Showing posts with label காங்கிரஸ் காமெடிகள். Show all posts
Showing posts with label காங்கிரஸ் காமெடிகள். Show all posts

சண்டேன்னா மூணு! #அரசியல் #அராஜகஅரசியல் #காமெடிஅரசியல்

பொதுவாக ஊடக விவாதங்களில் அடிக்காத குறையாக, குரலை மட்டும் உயர்த்திப் பேசுகிற SP  லட்சுமணன் போன்ற ஆசாமிகளை நான் அதிகம் சட்டை செய்ததே இல்லை. தான் சொல்வதுதான் சரி என்கிற மாதிரி ஒரு அதிகாரத்தொனியுடன் பேசுகிறவர்களை வேறென்ன தான் செய்வதாம்? ஆனால் இந்த 27 நிமிட வீடியோவில் லட்சுமணன் தன்னுடைய அஜெண்டாவில் இருந்து தமிழக அரசியல் களத்தை எப்படி பார்க்கிறார் என்பதை நன்றாக வெளிப்படுத்திய விதம் இங்கேயும் பகிர வைத்தது. 


முதலாவது, இங்கே இரு கழகங்களும் வலிமையோடு இருக்க வேண்டும், அப்படி  இருந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மாநிலக்கட்சிகளை உயர்த்துப் பிடிக்கிற உளுத்துப்போன ஒரு வாதம்! தேசியக்கட்சிகள் வேண்டாம் என்பது உட்கிடக்கை. அடுத்தது, பாமகவை தாஜா செய்ய வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செய்ததில் அதிமுக இதர பெரிய சமூகங்களுடைய கடுமையான அதிருப்தி, எதிர்ப்பை சம்பாதித்து இருப்பதாக. தேமுதிக வெளியேறியது டிடிவி தினகரன் தனித்துப்போட்டி இவையெல்லாம் அதிமுக வாக்குகளை பிரிக்கும் என்ற கருத்து இப்படியான விஷயங்களில் கொஞ்சம் தெளிவுடன் பேசுகிற மாதிரி கதம்பமான ஒரு நேர்காணல். மாநிலக்கட்சிகள் உருவாக, வளர்ந்ததற்கான காரணங்கள் எல்லாமே அடிபட்டுப் போனபிறகு, மாநிலக்கட்சிகளுடைய உபயோகம் முடிந்து விட்டதாகவே நான் பார்க்கிறேன். உங்களுடைய கருத்து என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்!


கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு ஜோதிமணி அரசியல் செய்கிற விதமே தலைகீழாக மாறிப்போய் விட்டது.அம்மணியின் ஆட்டத்தால் சத்தியமூர்த்தி பவனே அதிர்ந்துபோய்க் கிடப்பதில் "கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித் தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி. ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கொதித்திருக்கிறார் கோபண்ணா 

ஏற்கெனவே சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக MLA கு க செல்வம் பிஜேபியில் ஐக்கியமான நிலையில் இன்றைக்கு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக MLA டாக்டர் சரவணனும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் என்கிறது செய்தி. அரசியலில் இந்தமாதிரி காமெடிகள் சகஜம், செந்தில் மாதிரி காமெடியன்களும் அரசியலுக்கு வந்து சேருவது  காமெடிக்கொடுமை. என்னென்ன காமெடிகளை இனிமேலும் பார்க்கப்போகிறோமோ?    

படித்ததில் பிடித்தது: 

இந்தியா டுடேவின் "south conclave"ல் நேற்று (3/13/21) மூன்று நேர்காணல் தொடர்ச்சியாக நேரலையில் காண நேர்ந்தது. மூன்று தமிழர்கள். ஒருவர் திராவிடத்தின் போர்வாள். மற்ற இருவரும் பிஜேபியில் மத்திய அமைச்சர்கள். 

திராவிடத்தின் போர்வாள், உள்ளே வந்ததும் அவருக்கு ராஜ மரியாதை கொடுக்கப் பட்டது. கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டு போய் உட்கார வைத்து "அடுத்த முதல்வர் நீங்கள் தான்" என்ற ஏத்திவிட்டனர். அவரும் அது ஏதோ ஒரு தேர்தல் மேடைப் பிரச்சாரம் போல தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தார். வழக்கமான "corruption commission collection" என்ற உலகப்புகழ் பெற்ற வாக்கியத்தையும், "நான் ஆதாரத்தோடுதான் பேசுவேன்" என்றும் பேசினார். அதற்கப்புறம் நடந்த கேள்வி பதில்  "காந்தகண்ணழகி, இந்தா இங்கே பூசு" வகை. மூன்றே மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. மூன்றும் "அடுத்த முதல்வர் நீங்கதான். என்ன செய்வீங்க" என்று தும்பைப்பூவால் வருடி விடும் கேள்விகள். 

வலிமையற்ற தோளினாய் போ போ போ, மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ என்று பாடத் தோன்றியது.

அடுத்து வந்தவர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர். What a change! Night watchman அவுட் ஆகி விட்டு போனபின் சச்சின் டெண்டுல்கர் ஆட வந்தது போல இருந்தது இவர்கள் இருவரும் கேள்விகளை கையாண்டது. அவர்களின் திட்டத்தை எவ்வளவு அழகாக விவரிக்கின்றனர்! திட்டமிடல் at its best. அதை விவரிக்கும் திறன் அதனினும் அருமை.நிர்மலா சீதாராமன், தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கும், தொழிற்சாலைகளுக்கான முதலீடு பற்றியும் மற்ற சிக்கலான விஷயங்களையும் அனாயாசமாக பேசிக்கொண்டிருந்தார். இப்படி ஒரு திறமையைக் கண்டறிந்ததற்காக மோடிக்கு பெரிய நன்றி.

அடுத்து வந்தவர் வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்ஷங்கர். ப்ப்பா என்ன தெளிவு, என்ன துணிவு. சீனாவுடனான சண்டை பற்றி பேசுகையில் "அவர்கள் கை கொடுத்தா நானும் கை கொடுப்பேன், கை ஓங்கினா கையை எடுப்பேன்" என்பதை ஆங்கிலத்தில் "if you extend your hand I will shake hands . But if you point a gun at me, I will pull my gun. That is logical., isnt" அதிரடியாக சொன்னார். "இந்த நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று எல்லைக்கு வெளியில் இருந்து, அவர்கள் வசதிக்காக, சொல்வதை ஒருநாளும் கேட்க மாட்டோம்" என்று சொல்லும்போது பாரதியின் "வெற்றி கொண்ட கையினாய் வா வா வா விநயம் நின்ற நாவினாய் வா வா வா" என்று பாடத்  தோன்றியது.மறுபடியும், இப்படி ஒரு திறமையைக் கண்டறிந்ததற்காக மோடிக்கு பெரிய நன்றி.What a contrast between the two sets of leaders! 

தந்தை, மகன் பேரன் என்று தலைவர்களை ஒரே முகவரியில் இருந்து கொடுக்கும் கட்சிக்கும், மூலை முடுக்கெல்லாம் நல்ல திறமையைத் தேடி, தகுதிக்கு மதிப்பு கொடுக்கும் கட்சிக்கும் எத்தனை வித்தியாசம். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். தமிழரின் பெருமை நிர்மலா சீதாராமன் மற்றும் S .ஜெய்ஷங்கர் வகை மட்டுமே. அப்பன் பெயரை சொல்லி பதவிக்கு வருபவர்கள் அல்ல. 

ஒழியட்டும் மன்னராட்சி! நிமிரட்டும் தமிழகம்! என்று முகநூலில் புளகாங்கிதப்பட்டிருக்கிறார் எஸ் சண்முக நாதன்

மீண்டும் சந்திப்போம்.

சண்டேன்னா மூணு! #அரசியல் #தேர்தல்காலஅரசியல் #முடிவேஇல்லாதகாமெடி

2021 தேர்தல் களத்தில் தமிழ்நாட்டின் தனித்துவம் இப்படி ஆக இருக்கிறது::: நாம் தமிழர் கட்சிக்குள் RSS புகுந்து விட்டதாக அமீர் கூறியதை தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியில் ஹிந்து முன்னனி புகுந்து விட்டதாக தினகரனும் மக்கள் நீதி மய்யத்தில் பஜ்ரங் தள் புகுந்து விட்டதாக திருமா வளவனும், வைகோவுக்குள் விஸ்வ ஹிந்து பரிஷத் புகுந்து விட்டதாக சீமானும் கூறினார்கள்.தொடர்ந்து அதிமுகவுக்குள் சங் பரிவார் அமைப்புகள் புகுந்து விட்டதாக ஸ்டாலினும், திமுகவுக்குள் பாஜக புகுந்து விட்டதாக சவுக்கு சங்கரும் கூறினார்கள்.ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் என்ன புகுந்தது என்று எனக்கே தெரியவில்லை என்று அறிவாலய வாசலில் கையில் பட்டியலுடன் நின்று கொண்டிருந்த KS அழகிரி கண்ணீர் மல்க கூறினார்! நிஜந்தானோ என மயங்க வைக்கிற ஒரு பகடியுடன் சண்டேன்னா மூணு பக்கங்களில் தொடரலாமா? நன்றி சிவா! via FB


சீமானின் நாம் தமிழர் கட்சி ஒன்றைத்தவிர, தனிக்கட்சி ஆரம்பித்து போணியாகாத சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தலைமுறை சேனலின் ரவி பச்சமுத்து நடத்தும் IJK , அப்புறம் சட்டப்பஞ்சாயத்து இயக்கம், கலாம் பெயரை வைத்துக் கட்சி ஆரம்பித்து நடத்த முடியாத பொன்ராஜ் என்று ஒரு சிறுகும்பல் கமல் காசரோடு கைகோர்த்துக் கொண்டு, தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்துவிட்டார்கள் என்பது நிகழ் நேரக்காமெடி! இவர்களோடு இன்னும் சில உதிரிகள் வந்து சேரலாம் என்கிறார்கள்! இந்த லட்சணத்தில் "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என எழுதி வாசலில் மாட்டுங்கள், நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என கமல் காசர் ட்விட்டரில் கொதித்து எழுந்தாராம்!  காலக்கொடுமை! வேறு சொல்வது?


பிரதமர் நரேந்திர மோடி கொல்கொத்தா பிரிகேட் மைதானத்தில் இன்றைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருக்கிறார். சினிமா நடிகரும் திரிணாமுல் காங்கிரசின் MPயாக இருந்தவருமான மிதுன் சக்ரவர்த்தி பிஜேபியில் சேர்ந்து விட்டார்.நரேந்திர மோடி இங்கே பேசிக் கொண்டிருக்குவிலை உயர்வுக்கு ம் அதேவேளையில் சிலிகுரியில் மம்தா பானெர்ஜி, சமையல் கேஸ் விலாய் உயர்வுக்கு எதிராக பாதயாத்திரை ஸ்டன்ட் நடத்திக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும், மம்தா பானெர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும்.இடையிலான தேர்தல் யுத்தம் களைகட்டுகிறது என்று யாரோ சொன்னார்கள்! இங்கே தமிழகம் மாதிரி அழுது வடியவில்லை!

'தங்கக் கடத்தலில் கேரள முதலமைச்சர், அவருடைய மூன்று கேபினட் சகாவுகள், சட்டசபை சபாநாயகர் அன்றைய தனிச் செயலாளர் ஆகியவர்கள் நேரடியாகத் தொடர்புள்ளவர்கள்."சொப்னா சுரேஷ் கொடுத்திருக்கும் வாக்குமூலம். கேரள அரசியலில் நிறைய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலே வீடியோ 21 நிமிடம்.
கேரளத்தில் கூட தேர்தல்களம் சூடேறிவிட்டது.

மீண்டும் சந்திப்போம்.

சண்டேன்னா மூணு! கலகலக்கும் #கூட்டணிஅரசியல் #தேர்தல்களம் #தமிழகஅரசியல்

தமிழக அரசியலை  நச்சுக்காடாக்கி நாசம் செய்த இரண்டு தி. கழகங்களும் தனித்தனியாக, தங்களுடைய அரசியல் பரப்புரையை ஒரு சுற்றுக்கும் மேலேயே நடத்தி முடித்து விட்டன என்பதில் கூட்டணிக்கட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை என்பது இன்றைய தமிழக அரசியல் கள நிலவரம்! கூட்டணிக்கட்சிகளில் அந்தப்பக்கம் காங்கிரசும், இந்தப்பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியும் தங்களுடைய தனி ஆவர்த்தனத்தை நடத்திக் காண்பித்து விட்டன. தனி ஆவர்த்தனம் செய்து காட்டியதில் என்ன கிடைத்தது என்பது வெளியே வர இன்னும் சில நாட்கள் ஆகலாம்!


இந்த 54   நிமிட நேர்காணல் தமாஷாவைப் பார்க்க இங்கே  இசுடாலினுக்குப் பதில் சொல்கிற மாதிரியே எங்களுக்கும் கூட்டம் வருமில்ல என்பதாக ராகுல் காண்டியைக் காட்சிப்பொருளாக்கி மூன்றுநாட்கள் ரீல் ஓட்டிய மிதப்பில் கே எஸ் அழகிரி இருப்பதைக் காண மிகவும் தமாஷாக இருக்கிறது. ஒரு பொய்யான கனவுலகில் இருந்து கொண்டு சோனியா காங்கிரசின் தமிழ்நாடு பிரான்ச் தலைவர் ரங்கராஜ் பாண்டே எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியான பதிலைச் சொல்வதைத்  தவிர்க்கிறார். ஒரு அருமையான காமெடி என்பதால் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். 


பாமக ஒருபுறம், தேமுதிக ஒருபுறம்,இன்றைக்கு அவரவர் கட்சிக் கூட்டங்களை நடத்தி, அதிமுகவுடன் பேரம் பேச முனைந்திருக்கிறார்கள். கடுமையாகப் பேரம் பேசுகிற வலிமையோ தெம்போ இரு கட்சிகளுக்குமே இல்லை என்பதைக் கூர்ந்து கவனித்தால் புரியும். 1989 களில் வன்னியர் இட ஒதுக்கீடு என டாக்டர் ராமதாஸ் ஆரம்பித்தபோது கருணாநிதி பணிந்து கொடுத்து பாமகவை வளர்த்துவிட்டதுபோல,இன்றைக்கும் ராமதாசை அரசியல் ஆதாயம், புதுவாழ்வு பெறச்செய்ய வேண்டிய கட்டாயமோ அவசியமோ அதிமுகவுக்கு இல்லை! இதைப்பற்றிய ஒரு விரிவான செய்தி இங்கே! தவிர பாமகவுக்கு அதிக இடம் கொடுத்தால் பிஜேபிக்கும்  அதே அளவு இடம் கொடுக்க வேண்டி வரும். அதற்கடுத்து தேமுதிகவுக்கு எத்தனை கொடுக்க முடியும்? கருணாஸ் மாதிரி உதிரிகள் இப்போதே வேறுமாதிரி துண்டு போடுகிறார்கள். அதிமுகவும் கூட ஒரு தெளிவான முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 


இது தேமுதிக defacto தலைவி பிரேமலதா இன்றைக்கு அளித்திருக்கிற நேர்காணல். விஜயகாந்த் ஒருவர்தான் தேமுதிகவின் பலமாக ஜனங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். ஜெயலலிதாவையே நேரடியாக எதிர்க்கிறவராகவும் இருந்தார் என்பது நினைவுக்.கு வரும்போது உண்மையிலேயே மனவருத்தம் மட்டுமே மிச்சம்.

இரண்டு கூட்டணிகளிலுமே சலசலப்பு ஆரம்பமாகி விட்டது என்பதைத்தாண்டி இன்றைக்கும் கூட தேர்தல் களம் முழுமையாகத் தயாராகவில்லை என்பதுதான் நிதர்சனம்.

மீண்டும் சந்திப்போம்.  

          



வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! #அரசியல்தமாஷா

நேற்று வரை நான் எதற்காக மெஜாரிடியை நிரூபிக்க வேண்டும் என்று மிதப்பாகக் கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்த மத்தியப்பிரதேச காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அப்புறம் சுருதி குறைந்து, இன்று நடுப்பகல் 12 மணிக்கு நிருபர்களைச் சந்திக்கிறாராம்! நிருபர்களிடம் கொஞ்சம் கொட்டித்தீர்த்த கையோடு தன்னுடைய ராஜினாமாவையும் சமர்ப்பிப்பார் என்பது இன்றைய அரசியல் தமாஷாக்களில் முதலாவது! கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறவரை காங்கிரஸ்காரன் நாற்காலியை விடவே மாட்டான் என்று இந்தப் பக்கங்களில் நான் பலமுறை சொல்லிவருவது ஏன் என்று இப்போதாவது விளங்கிக்கொள்ள முடிகிறதா?


வேண்டுமானால் பிஜேபி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரட்டுமே என்று காங்கிரஸ் விரித்த வலையில் பிஜேபி சிக்கிக் கொள்ளவில்லை என்பது முதலாவது அடி! 16 MLAக்கள் ராஜினாமா மீது வீடியோ conference இல் சபாநாயகர் அவர்களுடன் பேசிப் பார்க்கட்டுமே என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை சபாநாயகர் ஏற்கவில்லை. இன்னும் இருவார அவகாசம் வேண்டுமென்று சபாநாயகர் வேண்டியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும், நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்புச் செய்யவும் உத்தரவிட்டபிறகு, சபாநாயகர் 16 MLAக்கள் ராஜினாமாவை ஏற்பதாக நேற்று  அறிவித்த போதே கமல்நாத் ஆட்சியின் கதையும் முடிந்து போனது. தங்கள் MLAக்களை அவர்களது விருப்பத்துக்கு எதிராக யாரோ பிடித்து வைத்திருப்பதாகவும் மீட்டுத்தரவேண்டும் என்றும் காங்கிரஸ் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதையை, அந்த 16 MLAக்களும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்து தாங்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே பெங்களூருவில் தங்கி இருப்பதாகச் சொல்லி முறியடித்தனர் என்பது கூட சபாநாயகர் நேற்று ராஜினாமாவை ஏற்பதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்! காங்கிரஸ் வக்கீல்கள் கடினமாக முயற்சித்தும் கூடக் கரியைப் பூசிக் கொண்டதுதான் மிச்சம்! 

         
கொரோனா வைரசை தீனத்து வைரஸ் என்று அமெரிக்க அதிபர் தொடர்ந்து சொல்லிவருவதில் சீனா நிதானமிழந்திருக்கிறது. சில அமெரிக்க ஊடகங்களின் நிருபர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பித்திருக்கிறது. வர்த்தகப்போரில் கூட சீனா நிதானமிழக்காமல் அமைதியாக இருந்தது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவில் வைத்துக் கொண்டு இந்த 18 நிமிட வீடியோவில் சில கான்ஸ்பிரசி தியரிகளை பற்றி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்! நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னாலேயே இங்கே ஆல் இன் ஆல் அழகுராஜா ப. சிதம்பரம் பிரதமருக்கு யோசனை சொல்லவும் கிளம்பிய வேடிக்கையைக் கவனித்தீர்களா? பிரதமர் உரைக்குப் பின்னால் பம்மிப் பம்மி நாலைந்து ட்வீட் போட்டதோடு சரி!


மனோபாலா வேஸ்ட்பேப்பர் என்றொரு யூட்யூப் சேனல் நடத்திக் கொண்டிருக்கிறார் போல.தமிழ் சினிமாவைப் பிடித்திருக்கிற வியாதி என்னவென்று பேசுகிறார்கள். தமிழகத்தைப் பிடித்திருக்கிற பெரும் வியாதியே சினிமா தானே! 22 நிமிடட் காமெடிக் கொடுமை!  

மீண்டும் சந்திப்போம் 


கொஞ்சம் அரசியல்! நிறையக் காமெடி!

கொஞ்சம் அரசியல்! நிறையக் காமெடி! என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? கொஞ்சம் சுவாரசியமான செய்திகள், வீடியோக்கள் என்று பார்க்கலாமா? இங்கே பகிரப்படும் வீடியோக்கள் எல்லாவற்றையும் பார்த்தே ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை! ஆனால் பார்த்தால் கொஞ்சம் சுவாரசியமான விஷயங்கள் கிடைக்கலாம் என்பதற்கு நான் காரண்டீ!  முதலில் 33% என்றொரு 22 நிமிட விவாதம்! மூன்று பெண்கள் அமர்ந்து முக்கியமான செய்திகளைக் கொஞ்சம்  அலசுகிறார்கள்! இது News 7 சேனலில் இன்று!


இன்றைக்கு ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக ஆகியிருக்கும் ஒரு செய்தி அமிர்கானுடைய மூத்த மகளாக டங்கல் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்த சையிரா வாசிம் என்கிற காஷ்மீரி இளம் நடிகை, எனக்கு இனி சினிமாவே வேண்டாம் அது என்னுடைய மத நம்பிக்கைகளுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் அறிவித்திருப்பது முதல் ஜூன் 25 அன்று மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற 29 வயதான நஸ்ரத் ஜஹான் நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி கைகளில் சிவப்புநிற வளையல்கள் கைகளில்  மெஹந்தி என்று புதுமணப்பெண்ணாகவே வந்தது இஸ்லாமிய மௌல்விகளை வெறுப்பேற்றி இருக்கிற செய்தி இப்படிப்  பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகிறார்கள். இதில் நெறியாளராகவரும் சுகிதா, குரலை அடக்கி மெதுவாக, அதிகக் குறுக்கீடுகள் இல்லாமல் மற்ற இரு பெண்களைப் பேச அனுமதித்திருப்பது இந்தச்சேனல் விவாதங்கள் எதிலும் நான் கண்டிராத அதிசயம்! 


இது சையிரா வாசிம் விவகாரத்தில் ரிபப்லிக் டிவியின் அப்டேட்!



Rahul Gandhi wants to resign. Here’s why this may be farcical, writes Barkha Dutt  ராகுல் காண்டியின் ராஜினாமா என்பதே வெறும் கேலிக்கூத்தாக ஆகிவிடலாம் என்று நீண்டதொரு உபதேசத்தை ஹிந்துஸ்தான் டைம்சில் எழுதியிருக்கிறார் ர்க்கா தத்!  ஐ மு கூட்டணிக்குழப்பம் இரண்டு வெர்ஷன்களிலும் காங்கிரசுக்கு மிக நெருக்கமானவராக, தரகராக, ஆதாயம் பார்த்த ஊடகக்காரர்களில் முதலிடம் பிடித்தவர் பர்க்கா தத் என்பது நினைவுக்கு வருமேயானால் காங்கிரசுடைய பரிதாபமான நிகழ்காலம், இருக்குமா என்றே புரியாத எதிர்காலம் எல்லாம் கொஞ்சம் விலாவாரியாகப் புரியும்!  

To save the Congress, are the Gandhis ready to give up their entitled control over India’s oldest party?

Without that, Gandhi’s decision to quit is farcical. இது அம்மணி முத்தாய்ப்பாகச் சொல்லியிருப்பது!  செம காமெடி!      


ராகுல் காண்டியைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் முதல்வர்கள் நிருபர்களிடம் பேசுகிறார்கள்! என்ன நடந்தது என்ன முடிவு என்பதைப்பற்றி எதுவுமே பேசாமல் சமாளி!க்கிறார்கள்  ஒரு முதிர்ச்சியில்லாத பிள்ளையை தலைவனாக வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது!?

மீண்டும் சந்திப்போம்.