எவ்வளவு சூடுபட்டாலும் திருந்தாத ஜந்துக்களால் நிரப்பப் பட்டது காங்கிரஸ் என்பதை அவர்கள் எத்தனைதரம் தான் நிரூபித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? காங்கிரசை ஒதுக்கித் தூர எறிய இன்னும் எத்தனை காலம் தான் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இங்கே இந்த நிகழ்ச்சியில் காங்கிரசின் கோபண்ணா கட்சியில் வாங்குகிற காசுக்குத் தகுந்த மாதிரிக் கூவுகிறார். பானு கோம்ஸ் எழுப்பிய இந்தக் கேள்விக்காவது நேரடியான பதில் இருந்ததா என்பதைக் கொஞ்சம் பாருங்கள். வெறும் 24 நிமிடம்தான்! இந்த விவாதத்தைக் கூட, ராகுல் காண்டி ராஜினாமா நாடகத்தை தமிழக ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன என்று ஒரு சாம்பிளாக மட்டுமே இங்கே தருகிறேன். தந்திடிவியின் பார்வை என்ன? 49 நிமிடம்தான்! காங்கிரசை ஒரு கட்சியாக ஒருங்கிணைக்கிற சக்தியாக (unifying force) இந்திரா வாரிசுகளே இருக்கிறார்கள் என்று ரவீந்திரன் துரைசாமி ஆரம்பிப்பதெல்லாம் சரிதான்! இன்னும் சிலமாதங்களில் ராகுல் காண்டி திரும்பவும் வருவார் என்று சொல்வதும் கூட அதான் எல்லோருக்கும் தெரியுமே என்கிற ரீதியிலானதுதான்! நான்குபக்கங்களில் உணர்ச்சிப் பிழம்பாக ராகுல் காண்டி எழுதிய வசனம் என்னுடலில் உயிருள்ள ஒவ்வொரு அணுவும் இந்தியா குறித்த பிஜேபியின் கருத்தை எதிர்க்கிறது யார் கண்ணிலும் படவில்லையா அல்லது பொருட்படுத்தவேண்டிய அளவுக்குப் பெரியவிஷயம் இல்லையா என்பது எந்தக்காங்கிரஸ்காரனுக்கும் தெரியாது! ஊடக விவாதங்களில் பங்கேற்கிறவர்களுக்கும் தெரியாது!
திமுகவில் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு அறிவிக்கப்பட்டிருப்பது மட்டும்தான் இங்கே முக்கிய செய்தி. அதுவுமில்லையானால் பிக் பாஸ் வீட்டில் மகளைக் கடத்தி வந்த புகாரில் வனிதா கைது செய்யப்பட்டாரா? சமரசம் ஏற்பட்டுவிட்டதா என்கிற அதிமுக்கியமான அலசல் இருக்கவே இருக்கிறது.
ராஜினாமா நாடகம் எப்படிவேண்டுமானாலும் போகட்டும்! சோனியா உடல்நிலை பரிசோதனை செய்துகொள்வதற்காக மகனுடன் அமெரிக்கா புறப்பாடு! மகள் ஏற்கெனெவே வெளி நாட்டில் தான் இருப்பதாக இந்த செய்தி சொல்கிறது, காரிய கமிட்டி கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதை ரிமோட் கன்ட்ரோலிலேயே செய்யமுடியும் என்கிறபோது, முதலாளிகள் எங்கே இருந்தால்தான் என்ன?
மக்களவையில் இந்தியாவில் பாசிசத்தின் 7 ஆரம்ப அறிகுறிகள் என்று தன்னுடைய முதல்பேச்சை ஆரம்பித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, அந்தப் பேச்சு, டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு செய்திக்கட்டுரையில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற நக்கல்கள் கேலி அதிகமானதற்குப் பொங்குகிறார். இத்தனை ஆவேசப்பட இதில் எதுவுமே இல்லை என்றாலும், பொங்கவில்லை என்றால் எப்படி மம்தா பானெர்ஜி பாணியில் அரசியல் செய்ய முடியும்? அங்கே மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜி cut money (அன்பளிப்பு, மொய், லஞ்சம்) வாங்கியதை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னதே பெரிய பிரச்சினையாகிக் கொண்டிருப்பதில் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதில் தன்னுடைய கட்சி எம்பிக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டா இருக்க முடியும்?
நாளை 5ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று பொருளாதாரம் புரிந்து, புரியும்படி சொல்கிறார் சோம வள்ளியப்பன். 10 நிமிடம் தான். பார்க்க வேண்டிய வீடியோவாகப் பரிந்துரைக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
பானு பேசிய பேச்சை நானும் கேட்டேன். இந்த கோபண்ணா படே கில்லாடி. கராத்தே தியாகராஜன் பேட்டியில் இவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள். எப்படியெல்லாம் சம்பாரிக்க முடியும் என்பதனை இவரிடம் தான் மற்ற கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு புகுந்துவிளையாடி உள்ளார். காங்கு மக்களைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது ஒன்றே ஒன்று. ஏம்பா உங்களுக்கு எல்லாம் எப்ப முடிவு வரும்? என்பதே?
ReplyDeleteகோபண்ணாவுடைய சாமர்த்தியம் எப்படி என்பது சில வருடங்களுக்கு முன்னால் புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்துக்காக உதவ முடியுமா என்று ஒரு காங்கிரஸ் எம்பியிடம் கேட்டபோது, எம்பி நிதியிலிருந்து கோபண்ணா புத்தகத்துக்கே கொடுத்தாயிற்று இப்போது ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னது உண்டு.
Deleteஆனால் ராகுல் நிகழ்ச்சிக்குப் பாஸ் 50000 என்று விற்றார் என்று கராத்தே சொன்னதை இப்போதுகூட நம்புகிற மாதிரி இல்லை. நம்மூர் ஊடகக்காரர்களுக்குக் கவர் வாங்கித்தான் வழக்கமே தவிர காசுகொடுத்து எந்த நிகழ்ச்சிக்கும் போகிறவர்கள் இல்லையே என்று உறுத்தியது.