இங்கே எப்போதுபார்த்தாலும் நேரு பரம்பரையைக் கரித்துக் கொட்டுவதையே நான் தொழிலாக வைத்துக் கொண்டிருப்பது போல இணையத்தில் பல நண்பர்கள் நினைத்துக் கொண்டு இருப்பது எனக்கும் தெரியும்! ஆனால் நேரு பரம்பரை புகழ்ச் சங்கதிகள் மகாபாரதத்தை விட நிஜமாகவே பெரிது என்பதை ஏனோ அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை!
R P ராஜநாயஹம் ஒரு பள்ளிவிழாவில் தலைமை விருந்தினராக! குத்துவிளக்கு ஏற்றுகிறார்!
வலைப்பதிவர்களில் பத்தி எழுத்து, வலையெழுத்தில் கைவரப் பெற்றவர்கள் என்று ஒருசிலரைப் பட்டியலிட்டால் முதலிடம் பிடிப்பதற்கு இங்கே R P ராஜநாயஹத்தை விட்டால் வேறு யாருண்டு!! கொஞ்சம் போல எழுதினாலும் நச்சென்று பாயின்டைப் பிடிக்கிற லாவகம் அவருடைய எழுத்தில் பார்த்த மாதிரி வேறெவரிடத்திலும் நான் பார்த்ததில்லை. இன்றைக்கு தற்செயலாக V K கிருஷ்ண மேனனைப் பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்தபோது 2013 ஜனவரியில் R P ராஜநாயஹம் எழுதிய பதிவு ஒன்று பார்க்கக் கிடைத்தது.
அது இங்கே ஒரு எழுத்துப் பிசகாமல்! பகிர்வதற்கு அவருடைய அனுமதி பெறவில்லையென்றாலும், கோபித்துக்கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில்!
Power is the ultimate aphrodisiac என்று தலைப்பிட்டு வி கே கிருஷ்ண மேனனைப் பற்றி எழுதுகிறார் R P ராஜநாயஹம்
"I am not an admirer of great people. The few I got to know at close quarters turned out to have feet of clay:they were pretentious, feckless, lying and utterly commonplace."
-Khushwant Singh in 'Truth, Love & a Little Malice'
கிருஷ்ணமேனன் பற்றி இந்தியர்களுக்கு ஒரு அதீத பிம்பம் உண்டு. ஐக்கிய நாடுகள் சபையில் 13 மணி நேரம் மேனன் நிகழ்த்திய பேருரை பற்றி அந்தக் கால பெரிசுகள் கண் விரிய சொல்வார்கள். கிருஷ்ணமேனனும் விஜயலட்சுமி பண்டிட்டும் கட்டிப்பிடித்த படி விமானத்திலிருந்து இறங்கி வரும் புகைப்படம் அந்தக்காலத்தில் பார்க்கக்கிடைத்ததுண்டு. அவர் ராணுவ மந்திரியாய் இருந்தபோது தான் இந்திய சீன யுத்தம்.
இறப்பதற்கு முன் கேசுவலாக ஒரு டீ சாப்பிட்டு விட்டு அவர் படுத்ததை எங்கள் அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் வசந்தன் சுவாரசியமாக சொன்னபோது பிரமிப்பாய் கூட இருந்தது.
குஷ்வந்த் சிங் காட்டும் கிருஷ்ணமேனன் பற்றிய குறிப்புகள் இந்த விக்கிரகத்தை உடைத்து விடுகிறது. ஒரு முழுமையான வில்லன் போலவே தான் கிருஷ்ணமேனன் பற்றி தெரிய வருகிறது.
13 மணி நேரம் காஷ்மீர் பற்றி பேசியதன் out put என்ன? காஷ்மீர் பற்றிய இந்திய நிலைப்பாட்டிற்கு எதிராகத் தான் ஐக்கிய நாடுகள் சபையில் ஓட்டு போட்டார்கள். A unanimous vote against India!
சீன சண்டையில் இந்தியாவின் தோல்விக்கு கிருஷ்ணமேனன் தான் பொறுப்பாளி.
எப்படியோ நேருவை கிருஷ்ணமேனன் இன்ஃப்ளூயன்ஸ் செய்ய முடிந்திருக்கிறது. அவர் சுதந்திர இந்தியாவின் இங்கிலாந்து தூதராக ஆக முடிந்திருக்கிறது.
ஹைகமிஷனராக லண்டனில் அவர் செயல் பாடுகள் பற்றி குஷ்வந்த் சிங் எழுதுவதைப் படிக்கும்போது கோபமே வருகிறது. இப்படிப்பட்டவர்கள் பற்றி அறிய வரும்போது நீட்ஷே சொன்னது தான் எப்போதுமே நினைவில் வருகிறது, ” அவ்வப்போது ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது ! அவ்வப்போது அரியணையே ஆபாசத்தின் மேல் !” கிருஷ்ண மேனன் ஒரு womanizer, sadist and a liar என்றாலும் ஒரு Bachelor.
உண்மையே பேசமாட்டார். தனக்கு பிடிக்காத சுதிர் கோஷ் பற்றி நேருவிடம் இவன் வல்லபாய் படேலுடைய ஆள் என்று போட்டு விட்டு வேலையை காலி பண்ணியிருக்கிறார். தூதரகத்தில் வேலை பார்த்த கமலா ஜஸ்பால் என்ற
மேனாமினுக்கி ( A designing seductress ) இவருடைய mistress.
குஷ்வந்த் சிங் வார்த்தைகள் “Krishna Menon treated the husbands of good-looking women as friends. If he sensed tension between the couple, he became considerate towards them. Menon had great understanding for misunderstood wives. Sheila Lall and my wife fell in that category. Arthur and I became his number one and number two favourites.
குஷ்வந்த்சிங் இந்திய தூதரகத்தின் public relations officer. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரின் முதல் இங்கிலாந்து விஜயம்.நேருவுடன் அவருடைய செக்ரட்டரி எம்.ஓ.மத்தாய்(!) தான் வருகிறார்.
According to M.O.Matthai Neither Nehru nor Indira Gandhi was sexully inhibited. ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது…
நேரு நள்ளிரவில் விமானத்தில் லண்டன் வருகிறார். தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு போவார் என்று பார்த்தால் நேராக லேடி மவுண்ட் பேட்டனைப்பார்க்க செல்லுகிறார். மவுண்ட் பேட்டன் அப்போது லண்டனில் இல்லை. நேருவுக்காக நைட் கவுனோடு லேடி எட்வினா மவுண்ட்பேட்டன் கதவை திறந்து விடுகிற போட்டோ ’தி டெய்லி ஹெரால்ட்’ செய்தித்தாளில் வருகிறது. தலைப்பு “Lady Mountbatten’s Midnight Visitor.’’ லண்டனில் லார்ட் மவுண்ட் பேட்டன் அன்று இல்லை என்பதையும் டெய்லி ஹெரால்ட் சொல்கிறது.
கிருஷ்ணமேனன் அன்று பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கைப் பார்த்து குரைக்கிறார். “ டெய்லி ஹெரால்ட் பாத்தியாய்யா? நேரு ஒன் மேல ரொம்ப கோபமா இருக்கிறார்”
குஷ்வந்த் சிங் பரிதாபமாக “எனக்கெப்படிங்க தெரியும். நேரு ஹோட்டலுக்குப் போகாம இப்படி அந்தம்மாவைப் பாக்கப்போவாருன்னு.”
பத்திரிக்கையாளர்களுக்கு நேரு தன் ஹோட்டலில் பேட்டி கொடுக்கிற காட்சி.கிருஷ்ணமேனன் தலையைத்தொங்கப் போட்டு தூங்குகிறார். நேரு உடனே குஷ்வந்த் சிங்கிடம் கோபமாய் சொல்கிறார். “ என்னய்யா இது உங்க ஹை கமிஷனருக்கு உடம்பு சரியில்ல போலருக்கு. You must not expose him to outsiders like this ” ஆனால் கொஞ்ச நேரத்தில் அத்தனை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நேருவும் தலையை நெஞ்சில தொங்கப்போட்டு நித்திரையில் ஆழ்கிறார்.
Pandit Nehru had a couple of days free to indulge in his favourite hobbies, buying books and seeing Lady Mountbatten.
நேரு ஒரு க்ரீக் ரெஸ்டாரெண்ட்டுக்கு வரும்படி லேடி மவுண்ட்பேட்டனை அழைக்கிறார். ரெஸ்டாரண்ட் ஓனர் உடனே பத்திரிக்கைகளுக்கு தொலைபேசி தகவல் கொடுக்கிறார். ரெஸ்டாரெண்ட்டுக்கு பப்ளிசிட்டியாம்! அடுத்த நாள் காலை பேப்பர்களில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின்றன. பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கிடம் நேரு எரிச்சலுடன் சொல்கிறார்.” You have strange notions of publicity!”
கிருஷ்ணமேனன் பற்றி குஷ்வந்த் சிங்: Menon was a complex Character, the most unpredictable and prickly I have ever met….Menon’s bad temper and discourtesy had to be experienced to be believed…Menon was full of acid wit and sarcasm…
Next to Nehru, it was Mountbattens that KrishnaMenon relied on to keep him where he was…..Women found him handsome…Menon was not generous with his money, except when it came to his lady friends and children…Menon’s first reaction to any proposal put to him was to reject him…He has a strong streak of sadism…Merit did not matter very much to Menon; Unquestioned loyalty did. Lying was Menon's second nature and came as easily to him as discourtesy.…Why Menon got where he did under the patronage of Pandit Nehru remains, and probably will remain, unexplained.
லண்டனில் ரெஸ்டாரண்ட்களில் வெயிட்டராக வேலை பார்த்த மேனன் பின்னர் அதே லண்டனில் இங்கிலாந்தின் இந்திய தூதராக ஆகி, இந்திய எம்.பி ஆகி இந்திய ராணுவ மந்திரியாகி…..ஆகா சினிமாவாக எடுத்தால் கூட சற்று மிகையாகத் தான் தெரியும்.
பின்னால் லண்டனில் இந்தியா ஆபீஸ் லைப்ரரியில் வேலை பார்த்த குஷ்வந்த் அப்போது ஷீலா லாலுடன் தங்கியிருந்த காலத்தில் ’ நான் உன்னை ரகசியமா வைப்பாட்டியா வச்சுக்கிறேன்’ என்று ஷீலாவை கிருஷ்ணமேனன் தொந்தரவு செய்து கொண்டிருந்திருக்கிறார். போனில் வந்த மேனனிடம் “பாஸ்டர்ட்..நீ யாருன்னு எனக்கு தெரியும்டா..நேரங்கெட்ட நேரத்தில போன் பண்றதெ நிறுத்திக்க. இல்லன்னா ரொம்ப அசிங்கமா பேசிடுவன்டா”ன்னு குஷ்வந்த்சிங் கத்தியிருக்கிறார்.
ஜெனரல் சிவ் வர்மா கிருஷ்ணமேனனைப்பற்றி சொன்னது நூத்துக்கு நூறு சரி என்று குஷ்வந்த் சொல்வது சுவாரசியம் “KrishnaMenon was a bachelor, the same as his father.” என்று பதிவை முடிக்கிறார்.
V K கிருஷ்ணமேனன் 1950 இல் இந்தியாவுக்குத் திரும்பியவுடன், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இலாகா இல்லாத மந்திரியாகவும் ஆகி, விரைவிலேயே பாதுகாப்பு மந்திரியாகவும் ஆனதற்கு நேருவுடன் அவருக்கிருந்த நட்பு ஒரு காரணம்! 1962 இந்திய சீன யுத்தத்தில் அவகானகரமாகத் தோற்றதில் நேருவுடைய புனித பிம்பத்தைக் காப்பாற்ற காவு கொடுக்கப்பட்டதும் நண்பேண்டா VK கிருஷ்ணமேனன் தான்!
இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே என்று டேயன்னா டேயன்னா டேயன்னா ட்ர்ர்ரியோ டேயன்னா பாட்டுப் பாடலாம் தான்! காங்கிரசில் இந்த மாதிரிப் பழி சுமந்து வீணானவர்கள் பட்டியல் கண்முன்னே வந்து உச்சுக் கொட்ட வைக்கிறதே!
இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே என்று டேயன்னா டேயன்னா டேயன்னா ட்ர்ர்ரியோ டேயன்னா பாட்டுப் பாடலாம் தான்! காங்கிரசில் இந்த மாதிரிப் பழி சுமந்து வீணானவர்கள் பட்டியல் கண்முன்னே வந்து உச்சுக் கொட்ட வைக்கிறதே!
மீண்டும் சந்திப்போம்.
காலக்கொடுமையடா கந்தசாமி!....
ReplyDeleteஅதற்கு மேல் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையா துரை செல்வராஜூ சார்? !!!
Delete