காங்கிரஸ் பரிதாபங்கள்! #அரசியல்இன்று

ராகுல் காண்டி என்ன நினைப்பில் தோல்விக்குப் பொறுப்பு ஏற்று ராஜினாமா ஸ்டன்டை ஆரம்பித்தாரோ  தெரியாது , ஆனால் அது ஆன்டி க்ளைமாக்ஸ் ஆகிக்கொண்டிருப்பது மிகத்தெளிவாக வெளிப்பட்டுக் கொண்டே  இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் கரண்சிங்,"ராஜினாமாவைத் திரும்பப்பெறவேண்டும் என்று காங்கிரஸ் கெஞ்சியே  ஒருமாதகாலத்துக்கும் மேலாக வீணடித்து விட்டது. இனியும் இதே நிலைமை நீடிக்குமானால் காங்கிரஸ் தொண்டர்களும், வாக்காளர்களும் நம்பிக்கை இழந்து விடுவார்கள். The negative cycle must be reversed before it is too late" என்று சொல்லியிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி ஒன்று சொல்கிறது. ராகுல் காண்டியுடன் ஒன்றுபட்டு நிற்பதாகக் காட்டிக் கொள்ள காங்கிரசில் தொடர்ந்து நடைபெறும் ராஜினாமாக்கள் பிரச்சினையை இன்னும் தீவீரப்படுத்தியிருக்கிறதே தவிர தீர்வாக அமையவில்லை.


ஹிந்துஸ்தான் டைம்சின் தலையங்கம் பிஜேபியைத் தடுத்து நிறுத்துவது என்ற ஒற்றை அஜெண்டா எப்படிக் கர்நாடகாவில் பெரும் தவறாகிப்போன பரிசோதனையானது என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.


"The roots of the Karnataka crisis lie in the fractured mandate of 2018. The BJP was the single largest party but did not have a majority on its own. It was, on somewhat questionable grounds, invited to provide its majority in the house, but failed to do so. The Congress and JD(S), which had fought bitterly in the polls, came together and crossed the halfway mark. Despite being the bigger party, the Congress offered leadership to Kumaraswamy to be able to muster the numbers and prevent the JD(S) from crossing over to the BJP. The alliance was, therefore, born not out of a common vision for the future, but a solely negative outlook (stopping the BJP), and transactional approach (sharing perks of office)" காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் அமைத்தது சித்தாந்த ரீதியிலான கூட்டணி அல்ல. காங்கிரசுக்கு, பிஜேபியுடன் குமாரசாமி சேர்ந்துவிடக்கூடாது என்கிற ஒரே காரணத்தால் தான் முதல்வர் பதவியைக் குமாரசாமிக்கு விட்டுக்  கொடுத்ததே தவிர பெருந்தன்மையிலோ  கூட்டணி தர்மத்திலோ அல்ல. ஆக, மிகவும் செயற்கையான, நிலையற்ற நோக்கங்களுடன் காங்கிரசும் மதவும் அமைத்த கூட்டணி அமைத்த நாளிலிருந்தே ஒவ்வொருநாளும் கண்டத்தை அனுபவித்து வந்தது. பூர்ணாயுசு இருக்கும் என்று எவரும் நம்பாதநிலையிலேயே 13 மாதங்கள் கழிந்து சில நாட்களிலேயே பிரச்சினை உள்ளிருந்தே, ஏற்கெனெவே பதவி அனுபவித்தவர்களேதான் இன்னும் அனுபவிக்க வேண்டுமா, எங்களுக்கும் வேண்டும் இல்லையென்றால் கவிழ்ப்போம் என்கிற மிரட்டலுக்குப் பணிந்து, இருக்கிற அமைச்சர்களெல்லாம் பதவி விலகி அதிருப்தியாளர்களுக்கு இடம் கொடுக்க முன்வந்திருப்பது சொல்கிறது. ஆனால் இந்தத்தியாகம் கூட எடுபடுமா என்பது சந்தேகம்.

ஹிந்துஸ்தான் டைம்சின் தலையங்கம் சொல்கிற ஒரே பாடம் வெறுமனே மோடி எதிர்ப்பு #GoBackModi பிஜேபியை வரவிட மாட்டோம் என்ற வெற்றுக்  கூச்சல்கள் எதுவும் இனிமேல் எடுபடாது, ஒழுங்காக அரசியல் செய்ய முடிந்தால் செய் இல்லையானால் எக்கேடுகெட்டும் கெட்டுப்போ என்பதுதான்!  

            
அரசியல்வாதிகளுடைய பதவி ஆசை, முட்டல் மோதல் எல்லாவற்றிற்கும் ஜனங்கள் தான் விலை கொடுக்க வேண்டுமா?  இவர்களை அடக்கவே முடியாதா? பதவியில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லாவிட்டால் ஒரு பேச்சு என்பது பொதுவானதுதான் என்றாலும் அமர்நாத் யாத்திரையால் காஷ்மீர் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று முன்னாள் ஜம்முகாஷ்மீர் முதல் அமைச்சர்  மெஹபூபா முப்தியின் உளறலை இன்னொரு முன்னாள் வழிமொழிந்ததும் இங்கே என்னமாதிரியான அரசியலை வளர்த்து விட்டிருக்கிறோம்  என்பதைப் புரிந்து கொள்வதற்காக ஒரு விவாதம். 54 நிமிடங்கள் நேரமிருப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டுமென பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!