இன்று ஒரு சேதி! #அரசியல்

நேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் முந்தைய பதிவில் பின்னூட்டமாகச் சொல்லியிருந்தார்.முந்தைய நாட்களைப் போல எடியூரப்பா அவசரப்பட்டு மானம்கெட விடாமல் பிஜேபியின் தலைமை கட்டுப்படுத்தி வைத்து இருப்பது ஒரு நல்ல விஷயம்! தவிர கர்நாடக சபாநாயகர் தந்திடிவிக்கு நேற்று அளித்த  பேட்டியில், இரண்டுநாட்கள் பொறுங்கள்! பத்தாவது ஷெட்யூல் எத்தனை வலிமையானது என்பது தெரியவரும் என்று சொல்லியிருப்பதும்,பிஜேபி அவசரப்படாமல் இருப்பதற்கான வலுவான காரணமாக இருக்கலாம்!இந்தப் பத்தாவது ஷெட்யூல் என்பதென்ன?

The 10th Schedule to the Indian Constitution, that is popularly referred to as the ‘Anti-Defection Law’ was inserted by the 1985 Amendment to the Constitution. ‘Defection’ has been defined as, “To abandon a position or association, often to join an opposing group” The Advanced Law Lexicon defines defection as, “crossing the floor by a member of a Legislature is called defection.” In short, defection is an act by a member of a particular party of disowning his loyalty towards that particular party and pledging allegiance to another party. This is what the Law Lexicon describes as ‘crossing the floor’. கர்நாடக சபாநாயகர் சொன்னமாதிரி இந்தப் பத்தாவது ஷெட்யூல் உச்சநீதிமன்றத்தால் ஏற்கெனெவே பரிசீலனை செய்யப்பட்டு கெட்டியானது தானா? நீதிமன்றத் தீர்ப்புக்களும், வரையறைகளும் மாற்றப்படக் கூடியவை தான் என்பதால் சபாநாயகர் முடிவை, அது என்னவாக இருந்தாலும், உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தினால் தான் உண்டு. மேற்கொண்டு சட்ட நுணுக்கங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இங்கே பார்த்துக் கொள்ளட்டும் என்பதோடு, இந்த விஷயத்தை இப்போதைக்கு விட்டுவிடலாம்!    சதீஷ் ஆசார்யா வரைந்த கார்டூன் என்ன?


"இப்போது பாஜக நிச்சயம் இந்த அசிங்கத்தை மேற்கொண்டு செய்து ஆட்சியில் அமரக்கூடாது. காங்கு விடாது துரத்தும் கருப்பு போலவே செயல்படுவார்கள். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். மக்களை கவனிக்க முடியாது. அவர்கள் அயோக்கியர்கள் என்று சுட்டிக்காட்டுவது எந்த அளவுக்கு சரியோ நாம் யோக்கியன் என்று நிரூபிப்பது மிக முக்கியமானது. புதிய தேர்தல் மூலம் பாஜக ஆட்சிக்கு வருவது தான் சரி. அது அவர்களுக்கு வாய்ப்புள்ளது என்று நம்புகிறேன்"  இது நண்பர் ஜோதிஜி முந்தைய பதிவில் சொன்னது!

ஆனால் எடியூரப்பாவோ நாமோ அதைத் தீர்மானிக்கிற இடத்தில் இல்லை என்பதாலும்  சபாநாயகர் அதிருப்தி MLAக்கள் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதிலிருந்தே அடுத்த கட்ட நகர்வுகள், மேல்முறையீடுகள் இருக்கும் என்பதாலும்!  இதுவே இன்றைக்குச் சொல்ல வந்த செய்தி!

தினமணி நாளிதழ் வேறுவிதமான ஊகத்தை சொல்கிறது.  

மீண்டும் சந்திப்போம்.    
    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!