இந்த எரிமலை வெடித்துச் சிதறியதில் எழுந்த சாம்பல், கரியமில வாயுவின் எடை வெறும் பதினையாயிரம் டன்கள் தான்! ஆனால், விமானங்கள் பறப்பதில் எழும் கரியமில வாயு அதைப் போல இருபத்துமூன்று மடங்கு அதிகம்! 344109 டன்கள்! சுற்றுச் சூழலில் கரியமில வாயுவின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே போவது தான், புவி வெப்பமயமாவதற்குக் காரணம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பீர்கள்!
அறுபது சதவீத விமானங்களின் பயணம் ரத்து செய்யப் பட்டதில், சுற்றுச் சூழலில் இன்னும் 206465 தன் கரியமில வாயு சேராமல், குறைந்ததாம்!எரிமலைச் சீற்றத்தில் கார்பன் டை ஆக்சைட் அளவைக் கணக்கிட்ட விதத்தைத் தெரிந்து கொள்ள இங்கே
சு'ரூர்! சு' சுனந்தா! ரூர், , சசி தரூர்!
சமாளிக்க முடியாமல், தனக்குக் கிடைத்த 'சொந்த சாமர்த்தியத்தில் கிடைத்த' பங்கை விட்டுக் கொடுத்தது வெறும் எழுபத்தைந்து கோடி தான்!
சமாளிக்க முடியாமல், தனக்குக் கிடைத்த 'சொந்த சாமர்த்தியத்தில் கிடைத்த' பங்கை விட்டுக் கொடுத்தது வெறும் எழுபத்தைந்து கோடி தான்!
மன்மோகன் சிங் தேர்ந்தெடுத்துச் சேர்த்துக் கொண்ட அமைச்சர், சசி தரூர், பதவியும் பறிபோனது! இது, நிஜமாகவே சிறியது தான்! காதலுக்காக மணிமகுடத்தைத் துறந்த எட்வர்ட் மன்னன் கதை போல, இதுவும் ஒரு கதைதானோ?
மலை விழுங்கி மகாதேவர்கள், நமட்டுச் சிரிப்புடன் இன்னமும் தெம்போடு இருக்கத் தான் செய்கின்றார்!
தமிழகத்திலும் கூட்டாளி, தாவூதும் சேக்காளி! வருமானவரி சோதனை நடத்தியதால் மட்டும், கிரிக்கெட் சூதாட்டம் நின்றுவிடுமா?
காங்கிரஸ் எப்போதும் காமெடிப் பீஸ் மட்டும் தான்!





