தேதிமுகவை ரெண்டு முருகன் வச்சு செஞ்சுட்டதாக நேற்று முழுக்க துரைமுருகனும் தேதிமுகவும் தான் ஊடகங்களில் அதிகவெளிச்சம் பெற்றார்கள். அதே அளவுக்கு இசுடாலின் விருதுநகரில் நடத்திய தென்மண்டல மாநாடுகூட கவனத்தைப் பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்! கருணாநிதியின் மூத்தமகன் முக அழகிரி ஒரேகடிதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதுவும் அவருடைய மகள் அஞ்சுகச்செல்வி வருமானவரி செலுத்தாத வழக்கில் ஆஜராகாததால் ஜாமீன் இல்லாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப் பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே!
Oneupmanship என்று சொல்கிற மாதிரி ஊடக கவனம் எப்படியோ, எழும்பூர் ரயில்வே நிலையத்துக்கு கருணாநிதி பெயரை வைக்கவேண்டும் என்கிற கோரிக்கை அரசியலை முந்திக்கொண்டு செய்த அழகிரி, தான் இன்னமும் அரசியல் களத்தை விட்டுப் போய்விடவில்லை என்ற செய்தியை மிக அழுத்தமாகப் பதிவு செய்தியிருக்கிறார்!
ஒரு திறமையான ஊடகக்காரன், நிறுவனபலம் எதுவும் இல்லாமலேயே தனித்து நிற்க முடியும்! ரங்கராஜ் பாண்டே அதைத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. யாழினி பர்வதம் எழுப்பிய கேள்விக்குப் பாண்டேவின் பதில் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கும் ஆசைதான்!எஸ்ஏபி ஆசிரியராக இருந்த நாட்களிலேயே அச்சுபிச்சு குமுதமாக இருந்ததில் வாங்குவது, வாசிப்பது இரண்டையும் நிறுத்தியாகி விட்டதே! என்ன செய்யலாம்?
தேதிமுக அன்றும் இன்றும்! கார்டூனிஸ்ட் G பாலா என்ன அர்த்தத்தில் இரண்டையும் முகநூலில் பகிர்ந்தாரென்று தெரியாது! ஆனால் கருணாநிதி தெம்பாக இருந்த நாட்களிலேயே திமுகவின் அஸ்தமனம் ஆரம்பித்து விட்டதென்று தான் சொல்ல வேண்டும்! நேற்று KKSSR தென்மண்டல மாநாட்டில் நிறைந்த அமாவாசை இனிமேல் வளர்ச்சிதான் என்று பேசியது காமெடியா? காமெடிக் கொடுமையா? தேதிமுகவுக்கு வச்சு செஞ்சது மாதிரியே, சூரியன் சின்னத்தில்தான் போட்டி என்ற நிபந்தனைக்கு விசிக மதிமுக என்ன சொல்லப் போகின்றன? ஆசியாநெட்தமிழ் செய்தி ஊகமாக!
தன்னுடைய Source யாரென்று காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று வீரவசனம் எழுதியிருக்கிறார் என் ராம்! ஹிந்து நாளிதழ் India's National Newspaper என்று முகப்பில் போட்டுக்கொள்வதும், என் ராமுடைய ஊடக அறம் கேள்விக்குள்ளானதும் கேலிக்கூத்தானதும் பழங் கதைதான்! இந்த வீரவசனம் எத்தனை போலியானது என்பதை Bofors ஊழலை அம்பலப்படுத்திய சித்ரா தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
PaidMedia காசுக்கு கூவும் ஊடகங்கள் என்று விலைக்குப் போன ஊடகங்கள் குறித்து இங்கே நாலாவது தூண் விமரிசனமாகப் பார்த்திருக்கிறோம்!
அரசியல் களம் அதுதன் பாட்டுக்குத் தயாராகிக் கொண்டே வருகிறது என்பது புதிய செய்தியல்ல.
நாம் தயாராகிவிட்டோமா என்பதே இப்போதைய கேள்வி!
ஒவ்வொரு ஊடகத்துக்கும் அதுக்குன்னு அஜெண்டா இருக்கு. ஆயிரக் கணக்காண கோடிகளை அள்ளித் தர ஸ்பான்ஸர்கள் (அதிலும் வெளிநாட்டு) இருக்காங்க. அப்புறம் என்ன... இதில் ஹிந்து, விகடன் வித்தியாசம் என்ன? எல்லாம் ஒவ்வொரு கட்சிகளுடன் கூட்டணி வச்சிருக்காங்க. அதுனாலதான் இந்தப் பத்திரிகைகள் நல்ல வாசகர்களை இழந்து, கட்சிக்காரர்களை வாசகர்களாகப் பெற்றுள்ளது இந்தக் காலத்தில்.
ReplyDeleteஒரு மோசமான சூழ்நிலையை ஐமு கூட்டணி அரசசு அமைந்தபோது ஊடகங்களை காசுக்காகக் கூவுகிறவைகளாக , ஒரு கட்டத்தில் ஆளும்கட்சியே மூலதனம் போடும் பங்குதாரர்களாக ஆன அசிங்கமும் அரங்கேறியது என்பதைக் கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
DeleteBofors ஊழலை அம்பலப்படுத்தியவராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்ட என் ராம் ஊழலை அம்பலப்படுத்தியவர் பெயரை ஊழல் செய்தவர்களிடமே என்று ஹிந்து குடும்பத்தில் ஒருவரும் ஸ்விட்சர்லாந்திலிருந்து தகவல்களைச் சேகரித்தவருமான சித்ரா ட்வீட்டரில் சொல்வதைக் கவனித்தால், இப்போது பாதுகாப்புத்துறை அமைச்சகத்திலிருந்து திருடப்பட்ட ஆவணங்களைத் தந்தவர் யாரென்று சொல்ல மாட்டேன் என்று வசனம் பேசுவதிலுள்ள போலித்தனம், முரண்பாடு புரியும்.
திருடப்பட்ட ஆவணங்களையும் அரைகுறையாகப் போட்டு, அதிலும் ஒரு திருகல் வேலை செய்திருப்பது என் ராமின் எஜமானர்கள் யார் என்கிற கேள்வியை அடுத்து எழுப்புகிறது.
இங்கே விகடனெல்லாம் லோக்கல் ப்ளேடு பக்கிரி ரக ஜார்னலிஸம்.
அழகிரி என்றால் பரபரப்பு!
ReplyDeleteபாண்டே அஜித் படத்தில் பப்ளிக் ப்ராசிகியூட்டராய் வருவாரோ! அரசியல் இல்லாமல் பாண்டே இல்லை!
ரஃபேல் விவரங்கள் அவ்வளவு சர்வசாதாரணமாக காணாமல் போகுமா? அதிர்ச்சி, ஆச்சர்யம்.
விஜயகாந்த் குளித்துக் கொண்டிருக்கும் பாத்ரூமின் மேல் ஜன்னல் வழியாக கலைஞர் எட்டிப் பார்த்து பேசும் அந்தப் பழைய கார்ட்டூனை ரொம்ப ரசித்திருக்கிறேன். தேதிமுகவின் இன்றைய நிலை அவர்களின் பேராசையின் விளைவு...
//ரஃபேல் விவரங்கள் அவ்வளவு சர்வசாதாரணமாக காணாமல் போகுமா? அதிர்ச்சி, ஆச்சர்யம்//
Deleteஅதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ என்ன இருக்கிறது ஸ்ரீராம்? இங்கே இருக்கிற அதிகார அமைப்பு முறையில் ஒரு பாட்டில் விஸ்கி கொஞ்சம் பணம் கொடுத்தால் ராணுவரகசியங்களை விற்கிற ஊழியர்கள் உள்ள தேசம் இது. இத்தனைவருடங்களாகக் காங்கிரஸ் இங்கே ஆட்சி செய்ததில் காசுக்காக அலைகிற ஆசாமிகள் எத்தனைபேரைச் சேர்த்து வைத்திருப்பார்கள்?
ரொம்ப சிரமப்படவே வேண்டாம்! பானாசீனா முதற்கொண்டு ஊழலில் திளைத்தவர்கள் எப்படி விசாரணை வளையத்திலிருந்து தப்பித்துக் கொண்டே வருகிறார்கள்? கொஞ்சம் யோசித்தாலேயே புரியக்கூடியதுதான். .