இங்கே சினிமாவில் ஹீரோவாக இருந்தவர்களில் இரண்டே இரண்டுபேர்கள் தான் அரசியலிலும் ஹீரோவாக ஆனார்கள்! தமிழ்நாட்டில் எம்ஜியாரும் அடுத்த வீடான ஆந்திராவில் NT ராமாராவும்! அவர்களும், அப்படியே நீடிக்க முடிந்ததா இல்லையா என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்!
இங்கே பரட்டைகள் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது வாய்ஸ் கொடுத்துக் கொண்டே வருகிறபோதிலும், இன்னமும் வெட்டி வாய்சாக மட்டுமே இருக்கிற சூழ்நிலையில், 2005 ஆம் ஆண்டு, தேதிமுக என்று கட்சியை ஆரம்பித்து, உள்ளாட்சி, சட்டசபை, நாடாளுமன்றம் என்று தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டு கணிசமான வாக்குவங்கியை உருவாக்கியவர் விஜயகாந்த்! வாய்ப்பேச்சு வீரரல்ல என்று தொடர்ந்து நிரூபித்தவரும் கூட!
வாக்குவங்கி இருந்ததே தவிர அது சீட்டுகளாக மாறவில்லை என்பது, இப்போதுள்ள winner takes all என்பதான வெஸ்ட்மின்ஸ்டர் தேர்தல் முறையில் உள்ள மிகப்பெரிய கோளாறு! அடிப்படையில் உள்ள கோளாறுகளை சரிசெய்யாமல் மறந்துவிட்டு இங்கே ஊடகங்களில் பிரேமலதாவையும் ரெண்டு முருகனையும் மட்டுமே மையப்படுத்திக் கூவிக் கொண்டிருப்பது மிகப்பெரிய நகைமுரண்!
தொடர்புடைய பதிவாக
புதன்கிழமை! படத்தில் ஹீரோ! நிஜத்தில்....?
NT ராமாராவ் கடைசி காலத்தில் லட்சுமி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டதில் அவருடைய குடும்பம் எதிராக இருந்ததும் மாப்பிள்ளை சந்திரபாபு நாயுடு தெலுகு தேச கட்சி, ஆட்சி இரண்டையும் கைப்பற்றிக் கொண்டதும் நடந்து முடிந்த சமகாலக் கதை. இப்போது அதை நினைவுபடுத்திக் கொள்கிற மாதிரி ஒருபடம்! லட்சுமியின் NTR பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கி வருகிற 22 ஆம் தேதி வெளியாகிறது. ஆந்திர அரசியலில் சந்திரபாபு நாயுடுவை சங்கடப் படுத்துவதற்காகவே எடுக்கப்பட்ட படம் என்பதுமட்டும் இப்போது தெளிவாகி இருக்கிறது. ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு அல்லது அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பது இனிமேல் தான் தெரியவரும்! Mirchi 9 பண்டிதர்கள் ரிலீசுக்கு முன்னாடியே தோல்வி என்று சொன்னால் சரியாக இருந்துவிடுமா என்ன?
TTV தினகரனோடு ஒட்டிக்கொள்வதில்தான் இப்போது தன் வாழ்வும் உரிமையும் இருப்பதாக பாமகவிலிருந்து பிரிந்து வந்து ஒரு உதிரிக்கட்சியை நடத்திவரும் வேல்முருகன் வேண்டுமானால் நினைக்கலாம்!
கூடுதல் வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் மதிமுக விசிக இடதுசாரிகள், பச்சமுத்து கட்சி, ஈஸ்வரன் கட்சி, முஸ்லீம் லீக் என்று கூட்டணிவைத்தபிறகும் கூட அரசியல்களத்தில் நேரடியாக இயங்காத RM வீரப்பன் கட்சி, சுபவீ செட்டியார் என்று இன்னும்பல உதிரிகளோடும் இசுடாலின் கலந்தாலோசனை செய்த காட்சி, இங்கே உதிரிகளுடைய nuisance value என்னவென்று காட்டுவதாக இருந்ததே!
சிறிதோ பெரிதோ நாய்க்குடைமாதிரி பெருகி வரும் உதிரிக்கட்சிகளை முற்றொட்டாக நிராகரிப்பதில்தான் ஒரு வாக்காளனுடைய சரியான அரசியல் செயல்பாடு அழுத்தமாகப் பதிவுசெய்யப்படுவதாகவும், அரசியலில் உண்மையான எஜமானர்கள் யார் என்று காட்டுவதாகவும் இருக்கும் என்று இந்தப்பக்கங்களில் தொடர்ந்து சொல்லிவருவதை கவனிக்கிறீர்களா?
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!