது அல்ல ஆச்சரியம்! கட்சியின் வேட்பாளர் ரங்கராஜனையும் பேசவிட்டதுதான் உண்மையிலேயே அதிசயம்! வித்தியாசம்!
ஆனால் பொருள் புதிது நிகழ்ச்சியில் இகுக வேட்பாளர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் விவாதிக்க, மய்யத்தின் ரங்கராஜனை அழைத்ததில் என்ன உள்குத்தோ? ஏன் திமுக அதிமுக வேட்பாளர்களையும் கூப்பிடவில்லை என்றெல்லாம் ஊடகங்களைக் கேள்விகேட்க முடியாது.
மதுரையில் அழகிரி படம்போட்டடீஷர்ட்டுடன் Selfie எடுத்துக்கொண்டார் இசுடாலின் என்றால் அதேபாணியில் இரட்டை இலை சின்னத்துடனான புடவை கட்டிய மூதாட்டி உதயநிதியைக் கொஞ்சுகிற மாதிரி ஒருபடம்! முந்தைய பதிவில் நெல்லைத்தமிழன் சந்தேகப்பட்ட மாதிரி இதெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு செய்த செட்டப் மாதிரித்தான் இருக்கிறது.
படத்துக்கு நன்றி : குமுதம் தளம்
பிஜேபி வேட்பாளர் தமிழிசை சொல்கிற மாதிரி , திமுக வேட்பாளர் கனிமொழி சொல்ல முடியுமா?
இசுடாலின், ராகுல் காண்டி மேடைப்பேச்சில் தடுமாறுகிற மாதிரியே நாஞ்சில் சம்பத்தும் தடுமாறி இருக்கிறார்! கிரண் பேடி ஆணா பெண்ணா என்பதே தெரியாதாம்! தெரியாததைத் தெரிந்தமாதிரி அலம்பல் செய்வதுதானே திராவிடப் பம்மாத்து!!
அதென்ன தகுதியின் அடிப்படையிலேயே? ஊழல் ஒன்று தானே காங்கிரசையும் திமுகவையும் கூட்டணி தர்மம் அடிப்படையில் இன்றைக்கும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது?! அதுவும் எப்படிப்பட்ட தகுதி வாய்ந்தவராம் சின்ன ஜாமீன் கார்த்தி?
சிவகங்கை பிஜேபி வேட்பாளர் H ராஜா பெயர் சொன்னாலேயே திராவிடங்களுக்கு அப்படி எரிகிறது! ஏன், எப்படி என்று கேட்டுப் பாருங்கள்!
1998 மார்ச் 28 நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வாஜ்பாய் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது இரவு 8.45 க்கு. அதை சகித்துக்கொள்ள முடியாத ஜிகாதிகளால் இரவு 9.00 மணிக்கு பேராசிரியர் கே.ஆர்.பரமசிவன் அவரது இல்லத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது அவரது வீட்டிற்கு மிக அருகிலேயே (ஷெனாய் நகர் 2ஆம் தெரு, மதுரை) படுகொலை செய்யப்பட்டார். ஏழைமாணவர்களுக்கு இலவசக் கல்வி அளித்துவந்தவரை அவரிடம் படித்தவனையே வைத்து நடந்த கொலை. எழுத்தாளர் கடலோடி நரசையாவின் சகோதரர் இவர். நேற்று அவரது நினைவு தினம்.
இது மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசலில்! அந்த அமைச்சர் செல்லூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா! எம்எல்ஏ மகன் ராஜ் சத்யன் தான் அதிமுகவின் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்.
தோசானாமிக்ஸ் ரகுராம் ராஜனே சொல்லிட்டாராம்! அந்த L போர்டை நல்லாக் கவனிச்சுட்டு, கருத்து சொல்லுங்க!
ஏதேனும் புத்திசாலி ரிப்போர்ட்டர், அழகிரி டிஷர்ட் பேக்கிரவுண்டையும், இரட்டை இலை பாட்டியையும் விசாரித்தா விஷய்ம் உடனே வெளில வந்துவிடும்.
ReplyDelete5 கோடி குடும்பங்கள் - வருடத்துக்கு 3/4 லட்சம் - 3.5 லட்சம் கோடி. எது வறுமைக்கோடு என்பதைக் கண்டுபிடிப்பதில் ஆரம்பித்து, ரூபாய்க்கு மூணு படி அரிசி மாதிரி ஆகிடும், இல்லைனா, காங்கிரஸ், தாங்கள்தான் மெஜாரிட்டி வரவில்லை என்பதால் நிறைவேற்ற முடியவில்லை என்று நமக்கு டோப்பா போடவேண்டியதுதான். ஜெயிப்போம் என்று நினைப்பவர்கள்தானே குப்பை வாக்குறுதி கொடுக்க அஞ்சணும்.
புத்திசாலி ரிப்போர்ட்டர்கள் எவ்வளவு காசு தேறும் என்றுதான் பார்ப்பார்கள்! அதுவும் திமுக மேட்டரென்றால் சொல்லவே வேண்டாம்!அம்பலப்படுத்துவது அம்பலமேறுவதெல்லாம் கத்துக்குட்டிகள் தான்!
Deleteஅப்புறம், பானாசீனாவே மழுப்பலாகச் சொல்லிவிட்டாரே! அதுவும் பொருளாதாரம் இப்போ நல்லாப் போவதால் என்று ஒரு முகவுரையோடு இட்ஸ் doable இப்படி சப்பைக்கட்டோடு முதலில் பரிசோதனையாக ஆரம்பித்து படிப்படியாக அஞ்சுகோடி குடும்பங்களையும் கவர் பண்ணிடுவாங்களாம்!
அதனால் தான் இந்த L போர்டு கார்ட்டூன் பொருத்தமாக இருந்ததென்று பதிவில் சேர்த்தது!