சுயமாக யோசிக்கச் செய்து, செயல்பட ஊக்கம் தருபவனல்லவா நல்ல தலைவன்! கற்றுக் கொடுக்கும் குரு!
C K பிரஹலாத்! 1941--2010!
ஒரு மேலாண்மைப் பள்ளியில், தன்னுடைய கோட்பாட்டை பிரஹலாத் விளக்கும் வீடியோவில் முதலாவது! சுமார் பத்து நிமிடம்! இது ஆறு பகுதிகளைக் கொண்டது. மீதமுள்ள ஐந்துக்கும் இதிலேயே கீழே லிங்க் கிடைக்கும்.
ஒரு மேலாண்மைப் பள்ளியில், தன்னுடைய கோட்பாட்டை பிரஹலாத் விளக்கும் வீடியோவில் முதலாவது! சுமார் பத்து நிமிடம்! இது ஆறு பகுதிகளைக் கொண்டது. மீதமுள்ள ஐந்துக்கும் இதிலேயே கீழே லிங்க் கிடைக்கும்.
இங்கே நாம் பார்க்கும் பிரமிட் அடுக்கில் மிகப் பெரும்பாலானோரைக் கீழே தள்ளி, அவர்கள் மீது அரியாசனத்தில் வீற்றிருக்கும் ஒரு சிலர் என்பதான அமைப்பில், பிரமிடின் அடித்தளத்தில் கூடக் குவிந்து கிடக்கும் வாய்ப்புக்களை ஒரு புதிய சிந்தனையாகத் தந்தவர்!
இது இங்கே கடலூரில் ஒரு மருத்துவர் வெல்வெட் ஷாம்பூ என்று சிறு அளவில் பாண்டிச்சேரியில் சிறுதொழில்களுக்கு அளித்து வந்த வரிச்சலுகையை பயன்படுத்தி, எளிய மக்கள் கூட சிறு அளவில் சாஷேக்களாக ஒரு ரூபாய்க்கு ஷாம்பூ வாங்கி உபயோகிக்க வைத்த உத்தி தான்! இது ஒரு சிறு எல்லைக்குட்பட்டதாக மட்டுமே இருந்ததை, ஒரு சக்சஸ் ஃபார்முலாவாக, ஆக்கிக் காட்டியவர் பிரஹலாத்!
அதுவரை, அப்பர் மிடில் கிளாஸ், அதற்கு மேற்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கே எட்டும்படியாக பொருட்களை உற்பத்தி செய்து விநியோகித்த பெரிய நிறுவனங்கள் கூட, அடித்தட்டு மக்களும் கூட தரமான பொருட்களை உபயோகிக்கும் நுகர்வோர்களாக இருப்பதைக் கண்டுகொள்ள பிரஹலாத் எழுதிய இந்தக் கோட்பாடு இன்னும் அதிகமாக உதவியது என்றும் வைத்துக் கொள்ளலாம்!
இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் சாஷேக்களில், ஷாம்பூ மட்டுமல்ல, ப்ரூ காப்பி, டீ, இப்படி இன்னும் பலபொருட்களை அடித்தள மக்களுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பும், சந்தையும், ஆதாயமும் இருப்பதைப் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பெரும் நிறுவனங்கள் கண்டுகொண்டன, நுகர்வோர் சந்தை மென்மேலும் விரிந்து பெருகவும், தரமான பொருட்களுக்கு எந்த நிலையிலும் வரவேற்பு இருப்பதைக் காட்டியதாகவும், பிரஹலாத் சொன்னது இருந்தது!
இன்றைக்கு நீங்கள் பார்க்கிற மூன்று ரூபாய்க்கு ஐந்து கோப்பை ப்ரூ காப்பி விளம்பரம் உட்படப் பல நிலைகளிலும் அதன் உண்மையைப் பார்க்கலாம்!
மேல்விவரங்களுடன் செய்தி இங்கே.
வித்தியாசமாகச் சிந்திப்பதே வெற்றியாக, முன்னேற்றத்தின் படிக்கட்டுக்களாக இருப்பதை பார்க்க முடிகிறதா?!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!