வெறுங் காத்து மட்டுந்தாங்க வருது....! காமெடி டைம்!

போன புதன் கிழமை, ஐஸ்லாந்து நாட்டில் ஒரு எரிமலை குமுறியதில், இருபதாயிரம் அடி உயரத்துக்குப் புகையும் தூசியும் கிளம்பி இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல  ஐரோப்பிய நாடுகளில் எரிமலைச் சாம்பல் கொட்ட ஆரம்பித்ததாம்! சென்ற வெள்ளிக்கிழமை மட்டும் பதினேழாயிரம்  விமானங்கள் பயணத்தை ரத்து செய்தன. பனிமலை நிறைந்த ஐஸ்லாந்து நாட்டில் பன்னிரண்டு எரிமலைகள் ரொம்ப ஆக்டிவாக இருக்கின்றனவாம்!


இந்த எரிமலை வெடித்துச் சிதறியதில் எழுந்த சாம்பல், கரியமில வாயுவின் எடை வெறும் பதினையாயிரம் டன்கள் தான்! ஆனால், விமானங்கள் பறப்பதில் எழும் கரியமில வாயு அதைப் போல இருபத்துமூன்று மடங்கு அதிகம்! 344109 டன்கள்! சுற்றுச் சூழலில் கரியமில வாயுவின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே போவது தான், புவி வெப்பமயமாவதற்குக் காரணம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பீர்கள்!

அறுபது சதவீத விமானங்களின் பயணம் ரத்து செய்யப் பட்டதில், சுற்றுச் சூழலில் இன்னும் 206465 தன் கரியமில வாயு சேராமல், குறைந்ததாம்!



எரிமலைச் சீற்றத்தில் கார்பன் டை ஆக்சைட் அளவைக் கணக்கிட்ட விதத்தைத் தெரிந்து கொள்ள இங்கே 



சு'ரூர்! சு' சுனந்தா! ரூர், , சசி தரூர்!

சமாளிக்க முடியாமல், தனக்குக் கிடைத்த 'சொந்த சாமர்த்தியத்தில் கிடைத்த' பங்கை விட்டுக் கொடுத்தது வெறும் எழுபத்தைந்து கோடி தான்! 


மன்மோகன் சிங் தேர்ந்தெடுத்துச் சேர்த்துக் கொண்ட அமைச்சர், சசி தரூர், பதவியும் பறிபோனது! இது, நிஜமாகவே சிறியது தான்! காதலுக்காக மணிமகுடத்தைத் துறந்த எட்வர்ட் மன்னன் கதை போல, இதுவும் ஒரு கதைதானோ


மலை விழுங்கி மகாதேவர்கள், நமட்டுச் சிரிப்புடன் இன்னமும் தெம்போடு இருக்கத் தான் செய்கின்றார்!

தமிழகத்திலும் கூட்டாளி,  தாவூதும் சேக்காளி! வருமானவரி சோதனை நடத்தியதால்  மட்டும், கிரிக்கெட் சூதாட்டம் நின்றுவிடுமா?

காங்கிரஸ் எப்போதும் காமெடிப் பீஸ் மட்டும் தான்!  


 

2 comments:

  1. சசி சார் girl friend மூலமா சொத்து சேர்க்க ஆரம்பிச்சதுதான் காங்கிரசுக்கும் தலைவலி. இதே நம்ம கலகக்காரர்கள் மாதிரியோ, இல்லே பவார் மாதிரியோ சொத்து சேர்க்க நினைச்சிருந்தா பிரச்சனயே கிடையாது. அதாவது இந்திய பாரம்பரியத்திற்கு ஒவ்வாத வழி முறையை கையாண்டது தான்
    குற்றம் - (லாஜிக் கரெக்டா இருக்கா ? ):
    இவளவு நாள் காமெடி ஷோ நடத்திய Mr.சசிக்கு நன்றி! இனி பல காமெடி ஷோக்களை நடத்தவிருக்கும் காங்கிரசுக்கும் நன்றி !

    ReplyDelete
  2. காங்கிரசுக்கு, சசி சொத்து சேர்த்தவிதம் ஒன்றும் தலைவலியாக இல்லை!

    ஐ நா சபையில் ஒரு அதிகார வளையத்தில் இருந்த அதே தோரணையில், இந்திய அரசியலிலும் செயல்பட நினைத்தது தான் கோளாறு!

    பவார் மாதிரியானவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்! கொஞ்ச நாட்களுக்கு முன்னால், மும்பை யாருக்குச் சொந்தம் என்பதில் சிவசேனா ஒரு சர்ச்சையைக் கிளப்பியது! ராகுல் காண்டி மும்பைக்குள் காலடி எடுத்து வைக்கட்டும் என்று சவால் விட்டது! இளவரசரும் கடும் பாதுகாப்புடன், சிவசேனாவின் சவாலை முறியடித்த ஒரு சம்பவம் இந்தப் பக்கங்களிலேயே பாராட்டப் பட்டிருக்கிறது!

    அப்புறம் என்ன நடந்தது? ஷாருக் கான் படம் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கர்ஜித்த சிவசேனாவிடம், கான் சமரசம் செய்து கொள்ள வேண்டியதாகிப்போனது! அப்புறம் கிரிக்கெட் மாதச் நடத்த விட மொஆடோம் என்றார்கள்! பவார் பால் தாக்கரேவை நேரில் சந்தித்து மாதச் பார்க்க அழைப்பு விடுத்தார்! தாக்கரே சிம்மாசனத்தில் அமர்ந்து மாட்ச் பார்த்த கோமாளித்தனமும் அரங்கேறியது!

    பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல் என்ற ரீதியில் பவார் அங்கே நடக்கும் எல்லாவிதமான கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கிறார்! இப்போது சசி தரூர் விவகாரத்தில் கூட, லலித் மோடிக்குப் பின்னால் பவார் இருந்தது எல்லோருக்கும் தெரியும்! வருமான வரி சோதனை நடத்தினார்களாம்! மோடிக்குப் பதிலாக ஒரு தோடியை வைத்து அதே சீன தொடரும்! பவாரை என்ன செய்து விட முடியும்?

    கிரிக்கெட் சூதாட்டத்தில், இங்கே காதில் விழும் தகவல்களை வைத்துப் பார்த்தால், சசிதரூர், அல்லது சுனந்தா சம்பாதித்ததாகச் சொல்லப் படும் தொகை எல்லாம் ஒரு தொகையே அல்ல!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!