சண்டேன்னா மூணு! கொஞ்சம் சிரிக்க! கொறிக்க! அரசியல்!

கொஞ்சம் வித்தியாசமான வீடியோக்களைத் யூட்யூபில் தேடிக் கொண்டிருந்தபோது இந்த சேனல் கண்ணில் பட்டது. 2014 இல் வெளிவந்த வீடியோ இது. தெற்கென்றால் கொஞ்சம் அராத்து என்று சொல்கிற மாதிரி! நையாண்டியாக! பாடுகிறார்கள்!


ஆனால் 2019 இல் கதை தலைகீழாக மாறிவருகிறது. தமிழகம் ஒன்று மட்டும் தான் திமுக-ஊடகங்கள் புனிதக்கூட்டுறவில் மோடி எதிர்ப்பைத் தொடர்கிற மாதிரி இருக்கிறது! தமிழிசை மற்றும் ஒருசிலரை மாற்றிவிட்டால் தமிழகத்திலும் தாமரை மலர்ந்தே தீரும் என்பதுதான்  நிலைமை இப்போது!


திரிணாமுல் காங்கிரஸ் இன்றைக்கிருக்கிற நிலைமையில், மஹுவா மொய்த்ரா மாதிரியான எம்பியை நியாயப் படுத்தவோ, அவரால் கட்சிக்கு ஏற்படும் சேதாரங்களை தவிர்க்கவோ முடியுமா? நாடாளுமன்றத்தில் அம்மணியின் முதல்பேச்சை இந்தப்பக்கங்களிலேயே பகிர்ந்திருக்கிறேன் ஆனால்  ZEE TV மீதும் அதன் செய்தி ஆசிரியர் மீதும் உரிமைப் பிரச்சினை எழுப்பியிருப்பது  மக்கள் பிரதிநிதியாகிவிட்டால் என்னவேண்டுமானாலும் பேசலாம், யாரும் கேள்வி கேட்கவே கூடாதென்கிற மனோபாவம் என்று தான் தோன்றுகிறது.


என்னவாகப்போகிறாய் என்ற கேள்விக்கு இந்திரா காண்டி ஆகப்போகிறேன் என்று சொன்னவரிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதென்பது உங்களுக்குத் புரிந்தால் சரி!

இன்றைக்கு கொஞ்சம் சுருக்கமாக.

மீண்டும் சந்திப்போம்.
  


             

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!