காரணத்தில் காரியம்! காரியத்தில் காரணம்! நிறைந்திருக்கும் பூரணம்!



காரண காரியத்தில் நிறைந்திருக்கும் பூரணத்தைத் தெரிந்து கொள்வது எப்போதாம்? 

Our mind is a house haunted by the slain past,
Ideas soon mummified, ghosts of old truths,
God's spontaneties tied with formal strings
And packed into drawers of reason's trim bureau,

Sri Aurobindo

Savitri Bk. II, Canto. XIII, P. 285


மனம் என்பது இரு விதமான முரண்பாடுகளுக்கிடையில் எப்போதும் சலித்துக் கொண்டே இருக்கிற கருவி, ஏன், எப்படி, எதனால் என்று தர்க்கித்துக் கொண்டே போகும். இப்படிப் பட்ட கருவி ஒரு போதும் உண்மையை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள முடியாது. இந்தத் தருணத்தில்மிகவும் புரட்சிகரமாகத் தோன்றுகிற ஒரு கருத்து அல்லது வடிவம், சீக்கிரமாகவே நீர்த்துப் போவதை நம் அன்றாட வாழ்வில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!


மத நம்பிக்கைகள் மனிதன் தன் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிற முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பவையாக இருந்ததுண்டு. தீர்வு காண்கிறேன் பேர்வழி என்று நிறைய இடைச் செருகல்களாகப் புகுந்து கொள்ள, காலப் போக்கில் இந்த தீர்வுகளே புதிய பிரச்சினைகளாகமாறிப் போனதையும் வரலாற்றில் நாம் பார்த்திருக்கிறோம்.


உடனேயே "மதம் என்பது மக்களுக்கு வழங்கப்படும் அபின்" அல்லது "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்" என்று ஆரம்பித்து, எல்லாப் பிரச்சினைக்கும் இவர் அல்லது அவர் தான் காரணம் என்று பழியை ஏதோ ஒன்றின் மேல் சுமத்தி விட்டால் பிரச்சினை தீர்ந்தது! 


உண்மையான  பிரச்சினை என்ன என்பதையே மறந்து விட்டு ஏதோ ஒரு ஈயம் பூசிவிட்டால் அது தான் தீர்வு என்று மயங்கிக் கிடக்கிறோம். மார்க்சீயம், பார்ப்பனீயம் இன்னும் வகை வகையான ஈயங்கள்! ஈயங்களுக்கா இங்கே  பஞ்சம்!

ஒரு மதம் என்பது, ஒரு குறிப்பிட்ட தனிநபர் தான் கண்டடைந்த அனுபவத்தின் மீது சொல்லப் படுவதில் எழுப்பப் படுவது. அதைப் பின் பற்றுகிறவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது. திக்கு திசை தெரியாமல் தேங்கி  இருப்பதை விட, ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு முன்னேற ஒரு வழி அவ்வளவு தான்!  இப்படி தனிநபர்களால், அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், குழு, அல்லது கூட்டம் ஒரு நம்பிக்கையாக, ஒரு மதமாக உருவாகிறது. ஆக ஆரம்பித்து வைத்தவரின் அனுபவத்தின் அளவுக்கு மட்டுமே அந்த மதத்தின் எல்லை என்பதாகி விடுகிறது.


ஸ்ரீ அரவிந்த அன்னை மதங்களின் தேவை முடிந்து விட்டதாக அறிவிக்கிறார்! மதங்களின் தேவை முடிவது எப்போது?

குறுகிய வட்டத்தில் இருந்து ஆன்மீகச் சிந்தனைக்கு உயருகிற போது, மதம் என்பது அவசியம் இல்லாது போகும்.


ஆன்மீகச் சிந்தனை என்பது ஒரு பரந்த பார்வை, தனக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்த நிலை! எல்லாவற்றையும் நேசிக்கக் கற்றுக் கொண்ட நிலை. ஆன்மீகம் என்கிற போதே, எல்லாவற்றையும் துறந்த நிலை என்பதாக தப்பான ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொண்டு, அடிப்படை உண்மைகளையே நிராகரிக்கிற தப்பான அணுகுமுறைக்குப் போய் விடுகிறோம்.


உண்மையில், ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற ஒரு பக்குவமான நிலை. ஸ்ரீ அரவிந்த அன்னை இதை எளிதாகப் புரிகிற மாதிரி விளக்குவதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!




Why does man have faith in reason?

Because reason has a legitimate function to fulfill, for which it is perfectly adapted; and this is to justify and illumine for man his various experiences and to give him faith and conviction in holding on to the enlarging of his consciousness.

This truth is hidden from the rationalist because he is supported by two constant articles of faith, first that his own reason is right and the reason of others who differ from him is wrong, and secondly that whatever may be the present deficiencies of the human intellect, the collective human reason will eventually arrive at purity and be able to found human thoughts and life securely on a clear rational basis entirely satisfying to the intelligence.


His first article of faith is no doubt the common expression of our egoism and arrogant fallibility, but it is something more; it expresses this truth that it is the legitimate function of the reason to justify to man his action and his hope and the faith that is in him and to give him that idea and knowledge, however restricted, and that dynamic conviction, however narrow and intolerant, which he needs in order that he may live, act and grow in the highest light available to him.

The reason cannot grasp all truth in its embrace because truth is too infinite for it; but still it does grasp the something of it which we immediately need, and its insufficiency does not detract from the value of its work, but is rather the measure of its value.


For man is not intended to grasp the whole truth of his being at once, but to move towards it through a succession of experiences and a constant, though not by any means perfectly continuous self-enlargement. 


The first business of reason then is to justify and enlighten to him his various experiences and to give him faith and conviction in holding on to his self-enlargings. It justifies to him now this, now that, the experiences of the moment, the receding light of the past, the half-seen vision of the future. Its inconstancy, its divisibility against itself, its power of sustaining opposite views are the whole of its value. 

It would not do indeed for it to support too conflicting views in the same individual, except at moments of awakening and transition, but in the collective body of men and in the successions of Time that is its whole business.


For so man moves towards the infinity of Truth by the experience of its variety; so his reason helps him to build, change, destroy what he has built and prepare a new construction, in a word, to progress, grow, enlarge himself in his self-knowledge and world-knowledge and their works.

But reason cannot arrive at any final truth because it can neither get to the root of things nor embrace their totality.
It deals with the finite, the separate and has no measure for the all and the infinite.


தான் யோசிக்கிற விதம் தான் சரி, கருத்து மாறுபடுகிற மற்றவர்கள் சொல்வது தவறு என்ற வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதில் தான் பகுத்தறிவுவாதியாக, நாத்திகனாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொள்கிற ஒருவர் உண்மையைக் காணத் தவறுகிறார்.  


தர்க்க ரீதியாகக் காரணத்தால் அறிய முற்படுவதால் உண்மையை ஒருபோதும் முழுமையாகக் காண முடியாது. 

ஏனெனில் உண்மை என்பது மகத்தானது, மிகப் பெரியது. ஆனாலும் குருடர்கள் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் எதோ ஒரு பகுதியைத் தடவிப் பார்த்து, இது தான் யானை என்று சொல்ல முற்படுவதுபோல காரணத்தால், காரியம், காரியத்தால் காரணம் என்று தொடர்ந்து கொண்டே போகும்போது, அங்கே நிறைந்திருக்கும் பூரணத்தைக் காணத் தவறி விடுகிறோம்! 

ஒரு இனிப்புக் கடைக்குப் போகிறோம்! பலவிதமான இனிப்பு வகைகள்! பல வண்ணங்கள்! பலவிதமான ருசிகள்! அடிப்படையாக இனிப்பு என்ற ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்பது பார்க்கும்போது புரிவதில்லை! 



மனிதன் உண்மையை  எடுத்த எடுப்பிலேயே முழுமையாக விளங்கிக் கொள்ளும் வகையில் படைக்கப் படவில்லை என்பதை முதலில் புரிந்து கொண்டாக வேண்டும்! 

படிப்படியான அனுபவங்கள், சறுக்கல்கள், மீண்டு வருதல் இப்படி பலகட்டங்களைத் தாண்டித் தான், மனிதனுடைய விழிப்பின் எல்லை விரிவடைந்தாக வேண்டியிருக்கிறது. இங்கே வெறும் காரண காரியங்களை தர்க்கித்து அறிந்து கொள்ளும் அறிவைக் குறிப்பிடவில்லை. அறிவிற்கும் அறிவாக இருக்கும் விழிப்பு, இதைத் தான் ஞானம் என்று சொல்கிறோம்!


விழிப்பின் எல்லை விரிவடைவதற்கு தனக்குள்ளே மாற்றம் கண்டாக வேண்டும். எல்லை கட்டி பார்ப்பதில் இருந்து விடுபட்டுப்  பரந்த பார்வை பெறும்போது மட்டுமே, வெளியே காண்பதன் வளர்ச்சி மாற்றங்களோடு ஒத்திசைந்து போக முடியும்.
 


Without an inner change man can no longer cope with the gigantic development of the outer life.



“Our human knowledge is a candle burnt
  On a dim altar to a sun-vast Truth”

என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிறார்.

திரும்பத் திரும்பக் கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரியே, நாத்திகம், பரிணாம, பரிணாம மறுப்பு பற்றிப் பேசும் சீசன் அவ்வப்போது ஆரம்பித்துவிடும்! பரிணாமம் பற்றி பேச வந்த இடத்தில்  பார்ப்பனீயம், சொம்புதூக்குவது  இன்ன பிற தமிழ்ப் பதிவுகளுக்கு என்றே உண்டான அடையாள அடைமொழிகளோடு குறுகிப்போய் நின்றுவிடுவதை அடிக்கடி பார்த்துச் சலித்துக் கடைசியில், கொஞ்சம் தெளிவு படுத்திக் கொள்வதற்காக ஏற்கெனெவே எழுதியதன் மறுவாசிப்பு! மீள்பதிவு! கொஞ்சம் மாறுதல்களுடன்!

 



27 comments:

  1. //ஒரு இனிப்புக் கடைக்குப் போகிறோம்! பலவிதமான இனிப்பு வகைகள்! பல வண்ணங்கள்! பலவிதமான ருசிகள்! அடிப்படையாக இனிப்பு என்ற ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்பது பார்க்கும்போது புரிவதில்லை! //


    சாக்கடையில் ஓடுவதும் தண்ணீர் தான் என்று எனக்கு ஒரு அசிரிரீ கேட்கிறது!, என் வாலை யாராவது ஒட்ட நறுக்குங்கப்பா!

    ReplyDelete
  2. வால்ஸ்!

    இன்னொரு கமென்ட், பதிவுக்கு சம்பந்தமில்லாமல் இருந்ததால் நிராகரிக்கப்பட்டது.

    /சாக்கடையில் ஓடுவதும் தண்ணீர் தான்/

    அதைப் புரிந்துகொள்வதற்கு கண்ணிருந்தாலே போதும்! அசரீரி எல்லாம் எதற்கு?

    நம் உடலிலேயே மலம் மூத்திரம், சளி எல்லாவற்றையும் சுமந்துகொண்டிருக்கிறோம். நடமாடும் லாட்ரின் என்று கூட சொல்லலாமே! எதற்காக, மனிதன், பகுத்தறிவு, பரிணாமம் என்றெல்லாம் வீணாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டும்?

    ReplyDelete
  3. //மனிதன், பகுத்தறிவு, பரிணாமம் என்றெல்லாம் வீணாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டும்? //

    அதானே,

    எதுக்கு உங்க பையன் பள்ளிக்கோ, காலேஜுக்கோ போய் படிக்க வேண்டும், ஏன் வேலைக்கு போக வேண்டும், ஏன் நீங்களும் நானும் உயிர்வாழ வேண்டும்!

    ********

    சக்தி என்ற ஆரம்பித்து பின்னாலே இந்து மத கடவுள்களை கொண்டு வந்ததால் சாருவின் கடவுள் எங்கே என்று கேட்டேன், உங்கள் கடவுளுக்கு மதிப்பு கொடுப்பது போல் சாருவின் கடவுளுக்கும் மதிப்பு கொடுப்பது சரிதானே!?

    ஆதார சக்தி என்று ஆரம்பித்து பின்னாலேயே இந்து ஞானமரபு பிட்டை போடும் உங்கள் திறமையை ரசிக்கிறேன்!

    ReplyDelete
  4. வால்ஸ்!

    உங்கள் உண்மையான பிரச்சினைதான் என்ன?

    தத்துவம், சிந்தனையின் விரிவு என்று வரும்போது, மனித இனத்தின் ஒவ்வொரு பகுதியும் தன்னுடைய அனுபவங்களாகப் பலவற்றைத் தொகுத்து வைத்திருக்கிறது. தனிநபர்களைச் சார்ந்த சில மத நம்பிக்கைகளில், அந்த சிந்தனையின் விரிவு, அதை ஆரம்பித்து வைத்தவருடனேயே முடிந்துபோய் விடுகிறது, அதாவது காலாவதியாகிப்போய் விடுகிறது.

    ஹிந்து மதம், அல்லது இந்துமத கடவுள்கள் என்று உங்களால் இழித்துச் சொல்லப் படும் ஒவ்வொன்றும் ஒரு குறியீடு, பலருடைய சிந்தனை, அனுபவங்களுடைய திரட்டாக இருக்கிறது. ஒருவர் சொன்னதை அப்படியே, ஒரு எழுத்தைக் கூட மாற்ற மாட்டோம் என்று பிடிவாதம் இங்கில்லை.அவரவர் தன்னுடைய அனுபவத்தில் சோதித்து உணர்ந்து அறியப்படுவது ஒன்றே உண்மையாக நிலைக்கும் என்பது இங்கே உள்ள பரந்த சிந்தனைவெளியின் சாரம். நான் கடவுள் என்று சொன்ன மாத்திரத்தில், இங்கே ஒருவர் கடவுளாகிவிடுவதில்லை! அதற்குமுன்னால், அவர் தனக்குள் காண வேண்டிய உண்மையின் தரிசனம், அவர் தன்னுடைய குறுகிய எல்லைகளை விட்டு வெளியே வந்து, மிருக உணர்வை விட்டு விலகி, மனித நேயம் என்று வெறும் வார்த்தையில் சொல்லிக் கொள்கிறீர்களே, அதைத் தன்னுடைய ஒவ்வொரு அணுவிலும் அனுபவித்து ஏற்படுகிற மாற்றம் இப்படி நிறைய நுட்பங்களை இங்கே இந்திய ஞான மரபு மட்டும் தான் தன்னுடைய உயிரோட்டமாக வைத்திருக்கிறது.

    நான் A P நாகராஜனோ, குறைந்தபட்சம் ராம நாராயணனோ கூட இல்லை! இந்து மதக் கடவுள்களை வைத்து பிலிம் காட்டுகிற வேலையோ, இந்து ஞான மரபு பிட்டைப் போடுகிற திறமையோ இதில் எங்கே வந்தது?

    இது இப்போது ஒன்றும் புதிதாக அல்ல!பலநாட்களுக்கு முன்னால் உங்களுடன் அலைபேசியில் பேசும்போது கூட இதைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன்!

    இந்து ஞான மரபாகட்டும், சூ ஃபி ஞானமாக இருக்கட்டும், எதுவானாலும் என் தேடலுக்கு உதவுகிற ஞானம் எல்லாம் எனக்கு உகந்தவையே! அதைத் தான் எழுதுகிறேன்! இன்னமும் எழுதுவேன்! தவிர, நான் பதிவெழுதுவது எவருக்கும் உபதேசம் செய்வதற்கோ, என்னுடைய கருத்துக்கு ஆதரவாக மன அல்லது மத மாற்றம் செய்வதற்காகவோ இல்லை என்பதைப் பல இடங்களில் தெளிவாகச் சொல்லிக் கொண்டு தானே இருக்கிறேன்!

    அப்புறம், எங்கே மாறிவிடுவோமோ என்ற பயம் எதற்காக?

    ReplyDelete
  5. //ஆதார சக்தி என்று ஆரம்பித்து பின்னாலேயே இந்து ஞானமரபு பிட்டை போடும் உங்கள் திறமையை ரசிக்கிறேன்! //

    ஆமாம் பகுத்தறிவு மரபு சொல்வது மட்டும் நம்பும் பகுத்தறிவு வாதிகள் நாங்கள்.

    பகுத்தறிவின் நம்பிக்கையின் அடிப்படையில் பழமை யாவும் பொய், கட்டுகதை மற்றும் தவறு என்பதால் எல்லாவற்றையும் கண்ணை மூடிகொண்டு நிராகரிப்போம். கருத்து சரியா தவறா என்றெல்லாம் பார்க்க மாட்டோம்.

    மதம் என்றாலே அலர்ஜி, வாந்தி மற்றும் மயக்கம் எல்லாம் வரும்.

    :))

    [பிகு. நம்பிக்கை இருக்கிறது என்றாலே பகுத்தறிவு இல்லை என அர்த்தம் ;)]

    ReplyDelete
  6. //என் தேடலுக்கு உதவுகிற ஞானம் எல்லாம் எனக்கு உகந்தவையே! //


    அவரவர் தேடல் அவருக்கு!

    ReplyDelete
  7. anonymous comments இல்லாததால் Comment moderation அவசியமா ?

    ReplyDelete
  8. /அவரவர் தேடல் அவருக்கு!/

    இதை உண்மையாகவே புரிந்துகொண்டு சொல்லியிருந்தால், அடுத்தவருடைய நிலைபாட்டை ஏளனம் செய்கிற நிலைக்கு அவசியமே இருக்காதே!

    ஒவ்வொருவரும் தானறிந்த அளவுக்கே உலகைப் புரிந்து கொள்கிறார், அதன்படியே உலகம் இயங்குவதாக நினைத்துக் கொள்கிறார்.ஆனால் உண்மையோ அதில் இருந்து வேறுபட்டிருக்கிறது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் உண்மையின் ஒரு சிறு பகுதிதான், முழுமையானது அல்ல என்பதைத் தான் இந்தப் பதிவின் உள்ளடக்கமாக வைத்து, ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடலின் ஒரு பகுதியை மேற்கோளாக எடுத்துச் சொல்லியிருந்தேன்.

    ஆங்கிலத்தில் இருக்கும் அந்தப் பகுதியை, மேலோட்டமாகவாவது ஒருதரம் படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  9. //அடுத்தவருடைய நிலைபாட்டை ஏளனம் செய்கிற நிலைக்கு அவசியமே இருக்காதே!//


    தேடல் வேறு, நிலைபாடு வேறு, மற்றவர்கள் நிலைப்பாட்டில் குச்சிவுட்டு நோண்டுபோது தான் என் தேடல் நிறைவடைகிறது!

    //ஒவ்வொருவரும் தானறிந்த அளவுக்கே உலகைப் புரிந்து கொள்கிறார், அதன்படியே உலகம் இயங்குவதாக நினைத்துக் கொள்கிறார்.ஆனால் உண்மையோ அதில் இருந்து வேறுபட்டிருக்கிறது.//

    இது ”அ”விலிருந்து “ஃ” வரை அனைவருக்கும் பொருந்தும், கேள்விகள் ஒரு வேளை அளவு கூடிய பதிலை சொல்லிதரலாம்!


    //ஆங்கிலத்தில் இருக்கும் அந்தப் பகுதியை, மேலோட்டமாகவாவது ஒருதரம் படித்துப் பாருங்கள்! //


    எந்த ஓட்டத்தில் படித்தாலும் புரிய மறுக்கிறது, தமிழில் மொழிபெயருங்கள்!

    ReplyDelete
  10. why so much worried single man valpaiyan ?

    he wants to became another govi- let it be happen .

    dont try to change or convey to anybody. nobody will change until themself want to change.

    ( previously you worried sanjaygandhi)

    ReplyDelete
  11. வாருங்கள் சபரிநாதன்!

    அனானிகளை விட, வெறும் ப்ரொபைல் மட்டும் வைத்துக் கொண்டு முகம் தெரியாத பின்னூட்டங்கள் நிறைய வருகின்றன. தவிர, பதிவின் உள்ளடக்கத்துக்கு சம்பந்தமே இல்லாமலும், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே வரும் பின்னூட்டங்களை வடிகட்டுவதற்காக, மட்டுறுத்தல் அவசியமாக இருக்கிறது.

    இங்கே பகுத்தறிவு, மதச் சார்பின்மை, சமத்துவம், சோஷலிசம் போல பல வார்த்தைகள் தவறாகவே வியாக்கியானம் செய்யப் படுகின்றன, புரிந்துகொள்ளப் பட்டிருக்கின்றன! காரணமில்லாத வெறுப்பை உமிழ்வதர்காக மட்டுமே பார்ப்பனீயம் என்று ஒரு வார்த்தை இங்கே தமிழ்ப்பதிவுகளில் அடிக்கடி பயன்படுத்தப் படுவதைப் போலத்தான்!

    மதம், மதம் சார்ந்த நம்பிக்கைகள் என்பது ஒரு தொடக்கம் தான்!
    "தனிநபர்களைச் சார்ந்த சில மத நம்பிக்கைகளில், அந்த சிந்தனையின் விரிவு, அதை ஆரம்பித்து வைத்தவருடனேயே முடிந்துபோய் விடுகிறது, அதாவது காலாவதியாகிப்போய் விடுகிறது." என்று வால்பையனுக்குச் சொன்ன அதே பதிலைத் தான் உங்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கிறது.

    இந்தப் பதிவிலேயே, மதங்களின் தேவை முடிந்துவிட்டதாக ஸ்ரீ அரவிந்த அன்னையின் ஒரு உரையாடலை மையப் படுத்திச் சொல்லியிருக்கிறேனே!

    ReplyDelete
  12. [பிகு. நம்பிக்கை இருக்கிறது என்றாலே பகுத்தறிவு இல்லை என அர்த்தம் ;)]

    நான் பகுத்தறிவுவாதி இல்லை, என் பொண்டாட்டி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது!

    ReplyDelete
  13. //why so much worried single man valpaiyan ?//


    கருத்து வேறுபாடு வேறு, ஒருவர் மீது இருக்கும் பாசம் வேறு!

    ReplyDelete
  14. வாருங்கள் பாலு!

    வால்பையன் ஒன்றும் கோவி கண்ணனாக மாற முயற்சிக்கவில்லை!
    வால் வாலாகத் தான் இருக்கிறார்! ரொம்பப் பெரிய வாளாக இருப்பது தான் அவருடைய பலமும், பலவீனமாகவும் இருக்கிறது! வாலால் சிந்திப்பதை விட்டு என்றைக்காவது ஒருநாள், தன்னுடைய புத்தியால் சிந்திப்பார், புரிந்துகொள்வார் என்று நான் மிகவுமே நம்பிக்கை வைத்திருக்கிற செல்லப் பிள்ளை அவர்!

    கோவி கண்ணன் நிலை கொஞ்சம் வித்தியாசமானது! அவர் இறைமறுப்பாளர் இல்லை! பார்ப்பன/பார்ப்பனீய வெறுப்பாளர் மட்டுமே என்று சொல்லிக் கொள்வதில், அதே நேரம் நிறையப் பார்ப்பனர்கள் தன்னுடைய நண்பர்கள் என்றும் சேர்த்து சொல்லிக் கொள்வதில் அவருக்கு அலாதிப் பிரியம்!

    எனக்குப் பெரியாரும் ஒன்றுதான், வள்ளலாரும் ஒன்று தான் என்று சொல்லிக் கொள்வதில் இருந்தே புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன்!

    இந்த இருவரையுமே, அவரவர் மனப்போக்கைப் புரிந்து கொண்டு நேசிக்கிறேன்!

    ReplyDelete
  15. உறவுக்கு [நட்பு காதல் எதுவாயினும்] அன்பு இருந்தால் நம்பிக்கை தேவை அல்ல. [அதாவது அன்பு நம்பிக்கையை விட மேல் என்கிறேன்]

    பகுத்தறிவிற்கு தேவை ஆராய்ச்சி நம்பிக்கை அல்ல.

    ReplyDelete
  16. வால்ஸ்!

    /நான் பகுத்தறிவுவாதி இல்லை, என் பொண்டாட்டி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது!/

    இதில் எந்தப் பகுத்தறிவுவாதி மீதாவது உள்குத்து இருந்தால், அது எனக்குப் புரியவில்லை! ??

    அப்புறம் இதுதான் முதல்தடவை என்று நினைக்கிறேன்! நீங்கள் நம்புவதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    குட்டிப்பெண் என் மீது நம்பிக்கையில்லையா என்று மூக்கில் ஒரு குத்து விடப் போகிறாள் :-))

    ReplyDelete
  17. //பகுத்தறிவிற்கு தேவை ஆராய்ச்சி நம்பிக்கை அல்ல. //


    நான் எதையும் கேள்வி கேட்க வேண்டும் என்று தானே சொன்னேன்! நம்ப சொல்லவில்லையே!
    (கருத்துக்களை)

    ReplyDelete
  18. வால்ஸ்! சபரிநாதன்!

    நம்பிக்கை என்பது ஒரு தொடக்கப் புள்ளி. அது இல்லாமல், எதுவுமே இல்லை! முயற்சியோடு கூடிய எல்லா நம்பிக்கையுமே நல்ல நம்பிக்கைகள் தான்! சோம்பிச் சுருண்டு பேசும் வெற்று வார்த்தை தான் மூட நம்பிக்கையாகி மூளியாகி நிற்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதும்!

    பகுத்தறிவது, அல்லது பகுத்தறிவு என்பது இங்கே உள்ள பகுத்தறிவாளர்களாகத் தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்கிற ஒரு தரப்பால், மிகத் தவறாகவே அர்த்தப் படுத்தப் பட்டிருக்கிறது.

    எந்த ஒரு விஷயத்தையும், அப்படியே முகமதிப்பில் ஏற்றுக் கொள்ளாமல், அதன் உண்மையை உணர்ந்து இது இப்படித்தான் என்பதைப் புரிந்துகொள்வது பகுத்தறிவு! உதாரணமாக ரமணர், ஒரு தத்துவத் தேடலை, "நான் யார்?" என்பதை நானென்பது இந்த உடலா, மனமா,என்று ஒவ்வொன்றாக இது இல்லை, இது இல்லை என்று கண்டுகொண்டு மேலே போவதை மிக எளிமையாகச் சொன்னார்!

    நம்மூர் சராசரிக்கும் கீழே உள்ள ஆராய்ச்சி/பகுத்தறிவாளர்களுக்கு அந்த அளவுக்கெல்லாம் பொறுமை இல்லை! எடு முத்திரையை! குத்து, இது பார்ப்பனீயம்! எடு துண்டு! இது சுய மரியாதை! பிடி பட்டம், மானமிகு! இப்படிப் பகுத்தறிவு பேசுவது வெறும் வேடிக்கை! ஆராய்ச்சி பண்ணுவதற்கு என்மன இருக்கிறது அதில் என்று நினைக்கிறீர்கள்?

    அப்புறம், அன்பு! இந்த அன்பு, ஆரம்ப நிலையில் ஒரு குடத்தில் இருப்பது போல நமக்குக் கிடைக்கிறது! அப்புறம் முயற்சி செய்தால், கிணறு தோண்டி நீர் சுரப்பது போல இன்னும் அதிகமாகக் கிடைக்கிறது! இன்னும் பரந்து விரிந்தால், நதியாகப் பரிணமிக்கிறது!

    இன்னும் இன்னும் விரிந்து பழகினால், எல்லாமே அன்பாலே பிணைக்கப் பட்டிருப்பதும், அந்தப் பிணைப்பே தான் படைப்பாக பரிணமிப்பதுமாக இருக்கிறது!

    அன்பே சிவம் என்று திருமூலர் திருமந்திரத்தில் சொல்வது இதுவே!

    ReplyDelete
  19. //அன்பே சிவம் என்று திருமூலர் திருமந்திரத்தில் சொல்வது இதுவே! //


    சிவம் என்ற கொள்கை, மக்கள் அடிப்படையில் இருந்ததால் அதை பரிசீலிக்க அந்த வார்த்தையை அவர் சொல்லியிருக்கிறார்!

    என் கேள்வி ஏன் சிவன் என்ற வார்த்தை வந்தது!?

    ReplyDelete
  20. ஒரு குறியீடாகச் சொல்லப் படும் தத்துவ நிலையும், இங்கே கோவில், வழிபாடுகளில் சாதாரணமாகப் புழங்கும் வார்த்தையும் ஒன்றாக இருப்பதால் வரும் குழப்பம் இது.

    இங்கே வழிபாடுகளும், சடங்குகளும் கூட, வெவ்வேறு படித்தரங்களில் உள்ளவர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாக இருக்கிறது.

    ஒரு புரிகிற உதாரணத்தைக் காட்டி, புரிந்துகொள்ள முடியாத பிரபஞ்ச சக்தியைக் கொஞ்சமாவது புரிய வைக்கிற முயற்சிதான்!

    ReplyDelete
  21. @வால்,

    ஏன் வார்த்தையை பிடித்தே தொங்கி கொண்டிருக்கிறீர்கள். அவர் வாழ்ந்த காலத்தில் சிவன் மட்டுமே இறைவன் என்று நம்பிக்கையை கொண்ட மக்கள் இருந்தனர்.


    எனவே அதை மாற்றவே அன்பு தான் அடிப்படையான பொருள் (பரம்பொருள்) என்றார்.

    நன்றாக கவனியுங்கள் அன்பு தான் சிவம்(கடவுள்) என்றார். கடவுள் (சிவம், அல்லா, பெருமாள், ஏசு எதை வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்) என்பது அன்பு என்று சொல்லவில்லை.

    அதாவது கடவுள் என்ற தத்துவம் கூட தேவையில்லை பூரண அன்பு நிறைந்து இருந்தால் என்கிறார்.

    சுருக்கமாக கடவுள் (சிவம்) என்ற தனித்த பொருளை விடுங்கள். அன்பை கை கொள்ளுங்கள் என்கிறார்.

    ஆனால் நடப்பது என்னவோ ? நீங்களும் இன்னும் சிவத்தை பற்றி தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். அன்பை பற்றி அல்ல ?!!!! :(

    ReplyDelete
  22. அன்பை பற்றி ஆராய்ச்சி செய்ய என்ன இருக்கு?, ஏற்கனவே அது அதுவாகவே இருக்கும் போது!

    சிவன் பிடித்து தொங்க வசதியாக பல கிளைகளுடன் உள்ளார், அதனால் தொங்குகிறேன்!

    ReplyDelete
  23. /பிடித்து தொங்க வசதியாக பல கிளைகளுடன் /

    வாலோடு இருந்தால் தொங்கிக் கொண்டு, தாவிக் கொண்டு தான் இருக்க வேண்டும்!

    அடுத்த கட்ட பரிணாமத்திற்குத் தயாராக வேண்டாமா!

    :-)))

    ReplyDelete
  24. /பிடித்து தொங்க வசதியாக பல கிளைகளுடன் /

    வாலோடு இருந்தால் தொங்கிக் கொண்டு, தாவிக் கொண்டு தான் இருக்க வேண்டும்!

    அடுத்த கட்ட பரிணாமத்திற்குத் தயாராக வேண்டாமா!//



    சிவன் என்ற கற்பனை பாத்திரத்துக்கு என் கற்பனை வால் போதுமானது!, சிவனுக்கு பிறகு யாராவது வரட்டும் அடுத்த கட்டத்துக்கு தாவுவோம்!

    ReplyDelete
  25. //அன்பை பற்றி ஆராய்ச்சி செய்ய என்ன இருக்கு?//

    வால் எப்போதும், எல்லோரிடத்தும், எங்கேயும் அன்பு என்பது தான் இருப்பதிலேயே கடினமான செயல். கொஞ்சம் யோசித்து பாருங்கள் புரியும்.

    இதற்கு தான் உலகத்திலேயே அதிக கூரிய அறிவும், நிதானமும், பயிற்சியும் தேவை.

    [உதா: அடம் பிடிக்கும் குழந்தை இதை போல ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்]

    ReplyDelete
  26. //வால் எப்போதும், எல்லோரிடத்தும், எங்கேயும் அன்பு என்பது தான் இருப்பதிலேயே கடினமான செயல். கொஞ்சம் யோசித்து பாருங்கள் புரியும்.//


    மனிதனுக்கு மனிதனுக்கும் சண்டை வருவதில்லை!

    அந்த சாதிகாரனுக்கும், இந்த சாதிகாரனுக்கும் வரும்

    அந்த கட்சிகாரனுக்க்கும், இந்த கட்சிகாரனுக்கும் வரும்

    முதலாளிக்கும், தொழிலாளிக்கும் வரும்!

    நான் மனிதம், என்னை புரிஞ்சிக்க கூரிய அறிவு, நிதானம், பயிற்சியெல்லாம் தேவையில்லை!, பழகுனா தெரியாது, பழக பழக தான் தெரியும்! என்னிடத்தில் அன்பு மட்டுமே இருக்கு? நீங்க எப்படி?

    ReplyDelete
  27. வால்ஸ்!
    /என்னிடத்தில் அன்பு மட்டுமே இருக்கு?/

    மாவு ராகவன் பயந்து போய் வம்புப் பின்னூட்டங்களினாலேயே பிரபலமான வால்பையன் என்று சொன்னதாக அல்லவா நினைவு!

    இது என்ன புது பன்ச் டயலாக்?!

    :) :)

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!