சுபவீக்களும் கர்மா தியரியும்!

சுப வீ என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுப வீரபாண்டியன் செட்டியார் காசுக்காக திராவிட இயக்கப்பேரவை என்ற ஒரு அமைப்பை நடத்திவருவதும், எங்கே மைக் நீட்டினாலும் அங்கே ஆஜராகி திராவிடப்புகழ்ச்சி செய்துவருபவர் என்பது தெரிந்த விஷயம் என்பதால் அதிகம் இவரைச் சட்டை செய்ததில்லை. ஆனால் முகநூலில் பானுகோம்ஸ் இந்த உரையாடலைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னதில் தேடிப் பார்த்தேன். பானு கோம்ஸ் எழுதியது இங்கே 
Banu Gomes
காவேரி டிவி யின் தடம் நிகழ்ச்சி..
''அத்திவரதரிடம் தோல்வியடைந்தாரா பெரியார் ?''
நெறியாளரான மதன் ரவிச்சந்திரன் ...
ஈ.வே.ரா. குழுவிடம் கேட்க வேண்டிய அத்தனை கேள்விகளையும்... [ மடைமாற்றும் முயற்சிகளையும் தாண்டி ] விடாது கேட்டிருக்கிறார். மேடைக்கு மேடை கேட்டுக் கொண்டிருந்த சம்பூக வதத்திற்கும் தெளிவான விளக்கத்தை அளித்து திணற வைத்தார் நெறியாளர்.
நீண்ட நாட்கள் கழித்து ..உண்மையான கேள்விகளை கொண்ட பேட்டி !!
வெகு சிறப்பு.
எந்த கேள்விக்குமே பதில் சொல்லப்படவில்லை. மாறாக..நிகழ்ச்சி முழுவதும் வெறும் சமாளிப்பு தான்   

 


திராவிடங்களுடைய அஸ்திவாரமே பொய்புரட்டுகளும், டுபாக்கூர் வேலைகளும் தான் என்பது அம்பலப்பட்டு வரும் நேரம் இது. அதில் பதில் சொல்ல முடியாமல் சுபவீ செட்டியார் மழுப்பலான பதில்களில் சமாளித்துக் கொண்டுபோகிற பரிதாபத்தை என்னவென்று சொல்வது? 

காசுக்கு கூவுகிறவர்களுக்கு எப்போதுமே ரெட்டை நாக்கு தான்! இதில் சுபவீ செட்டியார் முதலான திராவிடங்கள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா?

Dev Raj
'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்.....’
”கடவுளை நம்புகிறவன் முட்டாள், காட்டுமிராண்டி”
என்று வீரம்மிக்க வீரமணி, சுபவீ போன்றவர் நேருவிடம் நேருக்கு நேர் வீரவசனம் பேசுவரா?
ஆஸ்திக சிகாமணி  கே என் நேரு அத்தி வரதர் சன்னிதியில்.

    
இதற்கெல்லாம் ஒரு டெம்ப்ளேட் பதிலை வைத்துக் கொண்டு இத்தனை நாள் சமாளித்தவர்கள் இனிமேலும் சமாளிக்க முடியுமா? அதனால்தான் முத்தமிழ் வித்தவர் வாரிசு இப்படி ஆப்பு வாங்குகிறாரோ? 


கடைசியில் இப்படி எல்லாத்  திராவிடப் பம்மாத்துகளும் செய்தெல்லாம் அவர்களைப்பேச   வைத்து அறுவடை செய்த திமுக தலையில் தானே விடிந்தாக வேண்டும்! #கர்மாதியரி 


சதீஷ் ஆசார்யா என்ன சொல்லவருகிறார்? பூனைக்கு ஒன்பது ஆயுள் கதை மாதிரி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை இன்னும் இரண்டுவாரம் இழுத்தடிப்பாரா? #தேவுடா 

மீண்டும் சந்திப்போம்.
         

17 comments:

  1. பொழுது பூனைகளுடன் விடிந்திருக்கின்றது...

    ReplyDelete
    Replies
    1. பூனை, புலி எல்லாமே ஒரே இனம்தான் துரை செல்வராஜூ சார்! இங்கே பெரும்பாலான அரசியல்வாதிகள் பெருச்சாளிகள் ரகம்! அதிருப்தி MLAக்களை சபாநாயகர் நாளை செவ்வாயன்று தன்னைச் சந்திக்க வருமாறு சம்மன் அனுப்பியிருப்பதாக இப்போதைய செய்திகள் சொல்கின்றன.

      இப்படி ஒரு சட்டசபை இருப்பதைவிட கலைக்கப்படுவதே மேல் என்று ஜனங்கள் கதறுகிற அளவுக்கு விவகாரங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.

      Delete
  2. Replies
    1. நன்றி. பதிவின் உள்ளடக்கத்தைப் பற்றிய உங்கள் கருத்தையும் ஓரிரு வரிகளாவது சொல்லியிருக்கலாம்!

      Delete
  3. சுபவீ போன்றார் SOFTTARGETஉள்ளவர்கள் மேல் பட்டகத்தி வீசும் அட்டக்கத்தி வீரன் தான்..... எந்த ஆழ்ந்த படிப்பும் இல்லாமல் வெறும் துவேஷத்தை கக்கும் அரைகுறைவாதிதான்

    ReplyDelete
    Replies
    1. படிப்பு இல்லாமல் என்று சொல்ல முடியாது. இவர்களுடைய படிப்பும் தொழிலும் போகாத ஊருக்கு கேட்காமலேயே வழிசொல்லிக் காசு பார்ப்பதற்கு மட்டும் தான்!

      அட்டகத்தி என்பதைவிட ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கத் தெரிந்திருப்பதே திராவிடப்புரட்டு, திராவிடமாயை தான் இல்லையா?

      Delete
    2. ஆழ்ந்த படிப்பு என்பது வெறும் ஏட்டுப்படிப்பை சொல்லவில்லை... ஹிந்து தத்துவ ஞானம் மற்றும் புலமை ஆகைவை சற்றும் இல்லாதவர் என்பதை சுட்டுகிறேன் வெறும் துவேஷம் என்பதை வைத்து பார்ப்பதை சுட்டுகிறேன்

      Delete
  4. சுபவீ போன்றார் SOFTTARGETஉள்ளவர்கள் மேல் பட்டகத்தி வீசும் அட்டக்கத்தி வீரன் தான்..... எந்த ஆழ்ந்த படிப்பும் இல்லாமல் வெறும் துவேஷத்தை கக்கும் அரைகுறைவாதிதான்

    அவர் திமுக ஆதரவு என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் அவரால் பலரும் பல விசயங்களை கற்றுக் கொண்டுள்ளனர். அவர் பேசிய வீடியோ தொகுப்புகளைப் பாருங்கள். சினிமா நிகழ்ச்சிக்கு உண்டான ஆதரவு உள்ளது. மதம், சமூகம், வரலாறு, பெரியார்,இந்துமத எதிர்ப்பு, அதற்குள் இருக்கும் விளங்க முடியாத கேள்விகள் என எல்லாத் திசையிலும் அவர் அளவுக்கு சம காலத்தில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இளைஞர்கள் அருகே வந்தவர்கள் வேறு எவரும் இல்லை. உள்நாடு வெளிநாடு என்று எல்லா இடங்களிலும். அவர் இந்தப் பேட்டியில் சோர்ந்து போய் தான் பேசுகின்றார். காரணம் திமுக வினரை எந்த இடத்திலும் ஆதரித்தாலும் அவர்களுக்கு இந்த நிலைமை தான் கடைசியில் வரும். அவருக்கு வேறு வழியும்இல்லை. அதற்காக அவர் தவறானவர் என்று சொல்லிவிட முடியாது? சமகாலத்தில் எனக்கு பிடித்தமானவர்களின் இவரும் ஒருவர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றாகப் பேசுகிறார் என்பதாலேயே நல்லதைப் பேசுகிறார், உண்மையைப் பேசுகிறார் என்றாகி விடுமா ஜோதிஜி? திராவிடப் புரட்டுகள் இந்த அளவுக்கு விஷக்காளான்களாக வளர்ந்தது இந்த வெறும் பேச்சு ஒன்றினால்தான் என்பதை மறுக்க முடியுமா? இவரைப்பற்றிய உங்களுடைய கருத்தை சமீபத்தைய இடுகையில் சொல்லியிருந்ததையும் படித்தேன்.

      Delete
    2. மத ஆதரவு, மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கடவுள் மேல் தீவிர அபிமானம், இதே சாதி போன்ற அனைத்துக்கும் பின்னால் உள்ள அனைத்தையும் வாசிப்பேன். பேசுபவர்களையும் கேட்பேன். ஆனால் என் கொள்கை என்பது நான் முடிவு செய்வதே. அந்த வகையில் எவரையும் வெறுப்பதில்லை. அவர்கள் பேச்சில் உண்மைக்கு புறம்பாக இருந்தால் மனதிற்குள் சிரித்துக் கொள்வேன்.

      Delete
    3. ஜோதிஜி! முடிந்தவரை மாற்றுக்கருத்தைத் தேடித் தேடி வாசிக்கிற வழக்கம் எனக்குண்டு என்றாலும், வெற்றுப் பரப்புரைகளுடன் தேங்கிவிடுகிறவர்களிடம் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஒருகாலத்தில் வலம்புரி ஜான், காளிமுத்து, வைகோ நெல்லை கண்ணன் போன்றவர்கள் பேச்சை விரும்பிக் கேட்கிற வழக்கம் இருந்தது. இன்று Relevance இல்லாமல் போனதால், அவர்களது பேச்சைத் திரும்பக் கேட்போமா? குமரி அனந்தன் கூட அந்த ரகம் தான்!

      Delete
    4. இன்னொரு விஷயத்தையும் இங்கே தெளிவுபடுத்தியாக வேண்டும். ஒருவரை விமரிசிக்கிறோம் என்பதால் தனிப்பட்ட முறையில் அவர்களை வெறுக்கிறோம் என்று அர்த்தமில்லை ஜோதிஜி! கருத்தியல், அரசியல் சார்ந்தே விமரிசனங்களை முன்வைக்கிறேன். சுபவீ பேசுகிற ஈவெரா ப்ராண்ட் நாத்திகத்தை நான் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக Scientific atheism குறித்து இந்தப்பக்கங்களிலேயே எழுதியிருக்கிறேன். கடவுள் கோட்பாட்டை அறிவியல் பூர்வமாக மறுக்கிற சுஜாதா எழுதிய கடவுள் இருக்கிறாரா புத்தகத்தைக் குறித்துக் கூட இந்தப்பக்கங்களில் பேசப்பட்டிருக்கிறது.

      அந்த வகையில் சுபவீ இடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியதாக என்வரையில் எதுவுமில்லை. அதே நேரம் உங்களுக்கு அவர்மீது ஒரு மதிப்பு இருப்பதைக் குறித்து நான் எதையும் சொல்லவில்லை. உங்கள் பதிவிலும் கூட அவரைப் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன் என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டேன். .

      Delete
  5. வழக்கமான திசை மாறியதால் இந்த தடவை அத்தனையும் முத்துக்கள்..

    கடைசி மட்டும் எதிர்பார்ப்பில் ஏமாற்றம்.

    ReplyDelete
    Replies
    1. அரசியல் நிலவரங்களுக்கும் காற்றுக்கும் இதுதான் திசையென்று தனித்து எதுவும் கிடையாது ஜீவி சார்! அவை நாமாகக் கற்பித்துக் கொள்பவை! காங்கிரஸைத் தொடாமல் ஆரம்பித்தது உங்களுக்குப் பிடித்தமாதிரி எனக்கும் எழுதப் பிடித்திருக்க வேண்டுமே! சாத்தியம் தானா? :-))))

      Delete
  6. தேசத்தின் நன்மை மீதான நடுநிலை சிந்தனை கொண்டோர்கள் தங்களுக்கு பிடிக்கும், பிடிக்காமை என்ற தனிப்பட்ட ஆவலாதிகளில் சிக்கிக் கொள்வதேயில்லை.

    அப்படியானவர்கள் தான் பின்னூட்டங்களிலும் தங்களைப் பிரதிபலிக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது ஜீவி சார்! இதன் மீது நான் சொல்வதற்கு எதுவுமில்லை.

      Delete
  7. தேசத்தின் நன்மை மீதான நடுநிலை சிந்தனை கொண்டோர்கள் தங்களுக்கு பிடிக்கும், பிடிக்காமை என்ற தனிப்பட்ட ஆவலாதிகளில் சிக்கிக் கொள்வதேயில்லை.

    அற்புதமான வரிகள். நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!