கரு "நாடகம்" முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே!

கர்நாடக கவர்னரென்ன, அந்தக் கடவுளே வந்து  உத்தரவு போட்டால் கூட  பதவி நாற்காலியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் காங்கிரஸ்காரனுக்கு உறைக்குமா என்ன? வேண்டவே வேண்டாம் ஒழிந்துபோ என்று கழுத்தில் கைவைத்து வெளியே தள்ளினால் ஒழிய, காங்கிரஸ் காரனிடமிருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியுயாது என்பது  ஈயென்று இளித்துக் கொண்டிருக்கும் வேளையில் கூட, காங்கிரஸ் பிழைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிற நண்பர்களை என்னவென்று சொல்வது? 


இந்த விவாதத்தில் ராதாகிருஷ்ணன் என்னவோ இவர் கூட  இருந்து நடந்தமாதிரி RSS ஆதரவோடு எடியூரப்பா, மோடியை மீறிச் செயல்படுகிற மாதிரிச் சொல்வது ஒன்றுதான் புதுசு! ஆனால் இதுவரை கர்நாடகாவில் நாலே நாலுமுறை தவிர, எந்த ஒரு ஆட்சியும் முழுமையாக ஐந்தாண்டுகள் பதவியில் இருந்ததில்லை என்கிற ஒரு மறந்துபோன உண்மையைச் சொல்கிறார் பாருங்கள், அதற்காக  அவரைப் பாராட்டியாக வேண்டும்.


Bottle Cap Challenge என்று வெளிநாட்டில் ஆரம்பித்து இங்கே உள்ளூர் சினிமாநடிகர்களும் செய்து காட்டியமாதிரியே  இங்கு எடியூரப்பாவும் உதைத்துத் தள்ளிவிடுவார் என்ற மாதிரி ராதாகிருஷ்ணன் பேசியது நகைப்புக்குரியது. கருநாடக மண்ணுக்கே உரித்தான விசேஷமான அரசியலில் எடியூரப்பா இன்னும்கூட கற்றுக்குட்டிதான்!

      
இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்து, ஆட்டுவிக்கும் சித்தராமையாவுடைய குள்ளநரித்தனம், வஞ்சகம் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் காங்கிரஸ் சமஉ ஒருத்தர் This is a democracy என்று முழங்கிக்  கொண்டிருந்தது செம காமெடி! கூடவே   கர்நாடக ஆளுநரை காங்கிரஸ் சமஉக்கள் வரைமுறை இல்லாமல்  விமரிசித்தார்கள். Go back Governor கோஷங்கள் எழுப்பப்பட்டன.


சதீஷ் ஆசார்யா என்னபுரிதலில் இந்தக் கார்டூனை வரைந்து வெளியிட்டார் என்பது எனக்கு இன்னமும் விளங்கவே இல்லை. சபாநாயகர் உச்சநீதிமன்றத்திற்கும் சரி கவர்னருக்கும் சரி, எதிரான  போங்காட்டம் ஒன்றை வெகுசாமர்த்தியமாக இந்தப் பத்து நாட்களில் நடத்திக் கொண்டிருப்பதைக் கவனித்து இருந்தீர்களேயானால், காங்கிரஸ் கட்சிக்கு இவரோ சித்தராமையாவோ தான் அகில இந்தியத் தலைமைக்குப் பொருத்தமாக இருப்பார்கள் என்று நினைக்க வைக்கிற அளவுக்கு அப்படி ஒரு போங்காட்டம்! சிரிக்காமல் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு, எல்லைமீறிப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர்களைப் பேசவிட்டுவிட்டு, நியாயவான் மாதிரி அதன் மீது பேசியதே ஒரு நல்ல சிபாரிசு! (சபையில் இல்லாத அமித் ஷா பற்றிப் பேசியதன் மீது சபாநாயகர் வலிக்காமல் கொட்டு வைக்கிற மாதிரி ஆனால் செய்யாத விஷயம்)  


ரூல் புக்கும் அரசியல் சாசனமும் ஜனநாயகமும் காங்கிரஸ் காரனிடம் சிக்கிக் கொண்டு படுகிற பாடு இருக்கிறதே!! நம்பிக்கை தீர்மானம் ஒன்றைத்தவிர எல்லா விஷயங்களைப் பற்றியும் எல்லா உறுப்பினர்களையும் பேச விட்டு இன்றைய பொழுதை ஓட்டி முடித்துவிடுவார்கள் என்று நேற்றைக்கு ஊகம் செய்தது உண்மையாகிவிடுகிற சாத்தியம் இருக்கிறது.



இதை நான் எழுதிக்கொண்டிருக்கிற நேரம் வரை இன்னும் வளைத்து வளைத்துப் பேசிக்கொண்டே பொழுதைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள்! 

இந்த சட்டசபையின் ஆயுளை 356வது பிரிவின் கீழ்  முடித்துவிடுவது கர்நாடக மக்களுக்கு மிகவும் நல்லது. இப்படிப் பொறுப்பில்லாத சமஉக்கள் இருப்பது ஜனநாயகத்துக்கே பெருத்த அவமானம்! கர்னாடக மக்கள் அல்லவா இதைப் புரிந்துகொள்ளவேண்டும்? 

மீண்டும் சந்திப்போம்.
       
              

3 comments:

  1. கர்நாடகாவில் நடக்கும் அனர்த்தங்களுக்கு பாஜக பின்புலத்தில் இருப்பது ரசிக்கும்படி இல்லை. உச்சநீதிமன்றம், கவர்னர், மஹாராஷ்டிரா போலீஸ் என்று எல்லோரும் எடியூரப்பாவுக்கு சப்போர்ட் செய்தாலும், சபாநாயகர் சரியான கவுண்டர் கொடுக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.

    //ரூல் புக்கும் அரசியல் சாசனமும் ஜனநாயகமும் காங்கிரஸ் காரனிடம் சிக்கிக் கொண்டு படுகிற பாடு இருக்கிறதே!! // - இது ஃபேர் கமெண்ட் இல்லை. பாஜகவும் இதற்குக் காரணம்.

    ReplyDelete
    Replies
    1. கூட்டணி முதல்வராக குமாரசாமி பதவியேற்ற முதல்நாளிலேயே காங்கிரஸ்காரர்களுக்கு, இது லோக்சபா தேர்தல் வரை ஓடினால் சரி என்றுதான் இருந்ததில், எடியூரப்பாவை மட்டும் குறை சொல்லி என்ன பிரயோசனம் சொல்லுங்கள் , நெல்லைத்தமிழன்! அரசியலில் இரண்டுபக்கமும் பார்த்துவிட்டுத்தான் எழுதுகிறேன்! முக்கியமாக, கர்நாடகாவில் மிக அபூர்வமாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பதவிக்காலம் முழுசையும் தாண்டியிருக்கின்றன. பெரும்பாலும் அரைகுறை தான் என்பதில் எடியூரப்பாவின் குற்றம் என்ன?

      But legislators and senior leaders on both sides admit that this is “politically not possible.” “Right now, It is inevitable for both of us to go together with the specific intent of stopping the BJP,” a senior Congress legislator told ET. “But after the 2019 Lok Sabha elections, we will have to pull back from this government if we have to retain our own existence in this state,” he pointed out.

      Though the Congress has done very hard bargaining with the JDS and managed to get 22 of the 33 ministerial berths for its legislators, there is a nagging fear that Kumaraswamy, known for his people and communication skills, will walk away with all credit for anything that the government does. “And, he can blame coalition politics for anything that goes wrong. He has already started this by saying he can’t do the loan waiver for farmers that he promised before the election, because it is a coalit ..


      https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/legislators-leaders-wary-of-longevity-of-kumaraswamy-govt/articleshow/64314494.cms

      Delete
  2. காட்சி என்னவோ இதே தான். வரும் காலத்தில் வேறு சில மாநிலங்களில் வெவ்வேறு வெர்ஷன்களில் பார்க்கப் போகிறோம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!