கொஞ்சம் அரசியல்! நிறையக் காமெடி!

கொஞ்சம் அரசியல்! நிறையக் காமெடி! என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? கொஞ்சம் சுவாரசியமான செய்திகள், வீடியோக்கள் என்று பார்க்கலாமா? இங்கே பகிரப்படும் வீடியோக்கள் எல்லாவற்றையும் பார்த்தே ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை! ஆனால் பார்த்தால் கொஞ்சம் சுவாரசியமான விஷயங்கள் கிடைக்கலாம் என்பதற்கு நான் காரண்டீ!  முதலில் 33% என்றொரு 22 நிமிட விவாதம்! மூன்று பெண்கள் அமர்ந்து முக்கியமான செய்திகளைக் கொஞ்சம்  அலசுகிறார்கள்! இது News 7 சேனலில் இன்று!


இன்றைக்கு ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக ஆகியிருக்கும் ஒரு செய்தி அமிர்கானுடைய மூத்த மகளாக டங்கல் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்த சையிரா வாசிம் என்கிற காஷ்மீரி இளம் நடிகை, எனக்கு இனி சினிமாவே வேண்டாம் அது என்னுடைய மத நம்பிக்கைகளுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் அறிவித்திருப்பது முதல் ஜூன் 25 அன்று மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற 29 வயதான நஸ்ரத் ஜஹான் நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி கைகளில் சிவப்புநிற வளையல்கள் கைகளில்  மெஹந்தி என்று புதுமணப்பெண்ணாகவே வந்தது இஸ்லாமிய மௌல்விகளை வெறுப்பேற்றி இருக்கிற செய்தி இப்படிப்  பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகிறார்கள். இதில் நெறியாளராகவரும் சுகிதா, குரலை அடக்கி மெதுவாக, அதிகக் குறுக்கீடுகள் இல்லாமல் மற்ற இரு பெண்களைப் பேச அனுமதித்திருப்பது இந்தச்சேனல் விவாதங்கள் எதிலும் நான் கண்டிராத அதிசயம்! 


இது சையிரா வாசிம் விவகாரத்தில் ரிபப்லிக் டிவியின் அப்டேட்!



Rahul Gandhi wants to resign. Here’s why this may be farcical, writes Barkha Dutt  ராகுல் காண்டியின் ராஜினாமா என்பதே வெறும் கேலிக்கூத்தாக ஆகிவிடலாம் என்று நீண்டதொரு உபதேசத்தை ஹிந்துஸ்தான் டைம்சில் எழுதியிருக்கிறார் ர்க்கா தத்!  ஐ மு கூட்டணிக்குழப்பம் இரண்டு வெர்ஷன்களிலும் காங்கிரசுக்கு மிக நெருக்கமானவராக, தரகராக, ஆதாயம் பார்த்த ஊடகக்காரர்களில் முதலிடம் பிடித்தவர் பர்க்கா தத் என்பது நினைவுக்கு வருமேயானால் காங்கிரசுடைய பரிதாபமான நிகழ்காலம், இருக்குமா என்றே புரியாத எதிர்காலம் எல்லாம் கொஞ்சம் விலாவாரியாகப் புரியும்!  

To save the Congress, are the Gandhis ready to give up their entitled control over India’s oldest party?

Without that, Gandhi’s decision to quit is farcical. இது அம்மணி முத்தாய்ப்பாகச் சொல்லியிருப்பது!  செம காமெடி!      


ராகுல் காண்டியைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் முதல்வர்கள் நிருபர்களிடம் பேசுகிறார்கள்! என்ன நடந்தது என்ன முடிவு என்பதைப்பற்றி எதுவுமே பேசாமல் சமாளி!க்கிறார்கள்  ஒரு முதிர்ச்சியில்லாத பிள்ளையை தலைவனாக வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது!?

மீண்டும் சந்திப்போம்.
     

8 comments:

  1. monday nna rendu.. one day two posts super
    unable to see the videos shared as mostly i read your blog in between time. Congress(I I for indira) is the current congress. Then how is it possible for Raoul baba and his mother to relinquish it ... then it will be doom for them.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சரவணன்! நீங்கள் நினைக்கிற மாதிரி பழைய இந்திரா காங்கிரஸ் அல்ல இன்றைக்கிருப்பது. ராஜீவ் இறந்த பிறகு மாமியாரிடம் கற்றுக்கொண்டவழிகளில் சோனியா உருவாக்கிக் கொண்ட சோனி காங்கிரஸ்தான் இன்றைக்கிருப்பது. 2004 முதல் 2014 வரை எப்படியானவர்களிடமெல்லாம் சிக்கிக் கொண்டு (பானாசீனா ஆ!ராசாநல்ல உதாரணங்கள்) கட்சி கடந்து வந்த பாதையைப் பார்த்தீர்களானால் இந்த இத்தாலியப்பெண்மணியின் சாமர்த்தியம் யோக்கியதை நன்றாகப்புரியும்.

      Delete
  2. BJP க்கு எப்படியும் ஒரு வலுவான எதிர்க்கட்சி தேவை. தேர்தல் சமயங்களில் ஏற்படும் மூன்றாவது அணியை எல்லாம் விடுங்கள். இப்போது காங்கிரஸ் உட்பட எல்லா மற்ற கட்சிகளிலிருந்தும் தகுதியான சிலரை விடுவித்து ஒரு எதிர்கட்சிக்கான கட்சியை இப்போது உண்டாக்க முடியுமானால் உங்கள் லிஸ்ட் என்ன?

    ReplyDelete
    Replies
    1. இன்னார் தான் என்று நபர்களை இன்றைய சூழலில் தெரிவு செய்வது கடினம் ஸ்ரீராம்! அப்படித் தகுதி வாய்ந்த நபர்கள் என்று எவரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. வலது சாரி பிஜேபிக்கு சரியான மாற்றாக இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்களால் தான் வரமுடியும், இப்போதுள்ள இடதுசாரிகளும் அதற்குச் சரிப்பட்டு வருவார்களா என்ற கேள்விக்கு, அவர்கள் இந்தமண்ணுக்கேற்ற இடதுசாரித்தனத்தை உருவாக்கிக் கொள்கிறார்களா என்பதில் விடை இருக்கிறது.

      Delete
    2. ஸ்ரீராம், கார்ப்பொரேட் அரசியல் காலம் இது. தேர்தல்ங்கற சடங்கு முடிஞ்சாச்சு. இனி அவங்களே யார் யார் எந்தப் பக்கம் இருந்து மாறி மாறி எப்படியெல்லாம் விளையாடலாம்ன்னு தீர்மானிச்சிப்பாங்க...

      Delete
  3. சோனி காங்கிரஸ் இது.. அப்படின்னா -
    பானாசோனிக் காங்கிரஸ் எங்கே?..

    ReplyDelete
    Replies
    1. கம்பெனியா? எல்லாம் டெல்லி செட்!!!

      Delete
    2. சோனி என்றால் நோஞ்சான்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!