காண்டு இல்லாத சின்னப் பொண்ணு ஜோக்ஸ்...!

ஒரு சிறு பெண் தன் தாயிடம் கேட்டது!

"அம்மா! மனித இனம் எப்படித் தோன்றியது?"

அம்மா சொன்னாள்,"கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார். அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. அப்படியே மனித இனம்  தோன்றியது."

இரண்டு நாள் கழித்து, அந்தச் சின்னப் பெண், தன் தந்தையிடம் அதே கேள்வியைக் கேட்டாள். தந்தை பரிணாமத்தைச் சுருக்கமாக விவரிக்கிறேன் பேர்வழி என்ற முனைப்பில்  "நீண்ட காலத்துக்கு முன்னால் குரங்குகள் இருந்தன. அவைகளில் இருந்து மனித இனம் தோன்றியது." என்று சொன்னாராம்.

சின்னப் பெண்ணுக்குக் கொஞ்சம் குழப்பம்! மறுபடி அம்மாவிடம் போய்க் கேட்டாளாம்: " நீயோ மனித இனத்தைக் கடவுள் படைத்ததாகச் சொல்கிறாய்! அப்பாவோ குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்கிறார்! அது எப்படி அம்மா?"

அம்மாக்காரி சொன்னாள்  : "அது ரொம்ப சரிதான் குழந்தை! நான் என்வழிக் குடும்பத்தைப் பற்றிச் சொன்னேன்! அப்பா அவர் வம்சாவளியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்!"


oooOooo


அந்தச் சின்னப் பெண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்!

பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிய சின்னப் பெண்ணிடம் அம்மா கேட்டாள்: "பள்ளிக் கூடத்தில் இன்றைக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்கள்?"

சின்னப் பெண் பெருமிதத்தோடு  சொன்னாள்: " எப்படி எழுதுவது என்று சொல்லிக் கொடுத்தார்கள்!"

அம்மாக்காரி கேட்டாள், "நீ என்ன எழுதினாய்?"

சின்னப் பெண் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சொன்னது, "தெரியலையே! எனக்கு இன்னமும் எப்படி எழுதினதைப் படிப்பதுன்னு சொல்லிக் கொடுக்கலையே!"

oooOooo


அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம், டீச்சரம்மா கேள்வி கேட்டார்!

"பூமி உருண்டைதான் என்பதற்கு மூன்று ஆதாரங்களைச் சொல்லு பார்ப்போம்!"

சின்னப்பெண் சீரியசாகச் சொன்னாளாம்: "பூமி உருண்டைதான்னு எங்கம்மா சொன்னாங்க, அப்பா சொன்னாங்க, நீங்களும் சொன்னீங்களே டீச்சர்!"

oooOooo

சின்னப் பெண்ணுக்கு அம்மா தட்டில் சோறு, காய்கறி, கீரையை எடுத்து வைத்தாள். "பச்சைக் காய்கறி, கீரையை நிறைய சாப்பிடு! உன்னுடைய சருமத்துக்கு நல்லது!"

சின்னப் பெண் சீரியசாகச் சொன்னாளாம், "பச்சைக் காய்கறி சாப்பிட்டால் சருமம் பச்சையாகிவிடும்! எனக்குப் பச்சைத் தோல் பிடிக்காது!"
ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு சீசன் இருக்கிற மாதிரி, வலைப்பதிவுகளிலும்  ஒவ்வொரு சீசனுக்கும், யாரையாவது காய்ந்து கொண்டே இருக்க வேண்டும், மைனஸ் ஓட்டுப் போட வேண்டும், வெறுப்பில் எரியும் மனங்களாகத் தீய்ந்து பின்னூட்டங்களில் கும்மி  அடித்துக் கொண்டிருக்க வேண்டும்,  அவன் என்னை இப்படிச் சொல்லி விட்டானே என்று புலம்பிக் கொண்டே இன்னும் அசிங்கமாக தரம் தாழ்ந்து எல்லோருடைய பதிவுகளிலும் போய் பின்னூட்டமிட வேண்டும்! ஒருவரை ஆதரிப்பது என்பது, மற்றவர்களை கரித்துக் கொட்டுவதற்காகவே! மற்றப்படி ஆதரிப்பது என்பதெல்லாம் சும்மா உளா உளாக்காட்டிக்குத் தான்!

நல்ல மன நிலை! நல்ல பண்பாடு!

இங்கே சில பதிவுகளில் யாரோ சின்னப் பொண்ணு என்று வம்புக்கிழுக்கும் சவடால் பின்னூட்டங்களைப் பார்க்க நேர்ந்தது!

யாரென்று தெரியவில்லை! Jokesforall தளத்தில் இருந்து ஒரு சுட்டிப் பெண்ணின் ஜோக்ஸ் கொஞ்சம் இங்கே! என்னுடைய இரண்டு தம்பிடியாக!5 comments:

 1. சின்னபொண்ணுக்கு ஏகப்பட்ட ரசிகர்களாச்சே! உங்க பாடு நாளைக்கு திண்டாட்டம் தான்!

  ReplyDelete
 2. நல்ல நகைச்சுவைகள். மனிதன் படைத்தல் பற்றிய ஜோக் இரசித்தேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 3. ராஜன் இன்னும் கமென்ட் போடலே.

  ReplyDelete
 4. பதிவரசியலை விடுங்க...
  ஜோக் எல்லாமே டாப்பு...

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!